Tuesday, July 28, 2015

ஒரு குதூகலப் பயணம்-3


                              ஒரு பயணமும் பேருவகையும் -3
                             ------------------------------------------------

சென்றபதிவில் எனக்கான ஒரு நாள் பயணம் இனிதே முடிந்தது என்று எழுதி இருந்தேன் என் மனைவியையும் என்னுடன் பயணத்தில் வரச்செய்ய ஆலய தரிசனங்களும் உண்டு என்று சொன்னேன். அவளுக்குக் குருவாயூர் செல்ல எந்த சந்தர்ப்பம் கிடைத்தாலும் விடமாட்டாள் என்று எனக்குத் தெரியும் ஆகவே இந்தப் பயணத்தில் குருவாயூரும் இடம் பெறும் என்று தெரிந்ததும் மகிழ்ச்சியோடு வந்தாள். 18-ம் தேதி காலையில் அவளது குலக் கோவில் பரியானம்பத்தைக் காவுக்கு முதலில் சென்று பின் அங்கிருந்து குருவாயூர் செல்லத் திட்டமிட்டோம் . பாலக் காட்டில் இருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் அந்தக் கோவில் இருந்தது. காலையில் காப்பி அருந்தி கோவிலுக்குப் பயணப் பட்டோம் ஏற்கனவே பலமுறை அந்தக் கோவிலுக்குப் போய் வந்ததில் கோவில் அருகே இருந்த டீ ஸ்டாலில் காலை உணவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் முடிவாயிற்று. அந்த இடத்தில் சுவையாகவும் விலை மலிவாகவும் இருக்கும் எங்கள் நால்வருக்கும் காலை உணவுக்கு ரூ150 மட்டுமே ஆயிற்று, பிறகென்ன கோவில் தரிசனம்தான் கர்க்கடக மாதம் ஆனதால் கோவிலில் கூட்டமும் அதிகம். ஆனால் வளாகம் பெரிதாக இருந்ததால் தெரியவில்லை. நம் ஊரில் அம்மனுக்கு ஆடிக் கூழ் ஊற்றுவது போல் அங்கும் கர்க்கடகக் கஞ்சி வினியோகிக்கப் பட்டது. வீட்டில் இருந்த அனைவர் பெயரிலும் அர்ச்சனை செய்யப் பட்டது.
அங்கிருந்து குருவாயூருக்கு சுமார் எண்பது கிலோமீட்டர் தூரம்  போகும் வழியில் எங்கள் கார் சிலரால் வழிமறிக்கப் பட்டது.  காரை நிறுத்தியதும் சில இஸ்லாமிய நண்பர்கள் எங்களுக்குப் பாயசம் கொடுத்து ரம்சான் பண்டிகை அன்று என்பதை நினைவு படுத்தினார்கள் பஞ்சாபிலும் தீவிர வாதிகளின் தாக்கம் அதிகமாயிருந்த போது நான் போனதும் அங்கும் எங்கள் கார் சீக்கியர்களால் வழிமறிக்கப் பட்டதும் அவர்கள் எங்களுக்கு ரோட்டி சப்ஜி கொடுத்து உபசரித்ததும் நினைவுக்கு வந்தது. இது பற்றி “பஞ்சாபில் நான்என்னும் பதிவு எழுதி இருக்கிறேன் 
கேரளத்தில் பெருவாரியானவர்கள் ஏதாவது கேட்டால் சைகையிலேயே பதில் சொல்கிறார்கள் இன்ன இடத்துக்குப் போகும் வழி கேட்டால் திசை நோக்கிக் கை காட்டுகிறார்கள் அவர்களது செய்கை நாம் போக வேண்டிய இடம் வெகு அருகில் இருப்பதுபோல் நினைக்கத் தோன்றுகிறது ஒரு மலையாளத் திரைப்படம் நினைவுக்கு வருகிறது:இதோ இவிடம் வரை “ என்று சொல்லியே அதிக தூரத்தையும் கடக்க வைப்பார்கள். போகும் வழியில் என் மாமனாரின் ஊர் அருகே சென்ற போது அங்கிருந்த மாங்கோட்டுக்காவுக்கும் போகலாம் என்று மனைவி அபிப்பிராயப் பட்டாள். நானும் மச்சினனும் பேண்ட் போட்டிருந்ததால் அனுமதி இருக்கவில்லை, அவளுக்கென்ன  கோவில் உள்ளே போய் தொழுது வந்தாள்.

அங்கிருந்து வழி கேட்டு கேட்டு குருவாயூர் வந்து சேர்ந்தோம்.ஏற்கனவே ஹோட்டல் நியூ ஹொரைசன்  இண்டர் நேஷனல் ல் அறைகள் முன் பதிவு செய்திருந்தோம் அன்று ஒரு இரவு அங்கு தங்கி மறு நாள் பெங்களூர் திரும்பத் திட்டம்
 அங்கு மதிய உணவு உண்டபின் ஷாப்பிங் பிறகு மாலை சீனியர் சிடிசன் வரிசையில் நின்று தரிசனம் என்று ப்ளான் நாங்கள் அனைவரும் மச்சினன் மனைவி தவிர்த்து சீனியர் சிடிசன்களே. கேட்டால் நிரூபிக்க ஏஜ் ப்ரூவ் செய்யவேண்டி இருந்தால் காண்பிக்க தேவைப்பட்டபேப்பர்கள்.என வரிசையில் நிற்கும் போது மச்சினன் மனைவிக்கு ஒரே சந்தேகம்  தன்னை அங்கு அனுமதிப்பார்களோ என்று. . வயதானவர் தனியாக வர முடியாது , கூடத் துணை என்று சமாளிக்கலாம்  என்று சொன்னோம் . இருந்தும் நிம்மதி இல்லாமல் வரிசையில் நின்றாள். வரிசையில் அவளை விட இளையவர்கள் நின்றிருந்தது தெம்பு கொடுத்தது. நான்கரை மணிக்கு நடை திறப்பார்கள் என்று கூறி பலத்த சோதனைகளுக்குப்பின் கோவில் வளாகத்துக்குள் அனுப்பப் பட்டோம் வரிசையில் நின்றிருக்கும் போது சீவேலி எனப்படும் கிருஷ்ண விக்கிரகத்தை யானைமேல் வைத்து மூன்று முறை வலம் வரும் சடங்கு நடை பெறு கிறது. அதன் பின் கோவில் கர்ப்பக்கிரகம் திறக்கப் பட்டு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கிறார்கள். ஒரு வரிசை சீனியர்களுக்கு என்றால் மறுபக்கம் எல்லோருக்கும் ஆன வரிசையும் இருக்கிறது. வரிசை ஒன்று மூன்று நான்காக மாறுகிறது. இருந்தாலும் கூட்டத்தை முண்டி அடித்து குருவாயூர் கிருஷ்ணனை தரிசித்தோம்  சின்ன விக்கிரகம் ஊன்றி கவனித்தால் மட்டுமே உருவம் தெரியும் நடையைக் கடக்கும் போது பக்தர்கள் நடையில் பணத்தை வைக்கிறார்கள். அவை அங்கு பூசை செய்யும் நம்பூதிரிகளுக்கு நல்ல வருமானமாகிறது. ஒவ்வொரு நடையிலும் பணம் வைத்தோருக்கு இலையில் சந்தணப் பிரசாதம் கொடுக்கப் படுகிறது. ஏனையோர் வெளியே பிரசாத வினியோகம் செய்யும் இடத்தில் தூக்கிப் போடுவதைப் பிடித்துக் கொள்ளவேண்டும்  என் மனைவிக்கு மிகவும் சந்தோஷம் திவ்ய தரிசனம் என்று மகிழ்ந்து கொண்டாள்.
மதிய உணவுக்கும் தரிசன வரிசையில் நிற்கும் நேரத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் சில புகைப் படங்கள் எடுத்தோம் என் மச்சினன் ஒரு யானைப் பட்டம் வாங்கினான் இம்மாதிரிப் பொருட்கள் வாங்க நாங்கள் எப்போதும் ஐயப்பன் ஸ்டோர்ஸ் எனப்படும் கடைக்குச் செல்வது வழக்கம் இம்முறையும் அப்படியே.

பரியானம் பத்தக் காவு -முகப்பு

 
பரியானம் பத்தக்காவில்

வரும் ஆகஸ்டில் நடக்க இருக்கும் விசேஷ  வழிபாடுகள்
கோவில் அலுவலகம்
மாங்கோட்டுக்காவு -முன்பு எடுத்தபடம் 
குருவாயூரில் தங்கிய ஹோட்டல் 
ஹோட்டல் முகப்பு
ஹோட்டல் வரவேற்பில்
வரவேற்பில் பிள்ளையார்
ஹோட்டலில் ஒரு ஓவியம் 
ஐயப்பன் ஸ்டோர்ஸ் 
ஹோட்டல் அருகே -சிவனும் யானையும் பின்னே
தரிசனம் முடிந்து  இரவு உணவு உண்டு ஓய்வாக ஓட்டல் வராந்தாவில் அமர்ந்திருந்தோம் எதிரே ஒரு திரை அரங்கம், ரம்சான் பண்டிகை முன்னிட்டு ரசிகர்கள் கூட்டம் தெரு முழுதும் நிரம்பி வழிந்தது. வராந்தாவில் அமர்ந்து இருந்த இடத்தில் தலை தூக்கிப் பார்த்தபோது கண்ட ஓவியம் வெளிச்சம் சரியாக இல்லாததால் சரியாக வரவில்லை.
வளைந்த ஓட்டுப் பிறையின் கீழ்கண்ட ஓவியம்
 மறுநாள் காலையிலேயே கிளம்பி விட்டோம் மாலை ஆறு மணி அளவில் பெங்களூரு வந்து சேருவோம் என்று கணித்தோம் சீரான வேகத்தில் வரும் போது சேலம் ஐந்து ரோட் அருகே இருந்த ஹோட்டல் சரவண பவானில் மதிய உண்வு.வரும் வழியில் மனம் குதூகலத்தில் ஆழ்ந்திருந்தது. ஒன்று பயணம் சுமூகமாக முடிந்தது. இரண்டு நான்கு நாட்கள் பயணத்திலும் என் உடலில் தெம்பு நன்றாகவே இருந்தது. உள்ளம் மகிழ்ச்சியில் இருக்க உடலும் ஒத்துழைத்ததுதான் நிம்மதி. வரும்வழியில் இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டே வந்தோம் மலை முகட்டில் மேகங்கள் தவழ்வது கண்டதும் என் கைப்பேசியில் சிறை பிடித்தேன் 
 இப்பயணப் பதிவுகளில் என் கூடவே பயணித்த வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
மலையில் தவழும் மேகங்கள்
    

22 comments:

  1. அருமையான பயண அனுபவக் குறிப்புக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. உடலில் தெம்பு இருப்பதுதான் விசேஷம்.மனது குதூகலமாக இருந்தால் உடல் ஒத்துழைக்கும்.

    ReplyDelete
  3. படங்கள் அருமை. பதிவு சுவாரஸ்யம்.

    ReplyDelete
  4. படங்கள் அனைத்தும் அழகு... இனிமையான பயணம் ஐயா...

    ReplyDelete
  5. குருவாயூர் எனக்குப் பழகிய இடம்தான். என்றாலும் உங்கள் அனுபவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டிப் படித்தேன். நல்ல பதிவு.

    ReplyDelete
  6. வணக்கம்

    தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_29.html

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  7. படங்கள் மிக அழகாக இருக்கின்றன. நல்ல சுவாரஸ்ய நடையில் பயணக் குறிப்பு உங்களுடன் நாங்களும் பயணித்தோம்.
    குருவாயூரில் அந்தக் கூட்டம் நான்காகப் பிரிந்து முண்டியடிப்பதால் சீனியர் சிட்டிசன் என்று தனியாக விட்டு எந்த பிரயோசனமும் இருப்பதாகத் தெரியவில்லையே!

    ReplyDelete
  8. பயணம் என்றாலே
    மனதும் மனதிற்கு முன்பே உடலும் தயாராகிவிடும் அல்லவா
    இதுபோன்ற இனிய பயணங்கள் தொடரட்டும் ஐயா

    ReplyDelete
  9. இஷ்டப் பட்டு பயணித்தால் கஷ்டம் தெரியாதுதானே :)

    ReplyDelete

  10. @ தளிர் சுரேஷ்
    பயணக் குறிப்புகள் எழுதும் போது சில விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள முடிகிறது. அந்தவிதத்தில் ஒரு நிறைவு கிடைக்கிறது. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  11. @ டாக்டர் கந்தசாமி
    உடல் தெம்பைச் சோதித்துப் பார்க்கவும் இந்தப் பயணம் உதவியது. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  12. @ ஸ்ரீ ராம்
    வருகை தந்து படங்களை சிலாகித்ததற்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  13. @ திண்டுக்கல் தனபாலன்
    ஆம் இனிமையான பயணம்தான் டிடி.

    ReplyDelete

  14. @ செல்லப்பா யக்ஞசாமி
    குருவாயூருக்கு நான் பலமுறை சென்றதுண்டு, சிலமுறை பகிர்ந்தும் இருக்கிறேன் என் அனுபவத்தை அறிந்துகொள்ள வருகை புரிந்ததற்கு நன்றி சார்.

    ReplyDelete

  15. @ சாமானியன்
    வலைச்சர அறிமுகத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  16. @ துளசிதரன் தில்லையகத்து
    சீனியர் சிடிசன் வரிசை மற்றவரிசையை விடச் சிறியது. மற்ற வரிசையில் வருவதை விட நேரம் குறைவாக எடுக்கிறது. வருகைக்கு நன்றி சார்/ மேம்

    ReplyDelete

  17. @ கரந்தை ஜெயக் குமார்
    உடல் தயாரா என்று சோதித்துப் பார்க்கவே இந்தப் பயணம் ஐயா.

    ReplyDelete

  18. @ பகவான் ஜி
    இஷ்டப்பட்டாலும் உடல் ஒத்துழைக்க வேண்டும் அல்லவா. வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete
  19. மனம் மகிழ்ந்து இருக்கும் போது தெம்பு தன்னால் வந்து விடும். நாங்களும் இனிமையாக உங்களோடு பயணித்தோம் ஐயா. நன்றி

    ReplyDelete

  20. @ உமையாள் காயத்ரி
    உண்மைதான் உடன் பயணித்ததற்கு நன்றி மேம்

    ReplyDelete
  21. படங்களுடன் கூடிய பயண அனுபவம் அருமை. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

  22. @ கீதா சாம்பசிவம்
    டைட் ஷெட்யூலுக்கு நடுவிலும் வருகைதந்து கருத்திட்டதற்கு நன்றி மேம்

    ReplyDelete