Wednesday, March 1, 2017

பிறந்தநாள் கொண்டாட்டங்கள்


                             பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
                            ---------------------------------------------


நேற்று_ (28-02 -2017) என் இரண்டம் பேரன் மற்றும்  இரண்டாம் மருமகள் இருவரது பிறந்தநாள் காணவும் அவர்களை வாழ்த்தவும்  அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன்  .முன்னைப் போல் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இப்போதெல்லாம்  கொண்டாடப்படவில்லை என்றே தோன்றியதுநாங்கள்சென்றது கொண்டாட்டத்துக்கு அல்லவே அவர்களை வாழ்த்தவே இந்நேரத்தில் 2011`ல் பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி நான் எழுதி இருந்த ஒரு பதிவு நினைவுக்கு வந்தது நான்   எழுதி இருந்தபடி என்  வீட்டிலேயே கடைப்பிடிக்காதது சற்றே வருத்தம் தருகிறது இருந்தாலும்  என்  எண்ணங்களில் மாற்றம் ஏதும் இல்லை. ஆதங்க கூடுகிறது படித்துப் பாருங்களேன்

 ஹாப்பி பர்த்டே விதையாகிப் பின் விருட்சமாக

     பிறந்த நாள் கொண்டாடும் பிள்ளைகளுக்கு
     புத்தாடை உடுத்தலாம்
     பள்ளிக்கு சீருடை வேண்டாம்
     இனிப்போடு பள்ளி சென்றால் ,
     ஆயா முதல் அனைவரும் செல்லம் கொஞ்சுவர்
     மாலையில் கேக் வெட்டலாம் ,பரிசுப் பொருட்கள் ,
     குவியலாம், ஆட்டமும், பாட்டமும், கொண்டாட்டமும், , 
     கனவுகள் ,கற்பனைகள், எதிர்பார்ப்புகள்

            பிள்ளையின் பிறந்த நாள் கொண்டாடும் 
            பெற்றோருக்குப் பலப்பல கவலைகள்
            திட்டங்கள் செயல்கள், அதுவும் அடுக்குமாடி 
            குடியிருப்பானால் கேட்கவே வேண்டாம்
.
   எண்ணிக் கணக்கிட வேண்டும்
    எத்தனை பேர் அழைப்பதென்று
    பிள்ளையின் நண்பர்களுடன் 
    குடியிருப்பில் வசிக்கும் சிறுவர் சிறுமிகள்
   கூடவே துணைக்கு வரும் பெற்றோர்கள்
    புத்தாடை துவக்கம் ,இனிப்புப் பண்டங்கள்
    காரவகைகள், கூடவே குடிக்க ஜூஸ்
    வைத்துக் கொடுக்க காகித தட்டுகளுடன் ,
    கப்புகளும், கைத் துடைக்க  டிஷுஸ் என்று 
   பார்த்துப் பார்த்து திட்டமிட வேண்டும்
   அழகான வண்ணப் படங்களுடன் பெயரும் 
   எழுதிய பெரிய கேக் மிக மிக அவசியம்.
   பரிசுகள் பலப்பல தருவோருக்கு 
    மீள்பரிசுகளும்  மிகவும் முக்கியம்
    பரிசு கொடுக்கும் சிறுவர்கள் 
    மீள்பரிசு  எதிர் பார்ப்பர்
    அவர்களை  ஏமாற்றக்கூடாது.

            கண்மலர்ந்தெழும்  பிள்ளையை 
            கட்டியணைத்து முத்தமிட்டேழுப்பி ,
            வாழ்த்துக்கூறி, பள்ளிக்கு  இனிப்புடன் 
            வழியனுப்பி மாலைநேர  விழாவுக்கு 
            வெகுவாகக் காத்திருப்பர் பெற்றோர்

    மாலை நேரத்தில் சந்தியா காலத்தில் 
    வண்ணக் காகித தோரணங்கள் பலூன்கள் 
    அலங்கரிக்க அழகாக நடு மேடையில் 
    அன்று வெட்டப்பட இருக்கும் புத்தம் புது கேக்

              ஒருவர் இருவராய் அனைவரும் வர
              கொண்டாட்டம் ஆரம்பம், குழந்தைகள் உற்சாகம்.
              கொண்டு வந்த பரிசுகளைக் கொடுத்து விட்டு
              அனைவரும் கூடியதும் வத்திச்சுடர் ஏற்றப்பட 
              ஊதி அணைக்கத் தயாராய்ப்  பிள்ளையும்
              பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆங்கிலத்தில் 
              கோரசுடன் முழங்க, கேக் வெட்டி, வாயில் ஊட்டி
              வந்தவர் அனைவரும் விருந்துண்டு வாழ்த்த
              பின் மீள்பரிசும்  கொடுக்கப்படும்.

     ஆரவாரமாய் ஆரம்பமான விழா, அடங்கியபின் 
     பார்த்தால் பெற்றோர் பையில் பெரிய ஓட்டைதான்  மிச்சம்

             என்னென்னவோ எண்ணங்கள் தோன்றுகிறது எனக்கு
             பிறந்த நாள் விழா பண்போடு கொண்டாடக் கூடாதா...
             அயலவன் கொண்டு வந்த கலாச்சாரம் 
             ஆழமாய்க் காலூன்றி வேரூன்றி விட்டது.
             பிறந்தநாள் விழாவில் ஒளிரும் தீபச்சுடர்
             அணைக்கப்பட வேண்டுமா.?
             அச்சானியமாகத்  தோன்ற வில்லையா..?
             சூழ்நிலைக் கைதிகளாக நாமிருக்க 
             இப்படித்தான் கொண்டாட வேண்டுமென்றால்
             தீபச்சுடரை அணைக்காமல்  ஒளியேற்றிக் 
             கொண்டாடலாமே...!

     பிறந்த நாட்கள் நல்ல நெறி 
     கற்பிக்கும் நாட்களாகக் கூடாதா.?
     பிறந்தநாள் விடியலில் பெற்றோரை வணங்கவும்
     உள்ளதை இல்லாதாருடன் பகிர்ந்து 
     மகிழும் நாளாகப்  பழக்கப் படுத்தி
     பிள்ளைகளைப் பாங்காக வளர்க்கலாமே...
    வளர்ந்தபின்  உதவும் எண்ணம் 
    விதையாகிப்   பின் விருட்சமாகாதா.?

எங்கள் வீட்டில் இந்தநாள் இருவரது பிறந்தநாளாகிறது எளிமையுடன்  கொண்டாடப்பட்டது தீபச்சுடர் ஊதித்தான் அணைக்கப்பட்டது என்மனது வேதனை உற்றது. இருந்தாலும்  காலத்தோடு ஒத்துப் போக மனம் கேட்டுக்கொண்டது நான்  எதையாவது சொல்லப் போக அது வருத்தம் தருவதாய் இருக்கக் கூடாது அல்லவா  ஓரிரண்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்டது
 
பேரன் மற்றும் மருமகளுக்குப் பிறந்த நாள் கேக்
 
மருமகளும்  பேரனும் 
 
மாமியாருக்குக் கேக்
 
என் மகன் குடும்பம்
 என்  பேரனிடம்  அவன்  டீன் ஏஜில் காலடி எடுத்து வைக்கிறான்  என்றேன் அவன் பிறந்த நாளும்  என் மனத்திரையில் ஓடியது அது இன்னோரு பதிவில்

==================================

30 comments:

  1. பிறந்த நாள் கொண்டாடிய தங்களின் மருமகளுக்கும் பெயரனுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்! பிறந்த நாள் பற்றிய தங்களின் பொருள் பதிந்த கவிதைக்கு பாராட்டுகள்! மேலை நாட்டிலிருந்து ‘இறக்குமதி’ செய்யப்பட்ட இந்த பிறந்த நாள் விழா கொண்டாடும் வழக்கம் முதலில் திரைப்பட நடிகர்களிடம் ஆரம்பித்து, பின்னர் அரசியல்வாதிகளுக்கு வந்து தற்சமயம் அனைத்து மக்களிடமும் தொற்றிக்கொண்டுவிட்டது. இந்த விழாவைக் கொண்டாடத்தான் வேண்டும் என்றால் அதற்காகும் செலவை அநாதை குழந்தைகளை வைத்து நடத்தும் இல்லங்களுக்கு நன்கொடையாகக் கொடுத்துவிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சிறுவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் என்றே கொண்டாடப்படுகிறது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா

      Delete
    2. நல்ல கருத்து

      Delete
  2. ...எப்படியோ, சொல்ல வந்ததைச் சொல்லி முடித்துவிட்டீர்கள், இல்லையா? பழையன கழிதலும் புதியன புகுதலும் தானே வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள்? சிறிசுகள், எப்படியோ கொண்டாடிவிட்டுப் போகட்டுமே! பெரிசுகளைத் திண்டாடவிடாமல் வைத்துக் காப்பாற்றினால் போதாதா? பகவத்கீதையில் அவர் என்ன சொன்னார்? 'பலனை எதிர்பாராதே' என்று தானே?

    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. பதிவுகளில் சில ஆற்றாமைகளைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை வருகைக்கு நன்றி சார்

      Delete
  3. தங்களது இரண்டாம் பேரன் மற்றும் இரண்டாம் மருமகள் ஆகிய இருவருக்கும் எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தைகள் கொண்டாடும் பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றிய தங்களது வார்த்தைகளின் வருணனைகளை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நேரில்கண்டு பார்த்தது பதிவாயிற்று வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி சார்

      Delete
  4. மருமகள், பேரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி மேம்

      Delete
  5. பேரன், மருமகள் இருவருக்கும் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. உங்கள் ஏக்கம் புரிகிறது ஐயா! குறிப்பாக, பிறந்தநாளும் அதுவுமாய் விளக்கை அணைத்துக் கொண்டாட வேண்டுமா என்பது எல்லார் வீட்டிலும் பெரியவர்கள் கேட்பதே. மங்கலக்கேடு என்பதை விட, சாப்பிடும் பொருள் மீது உணவுப்பொருளல்லாத ஒரு பொருளான மெழுகுத்திரியைக் குத்தி வைத்து, அதை ஊதி அணைப்பதன் மூலம் அந்தப் புகை கேக்கில் பட்டு, அதன் பின் அதைச் சாப்பிடுவது என்பது தேவையா என்கிற கேள்வியும் எழுகிறது. என்ன செய்ய? மக்களின் போக்கு அப்படித்தான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தவிர்க்க முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்கிறது ஐயா. இருந்தாலும் நம் எண்ணங்களுக்கும் ஒரு வடிகால் வேண்டுமல்லவா வருகைக்கு நன்றி

      Delete
  7. நம்மால் திருத்த முடியாததை நினைத்து வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை :)

    ReplyDelete
    Replies
    1. நூறு சதவீதம் சரி ஜி வருகைக்கு நன்றி சார்

      Delete
  8. உங்களது பிறந்தநாள் சிந்தனைகள் புரிகிறது. எதற்கெடுத்தாலும் வெள்ளைக்காரர்களை நகலெடுக்கும் நம் வழக்கங்கள் முடிவுக்குவரும் எனத் தோன்றவில்லை.

    மாலையிலோ இரவிலோ கேக்கில் மெழுகுவர்த்தி நட்டுவைத்து ஏற்றி, அதை எரியவிடாது உடன் அணைத்து - எனக்கும் உடன்பாடில்லை.

    இந்த மாதிரி நாட்களில், பெற்றோரை, தாத்தா, பாட்டியை வணங்கி ஆசிபெறுதல் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடுமோ என்று கவலையாக இருக்கிறது.

    பிறந்த நாட்களில் இல்லாதோருக்குக் கொஞ்சம் உணவாகவோ, எதுவாகவோ உதவ முடிந்தால் நலந்தான்.

    இதனை எல்லாம் இளசுகளுக்கு எப்படிப் புரியவைப்பது? அவர்கள் கேட்கிற மூடிலா இருக்கிறார்கள்? நம்மை ஒருமாதிரிப் பார்த்துவிட்டுக் கடந்துவிடுவார்களே !

    ReplyDelete
    Replies
    1. சில நேரங்களில்செவிடன் காதில் ஊதிய சங்காகிறது வருகைக்கு நன்றி சார்

      Delete
  9. எனது மனமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி சார்

      Delete
  10. மருமகளுக்கும், பேரனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. மருமகளுக்கும், பேரனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களும், ஆசிகளும். பிறந்த நாள் கொண்டாட்டங்களிப் பற்றிய உங்கள் கவிதை அருமை. உங்கள் ஆதங்கம் புரிகிறது. நாங்களும் முன்பு நல்ல நாளில் விளக்கை ஊத்தி வேண்டாமே என்று சொல்லிக் கொண்டிருந்தோம். இப்போதெல்லாம் பான்சி கேண்டில்கள் வருகின்றன, அதை அணைத்துதான் தீர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இவற்றில் எல்லாம் ஒரு காலம் வரைதான் இண்டெரெஸ்ட் வருகைக்கு நன்றி மேம்

      Delete
  12. உங்கள் ஆதங்கத்தில் அர்த்தம் உள்ளது... ஆனால் புரிந்து கொள்பவர்களும் கடந்து விடுவது தான் இன்றைய நிலை...

    ReplyDelete
    Replies
    1. வேறு வழி...?வருகைக்கு நன்றி டிடி

      Delete
  13. பேரனுக்கும் மருமகளுக்கும் நல்வாழ்த்துகள்.

    தங்கள் ஆதங்கம் புரிகிறது. அவரவர் வாழ்க்கை அவரவர் விருப்பம் என்றே கடந்து விட வேண்டியுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு கருத்துப்பகிர்வுக்கும் நன்றி மேம்

      Delete
  14. பேரனுக்கும், மருமகளுக்கும் வாழ்த்துகள் ஐயா. உங்கள் எழுத்தின்மூலமாக நாங்களும் உடன் இருப்பதுபோன்ற உணர்வினை உண்டாக்கிவிட்டீர்கள் வழக்கம்போல. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்

      Delete