மஹாதேவ் ஐஸ்வர்யா வரலாறு
------------------------------------------------------
எழுத துவங்கியபோது சுருக்கி எழுதவா இல்லை விரிவாக எழுதவா என்னும் சந்தேகம் எழுந்தது இதுவரை நான் எழுதிய பதிவுகள் எல்லாமே எழுத்தின் போக்கில் அமையு,ம் அதுபோலவே இதுவும் இருக்கட்டும் என்று நினைத்து எழுதுகிறேன்வீடு கட்ட துவங்கும்போது இருந்த மனநிலையும் இப்போது இருக்கும் மனநிலையும் வேறுதான்என்னைப்போல் இருப்பவருக்கு ஓய்வு பெறும்போது பென்ஷன் ஏதும் கிடையாது அதாவது கிடைக்கும் க்ராட்யுடிடி போன்ற சேமிப்புகள வைத்து வாழவேண்டும் சராசரிவயது 60 க்கு பக்கம் இருக்கும் என்று எண்னியவன் 80 வயதுக்கும் மேல் இருக்கிறேன் என்னைவிடு கட்ட தூண்டிய நண்பனுக்கு நன்றி
செய்யாத குற்றத்துக்கு தண்டனையா
என்றே கேள்வி கேட்ட எனக்கு உருவம்
அன்றி முதுமை அளிக்கும் பரிசு-வாழ்வில்
நான் நானாக இருக்க ஒரு வாய்ப்பல்லவா
பெற்றோருக்காக வாழ்ந்ததும்- நான்
பெற்றவற்றுக்காக வாழ்ந்ததும்- நான்
பெற்ற கூலிக்காக உழைத்ததும் போதுமடா
சாமி. இது எனக்காக நான் வாழும் வாழ்க்கை.
இந்த நினைப்பே
என்னை விருப்ப ஓய்வு பெறச்செய்தது வம்படியாக ஓய்வுகேட்டுவந்து விட்டேன் இனி என்ன செய்வது இருக்க இடமாக வீடு அமைந்துவிட்டது மற்ற
செலவுகளுக்காகஎன்னசெய்வது என்னால்
யாரையும் அண்டி வாழமுடியாதுஅதுஎன்
குறையாயிருக்கலாம் வரவுக்கும் பூவாவுக்கும் என்ன செய்ய கிடைத்த பணத்தில் வீட்டில் மேல்மாடி அமைத்தேன்
கிடைக்கும் வாடகை என் வருவாயாக இருக்கும்
என்
மூத்த மகன் பெங்களூரில் என் வீட்டில் தங்க நானும்
வந்து விட்டேன் என் வாழ்வின்
சுருக்கத்தை எட்டெட்டாக என்று எழுதி இருக்கிறேன் பார்க்க சுட்டி
இப்படித்தான் எதையோ எழுதத் துவங்கி எங்கோ போய் விடுகிறேன்
நான்வீடு
கட்டும்போது இரு படுக்கைஅறை கொண்ட சிறிய வீடாக கட்டினேன் சுற்றிலும்
இருப்பதற்குள் முடிந்தவரை திற்ந்த
வெளி விட்டே கட்டினேன் நாங்கள்
திருச்சியிலும் வீடு பெங்களூரிலும்
இருந்ததால் வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தோம்நல்லகுடித்தனக் காரர் வேண்டி
காத்திருந்தபோது ஒரு சிறியகம்பனி நடத்துபவர் வந்தார் எனக்கோ அவரைத் தெரியாது
ஆனால் இங்கிருந்தவர்கள் அவர் ஒரு குடிகாரர் என்று
பயமுறுத்தினர் ஆனால் எனக்கு ஒருவரைப்
பார்த்தவுடன்எடை போடு என் குணத்தில் நம்பிக்கை உண்டு அவரை எனக்குப் பிடித்து விட்டதுநம்பிகையானவர்
போல் மதிப்பிட்டேன் என் நம்பிக்கை
வீண்போக வில்லை ஐந்து ஆண்டுசள்இருந்தார் என் மகனுக்காக
வீடு தேவை என்றபோது எந்த தொந்தரவும் தராமல் காலி செய்தார் சுற்றிலும் இருந்தகாலி
இடங்களில் இரு தென்னை மரம் ஒரு கொய்யா மரம்
ஒரு பாம்க்ரனேட் மரம் ஒரு கறு
வேப்பிலைமரம் ஒரு மாமரம் மற்றும்
சிலபூச்செடிகள் வைத்து பராமரித்து வந்தார்
எங்கள்வீட்டை சுற்றி இருந்தவருக்கெல்லாம்
போரிலிருநு தாராளாமாய் தண்ணீர்
வழங்கினார் நானே இருந்தால் கூட அப்படி செய்திருப்பேனா தெரியாது
ஆனால் வாட் எ பிட்டி வீட்டின் முன்புறம் இருந்த கொய்யா மரம் நிறைய கல் அடி வாங்கியது வெட்ட வேண்டியதாகி விட்டது இந்தவீட்டில்தான் என் முதல் பேரன் உண்டாகி பிறந்தான் நான் வீடு கட்டும்போது வாஸ்து
ஏதும் பார்க்கவில்லைஎன் இரண்டாம் மகனது திருமணம்
நடந்தது என்பேத்தி பிறந்தாள் மொத்தத்தில் ராசியான வீடாக அமைந்தது ஐஸ்வர்யா என்று பெயரிட்டோம்
பிற்காலத்தில் என் இரண்டாம்
பேரன் வந்து வீட்டுக்குஏ
அவன் அக்காவி பெயர் அதைமாற்றி தன் பெயரை வைக்க வழக்காடினான்அவன் அக்கா பிறக்கும்
முன்பேவீட்டுக்கு பெயர் வைத்தாகி இருந்தது என்றுசொல்லி சமாதானப்படுத்தினோம்
மேல் மாடி எழும்பும் முன் முன்னால் கொய்யா மரம் காண்டிலிவெர் போர்டிகோ |
மேல்மாடி மோல்டிங் |
மோல்டிங்தயார் |
மோல்டிங் ப்ரோக்ரெஸ் |
மகனும் மருமகளும் |
படிப்பபடியாய் வளரும் மாடிப்பகுதி படங்கள்... இனிமையான நினைவுகள். வீட்டின் போர்டிகோ அழகாய் இருக்கிறது.
பதிலளிநீக்குசொந்த வீடேவேண்டாம் என்ரு இருந்தவன் மாற்யது எண்ண்ம் காரணம் எல்லாம் படிக்கும் போது புரியுஏ
நீக்குஅப்பொழுதே புகைப்படங்கள் எடுத்து வைத்த தங்களது யோசனை நன்று ஐயா.
பதிலளிநீக்குபுகைப்படம் எடுப்பது என் ஹாபி
நீக்குஅக்காலத்திலேயே கேமரா வைத்துக்கொண்டு படமெல்லாம் எடுத்து பத்திரப்படுத்தி வைத்துள்ளத் தங்களைப் பாராட்டியே ஆக வேண்டும்
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி சார்
நீக்குஎத்தனை பசுமையான நினைவுகள்... இதை எல்லாம் ஞாபகம் வைத்து எழுதுவதற்கே, ஒரு தனி திறன் இருக்க வேண்டும்...
பதிலளிநீக்குஇரண்டாம் பேரன் ரொம்ப அடம் பிடிப்பாரோ - உங்களைப்போல - ஹா... ஹா... சும்மா ஜாலிக்காக சொன்னேன்...
uஉங்களுக்குத் தெரியும் வயதானால் நினைவுகளே வாழ்க்கை
நீக்குஒவ்வொன்றையும் நீங்கள் ஆவணப்படுத்தி, பாதுகாத்து வைத்துள்ள விதம் கண்டு வியக்கிறேன் ஐயா. அத்துடன் அந்நாளைய நினைவுகளை நீங்கள் பதிவு செய்யும் முறை மேலும் சிறப்பு. உங்களிடம் இருந்து நாங்கள் பலவற்றைக் கற்கிறோம்.
பதிலளிநீக்குபிற்காலத்தில் என்வாரிசுகளும் அறிய வேண்டும் அல்லவா
நீக்குஉங்கள் வீட்டைக் காணும் ஆவல் அதிகரிக்கிறது. கொரோனாவுக்குப் பிறகு உங்களைச் சந்திக்க முயலணும்.
பதிலளிநீக்குஅந்த நாளும்வந்திடாதோ
பதிலளிநீக்குமிக அருமையாக வீடு கட்டிய நினைவுகளை படங்களுடன் தந்தது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
ஒவ்வொரு அங்குலமும் பார்த்துபார்த்து செய்தது வருகைகு நன்றி மேம்
நீக்குநானும் வீடு கட்டியிருக்கிறேன். ஆனால் அதில் அவ்வளவு ஞானம் கிடையாது. என் மாமனாரும் மனைவியும் மேற்பார்வை செய்தலால் அதெல்லாம் முடிந்தது. பிளான் போட இன் ஜினியரை நாடியது, பிளான் சாங்கஷுக்காக அலைந்தது என்று வெளிவேலைகளின் அயர்ச்சியோடு சரி. அந்த நேரங்களில் எனது தொழிற்சங்க ஈடுபாடுகள் தான் எனக்குப் பெரிதாக இருந்தன.
பதிலளிநீக்குபொதுவாகவே இதற்கு அடுத்தது அது என்று போய்க் கொண்டிருப்பதாகவே வாழ்க்கை அமைந்து விட்டதால் அந்த வீட்டை விற்கும் பொழுதும் அடுத்த வேலைக்கு முன்னான ஒரு வேலை போலவே அந்த நாட்களும் சென்றன.
கட்டிய வீட்டை விற்றீர்களா நீரில்போட்டால் நீந்தக் கற்கலாம் என்பார்கள் அதுபோல்தான் இதுவும்
பதிலளிநீக்கு'நீரில் போட்டால் நீந்தக் கற்கலாம்' என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.
நீக்குநான் சொன்னதல்ல பெரியோர் வாக்கு
நீக்குஅந்த வீட்டிற்கு 'ஜீவா இல்லம்' என்று பெயர் சூட்டியிருந்தேன். அதெல்லாம் பற்றி ஒரு பதிவு போடுகிறேன். அதற்கான உந்துதலை ஏற்படுத்திய உங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஜீவா இல்லம் அழகானபெயர் ஸ்ரீராம் எழுதி இருந்தார் என்னை எழுதத் தூண்டியது என்பதிவு பலரை உசுப்பேத்தி விட்டது என்றும் எழுதி இருந்தார் வாழ்த்துகள்
நீக்குதமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 21 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பதிலளிநீக்கு22ஆவது வலைத்தளமாக தங்கள் வலைத்தளமும் இணைக்கப்பட்டுள்ளது. எமது திரட்டியை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எமது திரட்டியை புக்மார்க் செய்து பயன்படுத்துங்கள்.
தற்போது, தங்களது மஹாதேவ் ஐஸ் வர்யா வரலாறு பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
என்னைப்பற்றிவலை ஓலைக்கு எழுதி இருக்கிறேன்
நீக்குவீட்டைக் கட்டிப் பார் என்பது பழமொழி. கஷ்டப்பட்டுக் கட்டிய பின்பு உண்டாகும் சாதனை மகிழ்ச்சி சாதாரணமானதல்ல .
பதிலளிநீக்குவீடே எனக்கு சோறு போடுகிறது மகிழ்ச்சிதான் சார்
பதிலளிநீக்குபின்னால் ஒரு நாள் சாவகாசமாக உட்கார்ந்துகொண்டு, ப்ளாக் எழுதுவோம் எனத் தெரிந்திருந்ததோ! மாடி வீடு கட்டுமானப் பணிகளை எல்லாம் படம் எடுத்துவைத்திருக்கிறீர்களே. பக்கம் நிரப்பப் படங்கள் வழிசெய்கின்றன.
பதிலளிநீக்குகுடித்தனக்காரர் நல்லவராக அமைந்ததும் சுவாரஸ்யம். உங்களுக்காக மரங்கள் நட்டுப் பராமரித்து, நீங்கள் போ என்றதும் காலி செய்துவிட்டுப் போயிருக்கிறாரே. அந்தக் காலத்து மனுஷன்!
அது என் ராசி என்றே சொல்வேன் வந்தகுடித்தனக்காரர்கள் அநேகமாகநல்லவரே சொந்தவீடு பெரியது கட்டிச்சென்று விட்டவர் இவர்
பதிலளிநீக்குவீடு கட்டும்போதே அதன் நினைவுகளையும் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் உங்களின் பதிவு ஏற்படுத்திவிட்டது. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
பதிலளிநீக்கு