Sunday, June 24, 2018

இன்னும் இன்னும்

         
                                இன்னும்  இன்னும் 
                              ------------------------------------


பெண்களைப் பற்றி நிறையவே எழுதி இருக்கிறேன்  இர்ந்தாலும் முற்றிலு புரிதல் இல்லையோ என்னும் சந்தேகம்  எழுகிறது இப்போதுபெண்களைப் பற்றிய  இன்னொரு கோணம்  இதை எழுதும்போது வியப்புதான் மேலிடுகிறதுபெண்ணே நீ ஒரு புதிர் பல பெண்களுக்கு  ஒப்புதல் இருந்தாலும்   இப்பதிவின் கருத்தோடு ஒத்துப்போக மனம்  சொன்னாலும் வெளிப்படையாக  ஒத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள் என்றே தோன்றுகிறது ஒருவேளைஅதுவும் பெண்களின் குணதிசயங்களில் ஒன்றோ  இதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் எப்போதோ எனக்கு வந்த மின்னஞ்சலின்  அடிப்படையில் கூறப்பட்டவை

நியூ யார்க்கில் புதிதாக ஒரு விற்பனையகம் தொடங்கப் பட்டது
அங்கு கணவர்கள் விற்பனைக்கு என்று அறிவிக்கப்பட்ட பலகை
யில் கணவரைத் தேர்ந்தெடுக்க சில விவரங்கள் இருந்தது.

நீங்கள் ஒரு முறைதான் கடைக்கு வருகை தரலாம்


ஆறு மாடிகள் உள்ள இக்கட்டிடத்தில் கணவர்களின் தகுதிகள்
ஒவ்வொரு மாடியின் நுழைவாயிலில் எழுதப்பட்டு இருக்கும்
அங்கிருந்து ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.அல்லது
அடுத்த மாடிக்குச் சென்று அங்கிருந்து தேர்ந்தெடுக்கலாம். ஒரு 
மாடியிலோ அல்லது அடுத்த மாடியிலோ கணவரை வாங்கலாம்.
ஆனால் ஒரு விதி.! ஒரு தளத்தை விட்டு வெளியே வந்தால் 
மீண்டும் அத்தளத்துக்கு வர அனுமதி கிடையாது 


ஒரு பெண் கணவனை வாங்க அக்கடைக்குச் சென்றார். முதல் 
தளத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது


தளம்..1.:-இதிலுள்ள ஆண்கள் பணியிலிருப்பவர்கள். கடவுளை 
                   நேசிப்பவர்கள்.
                  (இதை விட்டு அடுத்த தளம் சென்றாள்)

தளம் 2:- இதிலுள்ள ஆண்கள் பணியிலிருப்பவர்கள் கடவுளை 
                  நேசிப்பவர்கள். குழந்தைகளிடம் அன்பாயிருப்பார்கள் 
                  (இதையும் விட்டு அடுத்த மாடிக்குச் சென்றாள். )


தளம் 3:-இதிலிருக்கும் ஆண்கள் பணியிலிருப்பவர்கள்.கடவுளை 
                 நேசிப்பவர்கள் குழந்தைகளிடம் அன்பாயிருப்பார்கள்.
                 அழகாயிருப்பார்கள்


வாவ்.  மேலே பார்க்கலாம் . எப்படி என்றுஎன நினைத்துக்
கொண்டே நான்காவது மாடிக்கு வருகிறாள்.

தளம் 4:-இதிலுள்ள ஆண்கள் பணியிலிருப்பவர்கள்.கடவுளை 
                நேசிப்பவர்கள்.குழந்தைகளிடம் அன்புள்ளவர்கள்.
                வசீகரிக்கும் ஆணழகர்கள். வீட்டுப் பணிகளில் உதவி
                செய்வார்கள்.


ஆர்வம் மேலிட அடுத்த தளத்தில் என்ன சிறப்பு என்றறிய
ஐந்தாவது மாடிக்கு வருகிறாள். விழிகள் விரியப் படிக்கிறாள்.


தளம் 5:-இதிலுள்ள ஆண்கள் பணியில் இருப்பவர்கள். கடவுள் 
                 பக்தி உள்ளவர்கள். குழந்தைகளிடம் பிரியமாய் இருப்
                 பவர்கள். வசீகரிக்கும் ஆணழகர்கள் விட்டு வேலை
                 களில் ஒத்தாசை செய்பவர்கள். சிறந்த காதலர்களாக
                 இருக்கும் தகுதி பெற்றவர்கள்அடுத்த மாடியில் இன்னும் சிறந்த கணவன் கிடைக்கலாம் ,
என்னும் எதிர்பார்ப்புடன் ஆறாவது தளத்துக்குச் செல்கிறாள்.
அங்கே....


தளம் 6:-நீங்கள் இத்தளத்துக்கு வரும் 4,363,012-ஆவது நபர்
                இந்தத் தளத்தில் கணவர்கள் விற்பனைக்கு இல்லை
                பெண்களை திருப்தி செய்ய முடியாது என்று நிரூபிக்
                கவே இந்த மாடி.


                கணவர்களை விற்பனை செய்யும் கடைக்கு நீங்கள் 
                வருகை புரிந்ததற்கு நன்றி. படிகளில் இறங்கும் போது
                கவனமாயிருங்கள். இது நல்ல நாளாயிருக்கட்டும்.
                 -------------------------------------------------------------------------------
 


  
 

  

34 comments:

  1. இரசித்தேன் ஐயா ஆசைக்கு எல்லையில்லை இதைவிட பெரிதாக... என்றே மனது நினைக்கிறது.

    ReplyDelete
  2. குறிப்பாக பெண்களுக்கு என்று கூறியது அந்த அஞ்சல்

    ReplyDelete
  3. இது முகநூல், வாட்சப் எனச் சுற்றிக்கொண்டிருக்கிறது சில வருடங்களாக! என்னைப் பொறுத்தவரையிலும் நான் இதில் எல்லாம் ரிஸ்க் எடுக்க மாட்டேன். பெற்றோர் பொறுப்பு என விட்டு விடுவேன். சில விஷயங்களில் சுயமான தேர்வு சரியா இருக்கும். இம்மாதிரி வாழ்நாள் முழுதும் உள்ளவற்றுக்குப் பெரியவங்க முடிவே சரியா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இது பொதுவாக பெண்களின் குண விசேஷத்தைச் சொல்கிறதுயாரும் அவரவரோடுஒப்பீடு செய்யக்கூடாதுஎன்று நினைக்கிறேன்

      Delete
  4. இதை விடப்பெரிதாக" என்றே மனம் நினைக்கத் தூண்டுவதாகக் கில்லர்ஜி சொல்லி இருப்பது என்னமோ சரிதான். ஒரு சில பெண்களுடன் (உறவினர் தான்) புடைவை வாங்கப்போனால் கடை கடையாக ஏறி இறங்கிக் கொண்டே இருப்பாங்க. காலையிலிருந்து மதியம் ஆனாலும் தேர்வு எதுவும் இருக்காது. அப்புறமா அரை மனசா ஏதோ ஒன்றைத் தேர்வு செய்வாங்க. அதிலும் சந்தேகம் இருக்கும். திருப்தி இருக்காது. மறுநாள் மறுபடி அதே கடைக்கு வந்து வாங்கியதைத் திரும்பக் கொடுத்துட்டு வேறே வாங்குவாங்க! அப்படியும் மனம் சமாதானம் ஆகி இருக்காது.

    ReplyDelete
    Replies
    1. இதைவிட பெரிதாக சிறந்ததாக என்று இருப்பதையும் கோட்டை விடும் குணம் பற்றி சொல்லிப் போகிறது

      Delete
  5. எங்க பையர் பூணூல் போது இப்படித் தான் ஒருத்தரோடு ஷாப்பிங்கில் மாட்டிக் கொண்டு கடைசியில் இவங்களை வைச்சு ஏதும் வாங்குவது என்பது முடியாது எனப் புரிந்து கொண்டு அரைமணியில் நானே தேர்வு செய்து எடுத்துக் கொண்டு அம்பத்தூருக்குத் திரும்பினோம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஷாப்பிங் கூட வந்தவர்கள் ஆண்களா பெண்களா

      Delete
    2. பெண்கள் தான். அந்தச் சமயம் என் கணவர் சென்னையில் இல்லை. புனேயில் இருந்தார். ஆகவே அம்மாதிரிப் போக வேண்டியதாய் ஆகி விட்டது. :)

      Delete
    3. நினைத்தது சரிதான்

      Delete
  6. உங்கள் பகிர்வின் மூலம் இந்த கதையை மீண்டும் படித்தேன். நன்றி.

    ReplyDelete
  7. வாலியை 'வாலிபக் கவிஞர்' என்பார்கள். 87 வயதிலும் காதல்ரசம் சொட்டச் சொட்டக் கவிதைகள் எழுதினர். நீங்களும் அவரைப் போலவே இன்றுவரை இதயத்தைப் பெண்கள் வசமே வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களுக்கெல்லாம் முன்னோடி யன்றோ நீங்கள்! இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து! இன்னும் சுவையானதாக!

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் என்னும் புதிரைப் புரியாமலேயே அவர்கள் பற்றித் தெரிந்த கேள்விப்பட்ட விஷயங்களைப் பகிர்கிறேன்

      Delete
  8. முன்னரே படித்திருந்தாலும் மீண்டும் படித்தேன் ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
  9. ஏற்கனவே படித்ததுதான். பெண்களுக்குப் பதில் ஆண்களை வைத்தும் இதே இடுகை எழுதலாம் சில மாற்றங்களுடன். ஆசை என்பது இருவருக்கும் பொதுவானதுதானே.

    ReplyDelete
  10. ஆசை ருவருக்கும் பொதுதான் என்றாலும் பெண்கள் எளிதில் திருப்தி அடைவதில்லை

    ReplyDelete
  11. மீண்டும் ஒருமுறை ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. எத்தனை முறை எழுதினாலும் எனக்கு பெண்கள் இன்னும் புதிராகத் தெரிகிறார்கள்

      Delete
  12. ஏற்கெனவே படித்தது, பழசு. ஆனாலும்..

    ஆசைப்படுவது ஆண்களுக்கும் உண்டு. பெண்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. இன்னும் ஆறுமாதம் காத்திருந்தால் நல்ல மொபைலோ, நல்ல மனைவியோ கிடைத்திருக்கும் என்றும் ஒரு மெஸேஜ் சுற்றிக் கொண்டிருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இது ஒரு ஒப்பீடு அல்ல பெண்களின்விசேஷ குணாதிசயங்களைக் கூறுமொரு பதிவு

      Delete
    2. ஸ்ரீராம் ஹா ஹா ஹா ஹா அதே அதே!!!! ஆண்களுக்கும் உண்டுதான்...

      ஆனால் பொதுவாகப் பெண்களைத்தான் இப்படிச் சொல்லி வாட்சப்பில் சுற்றுகிறது

      கீதா

      Delete
    3. ஒரு ஒப்பீடாகப் பார்க்கும் போது பெண்கள் பலரும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் இன்னும் இன்னும் என்னும்குணம் பெண்களுக்கே அதிகம் என்று தோன்று கிறது

      Delete
  13. இந்த திருப்தி content எல்லாம் இருபாலருக்கும் பொருந்தும் சார் .எனக்கு தெரிந்த பல ஆண்கள் பெண் பார்க்க போய் வேண்டாம்னு பலரை ரிஜெக்ட் செய்தவர்களுமுண்டு .பொதுவாவே சில மனிதர்களை திருப்திப்படுத்துவது ரொம்ப கஷ்டம் .
    பின்குறிப்பு நான் சென்னையில் இருந்தப்போவே துணி /நகைக்கு கடைகளில் பரப்பி போட்டு அலசி எடுக்க மாட்டேன் :)
    நீங்க சொன்னது சில பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் :)

    ReplyDelete
    Replies
    1. :)
      நீங்க சொன்னது சில பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் :)/ ஒரு திருத்டம் சில என்பது பல என்று இருந்திருக்க வேண்டுமோ

      Delete
    2. ஸார் நான் சொல்ல நினைத்ததை ஏஞ்சல்சொல்லிட்டாங்க....இருபாலாருக்கும் என்று.

      இந்தச் செய்தி எனக்கும் வாட்சப்பில் வந்தது ரசித்தேன் தான்...

      கீதா

      Delete
    3. பெண்கள் ஒரு புதிர் என்பது சரியே

      Delete
  14. ஏற்கனவே படித்த கருத்து மீண்டும் படித்தேன்.
    இங்கு சொல்லபட்டது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்.

    ReplyDelete
    Replies
    1. என் கருத்தை பதிவின் முதல் பாராவில் காணலாம் வருகைக்கு நன்றி மேம்

      Delete
  15. நல்ல உயரத்திற்கு அழைத்துச் சென்று திடீரென எங்களை திரும்ப அழைத்து வந்துவிட்டீர்களே ஐயா.

    ReplyDelete
  16. அது நான் செய்தது அல்ல கணவனை வாங்க முனைந்தவர்கள் கற்ற பாடம்

    ReplyDelete