புதன், 30 நவம்பர், 2016

பிரதமரே இதையும் கொஞ்சம் கேளுங்கள்


                            பிரதமரே இதையும் கொஞ்சம் கேளுங்கள்
                              ---------------------------------------------------------

பிரதமர் நரேந்திர மோடி ( நன்றி கூகிள்)
(நன்றி த ஹிந்து)




அன்புமிகு பிரதமர் மோடிக்கு ஒரு சாதாரணனின்  கருத்துகள் செவிக்கு எட்டாது என்றாலும் தெரிவிக்க வேண்டிய ஒரு நப்பாசையால் எழுதுவது. முதலில் என்  வாழ்த்துகள் யார் எப்படிப் போனாலும் என்ன நடந்தாலும்   நினைத்ததை முடிக்கும்   பெரும்பான்மை இருப்பதால் நீங்கள் செய்திருக்கும் இமாலய சாதனை பாராட்டப்பட வேண்டியதே 56 அங்குல மார்பு என்று பெருமைப்படும்  நீங்கள் அதைத் தட்டிக்கொள்ளலாம் யார் கேட்கமுடியும்   ஒருவரைப் பற்றிய  ஒரு பெர்செப்ஷனைச் சார்ந்தே கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.  கருப்புப் பணமும் கள்ளப்[ பணமும் நாட்டின் நிலையை மிகவும் பாதிக்கிறது என்பது சரியே ஆனால் அதை ஒழிக்க நீங்கள் எடுத்திருக்கும் வழிமுறைதான் கேள்விக்குரியது உங்கள் முடிவைப் பலரும்பாராட்டலாம் ஏன்  என்றால்  எல்லோருக்கும்  கருப்புப் பணத்தையும்   கள்ளப் பணத்தையும்  ஒழிக்க வேண்டும் என்னும்  ஆவல்தான் ஆனால் இந்த வழிமுறைகளில்  சந்தேகம்  எழுகிறது
நாட்டில் உலவும் பணப்புழக்கத்தில் சுமார் 86% வங்கிகளில் செலுத்தப்பட்டு ஈடாக புது பணம் பெற்றுக் கொள்ள வேண்டும்  கள்ளப் பணம்  வைத்திருப்போர் வாங்கிகளில் செலுத்தத் தயங்குவார்கள் கேள்விகள் எழலாம்  ஆனால் கள்ளப் பணம் வைத்திருப்பவர்கள் ஜகஜ்ஜாலக் கில்லாடிகள்  நீங்கள் கோலத்தில் போனால் அவர்கள் தடுக்கில் போவார்கள் இல்லாமலா கோடிக்கணக்கில் அயல் நாட்டு வங்கிகளில்  வைத்திருப்பார்கள் முதலில் அதை வெளிக்கொணர நீங்கள்  முயற்சி செய்திருக்க வேண்டும்  உள்ளூரில் வைத்திருப்பவர்களுக்குத் தெரியும்  கருப்பை வெள்ளையாக்கும் வித்தை இந்த நடவடிக்கையால் சங்கடப்படுவது கீழ்த்தட்டு மக்களே  அவர்களிடம் பணமில்லாப் பரிவர்த்தனை என்று சொன்னால் சரியா.  இந்தியாவில் எழுதப்படிக்கத்தெரிந்தவர்கள் சுமார் 74 % என்கிறார்கள் கவனிக்கவும் எழுதப் படிக்கத்தெரிந்தவர்கள் என்றுதான்  சொல்கிறேன்  இவர்களிடம் போய் பணமில்லாப் பரிவர்த்தனை செய்யுங்கள் என்று  எல்லோரது கஷ்டங்களையும் கேட்டுப் பார்த்தபின் சொல்வது சரியில்லை என் என்றால்  இந்த நுட்பங்கள் படித்தவர்களுக்கே தெரிவது பிரச்சனை எல்லோருக்கும்  வங்கிகள் மூலம்  பணம்  பெற முடியுமா சிந்தியுங்கள்  எல்லோரும் அவரவர் ஊரில் இருந்தால் வங்கிக்கணக்கைத் திறக்க முடியலாம் ஆனால் இடம் பெயர்ந்து வேலை செய்பவர்கள் வங்கிக் கணக்குத் திறக்க எத்தனையோ கட்டுப் பாடுகள் ப்ரூஃப் ஆஃப் அட்ரெஸ்  இல்லாமல் கணக்குத் திறக்க முடியுமா வங்கிகள் செய்யுமா.  அப்படியே யார் யாரையோ பிடித்து கணக்குத் திறந்தால்  அவரவர் சம்பளம் அதில் போகும்   ஆனால் எதற்கும்  காசு வேண்டுமே எல்லா செலவுகளையும் பணமில்லப் பரிவர்த்தனை செய்ய முடியுமா
 பிரதமர் அவரது ஹை பெடஸ்டலில் இருந்து கொஞ்சம் கீழிறங்கவேண்டும்
பிரதமர் நாட்டு மக்களிடம்  சில கேள்விகள் கேட்டு பதிலை எதிர்பார்க்கிறார் ஆனால் இவற்றுக்கெல்லாம்  பதில் சொல்ல அவரதுகட்சி சார்ந்தவர்களும்  சமூக வலைத்தளங்களில் உலவி வரும் சிலரால் மட்டுமே முடியும்   கேள்விகள்தான்  என்ன  கருப்புப் பணம் ஒழிய வேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறதா என்பது போன்றவை  எல்லோருக்கும்  அவை ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் விருப்பம் இருக்கும்  வாக்காளர்களில்  சுமார் முப்பது சதவீதம் பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள் அவர்களுக்கு எதிராக எழுபது சதவீதம்  பேர் வாக்களித்திருக்கிறார்கள்  என்பதையும் சிந்திக்க வேண்டும் நிதி நிலைமை குறித்த வல்லுனர்கள் எல்லோரும் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டாமா. ஐயா ஐநூறு ஆயிரம்  ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கும்போதே  மாற்று பணமும் கிடைக்கும்  வழி செய்திருக்க வேண்டாமா இருக்கும்  ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுப்பணம் வாங்கி கொள்ளச் சொல்கிறார்கள் பொதுவாகவே ாருக்க பணப்பரிவர்த்தனை  நூறு அதற்கும்  குறைவான தொகையிலுமே நடக்கிறது  ஐநூறு ஆயிரம்  என்று இருந்தாலும்  பணக்காரர்கள் தவிர மற்றவர் புழங்குவது நூறுக்கும்  குறைவான பணத்தில்தான்  பெருந்தொகை நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கும்  போதே  அதற்கு ஈடாக மக்கள் புழங்கும் பணத்துக்கும்  ஏற்பாடு செய்ய வேண்டாமா  மக்களின்  கஷ்டங்களைப் பார்த்தபின்தான் தானியங்கி மெஷின்களை இப்போது வெளியாகி இருக்கும்   பணத்தை ஹாண்டில் செய்ய வில்லை என்னும்  ஞானோதயமே  வந்திருக்கிறது வங்கிகளில்  பணம்  எடுக்கப் போனால் அங்கும்  இரண்டாயிரம்  ரூபாய் நோட்டுகளே கொடுக்கப் படுகின்றன அதை வாங்கி நம்மால் எளிதில் மாற்றிப் புழங்க முடிகிறதா  வங்கிகளிலேயே நூறு ஐநூறு ரூபாய்த் தட்டுப்பாடு அதனால்தானோ என்னவோ  பணமில்லாப் பரிவர்த்தனை என்று சொல்கிறீர்களோ தெரியவில்லை
சிறுவியாபாரிகள் சிறு தொழிற்சாலை நடத்துபவர்கள் அவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளிகளுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் தொழிலாளிகள் சொந்த ஊருக்கே திரும்புகிறார்கள் என்னும்  செய்தி கவலை தருகிறது இப்பு வங்கிகிலேயே சாளிக்கப்ிய ம் இல்லை என்று  கேள்விப்புகிறேன் ஐம்பது நாட்கள் கேட்டிருக்கிறீர்கள் இந்த ஐம்பது நாட்களில் நிலைமை சீரடைய பலரும்  நம்பும் அந்த ஆண்டவன்தான்  அருளவேண்டும் எல்லா விஷயங்களையும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளும் சமூக வலையாளிகளின்  கருத்துகள் உண்மையானவை அல்ல சமூக வலைத் தளங்கள் பொழுது போக்க உதவுபவையே தவிர செய்திகள் சரியாகப் பறிமாரும் இடம் அல்ல.  அங்கெல்லாம் வள்ளுவரையே  பலரும்  நினைக்கிறார்கள் இடுக்கண் வருங்கால் நகுக. என்று கருப்புப் பணம் ஒழிகிறதோ இல்லையோ சிறிது காலத்துக்கு  கள்ளப் பணம் புழங்குவது குறையலாம்
 சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் ஆனால் சிரித்துக் கொண்டே அழும் கலை நன்கு தெரிந்த பிரதமரே  ஒன்று சொல்லிக் கொண்டு முடிக்கிறேன்   தவிர்க்கப்பட முடியாதவை அனுபவித்தே தீரவேண்டும் உங்களது உத்தரவை திரும்பப் பெறுவதில் இதைவிட சங்கடங்கள் இருக்கலாம் ஆகவே எல்லா வங்கிகளிலும் மக்கள் புழங்கும்  பணம் கிடைக்க வழி செய்யுங்கள்
 உங்களது கொள்கைகள் அணுகு முறை தெரியாமல் மக்கள் உங்களை அரசு கட்டிலில் அமர வைத்திருக்கிறார்கள் அந்த நம்பிக்கை பொய்க்காமல் இருக்கும்  வகையில் ஆட்சி நடத்துங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீங்கள் ஒரு கட்சியின்பிரதமர் அல்ல. மக்களின் பிரதமர் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் .    




 .


சனி, 26 நவம்பர், 2016

மருந்தில்லா மருத்துவம்


                                     மருந்தில்லா மருத்துவம்
                                     ------------------------------------


 மருந்தில்லா  மருத்துவம்
 சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் அனுப்பி இருந்த ஒரு pdf ஃபார்மாட்டில் இருந்த ஒரு புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது ஹீலர் பாஸ்கர் என்பவரின்  செவி வழி தொடு சிகிச்சை அல்லது anatomic therapy என்னும்  புத்தகம்  அது. அவரது லாஜிகல் குறிப்புகள் சிந்திக்க வைப்பவை  எந்த மருத்துவரிடமும்  போகாமல் மருந்தும் உட்கொள்ளாமல் 95% சதவிகித உபாதைகளைக் குணப்படுத்தலாம் என்கிறார் 
 நோயை  அல்லது உபாதைகளை இரண்டு வகையாகப் பிரித்து  வெளிக்காரணங்களால் ஏற்படும்  உபாதைகள்  உட்காரணங்களால் ஏற்படும்  பாதிப்பு என்று பிரிக்கிறார் உதாரணத்துக்கு கண்ணில் கத்தி கீறி அடிபட்டால் வரும் பாதிப்பு அல்லது குண்டடி பட்டு வரும்  பாதிப்பு போன்றவை வெளிக்காரணங்களால் வருபவை  தும்மல் சளி காய்ச்சல் வாந்தி  இரத்த அழுத்தம் நீரிழிவு போன்றவை உட்காரணங்களால்  வருபவை. எந்த உடல் பாதிப்பு உட்காரணங்களால்  வருகிறதோ அவற்றை மருந்து இல்லாமலேயே குணப்படுத்தலாம் என்கிறார்  உபாதைகளில்  95% உட்காரணங்களால்  வருவதே
சிறுவயதில்  சில விஷயங்கள் ஒழுங்காக இருக்கின்றது இவற்றில் ஏதோ ஒழுங்காக இல்லை என்றால்  நம்  உடலால் நோய்க் கிருமிகளை அழிக்க முடிவதில்லை.
உடல் உபாதைகளுக்குக் காரணங்களாக இவர் குறிப்பிடுவது
1)   இரத்தத்தில் உள்ள பொருட்களின் தரம் குறைவது
2    இரத்தத்தில் உள்ள பொருட்களின் அளவு  குறைவது அல்லது இல்லாமல் போவது
3)   இரத்தத்தின்  அளவு குறைவது
4)   மனதில் ஏற்படும்  பாதிப்புகள்
5)   உடலில் உள்ள  உறுப்புகளுக்கும்   செல்களுக்கும் அறிவு கெட்டுப் போதல்   

  உதாரணமாக  ஒருவருக்கு விபத்து நேர்ந்து மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார்  என்றால் முதலில் அவருக்கு தகுந்த இரத்தம்  செலுத்துகிறார்கள் இரத்த அளவைச் சரிசெய்தபின்  அதன் தரத்தைக் கூட்ட க்லூகோஸ் சோடியம் க்லோரைட்  மற்றும்  வேறு சில தாதுக்களையும்  செலுத்துகிறார்கள்இப்படி இரத்தம் செலுத்துவதன் மூலமும்  வேறு சில பொருட்களையும்  சேர்ப்பதன் மூலமும் சில காரணங்களைத் தவிர்க்கிறார்கள் உடலில் ஓடும் இரத்தத்தின் மூலமே எல்லா உறுப்புகளுக்கும்   தேவையான  சத்து  சேர்க்கப்படுகிறது அவர் விபத்தால் நேரும் இழப்புகளை இரத்தம் மூலமே சரிசெய்ய முடியும் என்றும் பிரச்சனை உறுப்பில் இல்லை என்றும் ஓடும்  ரத்த சேதமே காரணம்  ஆதலால் அதை ரிப்லெனிஷ் செய்யவேண்டி இருக்கிறது மனது
ஏற்கனவே இருப்பது உறுப்புகளுக்கான அறிவும்  ஏற்கனவே இருப்பது இரத்தத்தை நல்ல தரத்துடன்  வைப்பது  தேவையான அளவை உடலே நிர்ணயித்துக் கொள்ளும்   ஆக மேலே சொன்ன ஐந்து காரணங்களையும் தெரிந்து அதற்கேற்றபடி உடலை வைத்துக் கொண்டால் நோய் வராமல் பார்த்துக் கொள்ளலாம்
உடலில் எந்த உறுப்புக்கும் மருத்துவம் தேவை இல்லை.  உடலே அதை சரியாக்கிக் கொள்ளும்  என்று பல வித உதாரணங்களுடன்  விளக்குகிறார்
முன்னூறு பக்கங்களுக்கும் மேல் உள்ள நூலில்  நோயைக் குணப்படுத்த முடியாது கண்ட்ரோல்தான்  செய்யலாம் என்னும்  மருத்துவர்களிடம் இவருக்கு கோபம் குணப்படுத்த முடியாது என்று சொல்லவா இவ்வளவு படிப்பு என்று சாடுகிறார்
 உடலும் அதன்  உறுப்புகளும் கோடிக்கணக்கான செல்களால் ஆனவை ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான செல்கள் மடிவதும்  உடலே அவற்றை புத்துப்பித்துக் கொள்வதும் நடை பெறுகிறது  உடலுக்கு தேவையான  எல்லாப் பொருட்களையும் இரத்தத்தின் மூலம்  உடல் பெறுகிறது  எந்த உறுப்பு என்ன வேலை செய்கிறது  அவற்றுக்குத் தேவை என்ன என்பதை நன்கு விளக்குகிறார்  
மருத்துவமாக அவர் முத்தாய்ப்பாகக் கூறுவது உணவே மருந்து என்றும்  அதை எப்படி உட்கொள்ளுவது நலன் பயக்கும்  என்பதே
www.anatomictherapy.org g  என்னும் இணைய தளம் இவருடையது
 ஏதாவது சந்தேகம் இருந்தால்  anatomictreatment@gmail.com  என்னும் முகவரியும்  கொடுத்துள்ளார்  ரூ 200/- மதிப்புள்ள நூலை  pdf format நண்பர் அனுப்பிப் படித்தேன்  
படித்துப் பாருங்களேன்  நீங்கள் ரசிக்கலாம்  பயன்பெறலாம் 

த்த்ில் அவர் எழி இருப்பை பன்  பத்ுவத் ை செய்கிறார்  ால்  அவர் எழியிங்கள் பற்றை அவர் கூறி இரந்தியே எழில்ல 







  

திங்கள், 21 நவம்பர், 2016

என்ன நோயோ என்ன தீர்வோ


                                                            என்ன நோயோ என்ன தீர்வோ
                                                             -----------------------------------------


ஒரு விஷயத்தை உங்களுடன்  பகிர்ந்து கொள்கிறேன்  சில மாதங்களுக்கு முன்  எங்களுக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது நண்பரும் உறவினருமானவரை மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் சேர்த்திருப்பதாகத் தகவல் சொல்லிற்று  நாங்கள் எல்லோரும் இங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டோம் ஒரு பிரபல மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டிருந்தார்  நாங்கள் போனபோது ஐ சி யு வில் செயற்கை சுவாசம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.  என்ன ஏது என்று விசாரித்தோம்   அவருக்குச் சர்க்கரை நோய் இருந்திருக்கிறது அது அளவு குறைந்து போய் மயங்கி வீழ்ந்திருக்கிறார் அவரை மூச்சு பேச்சில்லாத நிலையில்  ஆசுபத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். பிழைப்பது கடினம் என்னும் நிலையில் எல்லோருக்கும்  தகவ;ல் தெரிவிக்கப்பட்டது
நாங்கள் போய்ச் சேர்ந்தபோது ஐசியு வில்  இருந்தார் செயற்கை முறை சுவாசத்தில் (ventilator) இருந்தார்  மூக்கு வழியே குழல் செருகப்பட்டு அதன்  மூலம்  உணவும் மருந்தும் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது ஓரிரு நாட்களில்  எந்த முன்னேற்றமோ  பின்னடைவோ இல்லாதநிலையில் ஏதாவது தகவல் இருந்தால் தெரிவிக்கச் சொல்லி  அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பினோம் 
ஒரு வாரம்  கழிந்தபின்  அவரை வீட்டுக்குக் கொண்டு போகும்   சாய்சை மருத்துவர்கள் கொடுத்தார்கள் தற்சமயம்  உயிருக்குப் பாதிப்பில்லை என்றும்கூறினார்கள் மருத்துவமனையில்  வெண்டிலேடரில் இருக்கச் செலவும் அதிகம் மருத்துவர்களும் அதை உறுதியாகச் சொல்லவில்லை,  வீட்டுக்குப் போகும் முடிவை உறவினரே எடுக்க வேண்டும்  என்றும் கூறினார்கள்
அவரை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு போனார்கள் அவரது தன்னம்பிக்கை மெதுவாகக் குறையலாயிற்று  மறதியும்  அதிகமாயிற்று.  சில் தினங்கள் கழிந்து அவரைப் பார்க்கப் போனோம்  எங்களை அடையாளம் காண்பதே அவருக்குச் சிரமமாய் இருந்தது நாங்கள் இன்னார் என்று சொன்னதும் ஏற்றுக் கொண்டார் அவரது துணைவியார் ஒருகுழந்தையைக் கவனிப்பது போல் பார்த்துக் கொண்டார்  நாளாக நாளாக நிலைமை சீர் குலையத் தொடங்கிற்று  ஒரு சிரமப்பட்டு நடமாடும் வெஜிடபிள் போல் ஆகி விட்டார்  மறதியும்  கூடிக்கொண்டே போயிற்று 
ஒரு சில நாட்களுக்குப் பின்  அவரால் எந்த  ஒரு செயலையும் செய்ய இயலாமல் போயிற்று  இப்படி உயிருடன்  இருப்பதை விட போய்ச் சேருவதே நல்லது என்னும்  எண்ணமும் அருகிலிருந்தோருக்கு வரத் தொடங்கியது  வீட்டிலேயே அவரது தேவைகளைக் கவனித்துக் கொள்ள ஒரு நர்சும்  ஏற்பாடு செய்திருந்தார்கள்
சுருக்கமாகச் சொன்னால்  மருத்துவமனையில் இருந்து வந்தபின்   அதிக முன்னேற்றம் இல்லாமல் அவர் இறந்து விட்டார்  அவரது மறைவினால் அவரது மனைவியர்ர் மக்கள் தவிர யாருக்கும்  பாதிப்பிருக்கவில்லை. அவரும் அவரது கடமைகளை முடித்திருந்தார் 
டிஸ்கி
 இதைப் படித்தபின் யாருக்காவது எந்த வித்தியாசமான ஒப்பீடுகள் வருமானால் அதற்கு கம்பனி பொறுப்பல்ல.    




புதன், 16 நவம்பர், 2016

உணவும் உணவு சார்ந்த எண்ணங்களும்


                          உணவும்  உணவு சார்ந்த எண்ணங்களும்
                          ---------------------------------------------------------
படம் கூகிளிலிருந்து




சாப்பிடுபவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் .உயிர் வாழ உண்பவர்கள்  உண்பதற்காக உயிர் வாழ்பவர்கள் இவர்களை போஜனப்பிரியர்கள் என்று சொல்லலாம் கோபிக்க வந்தால் அது வெகுஜனப்பிரியர்களின் திரிபு என்று கூறிச் சமாளிக்கலாம் என்னைப் பொறுத்தவரை நான் முதல் பிரிவைச் சார்ந்தவன்  ஆனால் ருசித்து உண்பவர்களை எனக்கு மிகவும்  பிடிக்கும்
பொதுவாக விருந்துக்குப் போனால் வயிறார உண்பவர்களைக் காணலாம் ஆனால் விருந்துக்குப் போய் பசி ஆறாமல் நான் வருவேன் முக்கிய காரணம் நான் மிக மெதுவாக உணவு உட்கொள்ளுபவன் நான்  சாதம் பிசைந்து முதல் கவளம் வாயில் போடுவதற்குள் பலரும் ஏறக்குறைய உணவு உட்கொள்ளுவதை முடித்து இருப்பார்கள் பந்தியின் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது
 என் உறவினர் ஒருவர் மிகவும் ருசித்து நிறையவே சாப்பிடுவார். அவருக்குப் பல வருஷங்களுக்கு முன்  குடல் புண்ணுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பாதி குடல் எடுக்கப்பட்டு இருந்தது. இன்னொரு உறவினர் அரைக்குடலிலேயே இவ்வளவு சாப்பிடுபவர் முழுக்குடல் இருந்தால் எவ்வளவு உண்பார் என்று கேலி செய்வார் . ஒருவர் சாப்பிடும்போது திருப்தியாகும் போதுகண்களில் நீர் வழியும் என்பார். இவர் உண்ணும் போது நான் இவர் கண்களையே கவனிப்பேன்  
 இன்னுமொருவர் தோசை வார்த்துப் போடும்போது இன்னும்  வேண்டும்  என்பதை நாட் அவுட் என்று சொல்லிக் கேட்பார்.
 முன்பு ஒரு முறை பெங்களூர் ஹோட்டல் ஒன்றில் சாப்பாட்டுக்குப் போயிருந்தபோது பரிமாறுபவர் சாதம்போடும்போது இலையைவிட்டுக் கீழே விழுந்து சாப்பிடுபவரின்  உடையில்  விழுந்து விட்டது சாப்பிடுபவர் பரிமாறுபவரிடம் சண்டைக்குப் போய் விட்டார். சிறிது பொறுமை காத்த சர்வர் அவரிடம்  மலையாளத்தில் “தான் ஒரு  மலையாளி அல்லேடா. சோறு விளம்பும்போ  எலையைத் தூக்கிப் பிடித்து சோறு தாழ விழாண்டு  இரிக்கான் செய்யணும்னு அறிஞ்சூடே “ ( நீ ஒரு மையாளிானேஇலையில் சம் போடும்பஉன் முனையத் ூக்கிப் பிடிக்கேண்டும் என்றெரிா) என்று சரமாரியாய்ச் சத்தம்போட ஆரம்பித்து விட்டார். அது முதல் மேசையில் அமர்ந்து இலையில் சாப்பிடும்போது  சாதம் போடும் போது  இலையின் கீழ் பாகத்தைச் சற்று தூக்கி சாதம்  கீழே சிதறாமல் இருக்கச் செய்ய வேண்டுமென்று தெரிந்து கொண்டேன்
ஒரு சாரார் உண்ணும்போது  இலையையோ தட்டையோ சுற்றி  நீர் தெளித்து  பின்  உண்ணத் துவங்குவார்கள் தரையில் அமர்ந்து உண்ணும்போது  உணவில் எறும்பு போன்றவை வராமல் இருக்க இலையைச் சுற்றி நீர் தெளிப்பது புரிந்து கொள்ளப்படும்  ஆனால் இப்போதெல்லாம்  மேசையில் அமரும்போதும்  இச்செய்கை கடை பிடிக்கப்படுவதையும் பார்க்கிறேன்
சிராத்தம் போன்றவற்றில்  முதல் பந்தி சில பிராமணர்களுக்குப் படைக்கப்பட்டு பிறகுதான் மற்றவருக்கு படைக்கப் படும் இம்மாதிரி உண்ணும் பிராமணர்களை கேரளப் பக்கம் சவுண்டிப் பிராமணன்  என்பார்கள் பொதுவாக இவர்கள் எலும்பும்  தோலுமாக  இருப்பார்கள். ஆனால் இவர்கள் உண்ணும்  உணவு பிறர் பார்த்தால் கண்படும் என்று தனியாக எவர் கண்ணிலும்  படாமல்  விளம்புவார்கள்

 விருந்துக்கு உணவு பறிமாறப்படுவது பல இடங்களில்  வேறு வேறு  மாதிரி இருக்கும்   தமிழகத்தில் முதலில்பதார்த்தங்களுக்குப் பின் சாதம்  சாம்பார் ரசம் பாயசம்  தயிர் என்னும்  முறையில் இருக்கும்  ஆனால் ஆந்திராவில் முதலில் ஒரு பொடியும்  நெய்யும் சாதத்துக்கு பிசைந்து சாப்பிடவும்  பின் ரசம் சாம்பார் பாயசம் தயிர் என்னும் முறைப்படியும்  இருக்கும்  கர்நாடகாவிலும்  ஆந்திர முறையே காண்கிறேன் கேரளத்தில் பாயசத்துடன் பப்படம் பிசைந்து சேர்த்து உண்பதைப் பார்த்திருக்கிறேன்  கேரளத்தில் விருந்து என்றால் அதை நாடன்  சாப்பாடு என்பார்கள்  பதார்த்தங்களில் அவசியம் இருப்பது காளன் ஓலன் அவியல் பச்சடி  எரிசேரி புளிசேரி மோர்குழம்பு நேந்திரக் காய் வறுவல்இனிப்பும்  காரமும் இஞ்சிப்புளி  ஊறுகாய் பப்படம் பாயசம் என்பவை அவசியம் இருக்கும் பாயசங்கள் பலவகைப்படும்  கேரளாவில் பிரதமன்  என்பதில் பாலடைப் பிரதமன் சக்கைப் பிரதமன்  என்பவை தவிர பருப்புப் பாயசமும் பால் பாயசமும்   உண்டு, பாலக்காட்டில் நூரணி என்னும்  கிராமம் அங்கு சாஸ்தா ப்ரீதி நடக்கும் என் சின்ன வயசில் போய் இருக்கிறேன்  சத்தியைக்கு ஏழுவகைப் பாயசம் இருக்கும் இப்போதும்  தொடர்கிறதா தெரியவில்லை.
ஒரு வீட்டுக்கு மதிய உணவுக்கு அழைக்கப்பட்டு ஏமாற்றமடைந்த சம்பவமும்  நிகழ்ந்திருக்கிறது எங்களை மதிய உணவுக்கு வருமாறு அழைக்க நாங்கள் வெயிலில்  சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து அங்கு போனால் எங்களுக்கு உணவு பறிமாறும் எண்ணமே இல்லாதவர்கள் போல் மாமியார் வீட்டில் விசேஷ கவனிப்புடன் உணவு முடிந்திருக்குமே என்று சொல்ல எங்களுக்குச் சே என்று ஆகிவிட்டது வீட்டில் விருந்துக்குப் போகிறோமென்று சொல்லிக் கிளம்பியவர்கள் அன்று ஓட்டலில் உண்டு சமாளித்ததும்  நினைவுக்கு வருகிறது 


உணவே மருந்து என்று சொல்கிறோம் ஆனால் உணவு விசேஷ தினங்களில் வீணாக்கப்பட்டு வருவதையும் பார்க்கிறோம் சில காப்பகங்களில் மீந்து போகும் உணவை அவர்களது காப்பகங்களுக்குக் கொடுக்கும் படி வேண்டிக் கொள்கிறார்கள்
.
வெளிநாடுகளுக்குச் செல்லும் சைவ உணவுக்காரர்கள் பாடு திண்டாட்டமே  நான் ஜப்பானில் இரண்டு வாரங்கள் இருந்தேன் வெறும் ரொட்டியும் க்ரீன்  டீயும்  தான் உணவு நாக்கு செத்துபோய் இந்திய உணவகம் தேடி பலகிலோமீட்டர்தூரம் பயணித்திருக்கிறோம் ஜப்பானில் இருக்கும்போது எங்களைக் கவனித்து வேண்டிய உதவிகள் செய்ய ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு இருந்தார்  அவர் எங்களை ஒரு ரெஸ்டாரெண்டுக்குக் கூட்டிப்போக விரும்பினார் எங்களுக்கும்  அது ஒரு அனுபவமாக இருக்குமே என்று சரி என்றோம்   அவர் அவரது மனைவியையும் குழந்தையையும் கூட்டி வருவதாகவும்  அது பற்றி நாங்கள் யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்  எங்கள் தயவில் அவரது மனைவிக்கும் குழந்தைக்கும் ஒரு விருந்து என்று தெரிந்தது/ அவர் கேட்டுக் கொண்ட விதம்  அவரது செய்கை தவறாகக் கருதப்படும் என்று நினைக்கத் தோன்றியது ஜப்பானியர்களும் எல்லோரைப் போன்றவர்கள்தானே  இன்னொரு முறை நாங்களொரு டின்னருக்கு அழைக்கப் பட்டோம்  ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் bunny girls  என்று அழைக்கப்பட்டவர்கள்   முயல் போன்று உடை அணிந்து குட்டை உடையுடன் பறிமாறினார்கள்
உணவு சார்ந்த விஷயங்களை எழுதும்போது நினைவுகள் படை எடுக்கின்றன.  கடைசியாக  ஒரு வீதியோர உணவகத்துக்குச் சென்றோம். தவாவில் சூடாக நம்கண்முன்னே செய்து கொடுக்கிறார்கள்  சைவ உணவுக்காரர்களுக்கு  வெளி நாடுகளில் உணவு ஒரு பிரச்சனைதான் ஜப்பானில் அரிசி உணவு கிடைக்கும்   என்று கேள்விப்பட்டு  இங்கிருந்து பருப்புப்பொடி போன்றவற்றை எடுத்துச் சென்றேன்  அவர்களது சாதம் மிகவும் குழந்து இருக்கிறது விமான நிலையத்தில் இந்தப் பொடி வகைகளைப் பார்த்து  கடுமையாகச் சோதனை செய்தார்கள் இவை ஏதோ போதைப் பொருளாக இருக்குமோ என்னும்  சந்தேகம் 
  என்  மகன்  அண்மையில் மலேசியா  சிங்கப்பூர் சீனா போன்ற இடங்களுக்குச் சென்று வந்தான் சீனாவில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் உணவாக்கப்படுவதாகக் கூறினான்
                                                 ஜப்பானில் ஒரு ரெஸ்டாரெண்ட்
     உணவுக்கும் உடலின் எடைக்கும் சம்பந்தம் இருக்கிறதா  தெரியவில்லை.  ஆனால் உணவு என்பது உடலுக்குத் தேவையான எரிபொருள்.  சக்தி.  உண்ணும்  உணவால் கிடைக்கும்  சக்தியை செலவழிப்பதில் உடல் எடையை/ பருமனை கட்டுக்குள் கொண்டுவரமுடியும் உட்கொள்ளும் சக்தி செலவிடப்பட வேண்டும் நான் எனக்கு வேண்டியவர்களிடம் உணவு அதிகம் உட்கொள்ளுவதைத் தவிர்க்க  ஒரு பயிற்சி சொல்லுவேன் தட்டில் உணவு இட வரும்போது ஓரளவுக்கு மேல் போகிறதென்றால் ஒரு பயிற்சி செய்ய வேண்டும் பறிமாறுபவர் காணும்படி தலையை இடது வலதாக அசைக்க வேண்டும் அவர்களும் நிறுத்தி விடுவார்கள் !
 உடல் பயிற்சி செய்பவர்கள் பயிற்சிக்கு முன்  தங்களது பல்ஸ் ரேட்டை  கணக்கிட வேண்டும் சாதாரணமாக அது 70 இருக்கும்   எந்தப் பயிற்சி செய்தாலும்  மெதுவாக பயிற்சி மூலம்  பல்ஸ் ரேட்டைக் கூடச்செய்ய வேண்டும் அது சுமார் நூறைத் தொட்டதும்  அதே  அளவில் சுமார் பத்து நிமிடங்கள் இருக்குமாறு பயிற்சி வேண்டும் பிறகு மெதுவாக பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும் நடந்தோ ஜாக்கிங் செய்தோ ஸ்கிப்பிங் செய்தொ பயிற்சி மேற் கொள்ளலாம்  இது ஒரு எளிதான முறை  முயன்று பாருங்களேன்
எதையோ எழுத வந்து எங்கோ போய் விட்டது இருந்தாலும் பயனுள்ள  விஷயங்கள்தானே பரவாயில்லை