Wednesday, June 20, 2018

மடியில் கனம்


                                                        மடியில் கனம்
                                                        ------------------------

                      காட்சி    1
பாத்திரங்கள் --- நவநீதம்  வேதா  பாண்டி
இடம்    நவநீதத்தின்  வீடு
திரை உயரும்போது நவநீதம் வீட்டின் ஹாலில் சோஃபாமேல் சோகத்துடன் வீற்றிருக்கிறான் அவன் மனைவி

வேதா----  என்ன ஆச்சு உங்களுக்கு  ஏதோ கப்பல் கவுந்தாப்புல உட்கார்ந்து இருக்கீங்க
நவநீதம்---  சத்தமா பேசாதே வேதா. உனக்குத் தெரியுமா பட்டாசுக்கடை பரமசிவத்தின் கடையில் பட்டாசுகள் திருட்டுப் போச்சாம்
வேதா-----   அதுக்குஅவர்தானே கவலைப் படணும்  உங்களுக்கென்னாச்சு
நவநீதம் --- அவன் போலீசுல புகார் கொடுத்திருக்கானாம்
வேதா ---  அதுக்கு என்ன இப்ப  அதுதானே முறை
நவநீதம் --- போலீசிலிருந்து  மோப்ப நாய் வருமா எனக்கு பயமா இருக்கு
வேதா –    உங்களுக்கு ஏன் பயம்  நீங்கள் திருடினீங்களா
நவநீதம் –  ( அலறிக் கொண்டே)ஐயோ நான் திருடலை எனக்கேன் பயம்னா  அவன் கடையில நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன் நாய் என்னை மோப்பம்பிடித்து காட்டிக் கொடுத்தாலோ அதுதான்,,,,,
வேதா-----  மடியில கனமிருந்தாத்தானே பயம்  உங்களூக்கு என்ன
நவநீதம் ---நாய்க்குத்தெரியணுமே என்னை காட்டிடுத்துன்னா அஞ்சறிவுதானேஅதற்கு  (வெளியில் நாய் குரைக்கும் சத்தம் நவநீதம் அலறி பின்  கட்டுக்கு ஓடுகிறான் )

                        காட்சி _2
பாத்திரங்கள்
நவநீதம் பாண்டி  வேதா-- குடுகுடுப்பைக்காரன்
திரை உயரும்போது
குடு குடுப்பைக்காரன்--   –ஐயாவுக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது நல்லகாலம் பிறக்கப்போவுது  கவலை எல்லாம் நீங்கி சந்தோஷப்படப் போறார்
நவநீதம்........( வீட்டின் பின்புறத்திலிருந்து)டேய் பாண்டி என்படுக்கைமேல் நான் சுருட்டி வைத்திருக்கும்  வேட்டி சட்டையை அந்தக் குடுகுடுப்பைக்காரனுக்கு கொடுத்து போகச்சொல் ( மனதுக்குள்..நாய் மோப்பம்  பிடித்தாலும் குடுகுடுப்பைக் காரனிடம்தானேபோகும் ) வெளியே நாய் குரைக்கும் சத்தம்



ஆஅ ஐயோ நாய் நாய்    !! … (வீட்டின்  பின்புறத்தில் இருக்கும்  மரத்தில் ஏறிக் கொள்கிறார்
வேதா   (அங்கு வந்து)இது என்ன கூத்து மரத்தின்  மேலே ஏறி என்ன செய்கிறீர்
நவநீதம் --- நாய் வந்ததா குரைக்கும் சத்தம் கேட்டதே
வேதா   –அதுஅந்தக் குடு குடுப்பை காரனை பார்த்து குரைத்தது என்ன ஆச்சு உங்களுக்கு வர வர நடவடிக்கையே சரியில்லையே
நவநீதம்—வேதா நாய் மரம்  ஏறி வந்து பிடிக்குமா( நாய் குரைப்பது கேட்டு )ஐயோ வேதா அது போலிஸ் நாயா அதை விரட்டேன் பயம்மா இருக்கு
வேதா ---உங்களுக்கு என்னவோ ஆகியிருக்கு

                              காட்சி –3

பாத்திரங்கள் ---நவ நீதம்   வேதா பாண்டி
பாண்டி – அப்பா எவ்வளவு நேரம்  மரத்தின் மேல் இருந்தீர்கள் குடுகுடுப்பைக்கு உங்கள் வேட்டி சொக்காய் எல்லாம்  கொடுத்தேன்   சண்ட்க்ஹோஷமாய் வாழ்த்திச் சென்றான் அப்பா உங்களுக்கு ஒரு சந்தோஷ சமாச்சாரம்  பட்டாசு பரமசிவம்  புகாரை வாபஸ் வாங்கி விட்டாராம்  ஏதோகணக்கில் தவறு இருந்ததாம் கவனிக்காமல் போலீசில் புகார் கொடுத்தாராம்  போலீஸ் நாட்க்கு இனி பயப்படத்தேவை இல்லை  ஆனால் நல்ல வேட்டி சொக்காய் குடுகுடுப்பைக்கு லாபம்
வேதா –இண்ட மனுஷன் செய்ததைப் பார்த்து எனக்கே இவர்தான் பட்டாசு திருடினாரோ என்று சந்தேகம் வந்தது
 நவநீதம் – நான்  தீபாவளிக்கு நண்பன் கடையில் இருந்து சில வெடிகள் எடுத்துவந்தேன்   அதுக்குத்தான் பரமசிவம் புகார் கொடுத்தானோ என்றுபயம் வந்தது இனி எந்த நாய்க்கும் பயப்படப்போவதில்லை  ஹஹஹா
                      திரை –சுபம் –முற்றும்  
                      --------------------------------------

 

  





30 comments:

  1. நாடக வடிவ முயற்சி நல்லா வந்திருக்கு. இன்னும் 3-4 காட்சிகளைச் சேர்த்து எழுதியிருந்தால் முழுமை பெற்றிருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சுமார் ஒன்றரை மணிநேர நாடகத்தைஎழுதி இயக்கி மேடையேற்ற் இருக்கிறேன் பதிவிலும் வந்திருக்கிறது வாழ்ந்தே தீருவேன் மனசாட்சிஎன்ன் தலைப்பில் இது ஒருசிறு பதிவு நாடக வடிவில் வருகைக்கு நன்றி சார்

      Delete
  2. குறும் நாடகத்தை இரசிக்க வைத்த விதம் ஸூப்பர் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. பதிவு ஒன்று குறு நாடகமாக பாராட்டுக்கு நன்றி ஜி

      Delete
  3. பரமசிவத்தையும் திட்டி விட்டாரே...!

    ReplyDelete
    Replies
    1. எங்கு எப்போது ? யாரையும் திட்ட வில்லையே

      Delete
  4. திருடனுக்கு நாய் குரைத்தாற்போல...!!!

    ReplyDelete
    Replies
    1. இனி இதுவும் உபயோகத்துக்கு வரலாம்

      Delete
  5. அசடு போல நவநீதம்! ஆனாலும் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்திருக்கு!

    ReplyDelete
    Replies
    1. குற்றமுள்ள நெஞ்சு என்றுதான் முதலில் தலைப்பாக்க நினைத்திருந்தேன் சின்ன நாடகப் பதிவு பிடித்திருந்ததா

      Delete
  6. விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்தபோது திடீரென்று நின்றதுபோல் ஆகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா நினைக்கிறீர்கள்? வருகைக்குநன்றி சார்

      Delete
  7. நான் தீபாவளிக்கு நண்பன் கடையில் இருந்து //சில வெடிகள் எடுத்துவந்தேன் அதுக்குத்தான் பரமசிவம் புகார் கொடுத்தானோ என்றுபயம் வந்தது இனி எந்த நாய்க்கும் பயப்படப்போவதில்லை ஹஹஹா//

    கொஞ்சமாய் எடுத்தாலும் திருட்டுதான்.
    குறு குறு என்று என்று இருந்து இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஒரு சின்ன கரு பதிவாயிற்று வருகைக்கு நன்றி மேம்

      Delete
  8. தலைப்பும் சொல்லிச்சென்ற விதமும் நச்

    ReplyDelete
    Replies
    1. ஒரு சின்ன நாடகபொ பதிவு வருகைக்கு நன்றிசார்

      Delete
  9. நன்று. திருட்டு திருட்டுதானே - கொஞ்சமாக இருந்தாலும், நிறைய இருந்தாலும்.....

    ReplyDelete
  10. உண்மைதான் . வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  11. மடியில் கனம்...வழியில் பயம்....உண்மைதான்

    ReplyDelete
    Replies
    1. அதைச் சொல்ல ஒரு சிறிய நாடக வடிவத்தை தேர்ந்தெடுத்தேன் வருகைக்கு நன்றி மேம்

      Delete
  12. திருட்டு திருட்டுதான். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது பொய்க்குமா என்ன?

    ஆனால் ஒருசில வெடிகளை ஏன் திருடவேண்டும். நண்பனின் கடைதானே. கேட்டால் நண்பர் தரமாட்டாரா?

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை ஓசியாகக் கேட்க தன்மானம் இடங்கொடுக்கவில்லையோ வருகைக்குநன்றி சார்

      Delete
  13. நாடக முயற்சி வெற்றிதான் ஐயா
    விறுவிறுப்பு
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. பல முழுநேர நாடகங்களை எழுதி இயக்கி இருக்கிறேன் இரண்டு நாடகங்கள் என் தளத்திலும் வந்திருக்கிறது இது ஒரு குறு நாடகமுயற்சி வருகைக்கு நன்றி சார்

      Delete
  14. குறு நாடகத்தில் உங்கள் எழுத்து முயற்சி நன்றாக வந்திருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. எழுத்து முயற்சி...?அபுரி...எனிவே வருகைக்கு நன்றி சார்

      Delete
  15. துளசி: நன்றாக வந்திருக்கு சார். ஒரு ஸ்க்ரிப்ட் போல...வெகு அழகு. இன்னும் கொஞ்சம் சீன்ஸ் சேர்த்திருக்கலாமோ...

    கீதா: நல்லாருக்கே சார்.

    வாசிக்கும் போதே நவனீதம் ஏன் பயப்படவேண்டும் என்று தோன்றியது மட்டுமின்றி எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல என்பது போல் தோன்றியது. அவர் எடுத்திருப்பார் என்று தோன்றியது. குற்றமுள்ள மனசு...அது இறுதியில் தெரிந்துவிட்டது..நன்றாக வந்துள்ளது சார். இன்னும் கொஞ்சம் காட்சிகள் சேர்த்திருக்கலாமோ....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஒரு குறும் நாடகமெழுத நினைத்து எழுதியது இன்னும் நீட்டினால் மாற்றுகுறைந்து விட வாய்ப்பு அதிகம்

      Delete
  16. இதைக் குறும்படமாக எடுக்கலாமே!

    ReplyDelete