சனி, 14 மார்ச், 2020

வீடு கட்டிய வரலாறு


                                           வீடு  கட்டிய வரலாறு 



 நான் பப்லிக்  செக்டர் கம்பனியில்வேலையிலிருந்ததாலும் பணியில்  இருக்கும்போது  குவார்டார்ஸ்  இருக்கும் என்பதாலும் சொந்த வீடு பற்றி நான்    நினைக்கவே இல்லை
 விஜய வாடாவில் இருந்தபோது என்மாமியார் மாமனார் தொந்தரவு தாங்காமல்  1979 ல் ஒரு மனை வாங்கிப்போட்டென்   என் எண்ண அலைகளே வேறு மாதிரி இருந்து இந்தியரின்  சராசரி வயது  60 க்கும்  குறைவு  என்பதாலும்   வீடுகட்டுமளவுக்கு என்னிடம் பணம்  இல்லாததாலும் கடன்  வாங்குவது உடன் பாடாக  இல்லாததாலும்   வீடு  அனாவசியமென்னும் நினைப்பே இருந்ததுசொந்த வீடு உள்ளவனுக்கு அது ஒன்றே இருக்கும் இல்லாதவனுக்கு  எங்கும் வசிக்கமுடியும் என்றெல்லாம்  நினைத்தேன் மீண்டும்   திருச்சி வந்த போது நண்பன் ஒருவன்   நான்நினைப்பதுதவறு  என்று என்னவெல்லாமோ கூறிஎன்னை சொந்த வீடு கட்ட வைத்தான்முதலுக்கு  எங்கே போவது  நான் இருந்ததோ திருச்சியில்  மனையோ பெங்களூரில்அப்போது மனை இருந்த இடம் சிடிக்கு வெளியில் சுற்றி இருந்தஇடம் ஒரே பொட்டல்வெளி
அப்போது தண்ணீர் வசதியு இருக்கவில்லை  ஆகவே முதலிலொரு ஆழ்கிணறு தோண்ட வேடிய அவசியம் நேர்ந்தது இருக்கும் மனையில் எங்கு தோண்டுவது  எங்கு தண்ணீர்  வரும் என்று எதுவும் தெரியாது மனையின்  ஓர் ஓரத்தில் தோண்டு வதே சரியாய் இருக்கும்   வாட்டர் டிவைனர்  உத்வி நாடலாம்  என்றார்கள் நான்குளிக்கும் போதுவேண்டு நீர் நிலைகள் நான்  குறிக்கும் இடத்தில் பிரவாகிக்கட்டும் என்றுவேண்டி ஓர் இட்த்தை என்மனைவி காட்டினாள் அது மனையில்  வீடுகட்டதொந்தரவு இல்லாமல் இருந்தது சுமர் 90 அடி ஆழத்தில் பாறை தென்பட்டது  இன்னு சிறிது ஆழத்தில் நீர் வந்தது 150 அடி ஆழம் வரை தோண்டச் சொன்னோம் நீர் நல்ல இனிப்பாக இருந்தது60 அடிக்கு 30 அடி மனை  அத ந்நடுவே ஒரு சின்ன வீடு  என் வடிவமைப்பில்  வளர்ந்தது  நாங்கள் இருந்ததோதிருச்சி வீடோ பெங்களூரில்  மாதம் ஒரு முறை வருவோம் வீடு படிப்படியாக உருவாவதை கண்டோம்வீடு கட்டின் காண்ட்ராக்டர்நம்பக மானவராய் இருந்தார்

எப்படியோ 1979 ல் வாங்கிய மனையில்  1985ல்  வீடு வந்தது வீட்டை வாடகைகு விட்டுச் செல்லலாம்  என்று முடிவு செய்தோம்வீட்டின்  ஸ்பெஷாலிடியே  கார் போட்டிகோ தான் கான்டி லிவெர் டைப் போர்டிகோ நீண்டு தொங்குவது போல் இருக்கும்  வீட்டுக்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமே  தந்தையின் பெயரோடு  ஐஸ்வர்யமாகவும் இருக்க  மஹாதேவ்ஐஸ்வர்யா  என்று பெயர்சூட்டினோம்
பின்என் மூத்தமகனுக்கு  திருமணம்  1991ல் நடந்தது  வேலையும் பெங்களூரில் இருந்ததால்  சொந்த வீட்டுக்கே குடி வந்தனர்



வீட்டில் போர் போடும்போது  எடுத்த  படங்கள்

(தொடரும் )






                                       

42 கருத்துகள்:

  1. அருமையான நினைவலைகள். கிட்டத்தட்ட நாங்களும் 82 ஆம் ஆண்டில் தான் வீடு கட்ட ஆரம்பித்து 83 ஆம் ஆண்டில் முடித்தோம். அதிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை எங்கள் வீடாக இருந்தது. இப்போது குடியிருப்பாக மாறிவிட்டது. இன்னமும் போய்ப் பார்க்கவில்லை. ஆறே குடியிருப்புகள் தான். போர் போட்டதெல்லாம் 90 களில். அதுவரையும் எங்கள் பகுதியில் 20 அடிக்குள் தண்ணீர் கிடைத்துக் கொண்டிருந்தது. எங்கள் கிணற்றின் ஆழமே 35 அடிகள் தான். மழைக்காலத்தில் கையால் நீர் மொள்ளலாம். அப்படி இருந்த ஊரில் இப்போது 200 அடிக்கும் மேல் போர் போட்டும் நீர் குறிப்பிடத்தக்க அளவில் வருவதில்லை என்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /இப்போது 200 அடிக்கும் மேல் போர் போட்டும் நீர் குறிப்பிடத்தக்க அளவில் வருவதில்லை என்கின்றனர்.நான் இருக்கும் பகுதியில் 500 அடி ஆழம் தோண்டினாலும் இப்பொதெல்லா நீர் இல்லை விவரமாக பின் வரும்பகுதிகளில் விடு கட்டும் அனுபவம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்

      நீக்கு
  2. நெல்லை எங்கள் ப்ளாகில் சொல்லி இருப்பது போல் நானும் வீடு கட்டிய அனுபவங்களை எழுத ஆரம்பிச்சால் குறைந்தது பதினைந்து நாட்களுக்காவது வரும்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல நினைவுகள் அன்றே அதை புகைப்படம் எடுத்து இருந்தது சிறப்பு ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகைப்படம் எடுப்பது என் ஹாபி இந்த படங்கள் என்னிட மப்போதிருந்த க்லிக் 3 ல் எடுத்தது

      நீக்கு
  4. அன்றே புகைப்படம் எல்லாம் எடுத்து வைத்திருக்கிறீர்கள்
    அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  5. மஹாதேவ்ஐஸ்வர்யா உருவான இந்த ஆரம்பப்பதிவு அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  6. தொடர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன் .

    பதிலளிநீக்கு
  7. புகைப்படங்களை பாதுகாப்பாக வைத்து பகிர்ந்த விதம் அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் பழைய படங்களெல்லாம் சேமிப்பில் உண்டு

      நீக்கு
  8. வீடுகட்டிய நினைவலைகள் ஆரம்பம் நன்று. வீடும் இடமும் அடைவதற்கு நல் அதிர்ஷ்டமும் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. வீடு கட்டிய நினைவலைகள், நினைவுகளின் படங்கள் எல்லாம் மிக அருமை.

    //வீடு கட்டின் காண்ட்ராக்டர்நம்பக மானவராய் இருந்தார்//

    அது தான் அதிர்ஷ்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்னவோ தெரியவில்லை எனக்காக உழைப்பவர் நல்லவராகவே அமைகின்றனர்

      நீக்கு
  10. சொந்த வீடு எனக்கு அமைந்ததே நான் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரின் தொல்லையால் தான் ! 23 வருடங்களாய் பொருட்களைத் தூக்கும் தொல்லை இன்றி வாழ்கிறோம். ஆரம்பத்தில் வரும் கலக்கம் முடிவெடுத்ததும் வரும் சிக்கல்கள் பின்னர் சொந்த வீட்டில் இருக்கும் சுகத்தில் மறந்தே போகும்.
    சுவையான ஆரம்பம். அடுத்த பகுதிகளுக்குக் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொருவருக்கும்ஓரோர் அனுபவ்ம் வருகை மகிழ்ச்சிதருகிறது

      நீக்கு
  11. சும்மாவா சொன்னார்கள். 'வீட்டைக் கட்டிப்பார். கல்யாணம் பண்ணிப்பார்,' என்று. வீடு கட்டுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. தங்களின் அனுப்வத்தை அறிய தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. நீர்வேட்டைக்காக எடுத்த புகைப்படங்களைப் பார்த்த பொழுது அவற்றை அந்த நேரத்தில் எடுத்தது இருக்கட்டும், இப்பொழுது வரை அவை தங்கள் சேமிப்பில் இருப்பது ஆச்சரியமாக இருந்தது.
    அதை நிரந்தர சேமிப்பும் ஆக்கிவிட்டீர்கள். இப்பொழுது அவை உயயோகமாகும் என்று நினைத்தும் பார்த்திருக்க மாட்டீர்கள் அல்லவா?

    இப்படி என்னன்ன புகைப்படங்கள் வரப்போகின்றன என்றும் பார்க்கலாம். :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் பழைய படங்கள் எல்லாம்உண்டு எடுத்தபோது வலைப் பதிவு பற்றிய அறிவே இருக்கவில்லை உண்டுபட எடுப்பது என் ஹாபி அவைஎன் நினைவுகளை இப்போதுகிளறுவதில் பெரும்பங்கு வகிக்கின்றனபதிவுகள் எழுதும் போது இருந்தால் நினைப்பு வந்தால் இணைப்பேன்

      நீக்கு
  14. வல்லுநர் சொல்லாமல், அம்மா சொன்ன இடத்தில் கிணறு தோண்டியது நெகிழ்ச்சி.   வீடு தொடர் எல்லோரையும் உசுப்பி இருக்கிறது என்று நினைக்கிறேன்.  நல்ல நினைவலைகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லுனர் பக்கமே போகவில்லை மனைவிசொல்லே மந்திரம்

      நீக்கு
  15. அப்போதே புகைப்படங்கள் எடுத்து வைத்திருப்பதும் சிறப்பு.  இப்போது பார்க்கும்போது எப்படி இருந்த இடம் என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுற்று வட்டாரம் நினைத்துபார்க்க இயலாத அளவு மாற்றம் இப்போது செட்ண்ட்ரல்லி சிசுவேட்டெட் என்று சொல்லலாம்

      நீக்கு
  16. நினைவலைகள்... எங்கள் அப்பா-அம்மா கடலூரில் இப்படி ஒரு வீடு கட்டினார்கள். அம்மா அதற்காக தினம் தினம் நெய்வேலியிலிருந்து கடலூர் சென்று மேற்பார்வை பார்த்து வருவார். கஷ்டமான நாட்கள் அவை. அம்மாவிடம் கேட்டால் கதைகதையாகச் சொல்வார்.

    நினைவலைகள் தொடரட்ட்டும்.

    பதிலளிநீக்கு
  17. அருமையான நினைவுகள்
    தொடருங்கள், தொடருவோம்

    பதிலளிநீக்கு
  18. புகைப்படங்கள் தான் பதிவிற்கு சுவையூட்டியது. புகைப்படம் இல்லையேல் பதிவின் சுவாரசியம் குறைந்திருக்கும். நானும் ஒரு க்ளிக் 3 (விலை 47 ரூபாய்) வைத்திருந்தேன். orwo np 27 பிலிம் தான் உபயோகித்தது. 
    நானும் 88இல் மனை வாங்கி 91இல் வீடு கட்டி முடித்து குடியேறினேன். தற்போதும் அதே வீட்டில் தான் வசிக்கிறேன். Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொந்த வீடு என்றால் எத்தனை வருஷ்மானாலும் அதுதான் நடக்கும்

      நீக்கு
  19. வீடென்பது பெருங்கனவு. சிலருக்கு கனவாகவே போய்விடுகின்றது. எப்படி படம் எடுத்து வைக்கத் தோன்றியது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடு கட்ட நான் நிர்பந்திக்கப் பட்டேன் பதிவில் சொல்லி யிருக்கிறேன்

      நீக்கு
  20. வீடு கட்டியதை எழுதி வைப்பது ரொம்பவே நல்லது. அப்போது பட்ட கஷ்டங்கள், கிடைத்த படிப்பினைகள் எல்லாம் கொஞ்சகாலம் கழிச்சுத் திருப்பி வாசிக்கும்போது......... வியப்பாக இருக்கும். நாமா இப்படியெல்லாம் அலைஞ்சு, திரிஞ்சு ஒவ்வொரு விஷயத்துக்கும் மெனெக்கெட்டோமுன்னு இருக்கும்:-) நாங்க இங்கே வீடு கட்டிய அனுபவத்தை எழுதிப் பதிஞ்சு வச்சுருக்கேன், துளசிதளத்தில். 47 பதிவுகள் :-)

    பதிலளிநீக்கு
  21. எனக்கு தெரியாதே தொடர்ந்து வருங்கள் வருகைகு நன்றி

    பதிலளிநீக்கு
  22. ஹஹா ... இதில் ஹைலைட்டே அந்த புகைப்படங்கள்தான் ... அதுவெறும் படங்கள் அல்ல உங்கள் வாழ்வின் வரலாற்று பதிவுகள் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
  23. படங்கள் பதிவுக்கு ஒரு உண்மைத் தனத்தையும் அழகையும் தரும்

    பதிலளிநீக்கு