Monday, June 20, 2016

தொடரும் எட்டெட்டு.....


                     வாழ்க்கை எட்டெட்டாக தொடர்கிறது
                       --------------------------------------------------------

மூன்றாவது எட்டு(1954-1962)
 நான் என் தந்தையை இழந்தகாலம் எனக்கு பயிற்சியுடன் கூடிய ஒரு உத்தியோகம் கிடைத்ததும் என்னால் வாழ்க்கையை எதிர் நோக்க  முடியும் என்னும் தன்னம்பிக்கையை நான் வளர்த்துக் கொண்ட  காலம் என் பொறுப்புகளை நான் நிறைவேற்றத் துவங்கி இருந்த காலம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் மணவினைக்கு வித்தாக காதல் அரும்பிய காலம்
வாழ்க்கையில் மேடு பள்ளங்களை நான் எதிர் கொண்ட காலம்  எதையும் செய்ய முடியும்  என்னும் திண்ணமும்  நம்பிக்கையும் வளர்த்துக் கொண்ட காலம்சில பல நிகழ்வுகளை நான் பதிவாக்கி இருக்கிறேன்

நான்காவது எட்டு( 1962—1970)
-பல சவால்களை சந்திக்க நேர்ந்த காலம்நிறைய படிப்பினைகளையும்  கற்றுக் கொண்ட காலம்  ஏமாற்றங்களின் வலி உணர்ந்த காலம் பணியில் என்னை நான் செலுத்தி அதன் மூலம் என்னைச் செதுக்கிக் கொண்ட காலம்  நான் என்  ஏமாற்றங்களை அதிகம் பகிர்ந்து கொண்டதில்லை.  மகிழ்ச்சிகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்ட  அளவு  ஏமாற்றங்களைப் பகிராத காலம்
ஐந்தாவது எட்டு
 1970 முதல் 1978 வரையிலான சமயம் முற்றிலும் எதிர்பார்க்காமல் என்னை பவர் ஸ்டேஷன் நிர்மாண வேலைக்கு அனுப்பப்பட்ட காலம் ஒரு சமயம் என் பிள்ளைகளின் படிப்பும் எதிர்காலமும்  கருதி வேலையைக் கடாசிவிட்டு  ஒரு பெட்டிக்கடை வைத்துப்  பிழைக்கலாம் என்று தீவிரமாக நினைத்த காலம் பதவியில் மேம்பாட்டை எதிர் நோக்கி  அது வெகு தாமதமாக வந்தநேரம்விஜயவாடா அனல் மின் நிலையம் நிர்மாணப் பணியில்  எனக்காக ஒரு  இடத்தை தக்க வைத்துக் கொண்ட காலம்வாழ்க்கையில் எந்த சவாலையும் சமாளிக்கும் திறமையையும்  தைரியத்தையும் வளர்த்துக் கொண்ட காலம்  என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்த காலம்  என் அனுபவங்கள் சிலவற்றைப் பதிவுகளாக்கிக் இருக்கிறேன்
ஆறாவது எட்டு (1978—1986)
 உடல் உபாதை காரணமாக 1980ல் மீண்டு திருச்சி கனமின் கொதிகலத் தொழிற்சாலைக்கு வந்தகாலம்  தொழிற்சாலையில் எனக்கென்று ஒரு இடமும் பேரும் இருந்ததுஎன்னதான் அழுத்தி வைத்தாலும் மேல் நோக்கி வரும் சக்தியை உணர்ந்தேன் நான் எனக்குச் சொந்தமாக பெங்களூரில்  ஒரு வீடு கட்டிக் கொண்டேன் கார் ஒன்று வாங்கினேன்  தொழிற்சாலை  வாயிலாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்டேன் பதவி உயர்வும் கிடைத்தது பதவி காலத்தின் ஆரம்பகால இழப்புகள் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தத் துவங்கியது நான் எங்கோ இருந்திருக்க வேண்டியவன் அது பற்றி ஏதும் வேண்டாமே

ஏழாவது எட்டு (1986-1994)
என் மகன்கள் படிப்பை முடித்து பணியில் அமரத் துவங்கி இருந்த காலம் என் மூத்தமகனின் திருமணமும் நடந்தது அவனுக்கு பெங்களூரில் வேலை என்றானதும் என் மனதில் வேறு சிந்தனைகள் உருவாயிற்று  இத்தனை காலமும் என்னைப் பெற்றவருக்காகவும் நான் பெற்றதுகளுக்காகவும் உழைத்தாயிற்று  நான் எனக்காக வாழ்வதுதான் எப்போது என்னும் சிந்தனை அதிகரிக்க என் வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றேன் 53 வயதுக்குள் ஓய்வா என்று எல்லோரும் கேட்டார்கள் பைத்தியக் காரன் என்றார்கள் நான் என்றைக்குமே பணத்தின்  பின் சென்றது கிடையாது உயிர் வாழத் தேவையான பணம் போதும் என்றே நினைத்தேன் . என் முடிவில் என் மனைவிக்கு அவ்வளவு விருப்பம் இல்லையென்றாலும்  என் முடிவுக்கு ஒத்துழைத்தாள் நான் என் மகனுடன் பெங்களூருக்கே வேலையை விட்டு விட்டு வந்து விட்டேன் சுத்தியல் பிடித்தவன் கை சும்மா இருக்குமாஇரு வருடங்கள்   ஒரு சில கம்பனிகளுக்கு  தர ஆலோசகனாக இருந்தேன் 
எட்டாம் எட்டு (1994-2002)
 நான் எடுத்த முடிவு தவறல்ல என்று என்னை நினைக்க வைத்த வருடங்கள் என் இரண்டாம் மகனின் திடுமணமும் நிகழ்ந்தது என்னுடைய சஷ்டியப்த பூர்த்தி விழா திருக்கடையூரில் என் மகன்களாலும் என் சின்ன மச்சினனாலும் எளிதாக மிகக் குறைவான பேருக்கே தெரியப்படுத்தி  நடந்தது தாத்தா பாட்டிக்குக் கல்யாணம் என்று என் பேரக் குழந்தைகள் மகிழ்ந்தது கண்டு மனம் நிறைவடைந்தது. உடல் நலமும் நன்றாய் இருந்தது பேரன் பேத்தியுடன் எந்தக் கவலையும் இல்லாமல் செலவழித்த காலம் சுருங்கச் சொன்னால் என் வாழ்நாளில் நான் மிக்க மகிழ்வுடன் இருந்த பீரியட் எனக்குப் பிடித்த சில பயணங்களையும் மேற்கொண்டேன்

ஒன்பதாம் எட்டு(2002-2010)
-------------------------------------------
என் மக்கள் அவரவர் பணி நிமித்தம்  தனியே வெளியூர்ப் போக நேர்ந்து நானும் என் மனைவியும் தனித்து இருக்க வேண்டிய சூழ்நிலை என் சுபாவத்துக்கு நான் தனியே இருப்பதே நல்லது என்று தெரிந்ததுஅவ்வப்போது மகன்களிடம் போய் இருந்து வருவோம் 2010 ஆண்டு முடிவில் எனக்கு ஒரு மைல்ட் இருதய அட்டாக்  வந்தது. மருத்துவமனையில் ஸ்டெண்ட் பொறுத்தப் பட்டது  என் தனிமையைத் தவிர்க்க ஒரு வலைப் பூவைத் தொடங்கிக் கொடுத்தான் என் பேரன்  என்னுடைய இன்னொரு பரிமாணமாகிய எழுத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன் என் உடல் என் கட்டுக்குள் இருப்பதற்குப் பதில் அதன் கட்டுக்குள் இருக்க வலியுறுத்தப்பட்டேன்
 
பத்தாவது எட்டு ( 2010—இன்றுவரை )
----------------------------------------------------------------
இப்போது என் பத்தாவது எட்டில் நான்காண்டுகள் ஆகிவிட்டன. காலனைக் காலால் ஒரு முறை எட்டி உதைத்ததும் இந்தக் காலத்தில்தான். பிள்ளைகள் அவரவர் பணி நிமித்தமும் அவரவர் கடமை நிமித்தமும் ஓடிக் கொண்டிருக்க தனிமையை உணரத் துவங்கிய காலம். நினைவுகளே துணையாய் நடந்தவற்றை எடைபோட்டு நாளும் INTROSPECTION –ல் பொழுதைக் கழிக்கும் காலம். உலகின் பல மூலைகளில் இருப்பவர் அறிய என்னையும் என் எண்ணங்களையும் யாரும் கேட்காமலேயே, வேண்டாமையிலேயே அள்ளி அள்ளித் தருகிறேன் இணையத்தில் இணைந்து என் வலைத் தளம் மூலம்

 உடல் என்  கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்று தெரிய ஆரம்பித்தது அப்போது சில எழுத்துகள் நான் எழுதியது எனக்கே பலமும் பெருமை தருவது மாக இருந்தது கண்கள் இரண்டிலும்  அறுவை சிகிச்சை செய்யப்பட்டது காது கேளாமை அதிகரித்து நான் கூட்டுக்குள் முடங்கி விடுவேனோ என்னும் அச்சமும் எழுந்தது எத்தனையோ மேடு பள்ளங்களைக் கண்ட நான் மனம் தளராமல் ஹியரிங் எய்ட் வாங்கிப் பொருத்திக் கொண்டேன் வயதாவது செய்யாத குற்றத்துக்குத் தண்டனையா என்னும் கேள்வி எழ  அது தவறு என்று நினைத்து முதுமையின் வரம் என்றும் எழுதினேன் இப்போது நானும் என் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக  எங்கள் நாட்களைத் தள்ளிக் கொண்டு இருக்கிறோம் நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பைப் புத்தக வடிவில் கொண்டு வந்தேன் கூட்டுக் குடும்பம் என்பது தற்கால நிலைக்குச் சரிப்பட்டு வராது என் மக்களுக்கும் அவரவர் வாழ்வில் முன்னேறவும் அவரவர் குடும்பத்தைப் போஷிக்கவும் வேண்டிய கடமை இருக்கிறதே மனதில் தோன்றுவதை எழுத்தில் வடித்து வடிகாலாக்கிக் கொள்கிறேன்

இப்போது இப்பதிவின் முக்கிய நோக்கம் பற்றிக் கூறுகிறேன் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை எட்டெட்டாகப் பிரித்து எழுதி இருக்கிறேன் என் வாழ்க்கையை நான் மீண்டும் வாழ விரும்பி ஏதாவது ஒரு எட்டைத் தேர்ந்தெடுக்கலாம் என்றால் நான் எனது எட்டாவது எட்டையே தேர்ந்தெடுப்பேன்   ( முற்றும் ) 

52 comments:

 1. அருமையாக எழுதி இருக்கிறீர்கள். எட்டாவது எட்டில் பேரன் பேத்திகளுடன் குதுகலம், பயணங்கள் அதுவே பிடித்தது மகிழ்ச்சியான காலம் என்கிறீர்கள்.
  உண்மைதான் , மனதுக்கு பிடித்த பயணம், பேரபிள்ளைகளுடன் அளவளாவி மகிழ்வது ஆனந்தமே.

  ReplyDelete
 2. அந்த மகிழ்வான காலம் மீண்டும் கிடைக்கட்டும்.

  ReplyDelete
 3. அழகாகவும் சுருக்கமாகவும் நிறைவாகவும் எழுதி இருக்கிறீர்கள். இந்த நிறைவு எங்களுக்கும் கிடைக்க எங்களையும் ஆசீர்வதியுங்கள்.

  ReplyDelete
 4. தங்களது வாழ்வியல் முழுவதும் சொல்லி விட்டீர்கள் படித்துக்கொண்டே வரும் பொழுது என்னை உணர்ந்து பார்த்த்தேன் ஏனோ மனம் இனம் புரியாத கலக்கத்தைக் கொடுத்தது இருப்பினும் எனக்கு எழுத்து கை கொடுக்கும் என்ற தன்நம்பிக்கை இருக்கின்றது ஏதோ சொல்ல நினைக்கிறேன் ஆனாலும் அதை வெளிப்படுத்த தெரியவில்லை ஐயா
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 5. யோசித்துப் பார்க்கும்போது எட்டாவது எட்டு சரியான தேர்வென்றே படுகிறது.

  ReplyDelete
 6. சபாஷ் கில்லர்ஜி.. அந்த உணர்வுகள் எனக்கும்.

  ReplyDelete
 7. பழைய எட்டுக்களில் பல வித சோதனைகள் கஷ்டங்களிலும் தளராது பாதை தவறாது நடந்ததால்தான் எட்டாவது எட்டிலும் பத்தாவது எட்டிலும் நன்றாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் உங்கள் அனுபவத்தை சுவைபட எட்டு எட்டாக பிரித்து சொன்ன விதம் அருமை.அறிவு திறமை,ஆற்றல் அனைத்தும் பெற்ற தங்களை எங்களுக்கு அறிமுகப் படுத்திய வலைப்பூக்களுக்கு நன்றி சொல் வேண்டும்.

  ReplyDelete
 9. சமூக அல்லது பொது விஷயங்களோடு கலக்கும் பொழுது தான் சுயசரிதைகள் சிறப்பும் சுவையும் பெறுகின்றன.
  இல்லாத பட்சத்தில் தனிநபர் சார்ந்தவை தான்.

  ReplyDelete

 10. @ கோமதி அரசு
  என் வாழ்க்கையை அதன் நிறை குறைகளுடன் ரசித்திருக்கிறேன் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமானால் நான் மீண்டும் வாழ எட்டாவது எட்டு என்றே சொல்கிறேன் வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 11. @ கோமதி அரசு
  நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்........ மீள் வருகைக்கு நன்றி

  ReplyDelete

 12. @ ஸ்ரீராம்
  இந்த வாழ்வு என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல. இருப்பினும் சிறப்பாக வாழ முயன்றிருக்கிறேன் உங்கள் வாழ்வு உங்கள் கையில் என் நல் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு. வருகைக்கு நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 13. @ கில்லர் ஜி
  நான் என் வாழ்வியலில்சிறிதே பகிர்ந்திருக்கிறேன் ஆனால் அதுவே என்னைக் காட்டிக் கொடுக்கப் போதுமானது விருப்பு வெறுப்பில்லாமல் நினைத்துப் பார்ப்பதும் ஒரு வித அனுபவமே வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete

 14. @ ஸ்ரீ ராம்
  யோசித்துப் பார்ப்பதில் என்பதற்குப் பதில் படித்துப் பார்த்ததில் என்று இருக்க வேண்டுமோ. வருகைக்கு நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 15. @ ஸ்ரீ ராம்
  என்பதிவு சிலரது உணர்வுகளை எழுப்புவது தெரிய மகிழ்ச்சியே மீண்டும் நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 16. @ டாக்டர் கந்தசாமி
  வந்து ரசித்ததற்கு நன்றி சார்

  ReplyDelete

 17. @ அபயா அருணா,
  வாழ்த்துக்கு நன்றிம்மா.

  ReplyDelete

 18. @ டி என் முரளிதரன்
  என்னைப் பற்றி பதிவுலக நட்புகளுக்குத் தெரிய வேண்டும் என்பதே என் அவா. அதுவே என் பதிவுகளில் பலவிதப் பரிமாணங்களுடன் அறிமுகங்கள் நட்பாக மலர இது உதவும் என்றே நினைக்கிறேன்வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி முரளி.

  ReplyDelete

 19. @ ஜீவி
  உங்கள் கருத்தும் சரிதான் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மைண்ட்செட் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 20. உங்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் பலருக்கும் படிப்பினையாகும். நீங்கள் சொல்வது போல் நாம் பெற்ற பிள்ளைகள் இன்பம் என்றால் பேரன் பேத்திகள் எல்லோரும் பேரினபம் அல்லவா?

  உங்கள் பதிவு எல்லோரையும் ஒருமுறை அவரவர் அனுபவித்த சந்தோஷங்கள், எதிர் கொண்ட சவால்கள் என்று அசை போட வைக்கும் என்பது நிச்சயம். பழைய நினைவுகளை அசை போட வைத்ததற்கு நன்றி பாலு சார்.

  ReplyDelete
 21. சுகமான சிந்தனைகளோடு, வாழ்வில் சந்தித்த சில வலிகளைப் பற்றியும் சொல்லி தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 22. அனைத்துமே அருமையாக இருக்கிறது. எட்டாவது எட்டு நல்ல தேர்வு தான். நீங்கள் மகிழ்ச்சியோடு இருந்த காலம் அல்லவா!

  ReplyDelete

 23. @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
  இந்தப்பதிவு எல்லோரையும் இண்ட்ராஸ்பெக்‌ஷன் செய்ய வைக்கும் என்றால் மகிழ்ச்சியே. வருகைக்கு நன்றி மேம்.

  ReplyDelete

 24. @ தி தமிழ் இளங்கோ
  வலிகள் என்று தெரிவதெல்லாம் இப்போதைய சிந்தனைகளே நிகழ்வுகள் நடக்கும் போது மிகச் சாதாரணமாகவே இருந்தன. வருகைக்கும் மேலானகருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்

  ReplyDelete

 25. @ கீதா சாம்பசிவம்
  எல்லாக் காலங்களிலும் மகிழ்ச்சியே ஆனால் மீண்டும் தேர்ந்தெடுக்கும் காலம் எட்டாவது எட்டே. வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete
 26. வேலை முடிந்து இப்போதுதான் வந்தேன்...

  மிகவும் கனமான பதிவு... மனதின் எல்லா பக்கங்களிலும் சிந்தனையைத் தூண்டி விட்டது..

  தன்னம்பிக்கையும் தளராத உழைப்பும் - எமக்கு படிப்பினை எனக் கருதுகின்றேன்..

  தாங்கள் மேலும் பல்லாண்டுகள் வாழ வேண்டிக் கொள்கின்றேன்..

  ReplyDelete

 27. @ துரைசெல்வராஜு
  எல்லோர் வாழ்விலிருந்தும் பலவற்றையும் கற்கலாம் என் சிந்தனை ஓட்டங்களே இப்பதிவு வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றிஐயா

  ReplyDelete
 28. மகிழ்ச்சியும் மன நிறைவும் பேரப்பிள்ளைகள் பார்க்க நடக்கும் மணி விழாவில் தான் கிட்டும். எனவே நீங்கள் விரும்பும் எட்டாவது எட்டே சரியென்றே தோன்றுகிறது. பதிவை இரசித்தேன்!

  ReplyDelete
 29. ஐயா தங்களது பதிவு நேற்று முழுவதும் மனதை உறுத்திய காரணமோ என்னவோ நேற்று இரவு தங்களை எனது கனவில் கண்டேன்.

  ReplyDelete

 30. வே நடனசபாபதி
  பேரப்பிள்ளைகளுடன் மணிவிழா என்பது மட்டும் காரணமல்ல. அது எட்டாவது எட்டின் ஒரு நிகழ்வே வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 31. @ கில்லர்ஜி
  உங்கள் தூக்கத்தையும் என் பதிவு கெடுத்துவிட்டதா. கனவில் என்னைப் பற்றி என்ன நினைத்தீர்கள் நேரில் காண முயல்வோம் நீங்கள் அடுத்து இந்தியா வரும்போது

  ReplyDelete
 32. தங்களது எட்டுகள் எங்களுக்குப் பாடங்கள் ஐயா.

  ReplyDelete
 33. எட்டாவது எட்டில் இருக்கும் எனக்கு உங்கள் பதிவு ஊக்கத்தைத் தருகிறது ,நூற்றியெட்டை தொடவும் வாழ்த்துகள்!

  ReplyDelete

 34. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  என் எட்டுகள் ஓரளவு என்னைப் பிரதி பலிக்கும் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 35. @ பகவான் ஜி
  போகும் காலத்தில் பிறரது உமிழ்நீரைப் பெறாமல் கண்ணீரைப் பெற முடிந்தால் அதுவே போதும் உங்களது நீண்ட ஆயுளுக்கு என் வாழ்த்துகள்.

  ReplyDelete
 36. முதல் எட்டை விரிவாக எழுதிய நீங்கள் மற்ற எட்டுக்களை சுருக்கமாக எழுதி விட்டீர்கள். ஆனால் சுவை குன்றவில்லை.

  //என் சுபாவத்திற்கு நான் தனியே இருப்பதே நல்லது என்று தெரிந்தது //- இந்த புரிதல் இருந்து விட்டால் வாழ்க்கையில் ஏது பிரச்சனை? புரிந்து கொண்டதால்தான் யாரையும் குறை சொல்லாமல் எழுதி இருக்கிறீர்கள். வணங்குகிறேன்.

  ReplyDelete
 37. ஐயா, வணக்கம். உங்களது வாழ்வின் விளிம்பில் நூலினை விக்கிபீடியாவில் இன்று இணைத்துள்ளேன் கீழ்க்கண்ட இணைப்பில் விக்கிபீடியாவில் அப்பதிவைக் காணலாம். வாழ்த்துகள். அன்புடன்,ஜம்புலிங்கம்.
  விக்கிபீடியா இணைப்பு
  https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)

  ReplyDelete

 38. @ பானுமதி வெங்கடேஸ்வரன்
  முதல் எட்டில் எழுதப்பட்ட விவரங்கள் என் பதிவுகளில் நான் அதிகம் பகிராதது. மீதிஎட்டுகளில் இருக்கும் விஷயங்கள் பதிவுகளில் பகிர்ந்திருப்பவை .மேலும் இன்னும் விரிவாக்கினால் அது முழுநீள சுய சரிதையாகி விடும் இப்போதே பொது நலம் சேவை பற்றி இல்லாததால் சுவை குறைகிறது என்னும் கருத்தும் இருக்கிறதே வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 39. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  ஐயா வணக்கம் என் நூலை விக்கி பீடியாவில் இணைத்ததற்கு நன்றி இது இணைப்புக்கான தகுதி பெற்றிருக்கிறது என்னும் உங்கள் எண்ணம் மகிழ்ச்சி தருகிறது மீண்டும் நன்றி

  ReplyDelete
 40. Life itself is a bell-curve from Birth to Death. Take any quality like Knowledge, Intelligence, Physical ability & Health, Wealth, likes and dislikes, all these can be fitted to the curve like any statistics. If you research you can find that these peak at the eighth eight. And yet that is why you have chosen that as the best part of life even though Reminiscence of younger age may give you more pleasure.

  Sorry for the late visit.

  Looking for more of your message bearing blogs.

  --
  Jayakumar

  ReplyDelete
 41. மூத்த வலைப்பதிவர் அய்யா G.M.B அவர்களின் நூலினை, விக்கிபீடியாவில் இணத்த முனைவர் B.ஜம்புலிங்கம் அய்யா அவர்களுக்கு நன்றி. நான் அந்த இணைப்பினில், எடிட் செய்து, “நூல் விமர்சனம்: தி.தமிழ் இளங்கோ - வாழ்வின் விளிம்பில் – ஆசிரியர் G.M.B http://tthamizhelango.blogspot.com/2014/11/gmb.html “ என்று எனது நூல் விமர்சனத்தினை சுட்டியுள்ளேன். இருவருக்கும் நன்றி.

  ReplyDelete
 42. எட்டாம் எட்டு நல்ல தேர்வு......

  உங்கள் பதிவு படிக்கும் அனைவரையும் அவர்கள் எந்த எட்டில் இருக்கிறார்கள், அவர்கள் வாழ்வில் எந்த எட்டு பிடித்திருந்தது என யோசிக்க வைத்திருக்கிறது.... ஆறாம் எட்டில் இருக்கும் என்னையும்..

  நன்றி.

  ReplyDelete

 43. @ ஜேகே 22384
  ஐயா வணக்கம் . நான் எந்த ஸ்டாடிஸ்டிக்கையும் பார்க்கவில்லை. உங்கள் தெரிவு சரியாகத்தான் இருக்க வேண்டும் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி

  ReplyDelete

 44. @ தி தமிழ் இளங்கோ
  ஐயா வணக்கம் நான் அந்த இணைப்பினில் மேற்கோள் பக்கத்தில் உங்கள் விமரிசன இணைப்பையும் கண்டேன் நன்றி

  ReplyDelete

 45. @ வெங்கட் நாகராஜ்
  என் பதிவு வாசகர்களையும் சிந்திக்க வைக்கும் என்னும் உங்கள் அனுமானம் சரியாய்த்தான் இருக்க வேண்டும் நீங்கள் பீக் அடைவதற்கு இன்னும் ஆன்ஊஆல் ஈறூஈண்ராணா. 48 வயதுக்கு மேல் இன்னும் சிறந்த அனுபவங்கள் கிடைக்கும் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 46. உங்கள் வாழ்வைப் பற்றி மிக அருமையாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

  ReplyDelete

 47. @ ராமலக்ஷ்மி
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம்

  ReplyDelete
 48. பயணம் அருமை....ரஜினி படப்பாடல் தங்களை இன்ஸ்பையர் பண்ணியதோ எட்டு எட்டாக பிரிக்க? வயோதிகம் வேதனை அல்ல. அதில் வரும் தள்ளாமை தான் வலி. அதையும் தாண்டி உங்கள் எண்ணங்கள், சிந்தனை, திறமை அனைத்தையும் பகிர்ந்து தனித்துவத்தை நிருபித்துள்ளீர்கள்.....வயோதிகத்தை வென்று விட்டீர்கள் ... வாழ்த்துக்கள்!

  ReplyDelete

 49. @ சக்திப் பிரபா
  பயணம் தொடருகிறது வெகுதூரம் வந்து விட்டேன் போல் இருக்கிறதுஎன் எழுத்துக்கு நானே காரணம் எதுவும் இன்ஸ்பைர் செய்யவில்லை ஒரு இண்ட்ராஸ்பெக்‌ஷன் அவ்வளவுதான் முதுமையைப் பரிசாகவும் எண்ணி எழுதி இருக்கிறேனே வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete
 50. "என் தனிமையைத் தவிர்க்க ஒரு வலைப் பூவைத் தொடங்கிக் கொடுத்தான் என் பேரன்" ... நான் இங்கு நன்றி சொல்வது உங்கள் பேரனுக்குதான். தங்களின் பேரன் தற்போது எந்த எட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லை... என்றாலும் அவர் வாழ்வில் எல்லா வளங்களையும் எட்டட்டும். ஏனென்றால் ஒரு நல்ல நண்பரை, ஒரு சிறந்த ஆசானை வலைப் பூவை உருவாக்கி தந்ததின் மூலம் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். ... இறைவன் எல்லா வளங்களையும் அவருக்கு நல்கட்டும் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete
 51. மூன்று எட்டு முட்ந்து விட்டது

  ReplyDelete