ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

ஒரு சுய தம்பட்டம்


                                ஒரு சுய தம்பட்டம்
                                 ----------------------------


நான் வலையில் எழுதத்துவங்கி கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் ஆகின்றன பதிவுகள் அறு நூறைத் தாண்டி விட்டது மனமொரு புறம் அப்படி என்னதான் எழுதிக் கிழித்துவிட்டாய் என்று கேட்கிறது. நானும் திரும்பிப் பார்க்கிறேன் அடாடா .... என்னவெல்லாம் எழுதி இருக்கிறாய் பாலா என்று எனக்கு நானே ஷொட்டு கொடுத்துக் கொண்டேன்  என் எழுத்துக்களை இவ்வாறுதான் இருக்கும் என்று வகை பிரிக்க முடியாது. பல நேரங்களில் பிறருக்குப் பின்னூட்டம் எழுதும் போது ஏறத்தாழ அதே தலைப்பில் நான் என்றோ எழுதி இருப்பது நினைவுக்கு வரும் அதன் சுட்டியும் கொடுப்பேன் பதிவர்கள் பலரும் அவர்களுக்கு என்று ஒரு பாணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர் ஆன்மீகப் பதிவுகள், சிலர் பயணக் குறிப்புகள், சிலர் கவிதைகள், சிலர் வாழ்க்கைச் சரிதங்கள்  சிலர் நகைச்சுவைப் பதிவுகள், சிலர் சிறுகதைகள், சிலர் இலக்கியங்கள் சிலர் அரசியல் என்றவாறு எழுதி இனதைத்தான் எதிர்பார்க்கலாம் என்று கூறிவிடலாம் ஆனால் என் பதிவுகள் நான் பெருமையாகவே சொல்லிக் கொள்வேன் எல்லாச் சுவைகளிலும் இருக்கும் VARIETY IS THE SPICE IN MY POSTS என்று பெருமைப் பட்டுக் கொள்ள முடியும்   பதிவுலகில் நான் different. சிறுகதைகள் கட்டுரைகள் கவதைகள் பயணக் கட்டுரைகள் அனுபவப் பகிர்வுகள், நாடகம்  நெடுங்கதை ஆன்மீகப் பதிவுகள், என் சிந்தனைப்படி ஓடும் எண்ணங்கள் பதிவில் இருக்கும்
அவதாரங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம் எல்லா அவதாரக் கதைகளும் எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அந்தக் குறை போக்க நான் எழுதி உள்ள அவதாரக் கதைகள்,அதேபோல் பகவத் கீதையை நம்மில் பலரும் வாசித்திருக்க வாய்ப்பில்லை மொழி காரணமாகவும் நீளம் காரணமாகவும் இருக்கலாம் அந்தக் குறை நீங்க கீதையைத் தமிழில் எழுதி வெளியிட்டிருக்கிறேன் அதற்கு முன்னுரையாகவும் கடைசியில் என் கருத்தாகவும் எழுதி இருக்கிறேன் ராமாயணம் ஆறு காண்டங்களையும் ஒரே வாக்கியத்தில் எழுதி இருக்கிறேன் கிருஷ்ணன் கோபித்துக் கொள்ளக் கூடாது அல்லவா கிருஷ்ணாயணம் எழுதி இருக்கிறேன் . முருகனை வம்புக்கு இழுத்திருக்கிறேன் நீ அப்பாவியாஎன்று கேட்டு பாவைக்கு ஒரு பாமாலை என்று அந்தாதி வடிவில் என் மனைவிக்கு ஒரு பாமாலை  சார்த்தி இருக்கிறேன் மரபு வழிப்படிக் கவிதை எழுத வராவிட்டாலும் வெண்பா எழுதுவது எப்படி என்று
( நான் கவிதை கற்கிறேன்) எழுதி இருக்கிறேன் திருவெழுக்கூற்றிருக்கை என்னும் வகையிலும் எழுதி இருக்கிறேன் கம்ப ராமாயணத்தில் கம்பனுக்கு நாய் என்பதே மதிப்பைக் குறைக்கும்  மதிப்பீடு என்பதைக் காட்ட இலக்கிய இன்பம் எனும் தலைப்பில்கம்ப ராமாயணத்தில் கம்பன் நாய் என்று குறிப்பிட்டு இருக்கும் இடங்களைச் சுட்டிக்காட்டி எழுதி இருக்கிறேன் பெண்களைச் சற்று கிண்டல் செய்வது எனக்குப் பிடிக்கும் .அப்படியும் பல பதிவுகள் எழுதி இருக்கிறேன்   கண்ணனின் கேசாதி பாதமும் காதலியின் கேசாதி பாதமும் எழுதி இருக்கிறேன் சுட்டி தேட வேண்டாம் கீழே மீண்டும் இடுகிறேன்
கேசாதி பாதம்---கண்ணன்
------------------------ 
கருநிறம் சுருட்டைமுடி
ரத்தினம் பதித்த தலையணி
மயில் பீலி செருக
வெண்ணிறப் பிறை நெற்றி ,
மேல்நோக்கி இடப் பெற்ற
குறியுடன் முடியும்
நெற்றியும் கண்ணாரக்
கண்டேன் நான் கண்ணனை

விபுவே.!அசைகின்ற புருவங்கள்
அடியில் அருள்தரும் உன் கண்கள்
ஒளிவீசி என் அகம் குளிர்விக்கக்
கண்டேன் நான் கண்ணனை

எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்
சுடரிடும் மகர குண்டலங்கள்  அசைந்தாட,
ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்
நடுவே பளீரிடப் புன்னகைக்கும் உன் முகம்
கண்டேன் நான் கண்ணனை

இரத்தினம் பதித்தக் கை வளைக் குலுங்க
செந்தளிர் விரல்கள் மீட்ட
வேணுகானம் காற்றில் தவழ
நாத கீதந்தனில் எனை மறந்து
கண்டேன் நான் கண்ணனை

மென் கழுத்தில் மணிமாலைகள்
மலர்மாலைகள் தொங்க
நிற மாலைகளில் வண்டினம் வந்தாடக்
கண்டேன் நான் கண்ணனை

சந்தண மணம் பரப்பும் உன்
திருமேனியில் உலகமே  ஒன்றியிருந்தும்
மெல்லிடையோய் பொன்னிறப் பட்டாடையுடன்
கதிர் பரப்பும் மணி அரைஞாணின்
சலங்கைகள் சல சலக்கக் கண்டு
நீலவண்ணக் கண்ணா எனை மறந்து
கண்டேன் நான் கண்ணனை


அழகு தொடை இரண்டும் பருத்தவை
அழகுடன் உறுதியும் கலந்தவை
மனம் மயக்கும் கலங்கடிக்கும்
எனவே பட்டாடை மறைத்தனவோ
காணும் கணுக்கால்பிடித்து வணங்கக்
கண்டேன் நான் கண்ணனை

உன் கழலடி தொழலே இன்பம்
அறியாமையில் மூழ்கியவர்களை
மந்தார மலையை உயர்த்தும் ஆமைக்கு
ஒப்பாக உள்ளது உன் நுனிக்கால்
அடைக்கல மடைந்த  என் அறியாமை
துன்பங்கள் களைய வேண்டியே
கண்டேன் நான் கண்ணனை

குருவாயூரின் தலைவனே அருட்கடலே
கிருஷ்ணா.! உன் உறுப்புகளில் திருவடிகளே
சிறந்தவை மோட்சம் தருபவை தலைவைத்து
பற்றவே வந்த எனைக் காத்தருளக்
கண்டேன் நான் கண்ணனை

கேசாதி பாதம் ---காதலி
----------------------
வெங்காய சருகு சேலை
தலைப்பு காற்றில் படபடக்க
வெண்சங்குக் கழுத்தில் கருமணியில்
ஒற்றை டாலர் ஒளிவீச பவனிவரும்
நீ நடந்து வரும் அழகில் மதி மயங்கி
உன்னை நான் எதிரே கடந்து செல்கையில்
படபடக்கும் உன் கண் இமைகள் என்ன
பட்டாம் பூச்சிகளா பாவையே சொல் நீயே.
சிறிதே செம்பட்டையான கூந்தல் காற்றில்
புரள, எடுப்பான நாசி, இரு ஓரங்களில்
பெரிய வளையங்களுடன் காதுகள்
 புண்ணியம் செய்தவை; சிகையின் முத்தச்
சுருள்கள்(Kiss Curls)இனிதே வருடக் கொடுத்து வைத்தவை.
 உச்சந்தலை தொடங்கி உன் அழகை
ரசிக்க என் கண்கள் உன் உடல் மேய
அநிச்சையாயுன் கைகள் மாராப்பை நாட



எனக்கோ மறைக்க முயல்வதைக் காணத் துடிப்பு
சாயாத கொம்பு இரண்டு தலை நிமிர்ந்து பாயாது
என்றாலும் மங்கை உன் மென்
நடையின் சிறு அதிர்வில் குலுங்கும்
இரு கொங்கைகள் கீழ் இருக்கும் இடுப்பின்
அழகைக் கூட்டிக் காண்பிக்கிறதோ?
துகில் மறைக்கா அந்த இடைப் பகுதியின்
வழுக்கலில் விட்டு விட்டுக் காணும்
தொப்புள் கொடியும் சுண்டி இழுக்குதே மனசை.
அடியொன்று எடுத்து வைக்க பிடியானையின்
மதர்ப்பு, இருந்தாலும் பாதம் நோகுமோ
அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ
என்னவாயிருந்தாலும் பாதசரம் கிணு கிணுக்கையில்
உன் கேசாதி பாதக் காட்சியில் திளைக்கிறேன்
பாவையே எனை நான் மறக்கிறேன்.

சில கேட்ட கதைகளை சிறார்கள் தெரிந்து கொள்ள வேண்டி  கருத்துடன் சில பதிவுகளெழுதி இருக்கிறேன் மாதிரிக்கு ஒன்று

சிறுதுளி பெரு வெள்ளம்

          பாடுபட்டு  உழைத்து   சொத்து
          
பல  லட்சம்  சேர்த்தும்  கூடவே
          
கொண்டா  செல்ல  முடியும்.
          
படுக்கையில்  விழுந்தது   பெரிசு
         
கேட்டதும்  பதறிய  பிள்ளைகள்
          
ஐயோ  என்றலறி  வந்தனர்.

ஐயோ  என்றழைக்காதீர், அவள்  கணவன்
வருமுன்னே  என்சொல்  கேளீர்.
என் காலம் முடிந்த பின்னே
என் சொத்தை அனுபவிக்க
உள்ளதோ நீங்களிருவர்
கேடு  பல விளைக்காமல்
கட்டிக்காத்து  பல்கிப் பெருக்கி,
ஆண்டதை அனுபவிப்பீர் நலமுடன்
என்றவன் கூறி யமனுடன் சென்றுவிட்டான்.

          
மாடு, மரம் சொத்தாக இருந்ததிலே
           
பண்டொரு  நாள்  பாகம்  பிரிப்பதில்
          
பக்கத்து  வீட்டில்  ஏற்பட்ட  சிக்கல்
          
இருவரும்  அறிந்த  ஒன்று

இருந்த ஒரு மாடு, ஒரு தென்னை
ஒழுங்காகப்  பகிரப  பசுவின்
முன்பாதி  முன்னவனுக்கும்
பின்பாதி   சின்னவனுக்கும்
தென்னையின்  தாள்பாகம் தனயனுக்கும்
மேல்பாகம்  தம்பிக்கும்  என்று
ஆளுக்கொரு  பாகம் அழகாகப்  பிரித்தனர்

          
முன்னவன் புல் கொடுத்து  மாடு வளர்த்து
           
நீர்  வார்த்து  மரம் வளர்த்து
           
வந்த  பலன்  பின்பாகப்  பாலும்
           
தலைப்பாக  தேங்காயும  பாங்குடனே
           
அலுங்காமல்  பெற்றான்  இளையவன்

நேர்ந்த  கதை  நன்றாக  அறிந்திருந்தான்  அண்ணனும்
சொத்ததனைப்  பிரிப்பதில் இருக்காது  சிக்கல்
இருப்பதென்ன  ரொக்கம்தானே என்றவன் எண்ணினான்
பாகம் பிரிக்கப்  பேச்சு  வார்த்தை  வேண்டாம்
இருப்பதோ  ரொக்கம்  சரிபாதி  பிரிப்போம்  என்றான்

            
மூத்தவன்  நீ  பாவம்  சம்சாரி -சொத்தில்
            
எனக்கு  வேண்டாம் சரிபாதி.
            
இன்றொரு பைசா, நாளை இரண்டு,
            
மறுநாள்  நான்கு,என்று நாளும் ,
            
இரட்டிப்பாக்கி  தினம் தினம் ஒரு மாதம்
            
நீ  தரும் பைசா போதும்
            
மற்றதைப் பாவம் நீயே  அனுபவி
            
என்றே நைசசியம் பேசிய
            
தம்பியை  நம்பி  ஏமாந்த  அண்ணன்
             
சிறுதுளி பெரு வெள்ளம் அறிந்தானில்லை.

பாரதி காலனை அருகில் வாடா என்றழைத்துக் கவிதை எழுதி இருந்தான் ஆனால் நான் நிஜமாகவே காலனைச் சவால் விட்டு அழைத்ததையும் எழுதி இருக்கிறேன் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று கேட்டு.
சுயதம்பட்டம் அடித்துக் கொள்வதில் மிகக் குறைந்த பதிவுகளையே உதாரணம் காட்டி இருக்கிறேன்  போதும் உன் பிரதாபம் என்று யாரோ சொல்வது கேட்கிறது
 நிறுத்திக் கொள்கிறேன் சில பதிவுகளுக்குச் சுட்டியில் சொடுக்கினால் பதிவு வரும் (வாசகர் தேடல் சுமையை குறைக்க)வாசித்து மகிழலாம் 


                    


59 கருத்துகள்:

  1. மிக உயரத்தில் இருந்துப் பார்த்தாலும்
    கழுகுப் பார்வைதான் கூர்மையானது

    பரந்து விரிந்த 600 பதிவுகளின் அலசல்
    எனினும் கூர்மைக்கு வழக்கம்போல்
    குறைவில்லை

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. திரும்பிப்பார்ப்பதின் சுகத்தை அனுபவித்து எங்களோடும் சற்றே நீள்பதிவாய்ப் பகிர்ந்துள்ளதில் அனைத்தையும் விட சற்றே அதிகமாய் நான் ரசித்தது கண்ணன் கவிதையும் கேசாதி பாதமும்.

    பதிலளிநீக்கு
  3. திரும்பிப்பார்ப்பதின் சுகத்தை அனுபவித்து எங்களோடும் சற்றே நீள்பதிவாய்ப் பகிர்ந்துள்ளதில் அனைத்தையும் விட சற்றே அதிகமாய் நான் ரசித்தது கண்ணன் கவிதையும் கேசாதி பாதமும்.

    பதிலளிநீக்கு

  4. வணக்கம் ஐயா தாங்கள் சொல்வது போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கிறது தாங்களது பாதையும் தனியே.... ஒருவர் பாதையில் மற்றவர் வருவது சிரமமே..
    600 பதிவுகளைத்தொட்டமைக்கு வாழ்த்துகள் 1000த்தை தொட எமது அட்வான்ஸ் வாழ்த்துகள்
    எனது பழைய பதிவுகள் சிலவற்றை படித்து கருத்திமைக்கு நன்றி தேவகோட்டையர்கள் 110 நபர் இருக்கிறோம் ஐயா அனைத்து விபரங்களையும் நான் வலைச்சர ஆசிரியராக இருந்தபோது சொல்லியிருந்தேன் தாங்கள் வீட்டு வேலையில் மூழ்கிய காரணத்தால் வர முடியவில்லை நன்றி

    பதிலளிநீக்கு
  5. பல் சுவைகளிலும் பதிவிட்டு அசத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    உண்மையிலேயே நீங்கள் கவிஞராக ஆகியிருக்கவேண்டும். கேசாதி பாதம், கண்ணன் மற்றும் காதலி கவிதையில் சிருங்கார ரசம் சொட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  6. மிக நீண்ட பதிவு. அறுநூறு பதிவுகளும் பல வகைகளாய்க் கொடுத்தது குறித்து மகிழ்ச்சி. சற்றே நீளமான பதிவு. என்றாலும் அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  7. எழுதிய எழுத்துக்களை
    சற்றே திரும்பிப் பார்ப்பதில்
    உள்ள சுகமே
    தனிதான்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  8. உங்களது பதிவுகளை இரண்டு ஆண்டுகளாக வாசித்துவருகிறேன்! கேசாதி பாத வர்ணணை ரசிக்க வைத்தது பழைய பதிவுகளை நேரம் கிடைக்கையில் வாசிக்க வேண்டும். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. உங்களது பதிவுகளை இரண்டு ஆண்டுகளாக வாசித்துவருகிறேன்! கேசாதி பாத வர்ணணை ரசிக்க வைத்தது பழைய பதிவுகளை நேரம் கிடைக்கையில் வாசிக்க வேண்டும். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. அறுநூறா என்று வாய் பிளக்கிறேன்.

    இருந்தாலும் இத்தனை சுய தம்பட்டம் கூடாது சார் :-)

    என்னால் அறுநூறெல்லாம்... வாய்ப்பு ரொம்ப ரொம்ப ரொம்ப அதிலும் ரொம்பக் குறைவு.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அறுநூறில் உங்களுக்குப் பிடித்த பத்து பதிவுகள் என்ன? ராமாயணம், கிருஷ்ணாயணம், பகவத்கீதை எல்லாம் தவிர்த்து உங்களுக்குத் தோன்றி உங்கள் சிந்தனையின் விளைவென்று கருத்தும் பத்து பதிவுகளைச் சொல்லுங்களேன்?

    பதிலளிநீக்கு
  12. உதாரணத்துக்கு.. நீங்கள் எழுதிய 'சரித்திரமா கலாசாரமா' பதிவை ரசித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. சிருங்கார கற்பனையைப் பார்க்கும் போது,பதிவுகளில் நீங்கள் 'சகலகலா வல்லவன் 'என்பது தெரிகிறது :)

    பதிலளிநீக்கு
  14. இது
    ஒரு சுய தம்பட்டம்
    அல்ல
    சிந்திக்கத் தூண்டும் பதிவு

    பதிலளிநீக்கு
  15. சுய தம்பட்டம் அல்ல. சுய மதிப்பீடு. இது தேவைதான். தவறில்லை. தங்களிடமிருந்து நாங்கள் நிறையவே கற்றுக்கொள்கிறோம். தாங்கள் மென்மேலும் எழுதவும் எங்களுக்கு வழிகாட்டவும் எல்லாம் வல்ல இறையருள் துணை நிற்கும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  16. நீங்கள் ஒரு சகலகலாவல்லவர் என்பது தெரியும். எனவே தங்களைப்பற்றி தெரியாதவர்களுக்கு இந்த பதிவு ஒரு அறிமுகமே. சுயதம்பட்டம் அல்ல. தாங்கள் மென்மேலும் பல வித தலைப்புகளில் வெவ்வேறு உரிப்பொருள்கள் பற்றி எழுத விழைகின்றேன்.

    பதிலளிநீக்கு

  17. @ ரமணி
    முதல்வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  18. @ ஸ்ரீராம்
    அறுநூறு பதிவுகளை பற்றி எழுதும் போது நீளம் தவிர்க்கமுடியாதது அதை இன்னும் குறைக்கவேபல பதிவுகளின் சுட்டிகொடுத்திருந்தேன். ஆனால் யாரும் சுட்டிகளைப் பார்த்ததாகத் தெரியவில்லை
    ( கிருஷ்ணாயணம் தவிர) கேசாதிபாதம்தானே கேசாதிபாதம் இரு வேறு கற்பனைகள் வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    பதிலளிநீக்கு

  19. @ ஸ்ரீராம்
    ( கிருஷ்ண்ணாயணம் தவிர) கண்ணன் கவிதையும் கேசாதிபாதம் தானே---என்று மேலே இருந்திருக்கவேண்டும் நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு

  20. @ கில்லர்ஜி
    உங்கள் பதிவில் நான் எழுதி இருந்த பின்னூட்டங்களுக்கு இங்கு மறு மொழி அளித்ததற்கு நன்றி ஜீ. என் பழைய பதிவுகள் சிலவற்றைப் படிக்கவே சுட்டிகள் கொடுத்திருந்தேன் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  21. @ டாக்டர் கந்தசாமி
    பாராட்டுக்களுக்கு நன்றி ஐயா. நேரம் கிடைக்கும் போது சுட்டிகளில் கொடுத்திருக்கும் பதிவுகளையும் படிக்க வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு

  22. @ கரந்தை ஜெயக்குமார்
    உண்மைதான் ஐயா. இருந்தாலும் பல பதிவுகள் நான் மனம் ஒன்றி எழுதியவை படிக்கப் படாமல் போகும் போது நிறைவு இருப்பதில்லை. அந்தக் குறையைப் போக்கவே சுட்டிகள் கொடுத்திருந்தேன் யாராவது வாசிக்கிறார்களா தெரியவில்லை
    சிறு துளி பெருவெள்ளம் கவதையில் வரும் ஒருகணக்கு பற்றி யாரும் நினைத்ததாகத் தெரியவில்லையே. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  23. @ தளிர் சுரேஷ்
    பழைய பதிவுகள் சிலவற்றின் சுட்டிகள் கொடுத்திருக்கிறேன் /வாசகரின் தேடும் சுமையைக் குறைக்க/ படிக்க வேண்டுகிறேன் மேலும் சிறு துளி பெருவெள்ளம் பதிவில் வரும் கணக்கு ஒன்றும் சிந்தனையைத் தூண்டும் வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  24. @ அப்பாதுரை
    பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர் முன்னால் நான் மறைந்து விடுவேன் எண்ணிக்கையை விட தரம் முக்கியமல்லவா. உங்கள் பதிவுகள் முதிர்ச்சி அடைந்த வாசகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என் பதிவுகளின் வெரைட்டி பற்றியே நான் பெருமை அடைய முடியும் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  25. @ அறுநூறில் எனக்குப் பிடித்த பத்து பதிவுகளைக் குறிப்பிடுவது சிரமம் சுட்டியில் கொடுத்திருந்த பதிவுகளையே பலரும் தாண்டிப் போகும் போது நான் குறிப்பிடும் பத்து பதிவுகளை யார் படிப்பார்கள் மேலும் என் எழுத்து ஒவ்வொன்றும் ஒருவிதம் அதைக் குறிப்பிடவே இப்பதிவு வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  26. @ அப்பாதுரை
    பார்த்தீர்களா சரித்திரமா கலாச்சாரமா பதிவை நீங்கள் ரசித்தீர்கள். ஆனால் அந்தமாதிரி நினைப்பு தேவையா என்று பல பின்னூட்டங்கள் வந்திருந்தது. நான் முன்பே கூறி இருந்தது போல் நகைச் சுவைப் பதிவுகளுக்கும் மொக்கைப்பதிவுகளுக்கும் வாசகர்கள் அதிகம் சிந்தனையைத் தூண்டும் பதிவுகள் பலரையும் ஈர்ப்பதில்லை. உதாரணத்துக்கு நாம் கேள்விப்பட்ட கதையில் ஒரு சிறு கணக்கு வைத்து எழுதி இருந்தேன் சிறு துளி பெருவெள்ளம் ஆனால் கணக்கு இருக்கிறதா என்று பலரும் கேட்பார்கள் போல் இருக்கிறது வருகைக்கும் கருத்துப் பதிவுகளுக்கும் நன்றி சார்

    பதிலளிநீக்கு

  27. @ பகவான் ஜி
    அதைச் சொல்லத்தானே இவ்வளவு மெனக்கெடல் வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  28. @ யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
    உற்சாக மூட்டும் பின்னூட்டத்துக்கு நன்றி சார். இது அப்பட்டமானசுயதம்பட்டமே’

    பதிலளிநீக்கு

  29. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    பின்னூட்டம் உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  30. @ வே, நடன சபாபதி
    வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  31. @ கீதா சாம்பசிவம்
    பதிவின் நீளம் தவிர்க்க முடியவில்லை. அதற்காகவே சுட்டிகள் பல கொடுத்திருந்தேன் ரசித்தீர்கள் என்றால் நன்றிமேடம்

    பதிலளிநீக்கு

  32. //சுய தம்பட்டம் அல்ல. சுய மதிப்பீடு. இது தேவைதான்!..//

    Dr. B. ஜம்புலிங்கம் அவர்கள் கூறுவது ஏற்புடையது..

    தங்களின் பல பதிவுகள் - சிந்திக்கத் தூண்டுபவை..

    மேலும் மேலும் பல நல்ல கருத்துகளுடன் பற்பல பதிவுகள் தங்கள் கை வண்ணத்தில் மலர - வேண்டுகின்றேன்..

    பதிலளிநீக்கு

  33. @ துரை செல்வராஜு
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  34. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  35. எங்கள் ப்ன்னூட்டத்தில் ஒரு சிறு திருத்தம்....முதல் வரியில் "எங்கள்" என்று தவறாக வந்து விட்டது ....உங்கள் என்றிருக்க வேண்டும்....

    பதிலளிநீக்கு
  36. சார் சுய தம்பட்டம் என்று சொல்வதற்கில்லை. உங்கள் எழுத்தின் மீதுள்ள உங்கள் நம்பிக்கை. 600 பதிவுகள் என்பதை விட அவை எவை எத்தனை தரம் வாய்ந்தவை என்பதுதான் முக்கியம். அந்த வகையில் தங்கள் பதிவுகள் அக்மார்க். எனவே 600 என்பது மிக அசாத்தியமே. ஏனென்றால் அவை எல்லா ஜெனரையும் தொட்டு, அலசியிருக்கின்றன. நாங்கள் இன்னும் தங்களது பழைய பதிவுகள் படிக்கவில்லை என்றாலும், வாசிக்கத் தொடங்கியதிலிருந்து அந்தத் தரம் அறிந்ததானால். நேரம் கிடைக்கும் போது தங்களது பழைய பதிவுகளையும் படிக்க வேண்டும்.

    தங்களது இந்த கண்ணன் கவிதை, கேசாதி பாதம், வியக்க வைக்கின்றது. ஏன் என்றால் தாங்கள் இறை நம்பிக்கை குறித்து அவ்வப்போது தங்களது கருத்துக்களைச் சொல்லி வருவதிலிருந்து எப்படித் தங்களால் கண்ணனைக் குறித்து அப்படி எழுத முடிந்தது என்று வியப்பாகவே இருக்கின்றது சார்! பாவை குறித்தது அருமை! அதை உணர் முடிந்தது...உங்களது பதிவுகள் எல்லாமே அனாயாசமாக எழுதப்பட்ட, மிகுந்த கருத்துச் செறிந்த ஒன்றாகவே நாங்கள் பார்க்கின்றோம். 600 பதிவுகள் சும்மா அல்ல....தரமான பதிவுகள் சார்!

    ஏற்கனவே நாங்கள் சொல்லி இருந்தோம். ஏனோ பகவத் கீதை குறித்த பல விஷயங்கள் எங்கள் மர மண்டையில் ஏற மறுப்பதால் நீங்கள் தமிழில் எழுதியதைக் கூட எங்களால் அனுபவித்து வாசிக்க இயலவில்லை. அதே சமயம் திருக்குறளை புரிந்துகொள்ள முடிகின்றது. எங்களுக்கு இதில் ஒரு சிறு கருத்தும் உண்டு சார். ஏன் கோர்டில் பகவ்த் கீதை மீது சத்தியம் செய்யச் சொல்கின்றார்கள். அந்தக் கண்ணன் பாரதப் போரில், என்னஹ்டான் தருமம் வெல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டாலும், செய்யும் சில விஷயங்கள் மனதுக்கு ஒப்பவில்லை.

    திருக்குறள் உலகப் பொதுமறை என்றாகிப் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டாலும் ஏன் அதை நாம் கோர்ட்டில் சத்தியம் செய்வதற்கு எடுத்துக் கொள்வதில்லை.

    மேளும் நீங்கள் பல பதிவுகள் எழுத வேண்டும் சார்! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

  37. @ துளசிதரன் தில்லயகத்து
    இன்னும் வரவில்லையே என்று காத்திருந்தது உண்மை. ஏனென்றால் நீங்கள் பதிவை உள்வாங்கிப் பின்னூட்டம் எழுதுகிறீர்கள் என்று தெரிகிறதுபல பதிவுகளையும் வாசகர்கள் படிக்க வேண்டும் என்னும் ஆவாலால் உந்தப் பட்டே சுட்டிகள் கொடுத்தேன் ஆனால் பலருக்கும் சுட்டியைத் திறந்து படிக்க நேரமில்லை அல்லது விருப்பமில்லை. என் கடவுள் நம்பிக்கை பற்றிய உங்கள்சந்தேகம் நியாயமானதே. ஆனால் அது நம் கடவுள் கதைகளை ரசிக்க விடாமல் செய்யாது. மேலும் எந்த விஷயத்தையும் தெரிந்து கொண்டால்தான் நாம் கருத்து சொல்ல முடியும் என்று நம்புபவன் நான் தெரிந்தோ தெரியாமலோ பகவத் கீதை இந்தியாவில் நம்பிக்கையின் சாரமாகவே கருதப் படுகிறதுதிருக்குறள் இன்னும் எல்லா பாமர மனிதனுக்கும் தெரியாதது. அதுவும் தமிழ்நாடே அதன் எல்லையாய் இருக்கிறது என் ஆதங்கங்களின் வெளிப்பாடே என் பலபதிவுகள். வருகை புரிந்து கருத்திட்டதற்கு நன்றி சார்/மேடம்

    பதிலளிநீக்கு
  38. 600 க்கு முதலில் வாழ்த்துகள் சார்.

    கண்ணன் கவிதை அருமை :)

    கவிதையில் கணக்கு நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துகள். :)

    பதிலளிநீக்கு

  39. @ தேனம்மை லக்ஷ்மணன்
    வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்/கவிதையில் கணக்கு நன்றாக வந்திருக்கிறது/ சிறுதுளி பெருவெள்ளம் என்று குறிப்பிட்டிருந்தால் என் புரிதலில் தவறு இருந்திருக்காது

    பதிலளிநீக்கு
  40. ஐயா மன்னியுங்கள்.

    இந்தப் பதிவு வெளியான அன்றே, வந்து தட்டச்சுச் செய்த நீண்ட பின்னூடடம் நான் இயந்திர மனிதன் அல்லன் என என்னை நிரூபித்து வெளியிட முனைகையில் காணாமல் போயிற்று.

    பொதுவாக இது போன்ற அனுபவங்கள் ஆரம்பத்தில் ஏற்பட்ட பின் தனியே தட்டச்சுச் செய்துதான் பதிவேன்.

    இப்பொழுதெல்லாம் நீண்ட பின்னூட்டங்கள் எழுதாமையால் நேரே பின்னூட்டப் பகுதியிலேயே தட்டச்சுச் செய்து விடுகிறேன்.

    முதலில் சுயதம்பட்டம்...!

    தன்னைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லும் போதும்,

    தன்னைப் பற்றித் தெரியாதவர்களிடையேயும்,

    பல்லோரிடையே வென்று தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் போதும்,


    தன் திறமையை உணர்ந்து கொள்ளாமல் மற்றவர்கள் பழித்துரைக்கின்ற போதும்,

    ஒருவன் தன்னைப் புகழ்ந்து கொள்ளலாம் என அனுமதிக்கின்றன இலக்கணங்கள்.

    “‘மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும்
    தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும்
    மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
    தன்னை மறுதலை பழித்த காலையும்
    தன்னைப் புகழ்தலும் தகும்புல வோற்கே’
    என்னும் நன்னூல்.

    பொதுவாக இது போலப் பல்துறைகளிலும் ஆளுமை செலுத்திப் பதிவிடும் பதிவர்கள் வெகுசிலர்தான்.

    நான் சொல்ல வருவது, ஆழமான படித்தால் பயன்தரக் கூடிய, பகிர்வாக இல்லாமல், பயன்படக் கூடிய வகையில் எழுதுகின்றவர்கள் குறித்தே..!

    அவ்வகையில் நீங்கள் முக்கியமானவர்.

    ஒரு பதிவிற்குப் பின்னால் இருக்கின்ற உழைப்பு எத்தகையது என்பதை நான் அறிவேன்.

    600 பதிவுகள் வெவ்வேறு துறைகளில் எனும் போது, நேற்று வந்த எனக்கு மிக மிகப் பிரமிப்பாகவே இருக்கிறது.

    நானெல்லாம் குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார் போல........

    என் சிரந்தாழ்ந்த வணங்கங்கள் அய்யா!

    நன்றி

    பதிலளிநீக்கு

  41. @ ஊமைக் கனவுகள்
    இந்தப் பதிவை எழுதலாமா வேண்டாமா. கூடாதா என்ற பல எண்ணங்கள் வந்து போயிற்று. நிறை குடம் தளும்பாது என்பார்கள் ஒரு வேளை நான் சலம்புகிறேனோ, தளும்பி விட்டேனோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது உங்கள் பின்னூட்டம்நன்னூலையே எடுத்துக்காட்டி தவறல்ல என்று கூறியது மனதுக்குப் பெரிய ஆறுதல்ஆங்கிலத்தில் சொல்வது போல் நான் ஒரு JACK OF ALL TRADES BUT GOOD AT NONEஆக இருக்கலாம். ஆனால் என் எழுத்துக்கள் என் ஆதங்கங்களின் வெளிப்பாடே என்றும் அதில் உணர்ந்ததே இருக்கும் என்றும் சொல்வது தவறில்லை என்றும் தோன்றுகிறது வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  42. ***நான் வலையில் எழுதத்துவங்கி கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் ஆகின்றன பதிவுகள் அறு நூறைத் தாண்டி விட்டது**

    நீங்க 75 வயது சிறுவந்தான் ஐயா! இல்லையென்றால் இதெல்லாம் சாத்தியம் அல்ல! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

  43. @ வருண்
    ஒரு சிறு திருத்தம் வருண் எனக்கு வயது 76 முடிந்து ஆறு மாதங்களாகின்றன இருந்தும் இளமையாகவே மனதில் உணர்கிறேன் வருகைக்கு நன்றி. சுட்டியிலிருந்த பதிவுகளையாவது வாசித்தீர்களா?

    பதிலளிநீக்கு

  44. திருவெழுக்கூற்றிருக்கை.... என் பாணியில்
    கவிதை கற்கிறேன்
    பாவைக்கு ஒரு பாமாலை
    முருகா நீ அப்பாவியா
    கிருஷ்ணாயணம்
    சாதாரணன் ராமாயணம்
    அனைத்து இணைப்புகளும் படித்து கருத்துரை இட்டேன் ஐயா கடைசி இரண்டும் இன்னும் மலைப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  45. உங்கள் சுயதம்பட்டம் என்னும் மீள்பார்வையை நேற்றே படித்து விட்டேன். படிக்கும் போதே அந்த பதிவுகளை அப்போது உடனேயே படித்ததும் சிலவற்றிற்கு கருத்துரைகள் தந்ததும் நினைவுக்கு வந்தது.

    இன்றைய எனது சூழ்நிலையில் ’வீழ்வேனென்று நினைத்தாயோ.?’ –என்ற உங்களுடைய பதிவினை மீண்டும் வாசித்தபோது, ஒரு தெம்பினை உணர்ந்தேன்.

    ஒரு முப்பது வருடங்களுக்கு முன், இந்த இண்டர்நெட் மற்றும் ப்ளாக் சமாச்சாரங்கள் தமிழில் இல்லாமல் போய்விட்டதே என்ற ஏக்கமும் வந்தது.

    (சிலசமயம் உடனுக்குடன் என்னால் கருத்துரை தர இயலவில்லை.)

    பதிலளிநீக்கு
  46. சார், நான் இன்னும் உங்க சுட்டிகளை க்ளிக் செய்து வாசிக்கவில்லை. வாசித்துவிட்டு கருத்து சொல்றேன். உங்க தளத்தில் வலது பக்கம் உங்க வ்யது 74 என்றிருக்கிறது, அதில் ஒண்ணை கூட்டிச் சொன்னேன். கூட்டுதலில் தவறு நேர்ந்துவிட்டது போலும். மறுபடியும் வருகிறேன். :)

    பதிலளிநீக்கு
  47. ஆஹா..... எங்க வீட்டு Pantry கதவைத் திறந்ததுபோல் இருக்கு!!!!!

    பதிலளிநீக்கு
  48. சார்: உங்க இராமாயணம் தான் உலகிலேயே இதுவரை எழுதிய நீளமான ஒரு வாக்கியம். தயவு செய்து கடைசியில் ஒரு ஃபுல் ஸ்டாப் ஒண்ணு வைத்துவிடுங்க, சார். :)

    பலரும் சொன்னதுபோல் கடின உழைப்பு தெரிகிறது. :)

    பதிலளிநீக்கு

  49. @ கில்லர்ஜி
    சுட்டி கொடுத்துள்ள பதிவுகளுக்குச் சென்று வாசித்துக் கருத்துரை எழுதியதற்கு மிக்க நன்றி. ஒரு சுட்டி விடுபட்டதுபோல் தெரிகிறதே. வீழ்வேனென்று நினைத்தாயோ. அதில் என் புதுமையான அனுபவம் பகிர்ந்திருக்கிறேன் மீண்டும் நன்றிஜி.

    பதிலளிநீக்கு

  50. @ தி.தமிழ் இளங்கோ
    ஐயா வணக்கம் என் அழைப்பை ஏற்று உடல் நலக் குறைவு இருந்தாலும் பொருட்படுத்தாமல் வந்துவாசித்துக் கருத்து எழுதியதற்கு நன்றி. சிலர் படிக்க வேண்டும் என்று தோன்றும்போது அழைப்பு அனுப்புகிறேன் பழைய பதிவுகள் அநேகமாக 2011 வாக்கில் எழுதியவை இப்போதைய வாசகர்கள் பலரும் வாசித்திருக்க வாய்ப்பில்லை

    பதிலளிநீக்கு

  51. @ வருண்
    என் தளத்தில் காணப்படும் என் வயதை மாற்ற வேண்டுமோரிரு முறை செய்தாகி விட்டது ஆண்டொன்று போனால் வயதொன்று கூடுகிறதே. வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  52. @ துளசி கோபால்
    உங்கள் வீட்டு pantry கதவைத் திறந்தால் எப்படி இருக்கும்? தெரியவில்லையே. வருகைக்கு நன்றி மேடம்

    பதிலளிநீக்கு

  53. @ வருண்
    அப்போ மற்ற பதிவுகளைப் படிக்கவில்லையா. கிருஷ்ணாயணம் தவிர மற்றவை நீளம் குறைந்தவை. பாராட்டுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  54. @ திண்டுக்கல் தனபாலன்
    இந்த மாதிரி சுயதம்பட்டத்தினால் ஒரு கழுகுப் பார்வை காட்ட முடிந்தது என்பதே என் நோக்கம் நிறைவேறியது என்பதைக் காட்டுகிறது வருகைக்கு நன்றி டிடி.

    பதிலளிநீக்கு
  55. நம்முடைய எழுத்துகளை திரும்பிப் பார்த்து ரசிப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது, வளர்ந்துவிட்ட பிள்ளையின் குழந்தைக்குறும்பை ரசிப்பதைப் போல.. திரும்பிப் பார்க்கும்போது இதை இப்படி எழுதியிருக்கலாம்.. இன்னும் கொஞ்சம் திருத்தமாய் எழுதியிருக்கலாம் என்ற எண்ணத்துக்கு இடங்கொடாமல், உள்ளூற ஒரு நிறைவு கிடைக்கிறதே அதுதான் நம் எழுத்தின் வெற்றி. அந்த வகையில் தங்களுடைய பன்முகப் பரிமாணங்களின் வெளிப்பாடாக இங்கு மாதிரிக்கு கொடுத்திருக்கும் பதிவுகளே விளங்குகின்றன. சுய தம்பட்டம் செய்துகொள்வதில் தவறேயில்லை.. அது ஒருவகையான தார்மீக செருக்கு.. அது இருந்தால்தான் இன்னும் விசையுடன் எழுதமுடியும். தங்களுடைய எண்ணத்தின் வீச்சும் எழுத்தின் வீச்சும் எப்போதும் என்னை வியக்கச்செய்யும். இப்போதும் கூட. பல கனதியான பதிவுகளில் கருத்துரை இடத்தெரியாமல் வாசித்துக் கடந்துசென்றிருக்கிறேன். தங்கள் எண்ணங்களும் அனுபவங்களும் தொடர்ந்து எழுத்தாகப் பரிணமிக்க என் இனிய வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு

  56. @ கீதமஞ்சரி
    நாம் எழுதுவதைப் பிறர் படிக்கும் போதுதான் மகிழ்ச்சி பூர்த்திஅடைகிறது.அப்போது உற்சாகமூட்டும் பின்னூட்டங்களின்னும் எழுதத் தூண்டும்.ஆனால் எழுதுபவைப் படிக்கபடாமலேயே போனால் ஒரு வெறுமையே மிஞ்சுகிறதுஎன் சில கருத்துக்கள் வெகுஜனவாசகர்களுக்கு உடன்பாடாக இல்லாமல் போகலாம். இருக்கட்டுமே. உடன்படாதவற்றைக் குறிப்பிட்டு அவர்கள் கருத்தைக் கூறலாமே. பதிவுலகில் அது நடப்பதில்லைஎந்த செறுக்கு கொண்டும் தம்பட்டம் அடிக்கவில்லை. நான் சிற்ப்பாக எழுதி இருக்கிறேன் என்று நினைக்கும் பதிவுகளே வாசிக்கப் படாமலோ கருத்து கூறப்படாமலேயோ போகும் போது மீண்டும் அவற்றைக் காட்டி இவை படித்துக் கருத்து பெறக் காத்திருந்தன என்று கூறவே இப்பதிவு. உங்களை மாதிரி avid readers இருந்தால் அக்குறை நீங்கும் வருகைக்கும் மேலான கருத்துப்பதிவுக்கும் நன்றி மேடம்

    பதிலளிநீக்கு
  57. இம்மாதிரி அடிக்கடி சுய தம்பட்டம் அடிப்பதும் நல்லதற்குத்தான்: இல்லையென்றால் பழைய பதிவுகளைத் தேடித் படிப்பவர் யார்? இன்னும் பல சுய தம்பட்டங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் நண்பரே! - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு

  58. @ செல்லப்பா யக்ஞசாமி
    என்ன சுய தம்பட்டம் அடித்துப் பழைய பதிவுகளின் சுட்டிகளைக்கொடுத்தாலும் அதைத் திறந்து வாசிப்பவர்கள் மிகக் குறைவே. மேலான கருத்துப் பதிவுக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு