Friday, October 16, 2015

புதுக்கோட்டை via மலைக் கோட்டை (3)


                          புதுக்கோட்டை via  மலைக் கோட்டை (3)
                           ---------------------------------------------------------
 சென்ற பதிவில் விடுபட்ட புகைப் படங்கள் சில
புதுக் கோட்டைக்கும்  திருச்சியிலும் நாங்கள் பயணித்த கார்

  
திருமதி கீதா சாம்பசிவம்  வீட்டு டெரசில் இருந்து உச்சி பிள்ளையார் கோவில் 

கீதா சாம்பசிவம் தம்பதியினருடன் 
 திருமதி கீதா என் மனைவிக்குக் கொடுத்த நினைவுப் பரிசுகள்

திருமதி கீதா வீட்டு டெரசில் இருந்து ஒரு காட்சி 
மதிய உணவுக்கு வந்தபோது ஓட்டல் அறையில்  ஒரு கை வண்ணம்

திருமதி கீதா சாம்பசிவம் வீட்டிலிருந்து நேராக ஓட்டல் அறைக்கு வந்தோம் என் மகனின் நண்பர் ஒருவர் எங்களை  செல்லம்மாள் மெஸ்ஸில் போய் உணவருந்தச் சொல்லி இருந்தார். ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்  என்றார். அது திருச்சி ஜீ எச்  அருகில் திரௌபதி அம்மன் கோவில் தெருவில்   இருப்பது கேட்டு தெரிந்து கொண்டோம்
 பாரம்பரியச் சமையல் என்றும்   மண்பானைச் சமையல் என்றும் (G)காசோ மின்சாரமோ இல்லாமல் விறகடுப்பில் சமையல் என்றும்  மெனுவில் இருப்பதில் நமக்கு வேண்டியதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும்  கூறி மெனுவில் இருப்பவை அனைத்தையும்  கொண்டு வருகிறார்கள்  வாழை இலையில் பரிமாறப்படுகிறது  படங்கள் விளக்கும்  என்று  நினைக்கிறேன்
மெஸ்ஸீன் முகப்பு. Add caption
மெனு
தேவைப்பட்டதைத் தேர்ந்தெடுக்கலாம் 
மூன்று பேருக்கான மதிய உணவுக்கு ரூ  300/-க்கும்  குறைவாகவே ஆயிற்று
திருச்சியில் வசிக்கும் பதிவர்களில்  புதுகைக்குவராத சில பதிவுலக நண்பர்களுக்கு  அஞ்சல் அனுப்பி இருந்தேன் முக்கியமாக திரு ரிஷபன் திரு ஆரண்ய நிவாஸ்  ராமமூர்த்தி திரு ஜோசப் விஜு இவர்களுடன் கோபு சாருக்கும் திரு தி தமிழ் இளங்கோவுக்கும்  செய்தி அனுப்பி இருந்தேன்  திரு ஜோசப் விஜு எனக்கு பதில் அளித்தபோது  அவர் பிற பதிவர்களை  சந்திப்பதில் நாட்ட மில்லை என்று தெரிந்தது. அவரிடம் மற்றவர்கள்மாலை ஐந்து மணிக்கு மேல்தான்  வருவார்கள் என்றும்  அதற்கு முன் இவர் வரலாம் என்றும் செய்தி அனுப்பி இருந்தேன்  மீறி யாராவது வந்தால் விஜுவை பதிவர் என்று சொல்ல மாட்டேன் என்றும் உறுதி கூறி இருந்தேன்  அவர் சுமார் நான்கு மணி அளவில் வந்தார். தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள  ஏனோ மிகவும் தயங்குகிறார்  அவர் புகைப் படத்தை வெளியிட வேண்டாம்  என்றும் கேட்டுக் கொண்டார். அவர் எங்களுடன் கழித்த நேரத்தில்  நான்தான் அதிகம் பேசிக் கொண்டிருந்தேன்  அவருக்கு மரபுக் கவிதைப் போட்டியில்  முதல் பரிசு என்று தெரிந்தும் புதுகை போய் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள விரும்பாதவித்தியாசமானவராய் இருந்தார்  எனக்கு மூன்று நூல்களைநினைவுப் பரிசாகக் கொடுத்தார். நான் என்னுடைய வாழ்வின்  விளிம்பில் நூலைக் கொடுத்தபோது அதற்கான விலையைக் கொடுத்தே தீருவேன் என்று  உறுதியாய் இருந்தார்  ஒரு வித்தியாசமான மனிதரை சந்தித்தேன் 
 திரு ஜோசப் விஜு சென்ற சற்று நேரத்தில்  என் பழைய நண்பரும் அவரது மனைவியும்  எங்களைக் காண  வந்திருந்தனர்  திரு எம்பி ராமசாமியும் அவரது துணைவியார் புஷ்பா ராமசாமியும்  பல ஆண்டுகால நண்பர்கள். நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது திரு தி தமிழ் இளங்கோ வந்தார்  மற்ற நண்பர்கள் வந்து கொண்டிருப்பதாகவும்   தகவல் சொன்னார் சிறிது நேரத்தில் கோபுசாரும் ரிஷபன் சாரும் ராமமூர்த்தி சாரும்  வந்தனர் கடந்த முறை திருச்சி வந்தபோது சந்திக்க முடியாமல் போனதை நினைவு கூர்ந்தோம் திரு ராமமூர்த்தி மிகவும் சுவாரசியமான  மனிதர். திரு ரிஷபன் சற்றே சீரியசானவர் போல் இருந்தது.  வந்தவர்கள் எனக்கு ஒரு பெரிய சந்தண மாலை அணிவித்து  கௌரவப் படுத்தினார்கள் மாலை நிறுவனத்தில் ஆடிட் வேலை இருந்ததால் தாமதமாயிற்று என்றும் ட்ராஃபிக்கில்  மாட்டிக் கொண்டதாகவும்  கூறினார்கள்  நேரம் போனதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தோம்  இதன்  நடுவில் ராமசாமித் தம்பதியினர் விடை பெற்றுச்  சென்றனர் திரு ரிஷபன் எனக்கு அவர் எழுதி இருந்த மனிதம்  என்னும் சிறு கதைத் தொகுப்பை  வழங்கினார்  நானும் என்  வாழ்வின் விளிம்பில் புத்தகத்தைக்  கொடுத்தேன்   இந்த சிறிய அளவிலான பதிவர் சந்திப்பு நிறைவைத் தந்தது.  தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்ளும் அனுபவம்  பெரிய சந்திப்புகளில் கிடைப்பதில்லை.  இங்கு அறிமுகத்துடன்  ஒருவருக்கு ஒருவரை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம் 
திரு எம் பி ராமசாமி  திருமதி புஷ்பா என்மனைவியுடன் 
     
 
பெரிய சந்தண மாலை ( படம் வைகோவின் பதிவிலிருந்து சுட்டது)
      
 திரு ரிஷபன் சாருடன் இருந்த புகைப்படம் அவர் விருப்பத்துக்கு இணங்க  நீக்கப்பட்டது.  அவர் விரும்பாதது எனக்குத் தெரிந்திருக்கவில்லை

                   

      








   


50 comments:

  1. திருச்சியில் மினி பதிவர் சந்திப்பு
    மிக மிக அருமை
    நான் வை.கோ சாரை நேரடியாகச் சந்திக்க
    அதிக ஆவலாக உள்ளேன்
    கூடிய விரைவில் வாய்ப்பு அமையும்
    என நினைக்கிறேன்
    தொடரின் தொடக்கமே அமர்க்களம்
    தொடர்கிறேன்...

    ReplyDelete

  2. தங்களின் எண்ணங்களை பகிர்ந்த விதத்தில் தங்களது சந்தோஷம் வெளிப்படுகிறது ஐயா.

    ReplyDelete
  3. இனிய சந்திப்பினை அழகாக விவரித்திருக்கின்றீர்கள்.. அருமை..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  4. ”எமக்குத் தொழில் எழுத்து “ என்றான் மகாகவி பாரதி. அந்த வாக்கை அய்யா G.M.B அவர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருவதாகத் தெரிகிறது. தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படிப்பதில் ஒரு மகிழ்ச்சி! ”ஐவர் அணி” புகைப்படத்தை தரவிறக்கம் செய்து கொண்டேன். மிக்க நன்றி. (எழுத்தாளர் ரிஷபனும் தனது புகைப்படம் வெளியாவதை ஏனோ (நமது ஜோசப் விஜு (ஊமைக் கனவுகள்) போல) விரும்புவதில்லை.

    கீதா சாம்பசிவம் அம்மா அவர்கள் வீட்டு மாடியிலிருந்து தென்படும் மலைக்கோட்டை, காவிரி ஆறு, மற்றும் சர்ச் உள்ள படமும், காவிரி கதவணைப் பாலம் (கம்பரசம்பேட்டை) படமும் நன்றாக தெளிவாக உள்ளன. தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation) இல்
    Executive Committee உறுப்பினர்களில் ஒருவர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    உங்கள் பதிவில் உள்ள செல்லம்மாள் மெஸ் மெனு மற்றும் உங்களது அனுவத்தைப் பார்த்ததும், எனக்கும் அங்கு ஒருநாள் சென்று சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. (மெஸ்சைப் பற்றி கேள்விப் பட்டு இருக்கிறேன்)

    V.G.K அவர்களோடு உங்களை இரண்டாம் முறை திருச்சியில் உங்களை சந்தித்ததில் எனக்கு மனம் நிறைவு. எழுத்தாளர்கள் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி சாரும், ரிஷபன் சாரும் நன்றாக நகைச்சுவையாக பேசுவார்கள்.

    ReplyDelete
  5. திரு ரிஷபன் அவர்களின் படத்தைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். அவர் படம் வெளியிடுவதில் யோசனை செய்பவர்! :) எல்லாப் படங்களும் நன்றாக வந்துள்ளன. உங்கள் அனுபவப் பகிர்வும் அருமை/

    ReplyDelete
  6. ரிஷபன் ஸார் படம் கண்டு ஆச்சர்யம் அடைந்தேன். அவரும் தன் படம் வெளியாவதை விரும்பாதவர்கள்.

    சுவாரஸ்யமான அனுபவங்கள். தொடர்கிறேன்.

    ReplyDelete
  7. ஜோசப் விஜு உண்மையிலே வித்தியாசமானவராகத்தான் இருக்கிறார். கண்டிப்பாக ஒருமுறை அவரை சந்திக்க வேண்டும். ரிஷபன் சார், ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களையும் உங்கள் பதிவில்தான் காண்கிறேன்! சிறந்த தொகுப்பு! நன்றி!

    ReplyDelete
  8. விஜு அவர்கள் மிகவும் வித்தியாசமானவர்தான். நாங்களும் அவரைச் சந்திக்கும் ஆவலில் உள்ளோம். ஆனால் அவரைப் புரிந்து கொள்ள முடிகின்றது.
    அருமையான சந்திப்பு சார்..

    கீதா: கீதா சாம்பசிவம் சகோ அருமையான சகோ. எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அட அவரைப் போலவே அவரது டெரசும் அழகான இடத்தைச் சுட்டுகின்றதே....காவேரியைத்தான் சொன்னோம். அவரது டெரஸ் நல்ல காற்றும், அமைதியும், அழகும் தரும் இடமாகத் தெரிகின்றது...காவேரி தெரிந்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம்...

    நல்லதொரு சந்திப்பு இனிமையான சந்திப்பு தங்கள் சந்திப்பு...

    தொடர்கின்றோம்..

    ReplyDelete
  9. செல்லம்மாள் உணவகத்தின் உணவுப் பட்டியலைப் பார்த்ததும் அடுத்தமுறை திருச்சி சென்றால் அங்கு சாப்பிட்டு பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கிவிட்டது உங்கள் பதிவு.

    திருச்சி வாழ் பதிவர்களை சந்தித்து ஒரு சிறு பதிவர் கருத்தரங்கே நடத்திவிட்டீர்கள். பாராட்டுக்கள்! திரு ஜோசப் விஜூ அவர்களைப் பார்க்கவேண்டும் என்ற அவா எனக்கு உண்டு. திருச்சி சென்றால் பார்க்க முயற்சிப்பேன்.

    புதுக்கோட்டையில் நடந்த விழா பற்றிய தகவல்களை உங்கள் எழுத்தில் காண காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  10. பதிவும் பகிர்வும் படங்களும் அருமை.

    திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் தங்கள் துணைவியார் அவர்களுக்குக் கொடுத்த நினைவுப் பரிசுகள் ஜோராக உள்ளன.

    அதிலும் தங்கக்கலரில் ஜொலிக்கும் ஸ்ரீ ராமர் etc., விக்ரஹம் Superb / Excellent ! :)

    ReplyDelete
  11. Ramani S said...

    //நான் வை.கோ சாரை நேரடியாகச் சந்திக்க அதிக ஆவலாக உள்ளேன். கூடிய விரைவில் வாய்ப்பு அமையும் என நினைக்கிறேன்//

    வாங்கோ Mr. S Ramani Sir, வணக்கம்.

    WELCOME Sir.:)

    I have sent you a detailed Mail in this connection.

    அன்புடன் VGK

    ReplyDelete
  12. சந்திப்பு அனுபவங்கள் சுவாரசியம்.
    ஜோசப் விஜூ அவர்கள் சந்திப்பை தவிர்ப்பதன் காரணம் புரியவில்லை. பரிசு பெற்றும் வரக்கூடிய தொலைவில் இருந்தும் அதை பெற வராமல் இருந்தது ஏனோ நெருடலாகவே படுகிறது.

    ReplyDelete
  13. சுவாரஸ்யமான பதிவு. இப்பதிவில் நீங்கள் சந்தித்த பதிவர்களில் திரு ஜோசப் விஜு அவர்கள் தவிர மற்றவர்களை நானும் சந்தித்திருக்கிறேன். அவர்கள் அனைவரையும் இங்கே கண்டதில் மகிழ்ச்சி.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  14. திரு.ரிஷபன் சாரின் எழுத்துத் திறமை பற்றி சிறுகுறிப்பாகவாவது இந்த சந்திப்புக்கு முன்னால் தங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படியெனில் அது குறித்து அவரிடம் நிறைய பேசிக் களித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். (நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தோம் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதால்) எவ்வளவு சுலபமாக அவரைச் சந்தித்து அளவளாவும் வாய்ப்பு தங்களுக்கு கிட்டியிருக்கிறது?.. அதுவும் அவர் நீங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்து உங்களைச் சந்திப்பதென்றால்?.. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

    மனிதம்' வாசித்து விட்டீர்களா, ஜிஎம்பீ சார்?..

    ஆவலுடன்,
    ஜீவி

    ReplyDelete
  15. @ ரமணி
    திரு வைகோ சாரின் புகழ் வலையுலகு அறிந்ததே அவரைச் சந்திக்க திருச்சி போக வேண்டும் தொடர்ந்து வாருங்கள் நன்றி

    ReplyDelete

  16. @ கில்லர்ஜி
    சந்தோஷத்தில் விளைந்த பதிவுதானே இது. வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  17. @ துரை செல்வராஜு இனிமையான சந்திப்பு பற்றிய பதிவைப் பாராட்டியதற்கு நன்றி ஐயா

    ReplyDelete

  18. @ திதமிழ் இளங்கோ
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார் திரு ரிஷபன் தன் புகைப்படம் வெளியாவதை விரும்புவதில்லை என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இன்று சற்று முன் தொடர்பு கொண்டார். அந்தப் படத்தை நீக்கி விட்டேன்

    ReplyDelete

  19. @ கீதா சாம்பசிவம்
    புகைப்படம் எடுக்கும் போது அவர் ஏதும் சொல்லவில்லை. படம் வெளியாவதில் விருப்பம் இல்லாதவர் என்று எனக்குத் தெரியாது. திரு ரிஷபன் சார் அடங்கிய புகைப்படத்தை நீக்கி விட்டேன்

    ReplyDelete

  20. @ ஸ்ரீராம் திரு ரிஷபன் அடங்கிய புகைப்படத்தை நீக்கி விட்டேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  21. @ தளிர் சுரேஷ்
    உங்களை புதுகையில் சந்திக்க விரும்பினேன் முடியவில்லை வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  22. @ துளசிதரன் தில்லையகத்து
    உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. என்னால் புரிந்து கொள்ள முடியாதது உங்களால் முடிகிறது சந்தோஷமே

    ReplyDelete
  23. தங்களுடனான சந்திப்பில் எனக்கு பெருமகிழ்ச்சி. அந்த நிறைவில் என் சிறிய வேண்டுகோளை உங்களிடம் தெரிவிக்க மறந்து விட்டேன். நாம் பேசும்போது சந்திப்பின் நினைவாக எடுத்துக் கொள்வதாகக் கூறியதால் இது பற்றி அலட்டிக் கொள்ள விரும்பவில்லை. எனினும் இப்போது சாதாரணமாக என் எண்ணம் பகிர்ந்ததில் நீக்கியும் விட்டீர்கள். தங்கள் பெருந்தன்மைக்கு மனப்பூர்வமான நன்றி. இந்த எளியவனைச் சந்திக்க விரும்பும் யாரையும் நான் சென்று சந்திக்க தவறுவதேயில்லை. எனக்கு நட்பும் அன்பும் மிக முக்கியமானது. மீண்டும் நன்றி தங்களைச் சந்தித்த மகிழ்விற்கு

    ReplyDelete
  24. தங்களுடனான சந்திப்பில் எனக்கு பெருமகிழ்ச்சி. அந்த நிறைவில் என் சிறிய வேண்டுகோளை உங்களிடம் தெரிவிக்க மறந்து விட்டேன். நாம் பேசும்போது சந்திப்பின் நினைவாக எடுத்துக் கொள்வதாகக் கூறியதால் இது பற்றி அலட்டிக் கொள்ள விரும்பவில்லை. எனினும் இப்போது சாதாரணமாக என் எண்ணம் பகிர்ந்ததில் நீக்கியும் விட்டீர்கள். தங்கள் பெருந்தன்மைக்கு மனப்பூர்வமான நன்றி. இந்த எளியவனைச் சந்திக்க விரும்பும் யாரையும் நான் சென்று சந்திக்க தவறுவதேயில்லை. எனக்கு நட்பும் அன்பும் மிக முக்கியமானது. மீண்டும் நன்றி தங்களைச் சந்தித்த மகிழ்விற்கு

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. @ வே நடனசபாபதி
    புதுக்கோட்டை பதிவர் விழாபற்றிப் பலரும் எழுதுகிறார்கள் எழுதுவார்கள் நானும் எழுதுவேன் ஆனால் என்கண்ணோட்டத்தில் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  27. @ டாக்டர் கந்தசாமி
    வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  28. @ கோபுசார்
    உங்களை மாதிரி புகழ்ந்து எழுத எனக்குத் தெரிவதில்லை. நினைவுப்பரிசுகள் உண்மையிலேயே நன்றாக இருந்தது வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  29. @ கோபு சார்
    ரமணி சாருக்குப் பின்னூட்டத்தில் உங்களை சந்திக்க அவர் திருச்சி வர வேண்டும் என்று எழுதி இருக்கிறேன்

    ReplyDelete

  30. @ டி என் முரளிதரன்
    சிலருக்குச் சில பெக்யூலியர் குணங்கள் அதைத்தான் நான் வித்தியாசமானவர் என்று எழுதி இருந்தேன்

    ReplyDelete

  31. @ வெங்கட் நாகராஜ்
    சென்ற ஆண்டே இவர்களைச் சந்திக்கத் திட்டம் இட்டிருந்தேன் ஆனால் திடீரென என் உடல்நிலை காரணமாக திருச்சி வருவது கான்செல் ஆயிற்று. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  32. @ ஜீவி
    சென்ற ஆண்டே இவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தேன் எல்லாம் கூடிவரும் நிலையில் நாங்கள் மயிலாடுதுறையில் இருந்தபோது வைத்தீஸ்வரன் கோவிலில் உடல் நலம் சரியில்லாமல் நான் விழுந்து விட்டென் அதன் பின் திட்டப்படி பயணிக்க என் மனைவிக்குத் தைரியம் இருக்கவில்லை. ஆகவே திருச்சி ட்ரிப் கான்செல் ஆயிற்று. இந்த முறை சந்திக்க விரும்பினேன் என் அன்பைப் புரிந்து கொண்டவர்கள் என்னை வந்து சந்தித்தனர். நாங்கள் எழுத்துப் பற்றி அதிகம் பேசவில்லை.அதைத்தான் பதிவுகளில் காண்கிறோமே திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி நகைச்சுவையாகப் பேசினார் நாங்கள் அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தோம் மனிதம் வாசிக்கத் துவங்கி இருக்கிறேன் நான் அன்பு செலுத்துபவர் என் மீதும் அன்பு செலுத்துவார்கள் என்னும் நம்பிக்கை எனக்குண்டுநான் எப்போதுமே கொடுத்துப் பெறுபவன் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  33. @ ரிஷபன்
    எனக்கு முன்பே தெரிந்திருந்தால் வெளியிட்டிருக்க மாட்டேன் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான் வருகைக்கு நன்றிசார். உங்களுக்குத் தெரியுமா சார் புதுகை சந்திப்பை விட திருச்சி சந்திப்பு நிறைவு தந்தது

    ReplyDelete
  34. மிகவும் அருமையான நண்பர்கள் சந்திப்பு ஐயா....
    வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  35. மனம் மகிழ வைக்கும் இனிமையான சந்திப்புகள். ஐயா !மறக்க முடியாத தருணங்கள். பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  36. அருமையான சந்திப்புக்களை வாசிக்கின்றேன் கடல் கடந்து. தொடர்ந்து எழுதுங்கள் ஐயா. என்றாவது ஒரு நாள் நானும் சந்திப்பேன் உங்களை.

    ReplyDelete
  37. திருச்சிக்கு சென்ற தாங்கள்
    மலைக் கோட்டைப் பதிவர்களையும்,
    புதுக்கோட்டைக்கு அழைத்து வந்திருப்பீர்களேயானால்
    வலைப் பதிவர் சந்திப்பு மேலும் பொலிவு பெற்றிருக்கும்
    நன்றி ஐயா

    ReplyDelete
  38. உங்கள் பதிவைத் தொடர்ந்து படிக்கும்போது உங்களுடன் ஒரு புனித யாத்திரை மேற்கொள்வது போல உள்ளது. நன்றி.

    ReplyDelete

  39. @ பரிவை சே குமார்
    அயல் நாட்டில் நீங்கள் சந்திப்பு நடத்துகிறீர்கள் நான் புதுகை போகும் வழியில் பதிவர்களைச் சந்தித்தேன் வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  40. @ இனியா
    இனிமையான சந்திப்புதான் மேம் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  41. @ தனிமரம்
    உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. இந்தியா வரும்போது திட்டமிடுங்கள் என் வாயில் என்றும் திறந்திருக்கும் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  42. @ கரந்தை ஜெயக்குமார்

    பதிவர் சந்திப்புகள் எல்லாம் “ பத்தோட இது ஒன்று அத்தோட இன்னும் ஒன்று “ என்னும் முறையிலேயே இருக்கிறது. மனம் விட்டுப் பேசவோ சந்திப்பில் திளைக்கவோ சிறிய பதிவர் சந்திப்புகளே மேல் என்று தோன்றுகிறதுபுதுகைக்கு வர அவர்களுக்கு என் அழைப்பு தேவையாய் இருக்கவில்லை. எல்லாம் அவரவர் தீர்மானம் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  43. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    புனித யாத்திரை என்பதெல்லாம் பெரிய வார்த்தைகள் ஐயா தொடர்ந்து வாருங்கள் மகிழ்வேன் நன்றி

    ReplyDelete
  44. எனக்கும் புதுகை வர ஆசை தான்....என்னை விட வயதானவர்கள் எல்லாம் எங்கெங்கிருந்தா விழாவிற்கு வரும் போது, இவ்வளவு அருகில் இருந்த நான் வராதது ஏக்கமாகத் தான் இருந்தது..
    என் சூழல் அப்படி!
    அடுத்த முறை எங்கு வைத்தாலும், அங்கு வருவேன் என்ற நம்பிக்கையில்...
    (இது கரந்தைக்கு)

    ReplyDelete
  45. எனக்கும் புதுகை வர ஆசை தான்....என்னை விட வயதானவர்கள் எல்லாம் எங்கெங்கிருந்தா விழாவிற்கு வரும் போது, இவ்வளவு அருகில் இருந்த நான் வராதது ஏக்கமாகத் தான் இருந்தது..
    என் சூழல் அப்படி!
    அடுத்த முறை எங்கு வைத்தாலும், அங்கு வருவேன் என்ற நம்பிக்கையில்...
    (இது கரந்தைக்கு)

    ReplyDelete
  46. என்ன சார்...என்னை மறந்து விட்டீர்களே?
    உங்களுடைய பிலாக்கின் ரசிகன் நான்!
    ஜெயகாந்தனைப் பற்றி எத்தனை முறை தங்கள் பிலாக்கில் நாம் தகவல்களை பரிமாறிக் கொண்டிருப்போம்?
    (இது ஜீவி சாருக்கு)

    ReplyDelete

  47. @ ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி
    என் பதிவில் பின்னூட்டம் மூலம் பிற பதிவர்களுக்கு பதில் போடுகிறீர்கள் இருந்தாலும் உங்களுடன் கா விட மனமில்லை இப்படியாவது என் பதிவுக்கு வந்தீர்களே நன்றி சார்.

    ReplyDelete
  48. via-2 பதிவைப் பார்த்து முதலில் கடுப்பாகித்தான் போனேன். பதிவர் விழா பற்றி படித்தால், பாத்ரூம் போட்டவ கூட போட்டுறிருக்கீங்களேன்னு நினைச்சேன். மூன்று பதிவையும் படித்த பின்னர்தான், படமே கதை சொல்றத தெரிஞ்சுகிட்டேன். கூட பயணம் செஞ்ச மாதிரியே இருக்கு.

    ReplyDelete
  49. @ ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி

    ஓ! மன்னிக்கணும். தங்களையும் தங்கள் கலகலப்பையும் மறக்க முடியுமா ராமமூர்த்தி, சார்! ஆரண்யநிவாஸூம் சரி, அங்கு ராஜ்ய பரிபாலனம் செய்யும் ராமமூர்த்தி சாரும் சரி புகைப்பட அறிமுகம், பின்னூட்ட கருத்துப் பரிமாற்ற அனுபவம் என்று எல்லாமும் கிடைத்திருக்கிறது.

    அந்த ப்ரீஸ் ரெஸிடென்ஸி சந்திப்பில் ரிஷபன் சாரைப் பார்த்த (முதல் தடவையாக புகைப்படத்தில்) மகிழ்ச்சியோ என்னவோ அந்த சந்திப்பின் அருமையை என்னில் கூட்டியது. வலைப்பதிவு ரிஷபன் சாருக்கு முன்னாடியே எழுத்தாளர் ரிஷபன் ஏற்கனவே நம் மனசை ஆக்கிரமித்திருக்கிறார் இல்லையா, அதுவும் ஒரு காரணம். இன்னொரு பாதிப்பு, இந்தப் பதிவைப் பார்க்ப்பதற்கு அரைமணி நேரம் முன்பு தான் ரிஷபன் சாரின் சிறுகதை ஒன்றை பழைய 'கல்கி' பைண்டிங்கைப் புரட்டிக் கொண்டிருந்த பொழுது வாசித்திருந்தேன்.

    ஆக என்னுள் அலைபாய்ந்து கொண்டிருந்த எண்ணங்கள் அதற்கேற்பவான சந்தர்ப்பம் ஏற்பட்டதும் குவிந்திருக்கின்றன. 'மனிதம்' வாசித்து முடித்ததும் ஜிஎம்பீ சார் கூட அந்தத் தொகுப்பின் சிறப்பு பற்றி ஒரு பதிவு போடுவார் பாருங்கள்.

    எழுத்துக்களின் கிறக்கம் யாரை விட்டது, சொல்லுங்கள்...

    ReplyDelete