வியாழன், 30 ஆகஸ்ட், 2018

யார்தான் இவர் யாரோ


                          யார்தான்   இவர்  யாரோ
                         --------------------------------------
காற்றடைத்த பலூனில் மாதொருத்தி
ககனமார்க்கமாகப் பறக்கையில்
போகுமிடம் அறிந்தும், இருக்குமிடம்
அறியாமல்,சிறிதே காற்றிறக்கிக் கீழே
பறந்தவள் பார்த்தாள் ஆங்கொரு மனிதனை.
இன்னும் சற்றே கீழே பறந்துச் சத்தமாகக்
கேட்டாள்,” ஐயா, நான் எங்குள்ளேன்.?
ஒரு மணிநேரம் முன்பே ஒருவரை நான்
சந்தித்திருக்க வேண்டும். போகும் திசை
புரியாமல் நானும் விழிக்கிறேன்.”

நீங்கள் காற்றடைத்த பலூனில் தரையிலிருந்து
சுமார் முப்பது அடி உயரத்தில் ,நாற்பது டிகிரி
வடக்கு லாடிட்யூடிலும் அறுபது டிகிரி
கிழக்கு லாஞ்சிட்யூடிலும் பற்ந்து கொண்டு
இருக்கிறீர்கள்பட்டென்று பதில் வந்தது.

நீங்கள் ஒரு பொறியாளரோ.?”

ஆம். எப்படிப் புரிந்து கொண்டீர்கள்.?”

நீங்கள் கூறியதெல்லாம் சரியான குறியீடுகள்.
 
ஏதும் புரியாத புதிராய்,எனக்குதவாத பதில்கள்.
 
நான் இன்னும் காணாமல்தான் போகிறேன்.
 
போதாக்குறைக்கு உங்களால் இன்னும் தாமதம்.
 
இது போதாதா புரிந்து கொள்ள. “

நீங்கள் ஒரு உயர்மட்ட நிர்வாகியோ.?”

ஆம். எப்படிக் கண்டு பிடித்தீர்கள்.?”

எங்கிருக்கிறோம் எங்கு போகிறோம் என்று
 
புரியாமல் இருக்கிறீர்கள்.கொடுத்த வாக்கைக்
 
காப்பாற்ற எந்த சிந்தனையும் இல்லாமல்
 
கீழிருப்பவர் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு சொல்ல
 
எதிர்பார்க்கிறீர்கள் .இதற்கு மேலும் என்ன
 
வேண்டும் உங்களைக் கண்டுகொள்ள.”
------------------------------------------------------------------

வனாந்திரப் பகுதி ஒன்றில்  ஆட்டிடையன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் 
புத்தம் புதிய கார் ஒன்றில் கனவான் ஒருவன் ஆட்டிடையனை அணுகினான்  உன்னிடமிருக்கும்  ஆடுகளின்   எண்ணிக்கையை நான் கூறிவிட்டால் எனக்கொரு ஆடு தருவாயா

வந்தவனை ஒரு முறை ஏறெடுத்து நோக்கினான்   இடையன்   பரந்தவெளியில் மேயும் தன்  ஆடுகளையும் ஒரு நோட்டம்விட்டான் ஒப்புதலாக தன் தலையை ஆட்டினான்   ஆட்டிடையன்
வந்தவன் ஆடுகளின் மேல் தன் பார்வையைச் செலுத்தினான்
அங்கு விரிந்தது அவன் மடிக்கணினி நாசா வெப்சைட்டில் புகுந்தான் தரையை ஜீ பி எஸ்ஸில்  பர்த்தான் ஒரு டாட்டா(data) பேசை உருவாக்கினான் சில வினாடிகளில் 150 பக்கங்களை தன்  மினி ப்ரிண்டரில் எழுதிப் பதிவுசெய்தான் இடையனைப் பார்த்து 1586 ஆடுகள் இங்கே மேய்கின்றன என்றான் இடையன் முறுவலித்து உனக்குப்பிடித்த ஆட்டை எடுத்துக் கொள் என்றான் தன் காரில் தனக்குப் பிடித்த ஆட்டைவைத்தான்   வந்தவன்
முறுவல் மாறாமல்  ஆட்டிடையன் உன் பணி என்ன என்று நான் யூகித்துக் கூறிவிட்டால் என் ஆட்டைத் திருப்பித் தருவாயா  ஆட்டிடையனுக்கு முடியாது என்று எண்ணி  நிச்சயமாக  என்றான் வந்தவன்
 நீங்கள் ஒரு நிர்வாக ஆலொசகர்தானே
 உனக்கு எப்படித் தெரிந்தது
 மிகவும் சுலபம்   என்ற ஆட்டிடையன்
முதலில் நான் வேண்டாமலேயே வந்தீர்கள் 
எனக்குத் தெரிந்ததைச் சொல்ல  என்னிடம் விலை பேசினீர்கள்
 மூன்றாவதாக  என் தொழில் பற்றிஏதும் தெரியவில்லை உங்களுக்கு
 இப்போது என்  நாயைத் திருப்பித்தருவீர்களா 
---------------------------------------------------------------------------------------------------------    








ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

ஒண்ணுமே புரியலே


                                        ஒண்ணுமே புரியலே இந்த உலகத்திலே
                                        ---------------------------------------------------------------
   ஆண்டவன் அவதரிப்பது துஷ்ட நிக்கிரகம்  சிஷ்ட பரிபாலனம்  செய்ய என்று கூறுகிறார்கள்  பகவத் கீதையிலும்    நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும் , தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிகிறேன் என்று கூறுகிறார் (அத்தியாயம் 4 சுலோகம் 8)  எனக்கு ஒரு ஐயம் எழுகிறது நல்லார் எனப்படுபவர் யார்கெட்டவர் எனப்படுபவர் யார்
அவதாரக்கதைகள் என்று எல்லா அவதாரங்கள் பற்றியும் எழுதி இருந்தேன்  அதில் வாமனாவதாரத்தை  மீள் பதிவாக்குகிறேன்
 
        
ஆதிசிவனால் மூவுலகாள  வரம் பெற்ற
         திரி தூண்டி விளக்கணையாது காத்த கோயில் எலி,
         இரணியன் மகன், பிரஹலாதன் மகன், விரோசனன் 
         மகன் மகா பலியாகப் பிறந்தான்.( தது )

பெற்றவரம்  பலிக்க, வானவரையும் ஏனையவரையும் 
வென்று, மூவுலகாளும் பலி சக்கரவர்த்தி ஆனான்

          வானவர்களின் தாய் அதிதி, அது கண்டு
          தன் மக்கள் நிலை கண்டு வருந்தி
          கச்சியப்ப  முனிவரிடம்  முறையீடு செய்ய,
          அவர் நோன்பு நோற்று, திருமாலை வழிபடு
          வழி ஒன்று பிறக்கும் என்றார்.அவளும் வழிபட,

திருநீலகண்டன்  அருள் பெற்று, மூவுலகாளும் பலி,
ஆணவத்தில் திளைக்கும்போது, அவனை நான்
அடக்குவேன், அதற்கென நாள் வரும்போதுன்
வயிற்றில் நான் வந்துதிப்பேன், என்றுரைத்த திருமால்,
அதிதி மகனாக வாமனாவதாரம் எடுத்தார்.

          
வரம் மூலம் பெற்ற ஆட்சி நிலைக்க,
          
அசுவமேத  யாகம் நடத்தி, யார்
          
எதைக் கேட்பினும் நான் அதனைத் தருவேன்,
       
   என்று கூறி ,அதனைச் செய்தும் வந்தான்  பலி.

தக்க தருணம் வேண்டி நின்ற வாமனரூப
மகாவிஷ்ணு மகாபலியின் யாகசாலை வர,
வணங்கி வரவேற்கப்பட்டு , வேண்டியது
கேட்டுப்பெற, , வேண்டிக்கொள்ளப் பட்டான்.

          
தான் ஒரு பிரம்மசாரிப்  பார்ப்பனன்,
          
அவன் வாழ மூன்றடி நிலம் தந்தால்
          
அதுவே போதும் நலமாயிருக்க என்ற,
          
வாமனனுக்கு அது அளிக்க வேண்டாம்
          
வந்திருப்பவன் பெருமாள் , அவனுன்னை
          
அழிப்பான் என்று அறிவுரை  வழங்கினார்
          
குல குரு சுக்கிராச்சாரியார்.

சொன்ன சொல் தவறேன், திருமாலுக்கே என்
தானம் என்றால் எனக்கது பெருமை, என்
குலம் தழைக்கும் என்றே  கூறிய  மகாபலி,
தானம் தர, நீர் வார்த்துத் தர  தயாராக
கிண்டி நீரை எடுக்க, வண்டாக மாறி,
அதன் துவார மறைத்தார், சுக்கிராச்சாரி .

           
கிண்டி அடைப்பை நீக்க, எல்லாம்
           
அறிந்த மாலும் தருப்பையால்  அதன்
           
துவாரம் குத்த ,கண்ணொன்று  குருடாகி
           
அலறியடித்து வெளியே வந்தது வண்டு.

மூன்றடி நிலம் பெற,
வரம் பெற்ற வாமனன்
நெடிதுயர்ந்து  ஓரடியாய்
வான மளந்து ,மறு அடியாய்
பூமி அளந்து ,மூன்றாம் அடிக்குக்,
கால் எங்கே வைக்க என்று
மகாபலியிடம்  வினவினான்.

          
கைகூப்பித் தலை வணங்கி
          
சொன்ன சொல் தவற மாட்டேன்
          
தங்கள் மூன்றாம் அடி  என் தலை மேல்
          
வைக்க , யான் பெருமை கொள்வேன்
          
என்று கூறிய பலிச்சக்கரவர்த்தி
          
பாதாளம் ஆள வரம் ஈந்து அவன்
         
தலை மேல் கால் வைத்தான் பெருமான்.
           ================================
=
வரம்பெற்று சிறப்பாக  ஆண்ட மஹாபலி கெட்டவனா  அவன் அசுர குலத்தில் பிறந்ததால் கெட்டவனா  பாரோர் போற்ற நாடு  ஆண்டவன் கெட்டவனா என்னால் கொடுக்க முடிந்ததைக் கொடுப்பேன்  என்று சொல்வது கெட்டவனின்  அடையாளமா  அவனைஅழித்தொடுக்க  வாமன அவதாரமெடுத்து பாதாள உலகத்துக்குள் அழுத்திய வாமனன்செயல் நல்லதா தேவர்களின்  தாய் அதிதிக்கு வரம்கொடுப்பதுதான்  துஷ்ட நிக்கிரகமா 
இதையெல்லாம் மீறி மக்கள் மனதில் வாழும்பலிச்சக்கரவர்த்தி துஷ்டனா அவன்நினைவைக் கொண்டாட ஆண்டுதோறும் விழா எடுக்கும் மக்கள்  அறிவிலிகளா
 ஆண்டவன் செயலில் குறை காணும் என்னைப்போல் இருப்பவர்கள் தவறு செய்கிறோமா  
 சுதந்திரமாக சிந்திப்பதும்   பழைய கோட்பாடுகளுக்கு அடிமையாகமல்  இருப்பதும் தவறா 
ஒண்ணுமே புரியலே  இந்த உலகத்திலே
    

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

காரும் சில அனுபவங்களும்


கார் இரவல் கொடுத்த  அனுபவங்கள்
 ---------------------------------------------------------
ஒரு மொக்கைபதிவு
------------------------------

மொக்கையை  மெருகேற்ற


ஒரு அனிமேஷன் 

மேலே அனிமேஷனைச் சொடுக்கினால்நீங்கள் ரசிக்கும்  ஒரு அனிமேஷன் திறக்கும்

இன்று வரமஹாலக்ஷ்மி  விரதம்   அதையொட்டி



என்பேரனை இங்கு ஒரு காலேஜில் சேர்த்திருந்தனர் கல்லூரி ஹாஸ்டலில்தான்  தங்க வேண்டி இருந்தது கல்லூரி வீட்டில் இருந்து சுமார்  நாற்பது கிமீ தூரம்  வாரமொரு முறை அவனை அங்கு சென்று பார்ப்போம் என்மருமகளின்   காரை என் வீட்டில் விட்டிருந்தனர்  நாங்கள் அவனைப்பார்ப்பதற்கு பொகும்போது அதை உபயோகிப்போம் என்னிடமொரு காரிருந்து நான் ட்ரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தாலும் கார் ஓட்டுவதை நிறுத்திஆண்டுகள் பல ஆகி விட்டன காரை ஓட்டுவகுற்கு ஒரு ட்ரைவரை நியமித்திருந்தோம் ஒருமுறை காரில் பேரனின்ஹாஸ்டல் போய்வர  ரூ 300 / - கொடுக்க வேண்டும் என ஏற்பாடு  எங்களுக்கு காரை உபயோகிக்கும்  சந்தர்ப்பங்கள் குறைவு  வாரமொரு நாள் பேரனைப் பார்க்க போக கார் எடுப்போம்  
ஆனால் சொல்ல வந்தது அதுபற்றி அல்ல நான் என் வீட்டு முதல் தளத்தை வாடகைக்கு விட்டிருந்தேன் தெலுங்கு மொழி பேசுபவர்கள் அவர்களுக்கு ஒரு மகன் அவன் திருமணம் விமரிசையாகக் கொண்டாட விரும்பினர் பையன் ஏர் ஃபோர்சில் இருந்தான் திருமணத்தில் அங்குமிங்கும் போக எங்கள் காரைக்கேட்டனர்  நானும்சரியென்றேன்  ட்ரைவரின் வாடகையை அவர்கள் தரவேண்டுமென்றும்   வேலை முடிந்ததும் காரை என்வீட்டு போர்டிகோவில் விட வேண்டுமென்றும் கண்டிஷன் போட்டேன் சரி என்றுஒப்புக் கொண்டு காரை எடுத்துச்சென்றனர்  இரவு பத்து மணியாகியும் கார்வரவில்லை எந்தசெய்தியும் இருக்கவில்லை நாங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம் 
ட்ரைவர் நன்கு குடித்திருந்ததால்  அவனிடம் காரை ஒப்படைத்து அனுப்ப முடியவில்லைஎன்று கூறினர்  எங்களுக்குக் கவலையாகப்போய் விட்டது வேறு யாரிடமாவது காரை அனுப்ப முடியுமா என்று கேட்டோம்  மாப்பிள்ளைப் பையன் தான் கார் ஓட்டத்தெரிந்தவன் ஆனால்  அவனிடம் கார் சாவியைத் தர ட்ரைவர் மறுக்கிறான்  என்றும் பதில் வந்தது கார் ட்ரைவருடன்னேயே எப்படியாவதுய்காரை கொண்டு வரச்சொன்னோம் ட்ரைவர் நன்கு குடித்திருந்ததால் அவனிடம் தனியாக காரை அனுப்ப வில்லை என்றும் கூறினார்கள்
காலையில் முகூர்த்தம் முந்தைய நாள் இரவில் இந்த களேபரம் எங்களுக்கும் கல்யாண கூடத்துக்குப்போக முடியாத நேரம் எப்படியாவது சமாளித்து கார் ட்ரைவருடன் காரை அனுப்பக் கேட்டோம் ஒரு வழியாக மணப்பையன் அவன்நண்பர்கள் சிலரோடு ட்ரைவருக்கு அதிகப்பணம் கொடுப்பதாகக் கூறி அவனுடன்வந்தனர்  அதிகம் பேசிய பணத்தை உடனே தரவேண்டுமென்ற ட்ரைவர்  வீட்டு வாசல்முன் வந்ததும் கார்  சாவியை எடுத்துக் கொண்டுநடக்க ஆரம்பித்தான் குடித்தவனுடன் பேசுவதில் பலனிருக்க வில்லை நாங்களே அந்த அதிகப்பணத்தை உடனே கொடுத்தோம் ட்ரைவரே காரை போர்டிகோவில் நிறுத்துவேன் என்று அடம் பிடித்தான்   அவனிருந்தநிலையில் அவன் காரைச்சுவற்றில்  மோதிவிடுவானோ என்ற பயம் இருந்தது  வேறு வழி இல்லாமல் அவனையே காரை நிறுத்தச் சொன்னோம் கெட்ட வார்த்தைகளில் அவர்களை வைது கொண்டே ஒரு வழியாகக் காரை போர்டிகோவில் நிறுத்தினான்  அவன் கேட்ட அதிகப்ணத்தை கொடுத்து கார் சாவியை நாங்க பெற்றுக்கொண்ட பின் தான்  நிம்மதி ஆயிற்று காரை நிறுத்தும்போது சுவற்றில் படுமாறு நிறுத்தினான்  காரின் முன் பாகம்சற்று சொட்டை விழுந்தது  உஷ் அப்பாடா என்று நினைத்து சிறிது நேரம்கழித்து மாப்பிள்ளை பையனுடன் அதிகாலையில் சத்திரத்துக்குச் சென்றோம்      


செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

சிந்தனை செய் மனமே



                                                    சிந்தனைசெய் மனமே
       
      ஜானியின் தாயாருக்கு மூன்று குழந்தைகள்.மூத்தவன் பெயர் ஏப்ரல், இரண்டாமவன் பெயர் மே. மூன்றாவது குழந்தையின் பெயர் என்ன.?

2) எவரெஸ்ட் சிகரம் கண்டுபிடிப்பதற்கு முன் உலகின் உயர்ந்த சிகரம் எது.?

3) இரண்டடிக்கு மூன்றடிக்கு நான்கடிக் குழியில் எவ்வளவு மண் இருக்கும்.

4) 1975-ல் ஜனாதிபதியின் பெயர் என்ன. ?

5) ஒரு ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவதாக வருபவனை நீ முந்தினால் நீ எந்த இடத்தில் இருப்பாய்?

6) ஒரு குடியானவனுக்கு ஒரு தளத்தில் மூன்று வைக்கோல் போற்களும் இன்னொரு தளத்தில் ஐந்து வைக்கோல் போற்களும் இருக்கின்றன. அவன் அவற்றை இன்னொரு தளத்தில் சேர்த்துவைத்தால் எத்தனை வைக்கோல் போற்கள் இருக்கும்

7) ஒரு லாரி நிறைய பொருட்களுடன் ஒரு அண்டர்பிரிட்ஜ் அடியே செல்லவேண்டும். லாரியின் பொருட்களுடனான உயரம் பிரிட்ஜின் அடிபாகத்தை உரசும். அதே வழியில்தான் செல்ல வேண்டும். அன்லோட் செய்து போகக் கூடாது. என்ன செய்வீர்கள்.?


தமிழா தமிழா..
--------------
தடுக்கி வீழ்ந்தால்மட்டும் அ.........ஆ 
சிரிக்கும்போது மட்டும் இ...........ஈ
சூடுபட்டால்மட்டும் உ........ஊ
அதட்டும்போது மட்டும் எ........ஏ
ஐயத்தின் போதுமட்டும் 
ஆச்சரியப்படும்போது மட்டும் ஒ......ஓ
வக்கணையின் போதுமட்டும் 
விக்கலின் போது மட்டும்   
என்று தமிழ் பேசி
மற்ற நேரம் வேற்றுமொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்

உன் மொழி. 

அடுத்து ஒருசிறுகதை

ஒருவன் ஒரு பெரிய கடைக்குச் சென்றான். அங்கே பல விதமான பொருள்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. அதில் ஒரு வெண்கலத்தினால் ஆன ஒரு எலியின் சிலை இவன் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒரு சீட்டு தொங்கியது. அதில் சிலையின் விலை ரூபாய்100-/ என்றும் அது பற்றிய கதையின் விலை ரூபாய் 200-/ என்றும் எழுதி இருந்தது. நம் ஆள் சிலை போதும் கதை வேண்டாம் என்று கூறி ரூபாய் 100-/ கொடுத்து சிலையைவாங்கிக் கொண்டு  போனார்

சிறிது நேரத்தில் அவர் எதிர்பாராதவிதமாக, அவரைப் பின் தொடர்ந்து  சில எலிகள் வரத் துவங்கின. அவற்றின் எண்ணிக்கை கூடிக் கொண்டேபோய் ஆயிரங்களைத் தொட்டு அவரை மிகவும் பயமுறுத்தியது. என்னசெய்வதென்று தெரியாமல் நம்மவர் அருகிலிருந்த கடற்கரைக்குச் சென்று அந்த வெண்கலச் சிலையை கடலில் வீசி விட்டார். பின் தொடர்ந்து வந்த எலிகளும்கடலில் குதித்து மூழ்கின

நிம்மதியடைந்து திரும்பியவர் மறுபடியும் அந்தக் கடைக்குச் சென்றார். கடைக்காரர் அந்த சிலை பற்றியகதைக்காகத்தான் வந்திருக்கிறார் என்று எண்ணி கதைப் புத்தகத்தைப் பாக் செய்யலாமா என்று கேட்டார். அதற்கு நம் நண்பர்வேண்டாம். அந்த எலியின் சிலை போல ஒரு அரசியல் வாதியின் சிலை கிடைக்குமா.?” என்று கேட்டார் !.

  வாய்க் கொழுப்பு

நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றேன் என் மனைவி மகனுடன் தின்பண்டங்கள் கொடுத்து உபசரித்தபின்  நண்பரின்மனவி காஃபியா டீயா  என்று கேட்டார்  என்மனைவியும் மகனும்  எதுவானாலும்தேவலை என்றனர் ஆனால் நான் மட்டும் உங்களுகு எது  நன்றாகச் செய்ய முடியுமோ அதைச் செய்து தாருங்கள் என்றேன்  என்மனையும்  மகனுமென்னை எரித்து விடுவதுபோல் பார்த்தார்கள் எனக்கு விளங்கவில்லை  வெளியெ வரும்போது நான் அப்படிச் சொல்லி இருக்கக் கூடாது என்றனர் எனமனைவி மட்டும்  வெளிய்ல் வந்தும்  வாய்க் கொழுப்பு மட்டும்பொகவில்லைஎன்று கூறினாள் எனக்கு ஏதோ விளங்கினாற்போல் இருந்தது  
















 






                                              -------------------------------------