ஆயுதபுஜை நினைவுகள்சில
----------------------------------------------
இன்றுதானே
ஆயுத பூஜை என்றானால் என்ன..... இன்றும் என்றும்போல ஒரு நாள் அதுவும் விடுமுறைநாள் தி
தமிழ் இளங்கோ அவர்கள் அவர்கள் அவரது ஆயுதபூஜை நினைவுகளைப்பதிவாக்கி இருக்கிறார்
எனக்கும் பணிக்கால ஆயுத பூஜை நினைவுகள் சில வந்தது அதிலும் குறிப்பாக நான் பயிற்சி
முடிந்து முதலில் பணியில் இருந்த எச் ஏ எல் ஏரோ எஞ்சின் டிவிஷனில் நடந்த முதல் ஆயுத பூஜை (1959ம் வருடம் ) மங்காமல் நினைவுக்கு
வருகிறது அப்போது எஞ்சின் டிவிஷன் துவங்கி
இருந்த நேரம் ப்ரிஸ்டல் சிடெலி BRISTOL SYDELLY ஆங்கிலக்
கம்பனியுடன் ஆன கூட்டு முயற்சி நிறையவே
ஆங்கிலேயர்கள் இருந்தனர் எச் ஏ எல் லில் அப்போதெல்லாம் ஆயுத பூஜையை தொழிலாளிகள் தங்கள் திறமைகளால் உருவாக்கப்பட்ட
பொருட்களை எக்சிபிட் செய்வதில் பெருமை கொள்வார்கள் அதற்கான செலவுகளை நிர்வாகமே
ஏற்றுக் கொள்ளும் எஞ்சின் டிவிஷன் புதிதாக தொடங்கப்பட்டதால் அன்றைய தினத்தை
வெகுவாக அலங்கரித்து பூஜை செய்வதோடு நிறுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது விழா நடவடிக்கைகளை எஞ்சின் டிவிஷனில் செய்ய ஒரு குழு நிர்ணயிக்கப்பட்டு
அதன் தலைவனாக என்னை நியமித்தார்கள்
பூஜைக்கு
வேண்டிய பொருட்களையும் கடவுள்
படங்களுக்குச் சார்த்த வேண்டிய மாலைகள்
மற்றும்தின்பண்டங்களாக பொரி கடலை போன்றவையும் வாங்க முடிவு செய்யப்பட்டது நன்கு தீட்டப்பட்ட
அழகு படங்கள் லட்சுமி சரஸ்வதி பார்வதி
போன்ற படங்கள்பெரிதாகக் கொண்டுவரப்பட்டன ஒரு மேடை போடப்பட்டு பணிசெய்யும் ஆயுதங்கள் சிலவற்றையும்வைக்க
முடிவெடுக்கப்பட்டது அப்போது எங்கள்
மேலாளர் மாலைகள் வாங்கும் போது கூடவே
ஐந்தாறு மாலைகளையும் சேர்த்து வாங்கச்
சொன்னார் எனக்கு ஏன் இந்த அதிகப்படியான மாலைகள் என்று தெரியவில்லை
கேட்டேன் வந்திருக்கும் ஆங்கில அதிகாரிகளை
கௌரவிக்கவே இந்த அதிகப்படியான மாலைகள் என்றார் எனக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை
தொழிலாளிகள்
தாங்கள் வணங்கும் ஆய்தங்களையும்
கடவுள்படங்களையும் மாலை இட்டு
வணங்கலாம் ஆனால் வெள்ளை அதிகாரிகளுக்கு மாலை போடுவது ஏற்றுக் கொள்ள முடியாது
என்றேன் சொன்னதைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன் எனக்கு சரியில்லை என்று தோன்றியதால் பூஜைக்
குழுவின் பொறுப்பில் இருக்க முடியாது என்று
கூறினேன் மேலும் வரவு செலவுக் கணக்குகளுக்கு நான் பொறுப்பானதால் மாலைகள் வாங்க இயலாது என்றும்
கூறினேன்
மேலாள்ருக்குக் கோபம்வந்தது எப்படியும் ஆங்கில
அதிகாரிகளுக்கு மாலைகள் போட வேண்டும் என்றார்
அதுவே அவர்களுக்கு நம் மேல் பிரியம்
வரவழைக்கும் என்றார் நான் மறுதளித்து விட்டதால் அவரே அவரது செலவில்
மாலைகள் வாங்கி வந்தார் அந்த முதல் விழாவை
நாங்கள் புறக்கணித்தோம் என்றுசொல்ல
வேண்டியதில்லை இந்த தாழ்வு மனப்பான்மை எனக்குப் பிடிக்க வில்லை அவர்களுக்கு இதன்
பின் இருக்கும் பக்தியும்
சிரத்தையும் தெரியாது மாலைகளை
அணிந்துகொண்டு நாள் முழுவதும் வலைய வந்தனர் ஏதோ தமாஷ் போல் கருதினார்கள்
அதன் பிறகு
வந்த ஆயுத பூஜைகள் ஏரோ எஞ்சின் டிவிஷனில் ஆங்காங்கே அவரவர் நம்பிக்கைப் பிரகாரம்
கொண்டாடப்பட்டது எச் ஏ எல் மெயின் தொழிற்சாலையில்
தொழிலாளர்கள் தங்கள் திறமையைக் கொண்டு உருவாக்கிய பொருட்களுடன் ஒரு எக்சிபிஷன் போல்
நடத்துவார்கள் ஒரு க்யூபுக்குள் க்யூப் அதற்குள் ஒரு க்யூப் என்று ஒரு லேத்
மெஷினைக் கொண்டே உருவாக்குவதைப் பார்த்து
ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்
பி எச் இ
எல் லில் அன்று எல்லோருக்கும்
தொழிற்சாலைக்கு வரும் உரிமை உண்டு
ஒவ்வொரு பகுதிக்கும்சென்று எத்தனை பொரி கடலை இனிப்புப் பொட்டலங்கள்
பெற்றோம் என்று காட்டிப் பெருமைப்படுவார்கள்
விஜயவாடாவில் இதே ஆயுதப் பூஜையை காண்ட்ராக்டர்கள் அன்று
கொண்டாடுவதில்லை விஸ்வ கர்மா பூஜை என்று
வேறு ஒரு நாளில் கொண்டாடுவார்கள்
என்
நினைவுகளை மீட்டெடுக்க உதவிய திரு தி தமிழ் இளங்கோவின் பதிவுக்கு நன்றி
நான் பிரதிலிபிக்கு ஐந்து கவிதைகள் அனுப்பி இருக்கிறேன் கவிதை மழை போட்டிக்காக நேரமிருந்தால் படித்துக் கருத்துக் கூற வேண்டுகிறேன் september 30ம் தேதி / http://tamil.pratilipi.com/ event/kavidhai-thiruvizha/ சுட்டியில் பதிவிடுவதாகக் கூறி இருக்கிறார்கள்
நான் பிரதிலிபிக்கு ஐந்து கவிதைகள் அனுப்பி இருக்கிறேன் கவிதை மழை போட்டிக்காக நேரமிருந்தால் படித்துக் கருத்துக் கூற வேண்டுகிறேன் september 30ம் தேதி / http://tamil.pratilipi.com/