மார்ச் 2 ம் தேதி
==============
மார்ச் 2ம் தேதி மறக்க முடியாத நாள்என் நினைவு பெட்டகம் என் தந்தை மறைந்த தினம் அது ஆயிற்று 63 ஆண்டுகள் ஒவ்வோராண்டும் சிலநினைவுகளைப்பகிர்வதுண்டு என் பதிவுகளைப் படிப்பவர்கள்
என் தந்தைபற்றி அறிந்திருக்க வாய்ப்புண்டு
என் தந்தை மறைந்தபோது அவரது
அலுவலகத்தில் இருந்து கொஞ்சம்பணம் கலெக்ட்செய்து கொடுத்தார்கள் என்நண்பர்களும் ஒரு
தொகையைக் கொடுத்தார்கள் அதை ஏதோ பிச்சைக்காசு என்னும் விதத்தில் உறவுகள் பேசினார்கள்அதை
நான் வாங்காவிட்டால் உறவுகள் உதவுவார்களா என்ற என்கேள்விக்கு அனைவரும்
கப் சிப்பாகி விட்டார்கள்
என் தந்தைக்கு நானே கொள்ளி
போட்டேன் அது எனக்கு கிடைத்த் பேறா தெரியவில்லை
இப்போது போல் மின் எரி வசதி அப்போதில்லை இருந்தால் தெரியவும் இல்லை
விறகு கரி என்று கலந்து ஒரு
சூளை மாதிரி செய்தார்கள்உடல் தகனம் செய்தபோது மண்ணால் குழைத்த அடுப்புக்குள் உடலிருந்தது
கொழுந்து விட்டு எரியுமென்றில்லை புகை என்பதே இல்லாமல் இருந்தது எனக்கு அது
ஒரு சூளை மாதிரியே இருந்தது இத்தனைஆண்டுகளுக்குப் பின் அதெல்லாம்யார் ஏற்பாடு செய்தார்கள் என்று நினைவில்லை
என் அப்பா இறக்கும் முன் எழுதிய கடைசிகடிதம் என் அண்ணா என்னிடம் சேர்ப்பித்தார் அதில் நான் அம்பர்நாத் உயர் பயிற்சிக்கு தேர்வாகி இருந்ததை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருந்தார் அதைநான் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்
jஜீவிக்கு பிடித்த பாட்டு என் சி வசந்த கோகிலம் பாடியது
jஜீவிக்கு பிடித்த பாட்டு என் சி வசந்த கோகிலம் பாடியது
//ஏதோ பிச்சைக்காசு என்னும் விதத்தில் உறவுகள் பேசினார்கள் அதை நான் வாங்காவிட்டால் உறவுகள் உதவுவார்களா என்ற என் கேள்விக்கு அனைவரும் கப் சிப்பாகி விட்டார்கள்//
பதிலளிநீக்குஅருமை ஐயா இதுதான் சமூகம் பாடல் காலையில் கேட்பதற்கு இதமாக இருந்தது.
ஒரு படல் நினைவுக்கு வருகிற்து வாழ்ந்தாலும் ஏசும் வீழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா
நீக்குஅந்த சமயத்தில் கேட்ட கேள்வி சவுக்கடி...
பதிலளிநீக்குஅருமையான பாடல்...
இளங்கன்று பயம் அறியாது
நீக்குஉற்றம் அப்படித்தான் பேசும் உதவும் மனம் இருக்காது.
பதிலளிநீக்குஇந்த பாடல் என் கணவருக்கு மிகவும் பிடித்தபாடல்.
பழைய பாடல்களுக்கு இன்னும் மவுசு இருக்கிறது
நீக்குஅப்பாவின் கடிதம் நினைவு பொக்கிஷமாய் பாதுகாப்பது மகிழ்ச்சி. நானும் என் அப்பாவின் கடிதங்களை வைத்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குஎன்னிடம்நிறையவே இருக்கிறது
நீக்குஇந்தப் பதிவுக்குப் பொருத்தமான பாட்டைத் தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கிறீர்கள். இந்தப் பாடல் எனக்குப் பிடித்திருப்பதற்கு காரணம் உண்டு.
பதிலளிநீக்குஅப்பாத்துரை சாருக்குத் என்.சி. வசந்த கோகிலம் பாடல் என்றால் மிகவும் பிடிக்கும். அவருக்காகவே என்.சி.வி.யின் பாடிய பல பாடல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
உங்களுக்கு பிடித்த பாடல் என்றுஎங்கோ படித்த நினைவு
நீக்கு//அது எனக்கு கிடைத்த் பேறா தெரியவில்லை // - அப்பாவுக்குப் பிறகான குடும்பத்தில் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறீர்கள் என்று பகிர்ந்திருக்கிறீர்களே. அந்த பாக்கியம், பெருமை போதாதா?
பதிலளிநீக்கு//ஏதோ பிச்சைக்காசு என்னும் விதத்தில் உறவுகள் பேசினார்கள்// - ஹா ஹா... அன்புடன் கொடுக்கும் 1 பைசாவும் பொக்கிஷம் என்று வெளியில் உள்ளவர்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் உங்கள் உள்ளுணர்வு சொல்லியபடி நடந்ததே சரியானது.
என்.சி.வசந்தகோகிலம் பாட்டு எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவரை, எம்.எஸ்ஸுக்காக சைட்லைன் பண்ணிவிட்டார்கள் என்று சொல்லுவார்கள்.
அப்போது இருந்த மூத்தவ என்னும் காரணமாயிருக்கலாம்
நீக்குஇப்படிப்பட்ட உறவினர்களும் இருக்கிறார்கள் , ஆறுதல் கூறி உதவுபவர்களும் இருக்கிறார்கள்>
பதிலளிநீக்குஎன் உற்வுகள் பற்றித்தானே சொல்ல முடியும்
நீக்குஎன் தந்தை மறைந்தபோது அவரது அலுவலகத்தில் இருந்து கொஞ்சம்பணம் கலெக்ட்செய்து கொடுத்தார்கள் என்நண்பர்களும் ஒரு தொகையைக் கொடுத்தார்கள் அதை ஏதோ பிச்சைக்காசு என்னும் விதத்தில் உறவுகள் பேசினார்கள்அதை நான் வாங்காவிட்டால் உறவுகள் உதவுவார்களா என்ற என்கேள்விக்கு அனைவரும் கப் சிப்பாகி விட்டார்கள்
பதிலளிநீக்குஇப்படியும் உறவுகள் இருக்கத்தான் செய்கின்றன
பெசுபவர் பேசட்டும் என்று இருக்க முடியவில்லை
நீக்கு/மார்ச் 2ம் தேதி மறக்க முடியாத நாள்/
பதிலளிநீக்குஎப்படி ஐயா மறக்கமுடியும்? தங்கள் தந்தையாரின் நினைவைப் போற்றும் விதமாய் இணைத்திருந்த பாடல் அருமை.
எனக்கு நாள் நட்சத்திரம் எதுவும் தெரியாதுஆங்கில காலண்டர் பிரகாரமென் நினைவு
நீக்குஎன்.சி.வசந்தகோகிலம் சீக்கிரம் இறந்ததால் அதிகம் பிரபலம் அடையவில்லை. பாடல் எனக்கும் பிடித்ததே!
பதிலளிநீக்குஅப்படியும் கேள்வி பட்டிருக்கிறேன்
நீக்குஉங்கள் தந்தை பற்றி நீங்கள் நிறையப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.தந்தை இறந்ததும் அடுத்து அந்தக் குடும்பம் என்ன செய்யும் என அந்தக் காலங்களில் நினைத்துப் பார்க்க மாட்டார்கள் போலே! உதவித் தொகை உங்களுக்கு எவ்வளவு உதவியாக இருந்திருக்கும் என்பது புரிகிறது.
பதிலளிநீக்குமறக்கமுடியாதநாள் ஓரோர் ஆண்டும் எழுதி இருக்கிறேன்
நீக்குஅரசுத்துறையாய் இருந்தால் இறந்ததும் கொஞ்சம் பணம் கொடுப்பார்கள். இந்நிலையிலும் பணம் கலெக்ட் செய்து கொடுத்தவர்களைக் கட்டாயம் பாராட்டவேண்டும். சட்டென தலைவனை இழந்த குடும்பம் அலமலந்து நிற்கும்போது கைகொடுக்கும்.
பதிலளிநீக்குஎன் சி வி பாடலின் இனிமைக்குக் கேட்கவேண்டுமா?
நண்பர்களி சமயம் பார்த்த அக்கறை
பதிலளிநீக்கு//..விறகு கரி என்று கலந்து ஒரு சூளை மாதிரி செய்தார்கள்உடல் தகனம் செய்தபோது மண்ணால் குழைத்த அடுப்புக்குள் உடலிருந்தது//
பதிலளிநீக்குமுதன்முறையாக இப்படி ஒரு தகனமுறைபற்றி அறிகிறேன். ஒருவேளை, அப்போதெல்லாம் இப்படித்தான் செய்யப்பட்டதா எனவும் தெரியவில்லை.
//..என் தந்தைக்கு நானே கொள்ளி போட்டேன். அது எனக்கு கிடைத்த பேறா தெரியவில்லை //
இதிலும் தெளிவில்லையா!
தந்தையைப் போலவே தாயாரைப்பற்றியும் எழுதியதுண்டா? நீங்கள் எழுதியிருக்கலாம். எனக்குத் தெரியாததால் கேட்கிறேன்.
எரி முறை வித்தியாசமாய் இருந்ததால் எழுதினேன் தாயார் என் இளவய்ச்தில் மறைந்து விட்டர் அவர் நினைவே எனக்கில்லை புக்ப்படம் மூலம்முகம் நினைவில் எழுதசம்பவங்களோ செதிகளோ இல்லை
நீக்குவஸந்தகோகிலத்தை வரவழைத்ததிற்கு நன்றி. பொன்னையாபிள்ளையின் உருக்கமான வரிகளை, அருமையாகப் பாடியிருக்கிறார் என்.சி.வி.
பதிலளிநீக்குபாடலை ரசித்ததற்கு நன்றி
நீக்குநண்பர்களின் உதவித்தொகை அப்போது பேருதவியாக இருந்திருக்கும்தானே.
பதிலளிநீக்குசரியக நினைவில்லை என்சித்தியையும் அவர்பிள்ளைகளையும் ஊருக்கு அனுப்ப உதவியது என்று நினைவு மார்ச் 2ம் தேதி அப்பா இற்ந்தார் மார்ச் 6 ம் தேதி அவர்களை ஊருக்கு அனுப்பி விட்டேன்
நீக்குதங்கள் பதிவு மனதை அழுத்துகிறது ஐயா...
பதிலளிநீக்குஎன் தந்தையின் முகத்தை கடைசியாகப் பார்க்கக் கூட எனக்குக் கொடுத்து வைக்க வில்லை...
பார்த்த திருப்தி தவிர ஏதேனும்நிகழ வாய்ப்புண்டா நிதர்சன உண்மை சொன்னேன்
பதிலளிநீக்கு