வலை நண்பருடன் ஒரு நாள்
--------------------------------------------
கடந்தமாதம்
16-ம்தேதி. திரு இராய,செல்லப்பா யக்ஞசாமிக்கு ஒரு அஞ்சல் அனுப்பி இருந்தேன். என்
பதிவுகளுக்கு அவர் வருகை தராததாலும், அவருக்கு கால்முட்டி அறுவைச் சிகிச்சை
நடந்திருந்தது நான் அறிந்திருந்ததாலும்
அவர் நலம் விசாரித்து எழுதி இருந்தேன். அவரும் என்னைப் பற்றி நினைத்துக்
கொண்டிருந்ததாகவும் 20-21 தேதிகளில்
பெங்களூரு வர ஒரு வேலை இருப்பதாகவும் நான்
இருப்பேனா என்றும் கேட்டு பதில் வந்தது. உடனே நான் பதில் போட்டேன். பெங்களூரு
வரும்போது என் வீட்டில் தங்கலாம் என்று எழுதி இருந்தேன். அவரும் ஒப்புக்கொண்டு 20-ம்
தேதி காலை என் விட்டுக்கு வந்தார். எனக்கும் என் மனைவிக்கும் அதில் மகிழ்ச்சி
ஏற்பட்டது. காலை உணவு ..மதிய உணவுக்குப் பின் அவரது நண்பர் ஒருவர் காரில் வந்திருந்தார்
செல்லப்பாவுக்கு என் வீட்டில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் இருந்த நெலமங்கலாவில்
இடம் இருப்பதாகவும் அதைப் போய் பார்க்கவேண்டும் என்றும் கூறினார். என் மனைவி
அவருடன் நானும் போக அனுமதி கொடுத்தார். நான் எங்கும் தனியாகப்போக அனுமதி இல்லை.
அவரது இன்னொரு
நண்பரும் எங்களுடன் வந்தார். எம்.எஸ். ஸ்ரீநிவாஸ் என்று பெயர் SMART SERVICES NETWORK -ன் MD&CEO. மாலை சுமார் ஐந்தரை
மணிக்கு நெலமங்கலவை விட்டோம். அவரது நண்பர் எங்களை அவரது ஆஃபீசுக்கு வர
வேண்டினார். நாங்களும் போனோம் மறு நாள்
உகாதிப் பண்டிகையை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் பூஜை நடந்து கொண்டிருந்தது. பூஜை
முடியும் நேரம் பிரசாதத்துக்கு நாங்களும் இருந்தோம் பிரசாதங்களைக் கொடுக்க வந்த
ஒரு பெண் வேப்பிலையுடன் சிறிது வெல்லத்தைய்யும் கொடுக்க வந்தார். நான் இனிப்பை
மட்டும் எடுத்துக் கொண்டு வேப்பிலை வேண்டாம் என்று கூறி விட்டேன் வருட ஆரம்பத்தில்
கசப்பும் இனிப்பும் உணரவேப்பிலையும் வெல்லமும் என்றார். நான் என் வாழ்வில் நிறையவே
பார்த்து விட்டேன் கசப்புஇனி வேண்டாம்
இனிப்பே போதும் என்று வெல்லம் சிறிது எடுத்துக் கொண்டேன். யாரும்
எதிர்பார்க்காதபதில் அது. செல்லப்பாவின் நண்பர் ஸ்ரீநிவாசனுடன் இரவு சுமார் எட்டரை
மணிக்கு வீடு சேர்ந்தோம். இதன் நடுவே இரண்டு மூன்று முறை என் மனைவி என்னுடன் தொலை
பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து விட்டாள் திரு ஸ்ரீநிவாசனுக்கு என் சிறுகதைத்
தொகுப்பு வாழ்வின் விளிம்பில் ஒரு பிரதி கொடுத்தேன் அவருக்கு அரசு லைப்ரரியில்
சிலரைத் தெரியும் என்றும் இப்புத்தகத்துக்கு அவர்கள் மூலம் ஆர்டர் கிடைக்க வழி
செய்வதாகவும் கூறினார் அவர் சென்ற பின் இரவு உணவு முடித்தோம். மறுநாள் திரு செல்லப்பா இன்னும் சில நண்பர்களைக் காண இருப்பதாகவும்
மதிய உணவு முடிந்ததும் சென்றார். வலை உலக நண்பர் ஒருவர் எங்களுடன் தங்கியது
எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது என்று சொல்ல வேண்டியதில்லை. நினைவுக்காக சில
புகைப் படங்கள் கீழே.
ஸ்ரீநிவாசன் செல்லப்பா |
ஸ்ரீநிவாசன் செல்லப்பா நான் |
.
நான் செல்லப்பா |
என்னுடன் செல்லப்பா |
1.
.
.
இனிய சந்திப்பு. அறுவைச் சிகிச்சைக்குப் பின் செல்லப்பா ஸார் நலமா?
பதிலளிநீக்குஇனிய சந்திப்பு. அறுவைச் சிகிச்சைக்குப் பின் செல்லப்பா ஸார் நலமா?
பதிலளிநீக்குநண்பர்களை சந்திப்பதே ஒரு மகிழ்ச்சியான நிகழ்வுதான். அதை அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்.
பதிலளிநீக்குஇனிமையான நினைவுகள்தான் அய்யா!
பதிலளிநீக்குநன்றி
நண்பர் செல்லப்பா அவர்கள் வலையுலக நண்பர்களுக்கு நன்கு அறிமுகமானவர், அவரை சந்தித்து பேசியதறிந்து மகிழ்ச்சி, அவர் பூரண நலம் பெற வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குவலைப் பூ அன்பருடன் செல்லப்பா அவர்களுடன் நடந்தேறிய சந்திப்பை பதிவாக்கி பகிர்ந்தளித்த பண்புள்ளம் கொண்ட அய்யாவுக்கு அன்பார்ந்த நன்றி!
பதிலளிநீக்குநினைவலைகளில் நீரோட்டம்
மனை வரையில் மகிழ்வூட்டம்
ஆஹா! நட்பின் நாதம் கீதமாய் தந்தீர் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
பதிலளிநீக்குசந்தோஷமான சந்திப்பு தொடரட்டும் என்றும்.
இனிய சந்திப்புதான் சார்! செல்லப்பா சார் எங்களுடனும் அடிக்கடித் தொடர்பில் இருப்பார்.
பதிலளிநீக்கு(கீதா: செல்லப்பா சார் எங்கள் வீட்டிற்கு அவ்வப்போது வருவார். அடையார் பக்கம் வர நேரும் போதெல்லாம். ஒரு வாரம் முன்பு கூட இங்கு வந்திருந்தார். கோவை ஆவியும் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். வலைத்தளங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, நான் உங்களையும், நண்பர் ஸ்ரீராமையும் எனக்குப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த போது செல்லப்பா சார் உங்கள் சந்திப்பு பற்றியும் சொன்னார். (நண்பர் துளசிக்கும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் நாங்கள் இருவரும் அடிக்கடிச் சொல்லிக் கொள்வதுண்டு)
செல்லப்பா சார் என்னிடம் உரிமையுடன் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்.)
நண்பர் ஸ்ரீராம், செல்லப்பா சார் இப்போது நன்றாக இருக்கின்றார். அறுவைச் சிகிச்சைக்குப் பின். அவர் மனைவிக்குச் சிறிய அறுவைசிகிச்சைக்காக, எம்.வி டயபட்டிக் சென்டர், கோபாலபுரத்தில் இரண்டு நாள் முன்பு பேசிய போது இருந்தார். இனிதான் அவரைத் தொடர்புகொள்ள வேண்டும். ஸ்ரீராம் சார் உங்கள் வீட்டுக்குச் செல்லப்பா சார் அடுத்த முறை வந்தால் என்னையும் அழைத்துக் கொண்டு போகிறேன் என்று சொல்லி இருக்கின்றார். )
நன்றி கீதா மேடம். விரைவில் சந்திப்போம்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குஇனியதோர் சந்திப்பு....
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி.
செல்லப்பா சாருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதா> இப்போது நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி. பல பதிவர்களையும் உங்கள் வீட்டுக்கு வரவேற்பது குறித்தும் மகிழ்ச்சி. சந்திப்பு இனிமையாக நடைபெற்றமைக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇனிய சந்திப்பு... மிக்க மகிழ்ச்சி ஐயா...
பதிலளிநீக்குரசனையான சந்திப்பு.. படித்தேன்.. ரசித்தேன்..!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
இப்படியான சந்திப்புக்களை வாழ்வில்மறக்கமுடியாது பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
***பூஜை முடியும் நேரம் பிரசாதத்துக்கு நாங்களும் இருந்தோம் பிரசாதங்களைக் கொடுக்க வந்த ஒரு பெண் வேப்பிலையுடன் சிறிது வெல்லத்தைய்யும் கொடுக்க வந்தார்.**
பதிலளிநீக்குவேப்பிலை பிரசாதமாகத் தருவாங்களா, சார்? மந்திரிக்கத்தான் பயன்படுத்திப் பார்த்து இருக்கேன். :)
Seems like you had a great time! :)
வலைப்பதிவர்களை சந்திப்பது என்றாலே உங்களுக்கு என்றுமே மகிழ்ச்சிதான்.
பதிலளிநீக்கு// நான் என் வாழ்வில் நிறையவே பார்த்து விட்டேன் கசப்புஇனி வேண்டாம் இனிப்பே போதும் //
என்ற உங்களது வரிகள், இன்றைய எனது சூழ்நிலையில் என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தன.
இதுபோன்ற இனிய சந்திப்புக்ள் தொடர வேண்டும் ஐயா
பதிலளிநீக்குசந்திப்பின் நினைவுகூரல் இனிமையும் இதமும். வேப்பிலையும் வெல்லமும் தருவதன் பொருள் அறிந்தாலும் தங்கள் பதிலில் உள்ள பொருள் புரிந்து ரசித்தேன். எத்தனையோ இன்ப துன்பங்களை சந்தித்த தங்களுக்கு தங்கள் மனம் போல இனி யாவும் இன்பமாகவே அமைய வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
செல்லப்பா அறுவை சிகிச்சைக்குப்பின் நலமே. அதனால்தானே பெங்களூரு பயணம் மேற்கொள்ள முடிந்த்து. வருகைக்கு நன்றி ஸ்ரீ.
பதிலளிநீக்கு@ வே. நடனசபாபதி
உண்மைதான் நண்பர்களை சந்திப்பதும் விருந்தினராக்கி மகிழ்வதும் எனக்கு மகிழ்ச்சி தரும் வருகைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ ஊமைக்கனவுகள்
நினைவுகள் நிகழ்வுகளால் ஏற்பட்டது. வருகைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
அவரை என் வீட்டுக்கு அழைத்து சந்தித்தேன் என்பதே சரி. வருகைக்கு நன்றி சார்.
செல்லப்பா அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற பின் தற்போது நலமாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சி..
பதிலளிநீக்குஐயா அவர்களும் அம்மா அவர்களும் பூரண நலம் எய்திட வேண்டுகின்றேன்..
பதிலளிநீக்கு@ யாதவன் நம்பி
என் அழைப்பை ஏற்று வந்ததால் நடைபெற்ற சந்திப்பு அது. வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி.
சென்னையில் என் மகன் வீட்டுக்கு வந்து சந்தித்திருக்கிறார். இப்பொழுது என் அழைப்பை ஏற்று இங்கும் வருகை தந்தார். சந்திப்புகள் தொடரும் நன்றி ஜி.
பதிலளிநீக்கு@ துளசிதரன் , கீதா
உங்கள் வருகைக்கு நன்றி. என் வீட்டில் இருந்தபோதும் ஒரு உறவினர் போலவே நினைத்தோம். அவரும் இருந்தாரானால் அவரது பின்னூட்டங்கள் ஏது வருவதில்லை. ஏதோ பிரச்சனை என்று சொன்னார். நாங்கள் சென்னை வரும்போது முடிந்தால் ஒரு பதிவர் சந்திப்பையே நடத்தலாம் வருகைக்கு நன்றி நட்புகளே
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
முடிந்தால் சென்னையில் என் வீட்டில் சந்திக்கலாம்.
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
வந்து ரசித்தமைக்கு நன்றிசார்
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
நான் சந்திக்க விரும்பும் நண்பர்கள் பட்டியல் பெரிது. நீங்களும் அதில் அடக்கம் வந்து கருத்திட்டதற்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
வாழ்த்துக்களுக்கு நன்றி மேடம்
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
மதுரை பதிவர் விழாவில் உங்களைச் சந்தித்தது நன்கு உரையாட முடியவில்லை. பெங்களூரு வருவீர்களா. நன்றி டிடி.
பதிலளிநீக்கு@ செந்தில் குமார்
வந்து ரசித்ததற்கு நன்றி குமார்.
பதிலளிநீக்கு@ ரூபன்
திரு செல்லப்பாவை சென்னையில் சந்தித்திருக்கிறேன் பெங்களூருவிலும் தொடர்ந்த சந்திப்பு. இம்முறை என் வீட்டு விருந்தாளியாக. வருகைக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ வருண் Yes I had a great time என் மனைவி உடனில்லாமல் நான் செல்லப்பாவுடன் சென்றதே நியூஸ். பல மனிதர்களைச் சந்திக்கிறோம் பலவற்றையும் கற்கிறோம் மந்திரிக்க மட்டு மல்ல வேப்பிலை பிரசாதமாகவும் உகாதி அன்று தரப்படும்வேப்பிலையில் மருத்துவ குணங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது வருகைக்கு நன்றி வருண்
பதிலளிநீக்கு@ தமிழ் இளங்கோ
உண்மைதான் சார் . பதிவர்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சியே சென்ற முறை திருச்சி பயணம் தடைபட்டதால் பலரை சந்திக்க முடியவில்லை. இந்த முறை ஜூன் ஜூலை மாதங்களில் வர திட்டம் உண்டு, அனுபவங்கள் எல்லாச் சுவையிலும் இருக்கும் நான் இனிப்பை விரும்புகிறேன்
வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
நானும் இனிய சந்திப்புகள் தொடர விரும்புகிறேன் நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ கீத மஞ்சரி
உங்கள் பின்னூட்டங்களை நான் மிகவும் ரசிக்கிறேன் மேடம் one of very few.நன்றி.
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
திரு செல்லப்பாவுக்கு அறுவைச்சிகிச்சை முடிந்து பல நாட்களாய் விட்டன. வலைப்பக்கம் காணாததால் நான் அவரைத் தொடர்பு கொண்டேன் பதிவில் எழுதி இருக்கிறேனே. வருகைக்கு நன்றி ஐயா.
வீடு வரை (வலையுலக)உறவு தொடர்வதை அறிந்து மகிழ்ச்சி :)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ பகவான் ஜி
வெகு சில வலையுலக உறவுகளே இதற்குள் வருகிறார்கள். பலரும் தொடர்புக்கே அப்பாற்பட்டு இருக்கிறார்கள் வருகைக்கு நன்றி ஜி.
தங்கள் இல்லத்தில் தங்க கொடுத்து வைத்திருக்க வேணும். தங்கள் மனைவியின் உபசரிப்பு அப்படி!!!
பதிலளிநீக்குஇனி வேணாம் கசப்பு. கொஞ்சம் இனிப்பு போதும் வாழ்க்கையை ரஸிக்க.
அருமையான பதில்! ரசித்தேன்.
பதிலளிநீக்கு@ துளசி கோபால்
என் மனைவியின் உபசரிப்பை நினைவு கூர்ந்து பாராட்டியதற்கு நன்றி மேடம்
எனது பெங்களூர் விஜயம் பற்றித் தங்கள் அழகான வருணனை கண்டேன். தங்கள் மனைவியார் அன்போடு அளித்த 'அடை' பற்றியும் ஒரு வார்த்தை கூறியிருக்கலாம். வீட்டினுள் நுழைந்த ஒரே நிமிடத்திற்குள் சுடச்சுட அந்த அடையை அவர் எடுத்துவந்து அளித்த வேகம், எழுதுவதில் தங்களுக்குள்ள வேகத்திற்குச் சற்றும் குறைவில்லாதது என்பேன். அதற்கும் பிற உணவுகளுக்கும் அவர்களுக்கு என் அன்பார்ந்த நன்றி. (2) எனது கால்கள் இப்போது நல்லமுறையில் இயங்க ஆரம்பித்துவிட்டதால், ஏற்கெனவே முடிந்துபோன அறுவை சிகிச்சையைப் பற்றி அனைவரும் மறந்துவிட அனுமதிக்கிறேன். (3) தங்கள் வீடு மிக அழகாக, சுய வடிவமைப்பில் கட்டப்பட்டது என்ற தகவலை நான் தெரிவிப்பதில் தவறில்லையே? என்புடன்: இராய செல்லப்பா
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ செல்லப்பா யக்ஞசாமி
இதே பதிவுக்கு என் மனைவியின் உபசரிப்பை நினைவு கூறும் இரண்டாவது நபர் நீங்கள். நன்றி. உங்கள் கால் அறுவைச் சிகிச்சை பற்றி வாசகர்கள் மறந்து போக நானும் எண்ணுகிறேன் . என் வீட்டின் சுய வடிவமைப்பப் பாராட்டியதற்கு நன்றி சார்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு