Monday, November 21, 2016

என்ன நோயோ என்ன தீர்வோ


                                                            என்ன நோயோ என்ன தீர்வோ
                                                             -----------------------------------------


ஒரு விஷயத்தை உங்களுடன்  பகிர்ந்து கொள்கிறேன்  சில மாதங்களுக்கு முன்  எங்களுக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது நண்பரும் உறவினருமானவரை மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் சேர்த்திருப்பதாகத் தகவல் சொல்லிற்று  நாங்கள் எல்லோரும் இங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டோம் ஒரு பிரபல மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டிருந்தார்  நாங்கள் போனபோது ஐ சி யு வில் செயற்கை சுவாசம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.  என்ன ஏது என்று விசாரித்தோம்   அவருக்குச் சர்க்கரை நோய் இருந்திருக்கிறது அது அளவு குறைந்து போய் மயங்கி வீழ்ந்திருக்கிறார் அவரை மூச்சு பேச்சில்லாத நிலையில்  ஆசுபத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். பிழைப்பது கடினம் என்னும் நிலையில் எல்லோருக்கும்  தகவ;ல் தெரிவிக்கப்பட்டது
நாங்கள் போய்ச் சேர்ந்தபோது ஐசியு வில்  இருந்தார் செயற்கை முறை சுவாசத்தில் (ventilator) இருந்தார்  மூக்கு வழியே குழல் செருகப்பட்டு அதன்  மூலம்  உணவும் மருந்தும் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது ஓரிரு நாட்களில்  எந்த முன்னேற்றமோ  பின்னடைவோ இல்லாதநிலையில் ஏதாவது தகவல் இருந்தால் தெரிவிக்கச் சொல்லி  அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பினோம் 
ஒரு வாரம்  கழிந்தபின்  அவரை வீட்டுக்குக் கொண்டு போகும்   சாய்சை மருத்துவர்கள் கொடுத்தார்கள் தற்சமயம்  உயிருக்குப் பாதிப்பில்லை என்றும்கூறினார்கள் மருத்துவமனையில்  வெண்டிலேடரில் இருக்கச் செலவும் அதிகம் மருத்துவர்களும் அதை உறுதியாகச் சொல்லவில்லை,  வீட்டுக்குப் போகும் முடிவை உறவினரே எடுக்க வேண்டும்  என்றும் கூறினார்கள்
அவரை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு போனார்கள் அவரது தன்னம்பிக்கை மெதுவாகக் குறையலாயிற்று  மறதியும்  அதிகமாயிற்று.  சில் தினங்கள் கழிந்து அவரைப் பார்க்கப் போனோம்  எங்களை அடையாளம் காண்பதே அவருக்குச் சிரமமாய் இருந்தது நாங்கள் இன்னார் என்று சொன்னதும் ஏற்றுக் கொண்டார் அவரது துணைவியார் ஒருகுழந்தையைக் கவனிப்பது போல் பார்த்துக் கொண்டார்  நாளாக நாளாக நிலைமை சீர் குலையத் தொடங்கிற்று  ஒரு சிரமப்பட்டு நடமாடும் வெஜிடபிள் போல் ஆகி விட்டார்  மறதியும்  கூடிக்கொண்டே போயிற்று 
ஒரு சில நாட்களுக்குப் பின்  அவரால் எந்த  ஒரு செயலையும் செய்ய இயலாமல் போயிற்று  இப்படி உயிருடன்  இருப்பதை விட போய்ச் சேருவதே நல்லது என்னும்  எண்ணமும் அருகிலிருந்தோருக்கு வரத் தொடங்கியது  வீட்டிலேயே அவரது தேவைகளைக் கவனித்துக் கொள்ள ஒரு நர்சும்  ஏற்பாடு செய்திருந்தார்கள்
சுருக்கமாகச் சொன்னால்  மருத்துவமனையில் இருந்து வந்தபின்   அதிக முன்னேற்றம் இல்லாமல் அவர் இறந்து விட்டார்  அவரது மறைவினால் அவரது மனைவியர்ர் மக்கள் தவிர யாருக்கும்  பாதிப்பிருக்கவில்லை. அவரும் அவரது கடமைகளை முடித்திருந்தார் 
டிஸ்கி
 இதைப் படித்தபின் யாருக்காவது எந்த வித்தியாசமான ஒப்பீடுகள் வருமானால் அதற்கு கம்பனி பொறுப்பல்ல.    




37 comments:

  1. கம்பெனி பொருப்பல்ல ஹாஹாஹா புரிந்து விட்டது ஐயா நடப்பது நடந்தே தீரும்.

    ReplyDelete
  2. இன்றைய நிலை இதுதான் ஐயா

    ReplyDelete
  3. எது நடக்குமோ அது நடந்தே தீரும்....

    நீண்ட நாட்கள் கஷ்டப்பட்டு இருப்பவர்களைப் பார்த்தால் மனதுக்குக் கஷ்டம் தான். அப்படி கஷ்டப்படுவதை விட இறந்து விடலாம் எனத் தோன்றும்.....

    ReplyDelete


  4. நீண்ட நாட்கள் படுத்தப்படுக்கையாக இருப்பதும் கூட , ஒரு வித தண்டனை தான் ..யாருக்கு என்னவெல்லாம் அனுபவிக்க 'பாக்கி 'இருக்கிறதோ ,அனுபவித்து தானே ஆக வேண்டும் ?-- கஷ்டப்படுபவர்களுக்காக ' அனுதாபப் படுவது' தான் நம்மால் ஆனது ...அது தான் மனிதம் --Humanism ...

    மாலி

    ReplyDelete
  5. என் நெருங்கிய நண்பரின் மாப்பிள்ளை ஒரு சிறிய விபத்திற்குப் பின் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு "கோமா" நிலையை அடைந்தார். அவரை அப்படியே விட்டிருந்தால் இரண்டொரு மணிகளில் இறந்து போயிருப்பார். அவரை "செயற்கை சுவாசம், இரத்த ஓட்டம்" மெசினில் போட்டு உயிர் பிழைக்கச் செய்தார்கள். எந்த விதமான நினைவும் இல்லை. வயிற்றில் ஒரு துவாரம் போட்டு அதன் மூலமாக ஆகாரம் செலுத்தப்படுகிறது.

    ஆறு வருடம் ஆகிறது. எந்த விதமான மாற்றமும் இல்லை. இதை விதிப்பயன் என்று கூறுவதலல்லால் வேறு சொல் இல்லை.

    ReplyDelete
  6. ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்ற சிலப்பதிகார வரிகள் ஏனோ நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  7. இருப்பதை விட!....

    உற்றார்களே இப்படி நினைக்கக்கூடிய சூழ்நிலை மிகக் கொடுமையானது...

    எல்லாம் வாங்கி வந்த வரம்.. அவ்வளவு தான்!..

    ReplyDelete
  8. நீங்களே முடிவு பண்ணிக்குங்க என்று டாக்டர் சொல்லி விட்டால் அவ்வளவுதானா :)

    ReplyDelete
  9. இயந்திரத்தனமாகிப் போன வாழ்க்கை முறையில் இதுதான் இயல்போ என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  10. இன்று தேவகோட்டைகில்லர் ஜி பதிவில் அழகிய மரணம் வாய்க்க வேண்டும் என்று படித்தேன், எல்லோருக்கும் அப்படி வாய்க்குமா என்று தெரியவில்லை.
    நோயில் படுத்து பாயில் கிடந்தால் யாருக்கும் புண்ணியம் இல்லை. ஆனால் பிறப்பு, இறப்பு என்பது நம் கையில் இல்லையே!

    ReplyDelete

  11. @ கில்லர் ஜி
    உங்களுக்கு கற்பூர புத்தி வருகைக்கு நன்றி

    ReplyDelete

  12. @ ஸ்ரீராம்
    கஷ்டம்தான். யாருக்கு என்பதே கேள்வி வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  13. @ கரந்தை ஜெயக்குமார்
    இன்றைய நிலை இதுதான் எங்கு யாருக்கு என்று சொல்லவில்லையே அருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  14. @ வெங்கட் நாகராஜ்
    எது நடக்குமோ அது நடந்தே தீரும் தெரிந்தாலும் அப்படி இருக்க முடிவதில்லையே வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  15. @ வி மாலி
    இப்படி வேதாந்தமாக நினைக்க முடிவதில்லையே சார் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  16. @ டாக்டர் கந்தசாமி
    விதிப்பயன் என்று சொல்லி தேற்றிக் கொள்ள வேண்டும்வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  17. @ திண்டுக்கல் தனபாலன்
    ரொம்ப சிரமம் யாருக்கு என்பதே கேள்வி வருகைக்குநன்றி டிடி

    ReplyDelete

  18. @ வே நடன சபாபதி
    ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் . இப்படி ஏதாவது சொல்லித் தேற்றிக் கொள்ளத்தான் வேண்டும் .வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  19. @ துரை செல்வராஜு
    பின்னூட்டங்களில் பலரும் வேதாந்திபோல் சிந்திக்கிறார்கள்; வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  20. @ பகவான் ஜி
    மருத்துவர்கள் இப்படிச் சொல்வது என்னை இப்பதிவு எழுதத் தூண்டியது வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  21. @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
    இம்மாதிரியும் நிகழ்வுகள் உள்ளன என்பதைச் சொல்லத்தான் பதிவு. வருகைக்கு நன்றி உமேஷ்

    ReplyDelete

  22. @ கோமதி அரசு
    கில்லர்ஜியின் பதிவில் எழுதிய பின்னூட்டமே உங்களுக்கும் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  23. கம்பனி பொறுப்பல்ல என்றால்
    ஆண்டவன் பொறுப்பை ஏற்பார்

    ReplyDelete

  24. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்

    சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்று நினைக்கிறேன் பதிவில் சொல்லி இருக்கும் நிகழ்வுகளை நடப்பில் இருக்கும் சில நிகழ்வுகளோடு ஒப்பீடு செய்தால் கம்பனி பொறுப்பல்ல என்றே பொருள். கடவுள் எங்கே வந்தார் கருத்துப்பதிவுக்கு நன்றி சார்

    ReplyDelete
  25. நான் பார்த்தவரைக்கும் வயதாக ஆக, நம் உயிரின் மதிப்பு குறைந்துகொண்டே வருகிறது. அதுவும் கடமைகளை எல்லாம் நல்லபடியாக முடித்துவிட்டால், உயிரின் மதிப்பு இன்னும் குறைகிறது. செலவு எக்குத் தப்பாகும் மருத்துவ உதவி தேவைப் பட்டால் நம் உயிர் மதிப்பு இன்னும் குறைகிறது.

    ஆமா, யாரிடம் உயிர் மதிப்பு குறைகிறது? என்கிற கேள்வி எழுகிறதா?

    நம் உயிருக்குயிரானவர்களிடம்தான்! :(

    ReplyDelete

  26. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
    கொடுத்திருந்து சுட்டிக்குச் சென்றேன் இணைக்க முயன்றேன் கூகிள் + ல் நான் இணைத்திருக்கும் பதிவுகள் தெரிகின்றன். உலகப் பதிவர்கள் வலையில் இணைந்ததா தெரிய வில்லை நன்றி

    ReplyDelete

  27. @ வருண்
    இப்படி எல்லாம் அப்பட்டமான உண்மைகளை சொன்னால் பலரும் விரும்புவதில்லை. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  28. கை கால் நல்லா இருக்கும்போதே போய்ச் சேர்ந்துடணும் என்ற வேண்டுதல்தான் எப்பவும்! படுக்கையில் விழுந்தால் பாயும் பகை என்று சொல்லி வச்சுருக்காங்க. கீழே விரிக்கும் பாயே பகையானால்..... மற்றதைப் பற்றிச் சொல்லணுமா?

    என்னதான் சொந்தம் என்றாலும் ஒரு நாள் இல்லையேல் ஒரு நாள் சலிச்சுத்தான் போயிருது. எப்படியும் போகத்தானே வேணும்.... அதை அடுத்தவங்களுக்கு உபத்திரவம் தராமல் போனால் என்னன்னு நினைச்சுக்கணும். ரெண்டு நாள் அழுது, துக்கப்பட்டுட்டு அவரவர் வேலைகளைப் பார்க்கப் போய்க்கிட்டே இருப்பாங்க மக்கள்.

    மரணம் நம்ம கையிலா இருக்கு? இல்லே நாமென்ன அம்பானிகளா.... ஆஸ்பத்திரியிலே கடைசி வரை வச்சுப் பார்த்துக்க? :-(

    ReplyDelete
  29. எல்லோரும் எதிர்பார்ப்பது அநாயாசமான மரணமே! எங்கே! :(((

    //இல்லே நாமென்ன அம்பானிகளா.... ஆஸ்பத்திரியிலே கடைசி வரை வச்சுப் பார்த்துக்க? :- ( அம்பானி கட்டின ஆஸ்பத்திரியோட செலவுகள் அவருக்கே கட்டுப்படியாகுமானு தெரியலை! :) அவ்வளவு அதிகமான செலவுகள்! :(

    ReplyDelete
  30. @ துளசி கோபால்
    அம்பானிகள் கடைசி வரை ஆஸ்பத்திரியில் வச்சுப் பார்த்தாலும் மரணத்தை தவிர்க்க இயலுமா

    ReplyDelete
  31. @ கீதா சாம்பசிவம்
    அனாசாய மரணம் சொல்லாட்சியை ரசித்தேன்

    ReplyDelete
  32. உடம்பு நன்றாக இருக்கும் வரையில் தான் , நம்மீதே நமக்கு மதிப்பிருக்கும். நோயில் விழுந்தால் ... எல்லாம் போச்சு.

    ReplyDelete

  33. @ சிவகுமாரன்
    கூடியவரை உடலையும் உள்ளத்தைப் போல் பாதுகாக்க வேண்டும் ஆனால் நமக்கு நோயைப் பற்றிய பயமே அதிகம்
    இந்தப்பதிவை நான் எழுதத் தூண்டியதே சில முடிவுகளை நோயாளியிடமோ உறவினர்களிடமோ மருத்துவர்கள் ஒப்படைப்பதன் விளைவுகளை விளக்கத்தான் அண்மையில் கேள்விப்படும் சில நிகழ்வுகளும் தூண்டியது

    ReplyDelete
  34. சார் இப்போதைய காலக்கட்டத்தில் பெற்றோராகவே இருந்தாலும் வயதானவர்கள் என்றால் அவர்களின் ரத்த உறவுகளுக்கே இன்னும் சொல்லப்போனால் தொப்புள்கொடி உறவுகளுக்கே, ஒரு வேளை பெற்றவர்கள் இன்னும் கணக்குத் தீர்க்கவில்லை என்றால் அதாவது உயில் ஒன்றும் எழுதிவைக்கவில்லை என்றால் மட்டுமே அந்த உயிலைப் பெறுவதற்காக அல்லது பெறும்வரை ஏதோ கடனே என்று பார்த்துக் கொள்கின்றார்கள். ஒரு வேளை சொத்தோ பணமோ இல்லாத பெற்றோர் என்றால் அதோ கதிதான் வயதானவர்களின் நிலை.

    சொத்தும் பணமும் இருக்கும் த்ங்கம் வெள்ளி எல்லாம் பிரிக்கப்பட்டுவிட்டால் அப்புறம் பெற்றோருக்கு எந்த வேல்யுவும் இல்லை சார் இதுதான் நிதர்சனம். அதிலும் மாமனார் மாமியார் என்றால் இன்னும் மோசம்....பெற்றோருக்கெ வேல்யு இல்லாத போது மாமனார் மாமியாரைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை..

    இதையும் மீறி பெற்றோரைப் பார்த்துக் கொள்ளும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் அதுவும் கணவனும் மனைவியுன் சேர்ந்து ஒத்த மனதுடன் எந்தவித வெறுப்பும் இல்லாமல் அதுவும் நீங்கள் சொல்லியிருக்கும் நிலைமை போன்று வந்த பிறகும் இருக்கிறார்கள் என்றால் அது மிக மிகக் குறைவு விரல் விட்டு எண்ணிவிடலாம்.

    ஏனென்றால் நடை முறை வாழ்க்கையும் அப்படி ஆகிவிட்டது குழந்தைகளின் வயிற்றுப் பிழைப்பிற்காக எங்கேயோ இருக்க... பெற்றோர் எங்கேயோ என்று ஆகிவிட்ட நிலையில் பார்த்துக் கொள்ளும் நேரமும் பொறுமையும் இல்லை அவர்களுக்கு. இதற்குத் தனி மனப்பக்குவம் வேண்டும் சார்.

    பாவம் பெற்றோர்/வயதானவர்கள்.

    ReplyDelete

  35. @ துளசிதரன் தில்லையகத்து
    வாருங்கள் கீதா/ துளசி. இந்தப்பதிவு எழுதும்போது நிகழ்ந்து கொண்டிருந்த சில சம்பவங்கள் என்னையும் பிறரைப் போல் பாதித்தது வீட்டுக்குக் கொண்டு போகும் சாய்சை உறவினர்களிடமே விடுவது என்பது( உறவினர் இல்லையென்றால் அவரிடமே)என்னில் சில எண்ணங்களைத் தோற்றுவித்தது விளங்கி இருக்கும் என்று நினைக்கிறேன் ஒருவரது மறைவால் யாருக்காவது ஆதாயம் இருக்குமென்றால் எதையும் சொல்லாமல் கவனித்துக் கொள்வார்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete