சனி, 28 டிசம்பர், 2019

கிரகணமும் சில நம்பிக்கைகளும்



                               கிரகணங்களும்  சில நம்பிக்கைகளும்
                               ------------------------------------------------------------
கிரகணம் 
கிரகணம் பற்றி  பல செய்திகள்  இருக்கின்றன  பூமியின் நிழல் சந்திரனில் படுவதைசந்திர  கிரகணம்  என்றும்   சந்திரனின்  நிழல்சூரியன் மேல் விழுவதை  சூரியக்கிரகணம் என்றும்   கூறப்படுகிறது        

நம்புராணக்கதைகளில்  அசுரர்கள் சந்திரனையோ சூரியனையோ  விழுங்குவதே கிரகணம் என்றும் சொல்லக் கேள்வி  எதையும்  கேள்வி கேட்காத வயதில் புரிந்து கொள்வதே சொற்பம் அதில் தவறுகளும் இருக்கலாம்   கிரகணம் பற்றிய சூப்பர்ஸ்டிஷன்களில் கிரகண  நிகழ்வின் போது கர்ப்பிணிப்பெண்கள்மேல்   கிரகண கிரணங்கள்  அவர்கள்  மேல் படக்கூடாது என்பதும்   அந்நேரத்தில் உணவு உட்கொள்ளக் கூடாதுஎன்பது இன்றும்  சில இடங்களில் பின் பற்றப்படுகிறது
நாங்கள் விஜயவாடாவில் இருந்தபோது  இம்மாதிரியான எண்ணங்கள் சரி அல்ல என்பதை நிரூபிக்கவே அங்கிருந்த ஒரு டாக்டர் (பெயர் சமரம்  என்பது )அன்று எல்லோருக்கும் நல்ல இலவச ஊண் படைப்பார்
அண்மையில் எனக்கு ஒரு வாட்ஸாப்  காணொளி வந்திருந்தது வாசகர்கள் அவரவர் கருத்தை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே  கிரகணம்   என்னும் நிகழ்வின் பொது கோவில்களில்  நடை சாத்தப்படுகிறது  ஏன் என்று தெரிந்தவர்கள் கூறலாமே

  




     

வியாழன், 26 டிசம்பர், 2019

அலை பாயுதே


                                                   அலை பாயுதே                                     --------------------------------
நானொரு மிகச்சாதாரணன்   எல்லாம் தெரிந்தது போல் நினைப்பதில்லை பலராலும் உண்மை என்றே நம்பப்படும் பெர்செப்சன்  எனக்கு இல்லைபெர்செப்ஷன் இல்லை என்றில்லை ஆனல் அதுவே உண்மை என்று நம்புவதில்லை  எனக்குத் தெரியாத விஷயங்களைத் தெரியாது  என்று சொல்வதில்வெட்கம் இல்லை  அது போகட்டும் அண்மைக்காலத்தில் அதிகமாகபேசப்படும் என்ஆர்சி எனப்படும் நேஷனல் சிடிஜன்ஸ் ரெஜிஸ்டர் எனப்படுவது குறித்து அநேக  சந்தேகங்கள் இந்த ரெஜிஸ்டரில் பெயரை யார் பதிவு செய்கிறார்கள் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு குடிமகனும்  பதிவு  செய்ய வேண்டுமா இல்லாவிட்டால் நாம்  இந்தியக் குடிமகனாகக் கருதப்பட மாட்டோமா  ஏதும் செய்யாமல் இருந்தால் ஒருவேளை நாம் இந்தியக் குடிமகந்தான்   என்பது இல்லாமல் போய் விடுமோ சரி இதை நிர்ணயிப்பது யார் கட்சிகளுக்கு அடிவருடும் அதிகாரிகளால் தொந்தரவு ஏற்பட்டு நாமே ப்ரூவ் செய்ய வேண்டுமோஇது எனக்கு மலையைக் கெல்லி  எலி பிடிப்பது போல் தோன்றுகிறது இதற்குஅவசியம்தான் என்ன    
முக்கியமாக வேறு மாநிலங்களில்வேலை நிமித்தம்  வாழ்பவர்கள்பாடு  சிரமமாகுமா
இப்போதுதான் மொழி இனம் போன்றவற்றால் பிரிக்கப்படுவது சாதாரணமாய் இருக் கிறதே
 மொத்தத்தில் இது நல்லதற்கல்ல என்றே தோன்றுகிறது  பிடிக்காதவரை துன்புருத்தல் சாத்தியமாகும்
 இது தவிர இதில் சட்ட திருத்தம் வேறு ஒன்னுமே புரியலை

சரி அரசியலை விடுவோம்  என் விட்டு மாமரத்தில் அநேக அணில்கள்  இருக்கின்றன  அவற்றுக்காக கூடுகள் எங்கும் பார்க்க வில்லை  அவை இரவில் எங்கு செல்கின்றனதெரிய வில்லை சாமி
என்னைப்போல் வயதானவனுக்குபொழுது போக்கே   சின்னத்திரையில் சீரியல்கள் பார்ப்பது தான் அதிலும் சந்தேகங்கள் நிறைய உண்டு வாழ்க்கையில் நடப்பது சீரியலில்  காட்டப்படுகிறதா அல்லது சீரியலில் வருவதை வாழ்வில் கடைப்பிடிக்கிறார்களா இதற்கு பதில் தருபவர்களும்  பிரிந்து  இருக்கலாம்   இப்போது சீரியல்களில் பெரும்பாலான வற்றில் ஜோசியம் பார்க்கிறார்கள் அநேகமாக ஜோசியர் சொல்படிதான் நடப்பதாக காட்டப்படுகிறது  கடவுள் சக்தி வாய்ந்தவர் என்றால்   இந்த ஜோசியர்கள் அவரைப் போலவேசக்தி மிகுந்தவர்களாகவே  காட்டப்படுகிறார்கள்    எந்தக் குறையையும்   பரிகாரம் மூலம் சரி செய்து விடுகிறார்கள் நம்மில் நமக்கே நம்பிக்கை  இல்லாமல் போய் விடுகிறது மூட நம்பிக்கை என்றால்  வாசகர்கள்  பொங்குவார்கள்

.நம் வலைத்தளத்துக்கு  வருகைபுரிபவர்  எண்ணிக்கை  தெரிகிறது  அதேபோல் நாம்வெளியிட்டுள்ள  மின்புத்தகங்களை எத்தனை பேர்வாசித்தார்களென்று தெரிவது எப்படி நம்பதிவுகள் அதுவும் பழைய பதிவுகள்   அதிகம்  வாசிக்கப்படுகின்றன வெறும் மூன்றே பேர் கருத்திட்ட ஒரு பதிவு ஏறத்தாழ ஒன்பதாயிரம் பேர்ல்களால்  வாசிக்கபட்டு இருப்பது ஆச்சரியம் தருகிறது  
ஒன்று மட்டும் புரிகிறது 
நம்மைத்தெரிந்தவர்களை  விடதெரியாதவரே அதிகம்பேர் வாசிக்கிறார்கள்  இத்தனைக்கும்  தமிழ்மணம் வேறுமுடங்கி உள்ளது









திங்கள், 23 டிசம்பர், 2019

கதம்பம்


                                                 கதம்பம்
                                                 ----------- --





படித்ததில் ரசித்தது
Can you answer all seven of the following questions
With the same word?

1. The word has seven letters....
2. Preceded God...
3. Greater than God...
4. More Evil than the devil...
5. All poor people have it...
6. Wealthy people need it....
7. If you eat it, you will eventually
 die
0
இரண்டு சுட்டிப் பையன்கள்.குறும்பும் துடுக்கும் நிறைந்தவர்கள். அவர்கள்மேல் வரும் புகார்கள் அவர்களது தாயைக் கவலைப்பட வைத்தது. ஊரிலொரு பெரிய மனிதர்.கம்பீரமான உருவம் கணீர்க் குரல். அவரிடம் தாய் சென்று முறையிட்டாள். அவரும் குழந்தைகளைத் திருத்த ஒப்புக்கொண்டார். ஒருவருக்குப் பின் ஒருவரை அனுப்பச் சொன்னார். முதலில் இளையவனை அனுப்பினாள். பெரிய மனிதர் அந்தச் சிறுவனை நல் வழிப்படுத்த வேண்டி அவனிடம் “கடவுள் எங்கே இருக்கிறார் தெரியுமா.?என்று கேட்டார். சிறுவன் மிரள மிரள விழித்தான். . அவர் சற்றே குரலை உயர்த்தி “ கடவுள் எங்கே.?” என்று கேட்டார். சிறுவன் முகம் வெளிறி பதில் ஏதும் கூறாமல் விழித்தான்.ஊர்ப் பெரிய மனிதருக்குக் கோபம் வந்தது. பதில் ஏதும் தராத சிறுவனை நோக்கி “கடவுள் எங்கே சொல்.? ” என்று சத்தம் போட்டார். சிறுவன் பயந்து போய் ஓடி தன் வீட்டுக்குள் நுழைந்தான். அவனது அண்ணன் அவனிடம் வந்து நடந்தது என்ன என்று கேட்டான் அதற்கு அவன் “கடவுளைக் காணோமாம். நாம்தான் அவரை எடுத்து மறைத்து வைத்து விளையாடுகிறோம் என்று சந்தேகப் படுகிறார்கள் என்றான்....
!

புது மண ஜோடி ஒன்று குடி இருப்பு ஒன்றுக்கு குடி பெயர்கிறார்கள். ஒரு நாள் அந்த வீட்டு மனையாள் அடுத்து இருக்கும் வீடு ஒன்றில் அந்த வீட்டுப் பெண்மணி துணி துவைத்துக் காயப் போடுவதைப் பார்க்கிறாள். இந்த இளம் மனைவி “ என்னதான் துணி துவைத்திருக்கிறாளோ, ச்சே அழுக்கே போகாமல்..... அவளுக்கு ஒரு நல்ல சோப் அறிமுகம் செய்ய வேண்டும் “ என்று கூறிக் கொண்டே தன் கணவனின் முகத்தைப் பார்த்தாள். கணவன் ஏதும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். ஒவ்வொரு முறையும் அடுத்த வீட்டுப் பெண் துணி துவைத்துக் காயப் போடும்போதும் , இவள் ஏதாவது கமெண்ட் சொல்வதும், கணவன் ஏதும் பேசாமல் தலை திருப்பிக் கொள்வதும் தொடர்ந்தது. ஒரு மாதம் கழிந்தது. ஒரு நாள் அந்தப்பெண் துவைத்துப்போட்டிருந்த துணிகளைப் பார்த்ததும் இவள் “ அதோ பாருங்கள். இந்தமுறை துணிகள் எல்லாம் பளீரென்று இருக்கிறது. அவளுக்கு துணி துவைக்க யாரோ சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும் “ என்று சொல்லி வழக்கம் போல் தன் கணவனைப் பார்த்தாள்,இந்த முறை கணவன் வாய் திறந்தான்.
” இன்று காலையில் சீக்கிரமாகவே எழுந்து நம் வீட்டுச் சன்னல் கண்ணாடியை நன்றாகத் துடைத்தேன்” என்றான்.
வாழ்க்கையும் இதுபோல்தான். பிறரை நாம் நோக்கும்போது எந்தப் பலகணி ஊடே பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது



ஒவ்வொரு முறையும் ஹெலிகாப்டரைப் பார்க்கும் போதும் கணவன் “எனக்கு அதில் பயணம் செய்ய ஆசையாய் இருக்கிறது “ என்பான் .மனைவி “ எனக்குப் புரியுதுங்க. இருந்தாலும் அதில் ஏறிச் சுற்றிப் பார்க்க ரூபாய் ஐநூறு கேட்கிறார்கள். ஐநூறு ரூபாய் என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா “ என்று கூறி அவன் வாயை அடைப்பாள். ஒருமுறை ஒரு திருவிழாத்திடலில் ஹெலிகாப்டர் பயணத்துக்கு ஏற்றிக் கொண்டு போவதும் மீண்டும் வந்து வேறு சிலரை ஏற்றிக் கொண்டு போவதுமாய் இருந்தது. கணவன் மனைவியிடம் “ எனக்கு எண்பது வயதாகிறது. இப்போது என்னால் பயணம் செய்ய முடியாமல் போனால் ஒருவேளை எப்போதும் முடியாமல் போகலாம்
” என்று குறைபட்டுக்கொண்டான். அப்போதும் மனைவி “ஹெலிகாப்டரில் ஏறிச் சுற்றிப்பார்க்க ரூபாய் ஐநூறு கேட்கிறார்கள். ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா.?என்றாள். இவர்களுடைய சம்பாஷணையை ஹெலிகாப்டர் பைலட் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் இவர்களிடம் “ நான் உங்கள் இருவரையும் ஹெலிகாப்டரில் ஏற்றி சுற்றிக் காட்டுகிறேன்.ஒரு பைசா தரவேண்டாம்.  ஆனால் ஒரு கண்டிஷன். பறக்கும்போது இருவரும் ஏதும் பேசக் கூடாது. மீறி ஏதாவது பேசினால் ஆளுக்கு  ஐநூறு ரூபாய். ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா.” என்றார். கணவனும் மனைவியும் ஒப்புக்கொண்டு ஹெலிகாப்டரில் ஏறினார்கள். பைலட் ஹெலிகாப்டரை செலுத்தும்போது மிக வேகமாகவும்
திடீரென்று மேலே ஏறியும் அதேபோல் திடீரென்று கீழே இறக்கியும் பல சாகசங்களை நிகழ்த்தினார். கணவன் மனைவி இருவரும் ” மூச் “ ஒரு வார்த்தை பேசவில்லை. பைலட் கீழே ஹெலிகாப்டரை இறக்கியதும் கணவனிடம் நான் என்னென்னவோ சாகசங்கள் செய்தும் நீங்கள் அலறி சப்தம் செய்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்களோ.... I AM IMPRESSED ஒரு சப்தமும் எழுப்பவில்லை” என்றார். கணவன் “ உண்மையைச் சொல்வதென்றால் என் மனைவி கீழே விழுந்ததும் நான் உரக்கக் கூச்சல் போட நினைத்தேன்.ஆனால்.... ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா.என்றார்

புதிருக்கு  விடை 

 NOTHING has 7 letters.
NOTHING preceded God.
NOTHING is greater than God.
NOTHING is more Evil than the devil.
All poor people have NOTHING.
Wealthy people need NOTHING.
If you eat NOTHING, you will die.




திருப்பாவை  திருவெம்பாவை  பாடல்கள் காணொளி மார்கழி ஒன்றாம் நாள் எழுதியது  பதிவிடுவதில்  தாமத மானதால் தொடரவில்லை





வெள்ளி, 20 டிசம்பர், 2019

சில நினைவுகள்


                                      சில நினைவுகள்
                                      ---------------------------

 விஜயவாடாவில் இருக்கும் போது  என்மனைவியின் கைகளில் சில மருக்கள் (பாலுண்ணி என்றும் சொல்வார்கள்) தோன்றின  அங்கே இருந்த மருத்துவர் ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை மூலம்நீக்கிவிடலாம் என்றும்  அப்படியே விட்டாலும்பாதகமேதும் இல்லை என்றும் கூறினார்  நாங்களும் அப்படியே விடமுடிவெடுத்தோம்விஜயவாடாவிலிருந்து மீண்டும்  திருச்சி  வந்தபோது பி எச் இ எல் மருத்துவ மனை தோல் நிபுணரை அணுகிக் கேட்டொம் அவர் இதற்கு மருத்துவம் எதுவும் தேவைஇல்லை  வைத்தீஸ்வரன்  கோவிலுக்கு சென்று  வேண்டி உப்பும் மிளகும்  குளத்தில் கரைத்தால் போதும்  போய்விடுமென்றார்  அதற்கு முன் அக்கோவில் பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை  பிறகென்னகொவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தோம் பின் அதைப் பற்றி மறந்தும்  விட்டோம்   ஆனால் ஓரிரு வாரங்களில்அந்த மருஇருந்த இடம் தெரியாமல் போயிருந்தது அப்படிதுவங்கியஅந்தக் கோவிலுக்கு போகும் வழக்கம்2014 வரை தொடர்ந்தது  கூடவே  சிதம்பரம் திருவரங்கம் திருவானைக்கா  சமயபுரம் போன்ற இடங்களுக்கும் ஆண்டுக்கொருமுறை போய் வருவதைவழக்கப்படுத்திக்கொண்டோம்   பெரும்பாலும் என் மனைவியின்  பிறந்த நாள் சமயம்  ஏதாவது கொவிலில் இருப்போம் 2014 ம் ஆண்டு வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து வெள்யே வரும்போது நான்  விழுந்து விட அந்தமாத பயணம் அரை குறையாகப் போயிற்று பிறகு வருடம் தோறும் இருந்தபயண்ம்   தடைபட்டது முதன் முதல் வைத்தீஸ்வரன்    கோவில் போனபோது  வைத்தியநாத அஷ்டகம் பற்றித் தெரிய அதை நான் கூற வேண்டுமென மனைவியின்  கட்டாயத்தின்பேரில் படித்ததுஇப்போது நினைவுக்கு வர  பொருள் தெரியாமல் சம்ஸ்கிருதத்தில் இருந்ததை பொருளோடு எழுத முயன்றதின் விளைவே இப்பதிவு            

Sree rama soumithri jatayu veda,
Shadanadithya kujarchithya,
Sree neelakandaya daya mayaya,
Sree vaidyanathaya namasivaya.
ஸ்ரீராம சௌமித்ரி ஜடாயுவேத
ஷடாநாதித்ய  குஜார்சித்ய
ஸ்ரீ நீலகண்டாய  தயா மயாய
ஸ்ரீ வைத்யநாதாய  நமசிவாய  
மருத்துவர்களின் அரசனாகியவனை  தயையின் மாற்று உருவமானவனை நிலநிறக்கழுத்துடையவனை  ராமலக்ஷ்மணர்களாலும் ஜடாயு சுப்பிரமணியன்  வேதங்கள்சூரியன் அங்காரகன்பொன்றோரால் பூஜிக்கப்பட்டோனும்  ஆன சிவனை வணங்குகிறேன்       
I salute that God Shiva, Who is the king among physicians,Who is worshipped by Rama and Lakshmana,Who is woshipped by Jatayu, Who is worshipped by the Vedas, Who is worshipped by Lord Subrahmanya, Who is worshipped by the Sun God, Who is worshipped by the Mars God, Who is having a blue neck, and who is the personification of mercy.



Ganga pravahendu jada dharaya,

Trilochanaya smara kala hanthre,
Samstha devairapi poojithaya,
Sree vaidyanathata namasivaya.
கங்கா ப்ரவாஹேந்து ஜடா தராய
த்ரிலோசனாய ஸ்மர கால ஹந்த்ரே
ஸ்மஸ்த தேவைரபி  பூஜிதாய
ஸ்ரீ நீலகண்டாய  நமசிவாய

கங்கையையும் சந்திரனையும்  சிரசில் தரித்திருப்பவனும் முக்கண் உடையவனும் சாவையும்காமனையும்   அழித்தவனும்  தேவர்களால் பூஜிக்கப்படுபவனும் ஆகிய மருத்துவ அரசன்  சிவனை வணங்குகிறேன் 
 ,Bhaktha priyaya, tripuranthakaya ,
Pinakine dushta haraya nithyam,
Prathyaksha leelaya manushya loke,
Sree vaidyanathaya namasivaya.
பக்தப்ப்ரியாய  த்ரிபுராந்தகாய
பினாகினே துஷ்ட ஹராய நித்யம்
பிரத்தியக்‌ஷ லீலாய  மனுஷ்ய லோகே
ஸ்ரீ வைத்திய நாதாய நமசிவாய 
மருத்துவர்களில் அரசன்  பக்தர்களை  நேசிப்பவன் திரிபுரம் எரித்தவன் பினாகம் என்னும் வில்லை உடையவன்  துஷ்ட நிக்கிரகன் மாந்தரொடு நிதமும் லீலை புரிபவன் அவன்  நாமத்டை வணங்குகிறேன்   
I salute that God Shiva, Who is the king among physicians, Who is the lover of his devotees, Who has destroyed the three cities, Who holds the bow called Pinaka, Who destroys bad people daily, and who plays in the world of humans

Prabhootha vadadhi samastha roga,
Pranasa karthre muni vandhthithaya,
Prabhakarennd wagni vilochanaya,
Sri vaidyanathaya nama sivaya.
ப்ரபூத வாதாதி சமஸ்தரோக
ப்ரனாசகர்த்ரே  முனி வந்தித்தாய
ப்ரபாகரேந்த  வக்னி  விலோசனாய
ஸ்ரீ வைத்யநாதாய நமசிவாய
மருத்துவரில் முதன்மையானசிவனை வணங்குகிறேன் வாதம் முதலான அனைத்து நோய்களையும்  குணப்படுத்துபவன்  முனிவர்களால்  துதிக்கப்படுபவன் சூரிய சந்திர அக்னி முதலானியவரை  கண்களாகக் கொண்ட  சிவனை வணங்குகிறேன்
 I salute that God Shiva, Who is the king among physicians, Who cures all great diseases like rheumatism and arthritis, Who is saluted by great sages,and to whom, the Sun god, Moon and God of fire are eyes
.
Vakchrothra nethrangiri viheena jantho,
Vakchrothra nethrangiri sukha pradaya,
Kushtadhi sarvonnatha roga hanthre,
Sri Vaidyanathaya nama sivaya.
வாக்ரோத்ர  நேத்ராங்கிரி  விஹீன ஜந்தோ
வாக்ரோத்ர நேத்ராங்கிரி  சுகப்ப்ரதாய
குஷ்டாதி சர்வோன்னத ரோக ஹந்த்ரே
ஸ்ரீ வைத்யநாதாய நம சிவாய
மருத்துவரில் வேந்தன் கண்கேளாதோர்  செவி கேட்காதோர் நடை தளர்ந்தோர் குறை தீர்ப்பவன் குஷ்டம்முடலான ரோகங்களுக்குநிவாரணம் தருபவனான  சிவனை வணங்குகிறேன்  
I salute that God Shiva, Who is the king among physicians, Who blesses those beings who have lost their speech, hearing, sight and ability to walk, With these abilities and who provides cure for devastating diseases like leprosy

Vedantha vedhyaya jagan mayaya,
Yogiswara dhyeya Padambujaya,
Trimurthy roopaya sahasra namne,
Sri vaidyanathaya nama sivaya.
 வேதாந்த வேத்யாய  ஜகன் மயாய
 யோகீஸ்வர த்ரேய  பதாம்புஜாய
த்ரிமூர்த்தி ரூபாய  ஸஹஸ்ர நாம்னே
ஸ்ரீ வைத்யநாதாய நமசிவாய
நோய்தீர்க்கும்அரசன்  எங்கும்நிறைந்தவன் ரிஷிகளால் தாமரைப் பாதங்களை பூஜிக்கபடுபவன்  ஆயிரம் நாமங்களுடையவன் அந்த சிவனை வணங்குகிறேன்     
I salute that God Shiva, Who is the king among physicians, Who can be known through vedantha, Who is spread throughout the universe, Who has a lotus feet that is meditated upon by great sages, Who is of the form of the holy trinity and who has thousand names.

Swatheertha mrudbasma brudanga bajam,
Pisacha dukha arthi bhayapahaya,
Athma swaroopaya sareera bajaam,
Sri Vaidyanaathaya namasivaya
ஸ்வதீர்த்த  ம்ருதுபஸ்ம ப்ருதுங்க பஜாம்
பிசாச துக்க அர்தி பயப்பஹாய
ஆத்மஸ்வரூபாய  சரீரபஜாம்
ஸ்ரீ வைத்யநாத நமசிவாய
துஷ்ட  ஆவிகளால் விளையும்  சங்கடங்களையும் பயத்தையும் கோவில் குளத்தில் குளித்து கோவில் விபூதி தரித்து வேப்பமரத்தடியில் இருக்கும்  மண் உருண்டைகளை உண்டு ஆத்மசொரூபியான சிவனை  வணங்குகிறேன்  
I salute that God Shiva, Who is the king among physicians , Who removes all sufferings Caused by bad spirits, sorrows and fears by dip in his holy tank, by the holy ash in the temple, and by the mud below the Neem tree of the temple, and who is the personification of soul,Occupying human body.

Sree neelakandaya vrushaba dwajaya,
Sarakkanda basmadhya abhi shobithaya,
Suputhradarathi subagyathaya,
Sri vaidyanathaya nama sivaya.
ஸ்ரீ நீலகண்டாய விருஷப த்வஜாய
சரகண்ட பஸ்மாத்ய  அபி  ஷோபிதாய
சுபுத்ரத்ர்த்தி சுபாக்யதா
ஸ்ரீவைத்யநாதாய  நமசிவாய
நீலகண்டனும்காளையைக் கொடியில் கொண்டவனும்விபூதி சந்தணமும் 
மலர்களாலும் அர்ச்சிகப்படுபவனும் நல்ல மனைவி மக்களைத்தருபவனும்மருத்துவரில் முதன்மையானவனும் ஆன சிவனை  வணங்குகிறேன்
I salute that God Shiva,Who is the king among physicians,Who has a blue neck,Who has the the bull on his flag,Who shines by flowers, sacred ash and sandal, Who grants good children and good wife and who blesses us with all good luck

. Balambikesa vaidyesa bava roga haredisa,
Japen nama thrayam nithyam maha roga nivaranam.
பலாம்பிகேச வைத்யேச பவ ரோக  ஹரெதிச
ஜபேன் நாம த்ரயம் நித்யம்  மஹரோக  நிவாரணம்
பாலாம்பிகை சமேத  வைத்யநாதரை  பக்தியுடன் தினம் மும்முறை  இதைக் கூறி வணங்குபவருக்கு மரணபயம்நீக்கி அனைத்து உடல் உபாதைகளில் ருந்து குணம் தந்துஅருள்  கிடைக்கும்
Those who recite this prayer thrice a day with devotion and pray the Lord Vaidyanatha, Who is with his consort Balambika, and who removes the fear of birth and death would get cured of all great diseases
.





.

செவ்வாய், 17 டிசம்பர், 2019

ஐயப்பன் திருவிழா


                                              ஐயப்பன்   திருவிழா
                                             ---------------------------------
 இது டிசெம்பர் மாதம் என்று  தெரிய  எனக்குஒரு வழி கிடைத்திருக்கிறது   சாலையில் எல்லாம்  ஐயப்ப பக்தர்க்ள் போய் வந்து கொண்டிருப்பார்கள் கோவிலில்கூட்டம் அதிகமாக இருக்கும் நான்  கோவில்போய் வந்து கிட்டத்தட்ட  இரண்டு ஆண்டுகள் இருக்கும்  அது சரி நான் வெளியெ நடந்துசென்றே  ஆகியிருக்குமே இரண்டு ஆண்டுகள் டிசம்பர் மாதம்  பதினாறாம்நா;ள் கோவிலில் கொடியேற்றுவார்கள் (இந்த ஆண்டு  17ம் தேதி)   அன்று நடக்குமெல்லா வழிபாடுகளுக்கும்  ஏரியா வில் இருப்போர்தான் பொறுப்பு  ஏரியா பூஜை என்பார்கள் ஆக இருக்கும் செலவினங்களை  இங்கு  வசிப்போரே  ஏற்கிறார்கள் இன்ங்லூடிங் நாங்களும் முன்பெல்லாம்  ஊர்வலம்வரும்போது  அக்கரையுடன்  பார்ப்பேன்   இப்போதும்தான்  ஆனால்கலந்து கொள்ள முடியாததால் ஒரு டிடாச்மெண்ட் இருக்கிறது இருந்தாலும்  வீட்டிலிருந்தே பார்க்கலாம்
மலையாளிகள் அதிகம் வசிக்குமிடத்தில் நிச்சயம்  ஒரு ஐயப்பன்  கோவில் இருக்கும் நாங்கள் இருக்குமிடம் ஒரு மினி  கேரளா   கோவில் பாரம்பரிய  பூஜைகள் மற்றும் திருவிழா காலங்களில் இருக்கும் கலாச்சார அம்சங்களும்  இருக்கும் இல்லா விட்டால் இந்த  பாரம்பரிய கலைகள் அயலூர்களில் காணக்கிடைக்காதது
சரி இப்போது நிகழ்ச்சிக்கு வருவோம் சபரிமலை ஐயப்ப்ன் கோவிலில் நடக்கும் அதே விதமான பூஜைகள் இங்கும் விஸ்தாரமாக நடக்கும்      .        
இங்கு கோவிலில் இருந்தபூஜாரி ஒருவர் சபரிமலையில் மேல் சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் டிசம்பர்  16 ம் நாள் கொடியேற்றப்படும்பின் சபரி மலையில் இருக்கும் அதே வழிபாடுகள்  பின் பற்றப்படும் ஆராட்டு மற்றும் அபிஷேக முறைகள் எல்லாம் பின்பற்றப்படும்
கொடியேற்றும் நாளில் ஒருபெரிய ஊர்வலமிருக்கும் கேரளத்தில் எல்லாவிசேஷங்களிலும் தாலப்பொலி என்று கூறப்படும் தட்டில்  பெண் குழந்தைகள்  தீபமேந்தி வரும் காட்சியுமிருக்கும்   முன்பெல்லாம்  கோவில் யானயும் இருக்கும்   இப்போது அவ்வாறு இல்லை யானை ஊர்வலம்தடை செய்யப்பட்டு  இருக்கிறது 
சில முக்கிய விவரங்கள் தினமும்மதியம்  கோவிலில் அன்னதானம் செய்யப்படுகிறது  கோவில் கேஜி ஒன் முதல் ப்ளஸ் டூ வரை பள்ளியை நிர்வகிக்கிறது கோவிலுக்கு என்று ஒரு மருத்துவ மனை உண்டு இங்கு எல்லாவிதபரிசோதனைகளு ம் செய்யப்படுகின்றன  ஒரு திருமண மண்டபமும் உண்டு
 கோவில் துவஜஸ்தம்பம்   பொன்  வேயப்பட்டது  மொத்ததில் பெங்களூரின்   ஒருலாண்ட் மார்க்காக உள்ளது  டிசம்பர்  பதினாறாம்  நாள்  இங்குஎங்கள்  ஏரியா பூஜையாக கொண்டாடப்படும் அதைச்சொல்ல வந்த நான் பாதை விலகி விட்டேன் இந்த  ஆண்டு என்னால் புகைப்படமெடுக்க இயlலாது ஆகவே நினைவுக்காக முன்பு எடுத்த படங்களும் 




சில காணொளிகளும்   பதிவிடுகிறேன்


   





ஊர்வலத்தில் கேரள பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்  பார்க்கலாம் புராண கதைகளின்  சில காட்சிகளை tableau  ஆகக்  காண்பிப்பார்கள்



மேலேகாணும்   சிங்காரி  மேளம் கின்னஸ் சாதனை  படைத்தது  மொத்தம் 2028 பேர்கள்பங்கு கொண்டது எங்கள் வீதியில் வரும்சிங்காரி மேளம் காணொலியும்  காணலாம்   











ஞாயிறு, 15 டிசம்பர், 2019

பிள்ளை வளர்ப்பு




                                 பிள்ளை  வளர்ப்பு
                                 ----------------------------
*திரு. இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி அவர்களின் ஆங்கிலப் பதிவின் தமிழாக்கம் இது.*வாட்ஸாப்பில் வந்தது

அவர் தனது அண்டை வீட்டுக்காரர் தன்னுடன் மன வருத்தத்தோடு பகிர்ந்து கொண்ட விஷயத்தை நமக்குப் பதிவு செய்கிறார்....

*
பணி முடிந்து வெகு தொலைவு பயணம் செய்து களைப்புடன் திரும்பிய நான் என் மனைவியை கடும் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருக்கக் கண்டேன்.*

*
எனக்காக அந்த ஜுரத்திலும் சமையல் செய்து உணவை ட்ரேயில் வைத்து மூடி வைத்திருந்தாள். நான் வழக்கமாக உண்ணும் எல்லாவற்றையும் சமைத்து வைத்திருந்தாள்.*

*
அவளுக்கு தான் என் மேல் எவ்வளவு கரிசனம். உடல் நலம் சரியில்லாத நேரத்தில் கூட எனக்காக சமைத்து வைத்திருக்கிறாளே.*

*
சாப்பிட அமர்ந்த பின் தான் ஏதோ குறைவதை உணர்ந்தேன். டிவி பார்த்துக் கொண்டிருந்த என் வளர்ந்த மகளிடம், "செல்லம்..! என் மாத்திரையையும் தண்ணீரும் எடுத்துக் கொண்டு வா!" என்று கூறினேன்.*

*
அவளை நான் தொந்தரவு செய்ததை விரும்பாமல் கண்ணை உருட்டி அவள் அதிருப்தியைத் தெரிவித்து விட்டு நான் கேட்டதைக் கொண்டு வந்து கொடுத்தாள்.*

*
ஒரு நிமிடம் கழித்து சாம்பாரில் உப்பு குறைவாக இருந்ததால் அவளை எடுத்துக் கொண்டு வரப் பணித்தேன்.*

*
அவள் 'சை...' என்று கூறிக் கொண்டே காலை அழுத்தமாக வைத்து நடந்து போய்க் கொண்டு வந்து கொடுத்தாள்.*

*
அவ்வாறு அவள் செய்தது நிச்சயம் நான் அவளைத் தொந்தரவு செய்ததை அவள் விரும்பவில்லை என்று எனக்குத் தெரிந்தது.*

*
நான் சில நிமிடம் கழித்து மீண்டும் 'செல்லம்...!' என்று அழைத்தபோது அவள் கையில் இருந்த டிவி ரிமோட்டை பட்டென்று மேஜையில் வைத்து விட்டு...*

*"
அப்பா உங்களுக்கு இப்போது என்ன வேண்டும்? எத்தனை முறை தான் என்னை எழுப்புவீர்கள்? நானும் தான் நாள் முழுதும் வேலை பார்த்து விட்டு வந்திருக்கிறேன். எனக்கும் களைப்பாக தான் இருக்கிறது" என்று கூறினாள்.*

*
நான் "ஸாரிமா" என்று சொல்லிவிட்டு சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்து சமையலறை சிங்கில் போட்டுவிட்டு என் கண்களில் இருந்து உருண்டோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.*

*
என் இதயம் அழுதது. நான் அவ்வப்போது எனக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது தான்...*

*
இந்தக் கால இளைய தலைமுறையினர் ஏன் இது போல் நடந்து கொள்கிறார்கள்? நாம் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சுதந்திரம்கொடுத்தது தவறோ?*
*அவர்களுக்கு நல்லொழுக்கத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொடுக்கத் தவறி விட்டோமோ?*

*
நாம் அவர்களை நண்பர்கள் போல் நடத்தியது தவறோ?*

*
அவர்களுக்கு வாழ்க்கையில் ஆயிரம் நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் பெற்றோர்கள் நாம் மட்டும் தானே. பெற்றோருக்கான கடமையை நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்யப் போகிறார்கள்?*

*
இன்று... பிறந்த குழந்தைக்குக் கூட சுயமரியாதை இருப்பது குறித்து கவலைப்படுகிறது இந்த உலகம்.*

*
ஆனால் பெற்றோர்களுக்கு மட்டும் சுயமரியாதை இல்லையா?*

*
அவர்கள் தங்கள் குழந்தைகளின் ஈகோக்களை வளர்த்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா?*

*
இன்றைய பெரும்பாலான பெற்றோர்கள் கூறுவது இதைத்தான்...*

*
இந்தக் காலத்தில் எந்தக் குழந்தைகள் பெற்றோருக்குக் கீழ்படிகிறார்கள்? இதற்குக் காரணம் என்ன?*

*
இதேபோல் தான் அன்று ஒரு பார்ட்டியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது என் 50 வயது நண்பர் தன் கார் சாவியை மறந்து போய்க் காரிலேயே விட்டு விட்டு வந்து விட்டதால் தன் டீன் ஏஜ் பெண்ணை எடுத்துக் கொண்டு வரப் பணித்தார்.*

*
அவள், "நா...என்ன உனக்கு வேலைக்காரியா? நீயே போய் எடுத்துக் கொள்!" என்றாள்.*

*
அவரும் சிரித்துக் கொண்டே "இல்லை...மா! நான் தான் உனக்கு வாழ் நாள் முழுவதும் சேவகன்!" - என்று கூறிக் கொண்டே போய் கார் சாவியை எடுத்துக் கொண்டு வந்தார். இதுவே இன்று சமுதாயத்தில் நடக்கிறது. இதற்குக் காரணம் என்ன?*

*
நாம் நமது குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையைப் பற்றியும் சுயமரியாதையைப் பற்றியும் கற்றுக் கொடுக்க விரும்பினால் முதலில் இதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பணக்காரர்களாகவும் புகழ்பெற்றவர்களாகவும் இருந்தாலும் அவர்களுடைய பெற்றோர்கள் என்றும் பெற்றோர்கள் தான்.*

*
பிள்ளைகள் என்றுமே அவர்கள் பெற்றோருக்கு சமமாக மாட்டார்கள்.*

*
பெற்றோருக்கு நான் சொல்ல விரும்புவது இது தான். நீங்கள் உங்கள் குழந்தைகளை நண்பர்களாக நடத்தாதீர்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் ஆயிரம் நண்பர்கள் கிடைக்கலாம். ஆனால் பெற்றோர்கள் நீங்கள் மட்டுமே....*

*
அதனால் அவர்களை நீங்கள் வளர்ப்பதற்கு விதிமுறைகளை வகுப்பதற்கும், அந்த விதிமுறைகளை அவர்கள் மதிப்பதற்கு அவர்களைக் கட்டாயப் படுத்துவதற்கும் ஒரு போதும் அஞ்சாதீர்கள்.*


 
 பிள்ளை வளர்ப்பு
இப்போதெல்லாம்  ஏதாவது தவறுகள் நடந்தால்  செய்தவர்கள் சரியாக வளர்க்கப்படவில்லை என்று சொல்லக் கேட்கிறோம்  பொய் பேசாமை திருடாமை  போன்றவை வேண்டுமானால்  வளர்ப்பின்  பற்றாக்குறையால் வரலாம் அண்மையில் இன்ஃபோசிஸ்  நாராயண மூர்த்தியும் இது பற்றி அங்கலாய்த்திருந்தார் பிள்ளைக;ள் பிறரால் புகழப்படும்போது வளர்ப்பு நன்றாக இருப்பதாகவும்பிறரால் ஏசப்படும்போது தவறான வளர்ப்பாகவும் சொல்லப்படுகிறது  மேலும் வயதன பெற்றோரை முத்யோர் இல்லத்தில் சேர்த்தால்  பிள்ளிக ளைக் குறை சொல்லவும் கேள்விப்படுகிறோம் இதுதான்   சரியான வளர்ப்பு என்று எதுவாவது உண்டா
இந்தக்காலத்தில் பிள்ளைகளுக்கு சுதந்திரம் அதிகம் தரப்படுகிறது இது தவறா? பிள்ளைகளை பயமுறுத்தி அடிமைகள் போல் வளர்க்க வேண்டுமா
எதிர்பர்ப்புகள் தகரும்போது யாரைக் குறை கூற முடியும் இக்காலத்துப் பிள்ளைகள் எல்லோருக்கும் சரி எது தவறுஎது என்று தெரியும்
சுயமாய் சிந்திக்கிறார்கள் இப்படிச்செய் இல்லாவிட்டால் உம்மாச்சி கண்ணைக் குத்துமென்றெல்லாம் சொல்ல முடியாது என்ன நிகழ்ந்தாலும் எதிர்கொள்ளும் பக்குவம்  இருக்கிறது
நாம் என்ன சொன்னாலும் எதிர்ப்பு காட்டாதபிள்ளைகளையே  நாம்விரும்புகிறோம்அவர்களுக்கான இடத்தை தர விரும்புவதில்லை ஏன் என்றால் நாமெது சொன்னாலும் அதை அப்படியே சிரமேற்கொண்டு செய்தால் நல்லவர்கள்  இல்லாவிட்டால் வளர்ப்பு சரியில்லையா  எனக்கு தோன்றுவதுஇதுதான் இப்படிச் செய் அப்படிச் செய் என்பதை விட எப்படிசெய்யவேண்டுமென்று வாழ்ந்து காட்ட வேண்டும்
சாக்ரடீஸ் காலம் முதலெ தொடங்கியதுதான் இது வருங்கால சந்ததியினர் சரியில்லைஎன்பதே  நாமென்ன விதைக்கிறோமோ அதுவே விளையும்