Thursday, April 23, 2015

தோரணங்கள்


                                           தோரணங்கள்
                                           ----------------------
நான் வரைந்த தஞ்சாவூர் ஓவியம் வெங்கடாசலபதி
துணுக்குத் துண்டுகள்
என் தந்தையின் தோளில் அமர்ந்து கடவுளைப் பார்த்தேன் ஆனால் அப்போது எனக்குத் தெரியவில்லை நான் அமர்ந்திருந்தது கடவுளின் தோள் மேல் என்று
                    என் மூத்த மகன் எனக்கு அனுப்பிய காணொளி
                                 =================
படித்ததில் பிடித்தது
மகன்:- அப்பா நான் இன்று என் நண்பர்களுடன் பார்ட்டிக்குப் போகட்டுமா?
அப்பா:; -உன் அம்மாவிடம் போய்க் கேள்
மகன்:- அம்மா, நான் இன்று என் நண்பர்களுடன் பார்ட்டிக்குப் போகட்டுமா?
அம்மா: உன் அப்பாவிடம் போய்க் கேள்
மகன்:- என்னடா இது ... பேஜாரப்போச்சு. வங்கியில் அலைக்கழிப்பதுபோல் இருக்கிறதே
.                                ========
25 ஆண்டு காலம் எந்தச் சசசரவும் இல்லாதிருந்த அந்தத் தம்பதிகளுக்குப் பரிசுகள் வழங்கும் விழாவில் அவர்களைப் பேட்டி காண நிருபர் ஒருவர் வந்திருந்தார்
“ எந்த சண்டை சச்சரவும் இல்லாத உங்கள் மண வாழ்க்கையின் ரகசியம் என்ன?
கணவன்:- திருமணமான புதிதில் நாங்கள் ஹனிமூனுக்காக சிம்லா சென்றிருந்தோம்
நிருபர்:- ஹனிமூனுக்கு ஏதாவது கோடை வாசஸ்தலத்துக்குச் செல்வது சகஜம்தானே
கணவர்:- அப்போது நிகழ்ந்த ஒரு சம்பவமே எங்களது இந்த மாதிரியான வாழ்வுக்குக் காரணம்
நிருபர்:- ( ஆவலுடன்) என்ன சம்பவம் நிகழ்ந்தது?
கணவர்:- தேனிலவின் போது ஒரு நாள் நானும் மனைவியும்குதிரை ஏறிச் சவாரி செய்து கொண்டிருந்தோம் மனைவியின் குதிரை முரண்டு பிடித்து அவளைக் கீழே தள்ளி விட்டது. கீழே விழுந்த என் மனைவி தன்னைச் சுதாரித்துக் கொண்டு ‘பரவாயில்லை முதல் தடவைதானே என்றாள்.பிறகு மீண்டும் குதிரை மீது ஏறி சவாரி செய்ய முயன்றாள். குதிரை மீண்டும் அவளைக் கீழே தள்ளிவிட்டது . அவளும் சமாளித்து  எழுந்து இரண்டாம் தடவைதானே பரவாயில்லை என்று கூறி மூன்றாம் முறையும் குதிரை மீது ஏறினாள் இந்த முறையும் குதிரை அவளைக் கீழே தள்ளியது அவள் ஏதும் கூறாமல் தன் கைப்பையில் இருந்த ரிவால்வரை எடுத்துக் குதிரையைச் சுட்டு விட்டாள். நான் கோபத்துடன் உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? வாயில்லா ஜீவனைக் கொன்று விட்டாயே என்றேன்
அவள் இது உங்களுக்கு முதல் தடவை என்றாள்.இப்போது புரிகிறதா எங்கள் சச்சரவு இல்லாத வாழ்க்கையின் ரகசியம் என்ன என்று
                    --------------------------
என் பேரனின் தொல்லை தாங்க முடியாமல் என் இளைய மகன் ஒரு நாய்க்குட்டி வாங்கி இருக்கிறான் கோல்டென் ரெட்ரிவர் ஜாதி. நாயை வளர்ப்பதில் சில சந்தோஷங்கள் இருந்தாலும் அடுக்கு மாடிக் குடி இருப்பில் வளர்ப்பது இன்னும் சிரமம் வளர சில காலம் ஆகும் வரைஅதைப் பராமரிப்பதுவெகு சிரமம் வீட்டில் ஆங்காங்கே நம்பர் ஒன் பாத் ரூம் போய்விடும் . வீட்டை சுத்தமாக வைத்திருப்பது மிக சிரமம். இப்போது பரவாயில்லை வருடாந்திர விடுமுறை. இன்னும் இரு மாதங்களில் பள்ளி திறந்தால் வீட்டில் யாருமே இருக்க மாட்டார்கள். அப்போது சிரமம் புரியும் வேண்டாம் என்று எத்தனையோ சொல்லியும் வாங்கி விட்டார்கள். எங்களுக்கும் நாய் வளலர்த்த அனுபவம் உண்டு. செல்லி என்னும் பெயரில் எங்கள் வீட்டு இளவரசியாக வளர்ந்தது, அதை என் மனைவி மாமியார் என்றே சொல்லுவாள். அதற்காக அவ்வளவு பாடு பட வேண்டும் சில அனுபவங்கள் பட்டுத் தெரிந்தால்தான் உண்டு
பேரனின் நாய்க்குட்டி  என் மனைவி மடியில்
.                            =============
உடலின் மிக முக்கிய உறுப்புகளில் கண்களும் ஒன்று.இரண்டு கண்களும் ஒற்றுமையுடன் எந்தப் பொருளையும் நோக்கும் ஒற்றுமைக்கு உதாரணமாக இவற்றைக் குறிப்பிடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தான் இவன் ஆனால் அது தவறு என்று புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் வாய்த்ததுஇவன் ஒரு அழகிய பெண்ணைப் பார்த்தபோது ஒரு கண்மாத்திரம் மூடி விழித்து சைகை காட்டியது/ எந்த ஒற்றுமையையும் குலைக்கும்  சக்தி பெண்ணுக்கு உண்டு என்று இவன் அறிந்ததும் அப்போதுதான்


அண்மையில் நண்பர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தவர் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த மகளின் குழந்தைக்கு சோறூட்டல்  கொடுக்க குருவாயூர் சென்றிருக்கிறார். இவர் சீனியர் சிடிசன் என்பதாலும் மகள் கைக்குழந்தையுடன்  போயிருந்ததாலும் அங்கிருந்தவர்கள் கரிசனம் காட்டி இவரையும் மகளையும் சுவாமி சன்னதி அருகே அனுமதி அளித்திருந்தனர். இவர் குருவாயூரப்பனிடம் கண்களை மூடிக்கொண்டு கைகளைத் “தாஎன்னும் பாவனையில் வைத்துக் கொண்டு பிரார்த்தித்து இருக்கிறார். இவர் திறந்த கைகளில் ஒரு பச்சை மத்தன் எனப்படும் பூசணிக்காய் இருந்ததை இவரது மகள் பார்த்தாளாம் இவருக்கும் ஏதோ தன் கைகளிலிருந்த உணர்வு வந்ததாம் ஆனால் சுவாமி சன்னதி அருகே எந்தப் பொருளும் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. அந்தப் பூசணி எப்படி வந்தது என்றோ மறைந்தது என்றோ இவருக்கும் மகளுக்கும் தெரியவில்லையாம். வேறு யார் கண்ணிலும் தென்பட்டதாகவும் தெரியவில்லையாம் சொல்லிச் சொல்லி மாய்கிறார்கள். என் மனைவி குருவாயூரப்பனின் கடாட்சம் அவருக்கு இருக்கிறதென்று நம்புகிறாள் கொராபுரேட் செய்ய வேறு யாரும் இல்லை.

இந்தக் காணொளியைப் பாருங்கள் ஒரு மென்பொருள் புதிதாக வந்திருக்கிறதாம் அதில் சில பிரபலங்களின் வார்த்தைகள் சேமிக்கப் பட்டிருக்கிறதாம் மொபைலில் அந்த வார்த்தைகளுக்கேற்ப உதடசைத்தாலேயே உதடசைப்பவரே பேசுவது போல் வருகிறதாம் என் பேரன் அதைச் செய்து அனுப்பி இருக்கிறான் 


  வலையைக் காப்பாற்ற என்னும் ஒரு பதிவு ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும் Save the internet         
  
           

39 comments:


 1. ஓவியம் புகைப்படம் போலவே இருக்கிறது ஐயா அருமை.
  முதல் காணொளி நெகிழ வைத்தது
  ஹனிமூன் சம்பவம் ஸூப்பர் இப்படி விட்டு கொடுத்தால் பிரட்சினையே இல்லை.
  இந்த வகையான சம்பவங்கள் எங்காவது ஒன்று நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
  பேரனின் காணொளி கண்டேன்.

  ReplyDelete
 2. உங்கள் கை வண்ணத்தை நேரிலேயே பார்த்திருக்கிறேனே.

  உங்கள் மூத்த மகன் அனுப்பிய காணொளி நல்ல கருத்துகளைக் கொண்டிருக்கிறது.

  ReplyDelete
 3. இரண்டாவது பாதி தான் வந்தது. அதற்குள்ளாக மூடிக் கொண்டது. சரியாய் வரலை. :(

  ReplyDelete
 4. உங்கள் ஓவியம் வரையும் திறமை எனக்குத் தெரியும். நீங்கள் வரைந்த ஆலிலைக் கிருஷ்ணன் எங்கள் வீட்டுச் சுவரில் அலங்கரித்துக் கொண்டிருக்கிறானே! முதல் காணொளி அருமை. இரண்டாவது சரியாக வரவில்லை.

  ReplyDelete
 5. தங்களின் கைவண்ணம் அருமை ஐயா
  காணொளி கண்டு நெகிழ்ந்தேன்
  நன்றி ஐயா

  ReplyDelete
 6. ஓவியம் அருமை ஸார். இது மாதிரி உங்கள் திறமைகள் மீது எனக்குப் பொறாமை உண்டு! :)))))

  நீங்கள் தொகுத்துத் தந்திருப்பதில் படித்ததும் இருக்கிறது, படிக்காததும் இருக்கிறது.

  காணொளி அருமை. அந்த ஆப் எல்லோரும் போட்டுப் படுத்தி எடுத்து வாட்சப்பில் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதே வசனத்தை என் மகனும் பேசி (நடித்து) இருக்கிறான்!

  :)))))


  ReplyDelete
 7. இவ்வளவு திறம் கொண்ட ஓவியராக நீங்கள் ? அழகான ஓவியம்..

  உங்கள் தொகுப்பு பல்சுவையுடன்.

  காணொளி எனக்கு தெரியமாட்டேன் என்கிறது..

  ReplyDelete
 8. #எந்த ஒற்றுமையையும் குலைக்கும் சக்தி பெண்ணுக்கு உண்டு #
  படிக்கும் போதே என் கண்ணிலேயே குத்து விழுந்தது போலிருக்கு :)

  ReplyDelete
 9. உங்கள் கைவண்ணம் அருமை சார்! உங்கல் மூத்த மகன் அனுப்பிய அப்பா பற்றிய காணொளி கவிதை! மனதைத் தொட்டது!

  ஹாஹ்ஹ் நல்ல கணவன் மனைவி ரகசியம்.

  அதிசயங்கள் என்று இப்படி ஒரு சிலர் சொல்லுவது கேட்டிருக்கின்றோம்....அதைப் பற்றிச் சொல்லத் தெரியவில்லை...நம்புவது கடினமாக இருக்கின்றது....அது அவரவர் மனதை பொருத்தது போலும்

  உங்கள் பேரனின் காணொளி போன்றது தான் இப்போது இளைஞர்களிடையே பிரபலம் ...

  நாய் குட்டி மிகவும் அழகு....நீங்கள் சொல்லும் யதார்த்தம் சரிதான்..

  நாங்களும் இருவரும் வைத்திருக்கின்றோம்...துளசி வீட்டில் பமரேனியன் மிக்ஸ்ட் கீதா வீட்டில் மாங்க்ரல்ஸ் 2 பெண்கள்....மாங்க்ரல்ஸ் வளர்ப்பது சற்று எளிது.

  கோல்டன் ரிட்ரைவர் மிக அழகானது...

  ReplyDelete
 10. முழு பூசணியை கையில் மறைத்த குருவாயூரப்பா!

  ReplyDelete
 11. முழு பூசணியை கையில் மறைத்த குருவாயூரப்பா!

  ReplyDelete
 12. முழு பூசணியை கையில் மறைத்த குருவாயூரப்பா!

  ReplyDelete
 13. முழு பூசணியை கையில் மறைத்த குருவாயூரப்பா!

  ReplyDelete
 14. முழு பூசணியை கையில் மறைத்த குருவாயூரப்பா!

  ReplyDelete
 15. முழு பூசணியை கையில் மறைத்த குருவாயூரப்பா!

  ReplyDelete
 16. ரொம்பப்பிடிச்சது நாய்க்குட்டிதான். என்ன பெயர் வச்சுருக்காங்கன்னு சொல்லுங்களேன்.

  தோரணத்தில் சில ஏற்கெனவே வேறிடத்தில் தொங்கும்போது பார்த்துருக்கேன்.

  கைவண்ணம் நேரிலேயே பார்த்தாச்சு:-) இனிய பாராட்டுகள்.

  ReplyDelete
 17. ஓவியம் பிரமாதம் ஐயா...

  /// அமர்ந்திருந்தது கடவுளின் தோள் மேல் /// ஆகா...!

  வாழ்க்கையின் ரகசியம் ஹா... ஹா...

  எங்கும் எதிலும் சக்தி மயம் தான்... இல்லையென்றால் மாயம் தான்... ஹிஹி...

  ReplyDelete
 18. தாங்கள் வரைந்துள்ள வெங்கடசலாபதி ஓவியம் அருமை. படித்ததில் பிடித்ததில் இரண்டாம் துணுக்கு வாய்விட்டு சிரிக்க வைத்தது. காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 19. அன்பின் ஐயா.. தங்களின் கைவண்ணம் அழகு.. முதல் காணொளியும் அழகு!..

  ReplyDelete

 20. @ கில்லர்ஜி
  ஓவியத்தைப் புகைப்படம் எடுத்துத்தானே போட்டது. மகன் அனுப்பிய காணொளிஎல்லாத் தந்தையருக்கும் பிடிக்கும். வருகை தந்து ரசித்ததற்கு நன்றிஜி

  ReplyDelete

 21. @ டாக்டர் கந்தசாமி
  மகன் அனுப்பிய காணொளி எல்லா தந்தையரும் ரசிப்பார்கள் வந்து பாராட்டியதற்கு நன்றிசார்

  ReplyDelete

 22. @ கீதா சாம்பசிவம்
  இரண்டாவது தோரணமா காணொளியா சிறிது கன்ஃப்யூஷன்
  முதல் காணொளி இரண்டாவது தோரணம் ஒரு ஸ்லைட் ஷோ மாதிரி. தந்தையரைப்பற்றியது. இரண்டாவது காணொளி என்றால் அது மிகவும் சிறியது.தற்சமயம் வந்திருக்கும் ஒரு புதிய மென்பொருள் உபயோகித்தது. வருகைக்கு நன்றி

  ReplyDelete

 23. @ கீதா சாம்பசிவம்
  ஆலிலைக் கிருஷ்ணனைப்பார்க்கும் போது என் நினைவு வருமே, வந்து பாராட்டியதற்கு நன்றிமேடம்

  ReplyDelete

 24. @ கரந்தை ஜெயக்குமார்
  வருகைதந்துகருத்திட்டதற்கு நன்றி ஐயா

  ReplyDelete

 25. @ ஸ்ரீராம்
  அதென்னவோ தெரியவில்லை. நான் பகிர்வதில் பலதும் நீங்கள் ஏற்கனவே பார்த்ததாய் இருக்கிறது. வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி ஸ்ரீ.

  ReplyDelete

 26. @ மோகன் ஜி
  பாராட்டுக்கு நன்றிஜி.இந்த ஓவியம்வரைந்து மூன்றாண்டுகளுக்கும்மேலாகி இருக்கும் இப்போதெல்லாம் நுணுக்கமாய் வேளை செய்ய கண் ஒத்துழைப்பதில்லை.

  ReplyDelete

 27. @ பகவான் ஜி
  ஐயையோ யார் சார் குத்தினது. ? வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete

 28. @ துளசிதரன் தில்லையகத்து
  ஒவ்வொரு தோரணத்தையும் எடுத்து எழுதி பாராட்டியதற்கு நன்றி என் மகனும் மருமகளும் ஒரு வாரம் ஊருக்குப்போய் இருக்கிறார்கள் பேத்தி பேரன் நாய்க்குட்டி இப்போது எங்கள் வீட்டில்தான் குட்டி கொஞ்சம் aggressive ஆக இருக்கிறது

  ReplyDelete

 29. @ அப்பாதுரை
  இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன் யாருமே கண்டு கொள்ளாத துணுக்கு உங்களை ஆறுமுறை குருவாயூரப்பனின் மகிமையைச்சொல்ல வைத்தது வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 30. @ துளசி கோபால்
  நாய்க்குட்டி கொஞ்சம் aggressive ஆக இருக்கிறது. பெயர் buddy என்று பேரன் சொன்னதை வைத்திருக்கிறார்கள் வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 31. @ திண்டுக்கல் தனபாலன்
  வருகை தந்து ரசித்ததற்கு நன்றி டிடி
  முன்புபோல் இப்போதெல்லாம் வரைய முடிவதில்லை. கண்கள் காடராக்ட் சிகிச்சைக்குப்பின் துல்லியமான பணிகள் செய்ய முடிவதில்லை.

  ReplyDelete

 32. @ வே.நடனசபாபதி.
  வந்து ரசித்ததற்கு நன்றி ஐயா,

  ReplyDelete

 33. @ துரை செல்வராஜு
  ஓவியத்தினைப்பாராட்டியதற்கு நன்றி ஐயா. முதல் காணொளி த்ந்தையருக்குப் பிடிக்கும்

  ReplyDelete
 34. எத்தனை மாசத்துக் குட்டி இந்த buddy ?

  சின்னக்குழந்தைகள் போல்தான் இதைப் பார்த்துக்கணும். நமக்குத்தான் பொறுமை அதிகமாகவே வேணும்:-)
  நாம் அதைப்பற்றிப் புரிந்து கொள்வதைவிட சீக்கிரமாகவே அவை நம்மைப்பற்றிப் புரிந்துகொள்ளும்:-)

  ReplyDelete
 35. ஓவியம் அட்டகாசம்! சின்ன சின்ன துணுக்கு பகிர்வு சிறப்பு! நன்றி!

  ReplyDelete

 36. @ துளசி கோபால்
  buddy ஐ வாங்கி வரும்போது 35 நாள் குட்டி. இன்னும் இரண்டு மாதமாகவில்லை. இப்போது அது கொஞ்சம் aggressive ஆகத் தோன்றுகிறது. கருத்துப் பதிவுக்கு நன்றி மேம்

  ReplyDelete

 37. @ தளிர் சுரேஷ்
  வருகை தந்து பாராட்டியதற்கு நன்றி சார்

  ReplyDelete
 38. This comment has been removed by the author.

  ReplyDelete
 39. ஓவியம் மிக அழகு.

  அப்பா பற்றிய Slide Show - மனதைத் தொட்டது.....

  தோரணத்தில் இருந்த விஷயங்களில் அனைத்தும் ரசித்தேன்.

  ReplyDelete