Friday, November 30, 2018

பட்டமும் பதவியும்



                               பட்டமும் பதவியும்
                              -----------------------------------
   எனக்கு பட்டப்படிப்புஇல்லாததால்  அடைந்த நஷ்டங்கள் ஏராளம்  என் மக்கள்
பட்டமில்லாததால்  அவதிப்பட கூடாதுஎன்று எண்ணினேன் பட்டப்படிப்பு இல்லாமலேயே எஞ்ஜிநீயர்பதவி வகித்தவன்  நான்.  என் மூத்தமகனுக்கு மருத்துவராகவேண்டும்என்று விருப்பம் அவனது ஆசையை எப்படியாவது  நிறை வேற்ற விரும்பினேன் பலகல்லூரிகளுக்கு  மனு இட்டுக்காத்திருந்தோம் அது போதாது தீவிர முயற்சியும்தேவை என்றுபலரும்கூறினர் மருத்துவபடிப்பே செய்யும்  தொழிலுக்கு உதவுமென்று எண்ணினேன் படிப்புக்கும்செய்யும்தொழிலுக்கும் எந்த  சம்பந்தமும் இல்லாதிருப்பதைக் காண்கிறேன் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஒரு செனேட் உறுப்பினர் தெரிந்திருந்தது ஆனால் என்னை அவருக்குத் தெரியாது பி எச் ஈ எல் பொது மேலாளருக்கு என்மேல் ஒரு கனிவு இருந்ததுதெரியும் அவரிடம் வேண்டிக்கேட்டுக் கொண்டு  ஒரு சிபாரிசு கடிதத்துடன்   செனட் மெம்பரை அணுகினேன்   அவருக்கு பொதுமேலாளர்மீதுஎன்னகோபமோ அவரிடம்சிபாரிசு பெற்றுக் கொண்டுவந்தால் சீட் கிடைக்குமா  அதெல்லாம் முடியாது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லி விட்டார்  நமக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்று நினைத்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வைஸ் சான்சலரை நேரில் காண்பது என்றுமுடிவெடுத்தேன்
 சென்னையில்  அண்ணாமலை புரத்திலிருக்கும் அவரது  இல்லத்துக்குச் சென்றேன்என்போதாத வேளை அவர் வீட்டில் இருக்கவில்லை ஜனாதிபதி கிரியை வரவேற்கச் சென்று இருப்பதாக அவர் செயலாளர் கூறினார்நான் தயங்கி நிற்பதை கண்டு என்ன விஷயமாக வந்தேன் என்று கேட்டார் அண்ணாமலைப்பல்கலை கழகத்தில்  ஒருமருத்துவசீட் அல்லது அக்ரீ சீட்  என் மகனுக்கு வேண்டி வந்ததாகக் கூறினேன் என் மகனின் மதிப்பெண்கள்பற்றிகேட்டார்  காட்டினோம்  அந்த மதிப்பெண்களுக்கு இடம் கிடைப்பது உறுதி என்று கூறினார் பல்கலைக் கழக நோட்டீஸ் போர்டில் அவன் பெயர் இருக்கும் என்றுகூறினார்  மகிழ்ச்சியுடன்  திரும்பினோம்  என் மனைவியும் மகனும்  பல்கலைக்கழக நோட்டீஸ் போர்டில் அவன்பெயரைத் தேடினர்  முதலில்  என்மகனின்  ஆர்வத்தில்பெயர் இருந்ததாகக் கூறினான் மறு முறை பார்த்தபோது இருக்கவில்லை என்றுதெரிந்ததுமனமொடிந்து வந்தனர் நானும் என் மகனும் மீண்டும் சேனை சென்றோம் அந்தசெயலாளரைச்  சந்தித்து விவவரம்சொன்னோம்  எங்கோ தவறு நேர்ந்திருக்கிறது இம்முறை தவறுஇல்லாமல் இருக்கும் என்று கூறினார் நான் அவர் கைகளைப் பற்றிக் கொண்டு  கால்களாக  பாவிப்பதாக  வேண்டி வணங்கினேன்     இதைக் கண்ட என்மகன் நெகிழ்ந்துவிட்டான் அவனுக்காக யாரிடமும்  கெஞ்ச வேண்டாம்   என்று கூறினான் அப்படி இருக்க முடியவில்லை மறுமுறையும்  பல்கலைக் கழகத்துக்கு படை எடுத்து தோல்விகரமாக வந்தோம்

 இதனிடையே எனக்கு மிகவும்வேண்டிய நண்பர்  அவருக்கு எம் ஜீ ஆரைதெரியுமென்றார்  ஆனல் காரியம்சாதிக்க கொஞ்சம் பணம் செலவாகும்  என்றார் ரூ10000/ முன்பணமாகவாங்கினார் நாட்கள்கடந்தன எதிர்பார்த்த பதில் வரவில்லைஇதோ இன்று நாளை என்று நாட்கள் ஓடியதுநாங்களும் நம்பிக்கை இழந்துவிட்டோம்மகன் கெமிஸ்ட்ரி இளங்கலைக்கு செல்ல ஆரம்பித்தான் நண்பரிடம் கொடுத்திருந்த ரூ 10000/ சிலமாதங்களுக்குப்பின்  திருப்பிக் கொடுத்தார் இளங்கலைப்பட்டம்பெற்றபின்  அவனே தேர்வு எழுதி பாஸ்செய்து பை மானேஜ்மெண்ட் இன்ஸ்டிட்யூட்டில் எம் பி ஏ வில் சேர்ந்து பட்டம் வாங்கினான் வாழ்க்கையில்முன்னேற்றம் கண்டான் பட்டமில்லாததால் நான்பட்டநஷ்டங்களேராளம் என்றுஎழுதி இருக்கிறேன் அது பற்றி பிறிதொரு பதிவில்   

26 comments:

  1. பட்டம் பெறாவிட்டால் என்ன? டாடா குழுமத்தின் ஜம்ஷெட்ஜி டாடா பள்ளிப் படிப்பை மட்டும் தான் முடித்தார். பல பிரபலங்கள் பட்டம் பெறாதவர்களே!

    ReplyDelete
    Replies
    1. பட்டம் வாங்க வைப்பதில் இருக்கும் சிரமங்களைப் பகிர்ந்து கொண்டேன்

      Delete
  2. ஐயா, பட்டம் பெற்றவர்கள் அனைவருமே உயர்ந்து விட்டார்களா ?

    முயன்றால் முன்னேற்றம் அடையலாம் பலரும் சாதித்து இருக்கின்றனர். நீங்களும்கூட...

    ReplyDelete
    Replies
    1. பட்டத்து உரிய மதிப்பு கொடுக்க வேண்டும் இல்லாததால் நான் பட்ட நஷ்டங்கள் அதிகம் அதுஇன்னொரு பதிவில்

      Delete
  3. Replies
    1. திருப்தி முன்னேற்றத்துக்கு தடை கல்

      Delete
  4. ஐயா உங்களைப் போலத்தான் நானும்.முதுகலையில் ஒரு பேப்பரில் தோல்வி அடைந்து இளங்கலை அடிப்படையில் பணியில் சேர்ந்து பணியாற்றினேன். முதுகலை படிப்பு இல்லாததால் கடைசி பதவி உயர்வு 15 வருடங்களுக்குப் பிறகு பிரயோசனம் ்இன்றி பெற்றேன்.அதுவும் பணி ஓய்வுக்கு மூன்று மாதம் முன்பு.

    எல்லாம் விதி என்று ஆறுதல்.

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிவு என்னைப் பற்றியதல்ல என்று புரிந்திருக்கும் நன்பட்ட நஷ்டங்கள் என்மக்கள் படக் கூடாது என்பதற்காக நான் எடுத்த முயற்சிகள் சில பகிர்ந்திருக்கிறேன்

      Delete
  5. பட்டத்திற்கும் நம் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    கீதா

    ReplyDelete
  6. ஆனால் பணி இடங்களில் அப்படி நினைப்பதில்லை

    ReplyDelete
  7. உண்மைதான். படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் ஒரு பட்டம் கொடுக்கும் தன்னம்பிக்கை அதிகமே!

    ReplyDelete
  8. பட்டம் கொடுக்கும்தன்னம்பிக்கை என்பதை விட பட்டமில்லாததால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையே அதிகமென்று தோன்றுகிறது

    ReplyDelete
  9. பட்டம் கொடுக்கும் தன்னம்பிக்கை தேவை என்பதற்காக பல சூழல்களைச் சமாளிக்க வேண்டியுள்ளது வேதனையே.

    ReplyDelete
    Replies
    1. அவற்றை அனுபவங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்

      Delete
  10. என் கணவரும் டாகடர் படிக்கவேண்டும் என்று நினைத்தார்கள் முடியவில்லை. அவர்களுக்கும் அந்த வருத்தம் உண்டு.

    ஆனால் முனைவர் பட்டம் வாங்கி விட்டார்கள்..

    உங்கள் மகன் மருத்துவபடிப்பு படிக்க முடியவில்லை என்று மனமொடிந்து வந்தது வருத்தமே.

    ReplyDelete
    Replies
    1. முனைவரும் கூட டாக்டர்தானே என் மகன் முதலில் வருந்தினாலும் எம் பி ஏ பட்டம் பெற்று வென்று விட்டான்

      Delete
  11. அனுபவங்களை அறிந்துகொண்டேன்.

    ReplyDelete
  12. பதிவின்முக்கிய நோக்கமே அனுபவங்களைப் பகிரத்தானே

    ReplyDelete
  13. உங்கள் அனுபவங்கள்... படிக்கும் மற்றவர்களுக்கு பாடம்.

    ReplyDelete
  14. தங்களின் அனுபவம் மற்றவர்களுக்குப் பாடம்
    நன்றி ஐயா

    ReplyDelete
  15. // திருப்தி முன்னேற்றத்துக்கு தடை கல் //

    ஐயோ பாவம்...!

    மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன...?

    அறிய இணைப்பு :- http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_09.html

    ReplyDelete
    Replies
    1. அனுபவங்கள் வெவ்வேறு

      Delete
  16. விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுது.....

    ReplyDelete
  17. அதில் எனக்கு நம்பிக்கை0 இல்லை வருகைக்கு நன்றி

    ReplyDelete
  18. அனுபவங்கள் வித்தியாசமானவைதான்.

    ReplyDelete
  19. பல அனுபவப் பகிர்வுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக

    ReplyDelete