ஞாயிறு, 8 மார்ச், 2020

மகளிர் தினம்



                                                                      மகளிர் தினம்
                                                                       ----------------------
 இன்று 8-3- 2020  மகளிர் தினம் இன்று காலை  என்  மனைவிக்கு happy womens day என்று வாட்ஸ் ஆப்பில்  செய்திகள்வந்திருந்தது  அவள் same to you என்று  பதில் அனுப்பினாள் இதில்  தமாஷ் என்னவென்றால்  அனுப்பியவர்களில் ஆண்களும் இருந்தனர் jokes apart நான் விழித்ததும்  அவளுக்கு வாழ்த்து சொன்னேன்  மகளிர்  தினத்தில்  வலைப்பதிவுகளில்  இருக்கும் தாய்க்குலங்களைப் பற்றி எழுதலாம் என்னும் எண்ணமும் வ்ந்தது
தமிழ் வலை உலகில்  எனக்கு தெரிந்த  என்னை அறிந்த பெண் பதிவர்களுக்கு  இப்பதிவு சமர்ப்பணம் நான்  அறியும்பெண்வலைப்பதிவர்கள் பலர் இப்போதெல்லாம் என்பக்கமே வருவதில்லை  வலைக்கு வருவது  டூ வே  ட்ராஃப்ஃபிக்  அல்லவா முன்பெல்லாம் பலரும் என்தளம் வருவார்கள்
பலரையும்நினைவு கூர இது  ஒருசந்தர்ப்பம் அல்லவா இப்பொது என் பதிவுகளில்  காணும் பெண்பதிவர்கள்  அவர்களைப் பற்றிந எழுதும்போது என்னையும் மீறி அவ்ர்கள் பற்றிய கருத்துகளூம்  வந்து விழலாம் no offence  meant  அது என்சுபாவம்   பாணி என்பதைப்பலரும் அறிவார்கள் குடத்திலிட்ட விளக்காய்  இருப்பவரை  குன்றின்   மேல் ஏற்றும்என் முயற்சி

மகளிர் தினத்தில் பேரும் புகழும் பெற்ற மகளிரைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் வழக்கமாகிவிட, எனக்கு மனசில் தோன்றியதைப் பதிவிடுகிறேன். ஆண்டவன் படைப்பில் ஆணும் பெண்ணும் சமம் என்று உரக்கக் கூறினாலும், எங்கோ  உள்ளத்தின் அடியில் பெண்களை சமமாக நினைக்கவும், நடத்தவும் இந்த ஆணாதிக்க சமுதாயம் தயாராயில்லை என்பதையே அண்மைய நிகழ்வுகள் தெளிவு படுத்துகின்றன. பெண் எனப் படுபவள் ஒரு உடைமைப் பொருள் என்றே கருதப் படுகிறாள். இல்லை என்று காட்டத்தானோ என்னவோ இந்த மாதிரி மகளிர் தின நினைவுகள் ஒரு பிராயச்சித்தமாக அனுஷ்டிக்கப் படுகின்றன.எடுத்துக்காட்டாக புகழ் பெற்ற மகளிரைப் பற்றி பேசுகிறோம். பெண்களின் பெருமையைப் பற்றிப் எழுத நான் எடுத்துக்கொள்ளப் போவது எனக்கு நன்கு பரிச்சயமான, என்னைத்தெரிந்த பெண்களில் சிலரைத்தான். பெண் என்றாலேயே எனக்கு நினைவுக்கு வருவது என் மனைவியைத்தான்.அவள் பட்டம் பெற்றவள் அல்ல. பணிக்குச் செல்பவளும் அல்ல. எனக்காக செய்து வந்த பணியையும் துறந்து எனக்காகவே வாழ்பவள். என்னை விட அவளை நான் நேசிக்கிறேன். இது எல்லாக் கணவர்களும் சொல்வது தான் என்பதுபோல் தோன்றினாலும், நான் எழுதுவது ‘அக்மார்க்’ உண்மை. நான் பார்த்துப் பொறாமைப் படும் பெண்களும் இருக்கிறார்கள்.பதிவுலகில் என்னை பிரமிக்க வைக்கும் பெண்மணிகளின் ஒரு பட்டியலையே தருகிறேன்
1)கீதா சம்பசிவம் நான்நேரம் எடுத்துசந்தித்தபதிவ்ர் ஸ்ரீரங்கவாசிதுறை போகியவர் என்று பெயரெடுத்தவர் பழங்கதைகளை  இண்டர்ப்ரெட் செய்யும்விதமே அலாதி  எதையுமே அவருக்கு நேர்ஃந்த அனுபவம்போல் சொல்வார்ஒரு முறை திருமணம்  பற்றிய கருத்து தெர்விக்கும்போது  ஆண்பெண் திருமண்மே  இருவர் இணைவதற்கு மட்டுமான லைசென்ஸ் மட்டுமல்ல அதை யும்  தாண்டி புனிதமானதுஎன்பது போல்கருத்து தெரிவித்திருந்தார்அவரிடம் என்க்குப் பிடித்த விஷயமே ஒரு அதாரிடி  போல் சொல்வதுதான் வெகுகாலமாக  பதிவு எழுதி வருபவர் சமையல்விஷயங்களில் அவருக்கு இல்லாத  அனுபவமே இல்லை போல் இருக்கும்
செல்வி மாதங்கி மஹாலிங்கம்   சென்னையில் இரு முறை என்னை சந்திக்க வந்தவர் ஐ டி பணியில் இருந்தவர் இப்போது அடைவங்கிப்பணியில் இருப்பவர் முன்பெல்லம் என் தளட்துக்கு தவறாமல் வருவார்  வர மறந்தாலு அப்பா வரவழைப்பாராம்  முகநுலில் த லோன்  லி பேர்ட் என்னும்கவிதை எழுதி இருந்தார்  அதை நான் தமிழ்ப்படுத்தி எழுதியதை மிகவும்சிலாகித்து  எழுதி இருந்தார் என்ன இருந்தாலும்  தனக்கென ஒரு வழியில் செல்பவர்
 செல்வி அருணாசெல்வம் கவிதையில் மட்டுமே எழுதுகிறார் ஆரம்ப காலத்தில் இவர் ஆணா பெண்ணா என்னும்  கேள்வி இருந்திருக்கும்போல நான் அவரதுஆரம்பகாலத்தில் இருந்தே  தொடர்கிறேன் ஃப்ரான்ஸ் தேச  வாசி என்று  நினைக்கிறேன்
தேனம்மை லக்ஷ்மண்ன் இப்போது போட்டி போட்டு  நூல்களை மின் பதிவாக்குகிறார்என்னைக் காணவருவதாக்  எழுதி இருந்தார்  பலமுறை பெங்களூர் வந்தும் இன்னும் சந்தித்தபாடில்லைநாட்டுக் கோட்டை பற்றியும் அவர்கள்கோவில்கள்பற்றியும் எழுதி இருக்கிறார்  என்னிடம்  அவருடையசாட்டர்டே போஸ்டுக்காக எழுதக் கேட்டுஇருந்தார் கொடுத்திருந்தேன் திருமதி துளசி கோபால் நியூசி யில் இருப்பவர் ஆனால் பெரும்பாலும் க்ஷேத்ராடனம்தான் எனக்கு அவர் தேர்ந்ஹெடுக்கும்கோவில்கள் பெரும்பாலுவிஷ்ணு கோவில்களாக  இருப்பதால் அவருக்கு வைணவ bias   இருக்குமோ என்னும்  எண்ண்ம் வருவதுண்டு எல்லாமேநம்பிக்கைதான் என்று எண்ணுபவர்டீச்சர் என்று அறியப்படுகிறார் ஏன் என்றுஇன்னும் தெரியவில்லை இவரை ஒரு முறை என் வீட்டிலும் இன்னொருமுறை மதுரை பதிவர் விழாவிலும் சந்தித்து  இருக்கிறேன்பழக இனிமையானவர்என் வீட்டுக்கு  வந்ததை சிங்கத்தின்  குகையில்  என்று  எழுதி இருந்தார்
அதிரா ஏஞ்செல்  இருவரும் எனக்கு அறி முகமானதே தமாஷாகதான்   என் மீசையே என் அடையாளம்  அதைப்பார்த்துன் என்னோடு தொடபு கொள்ள தயங்கினார்களாம்அவர்களதுபடமோ முகவரியோ என்னிடம் கிடையாது நகைச்சுவை என்று நினைத்து எழுதுவதை ரசிக்கபலருண்டு  
இன்னொரு ஆதிரா உண்டு  கல்லூரியில்  ஆசிரியை சென்னையி ல் என்னை  சந்திப்பதாக  இருந்தார்  ஏனோ முடியவில்லை  சாதனைகள் பல புரிந்து அதனால்பேரும்  புகழும்பெற்றவர்  இயற்பெயர்பானுமதி

தென்றல் சசிகலாவை நான்  புதுகை  பதிவர்சந்திப்பில்பார்த்தேன்   என்னை அறி முக்ப்படுத்தி தெரிகிறதா என்று கேட்டபோது  எங்கும் நிறைந்தவன்  ஈசன் என்றால் என்னுள் நிறைந்தவள் நீயே  யன்றோ  என்னும் நான்  எழுதிய வரிகளைச்  சொல்லி என்னைபிரமிக்க வைத்தார்
 திருமதி உமாமோஹன்   பதிவுகள் ஒன்றாக வராது ஒருகாஸ்கேட்போலவரும்                    
அவர் எழுத்டி லெவலே வேறு  இதுவரை நான் கருத்திட்டது இல்லை
 திருமதி பவள  சங்கரி  நித்திலம் தளத்துக்குஉரிமையாளர்  திருஅப்பாதுரை மூலம் தெரிந்தவர் இவர்கள்தவிரான்புடன்  ம்ல்லிகா  சாகம்பரி போனறோரை பதிவுகளில்  நான் பார்க்கவில்லை  அவ்சரவருக்கு ஒரோர் பாணி
திருமதி கோமதி அரசுநான்  மயிலாடுதுறையில் சந்தித்தேன்   மல்லிகைப் பூ பொல் இட்லி கொடுத்து  அசத்தி விட்டார் நான் தமாஷாக இவரை ஒரு ஆர்நிதாலஜிஸ்ட்  என்பேன் பறவைகள் மேல் அவ்வளவுபாசம்    வேதாத்திரி சுவாமிகள் மேல் அத்தனை அபிமானம் அதென்னவோ தெரிய வில்லை  நான் சந்தித்த  பதிவர்கள்பல்ரும் என்னிலும் மிகவும் மாறு பட்டவர்கள் இதைதான்  opposite poles attract  என்கிறார்களோ  
  பானுமதி வெங்கடேஸ் வரன்   இப்போதெல்லாம்  காணொளி  மூலம்   அவ்வப்போது பதிவிடுகிறார் திரைப்படசெய்திகள்விரல் நுனியில்

 தில்லையகத்து கீதா  துளசிதரனுடன் சேர்ந்து  இயங்கு கிறார்    தற்போது  பெங்களூர் வாசி  பதிவு பக்கமே வருவதில்லைஎதையும் சுருங்கச் சொல்ல மாட்டார்
                                            

30 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் கண்டவர்க்கும் விட்டுப்போனவர்க்கும் மகளிர் தின வாழ்த்துகள்

      நீக்கு
  2. இப்படி பெயர் கொடுத்து எழுதுவதில் உள்ள பிரச்சனை, பலரையும் எழுத விட்டுப்போய்விடுவதுதான்.

    நீங்கள் எழுதியுள்ளவர்களில் சிலரை மட்டுமே நான் அறிவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலரது பெயர்கள் விட்டுபோய் இருக்கின்றன அறிந்தவர்களின் டச் விட்டுப்போய் விட்டது

      நீக்கு
  3. https://avargal-unmaigal.blogspot.com/2016/03/top-tamil-women-bloggers.html வலைத்தளத்தில் கலக்கும் பெண்கள் நானும் 2016 ல் மகளிர் தின பதிவாக வெலியிட்டு இருந்தேன் அதை மீண்டும் இன்று வாசித்து மகிழ்ந்தேன் அதை பார்க்க்கும் போது அது இரு கனாக்காலம் என்றுதான் நினைக்கதோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  4. சிலரை அறிவேன்.  சிலரை நான் அறியமாட்டேன்!  நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  5. //என்னை விட அவளை நான் நேசிக்கிறேன். இது எல்லாக் கணவர்களும் சொல்வது தான் என்பதுபோல் தோன்றினாலும், நான் எழுதுவது ‘அக்மார்க்’ உண்மை.//

    மனைவியை நேசிப்பதும் அதை வெளியில் சொல்வதும் மகிழ்ச்சி தரும் விஷயம்.

    மகளிர் தினத்தில் நீங்கள் என்னையும் குறிப்பிட்டது மகிழ்ச்சி.
    உங்கள் அன்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. சில பெண் பதிவர்களை அறிந்துகொண்டேன்; உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டுப்போன பெயர்களில் கீதாமதிவாணனுமடகம் அவர்மூலமே உங்களைப்பற்றி அறிந்தேன்

      நீக்கு
  7. என்றும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  8. நல்லதொரு பதிவு. மகளிர் தினத்தில் பதிவர்களைப் பற்றி இங்கே சொன்னதில் மகிழ்ச்சி. என்னாலும் பலருடைய தளங்களுக்கு செல்ல முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுபட்டுப் போனவர்களில் உங்கள் மனைவி திருமதி ஆதி வெங்கட்டும் உண்டுஒரு முறை நா ஸ்ரீரங்கம் வந்ததாக எழுதிய்போது அவர்கள்வீடு கோவில்பக்கமே இருப்பதாகவும் அடுத்தமுறை வருவதை தெரிவித்தால் அவரேட் உதவலாம் என்றுமெழுதிய நினைவு

      நீக்கு
  9. இவ்வளவு பெண்பதிவர்களை நினைவில் வைத்துஅவர்கள் குறித்த நினைவுகளை மிகச்சரியாக பதிவிட்டதும் அதுவும் மனதில் பட்டதை அப்படியே பதிவிட்டதும் அருமை..என்னால் முடியுமா என யோசித்துப்பார்த்தேன்..முடியாது என்றே தோன்றியது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதில் பட்டதை கூறுவது என்வழக்கம் எந்தள முகப்பில் இருப்பதை நான் கடை பிடிக்கிறேன்உங்களால் முடியாதது இல்லை வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. மகளிர் தினத்தில் உங்களுக்குத் தெரிந்த பதிவர்கள் பற்றிய கட்டுரையில் என்னை முதலாகக் குறிப்பிட்டதற்கு நன்றி. திருமணம் என்பது லைசென்ஸ் என இப்போது பலரும் நினைப்பதாலேயே அதிகமான விவாகரத்துகள். திருமண பந்தத்தின் அர்த்தமே இப்போதெல்லாம் யாரும் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்வதில்லை.

    துளசி வைணவர் தானே. அதில் என்ன சந்தேகம்? அவர் சிவன் கோயில்களுக்கு அரிதாகவே போகிறார் என்றாலும் போகிறார். 108 திவ்ய தேசங்களையும் தரிசித்தவர். எப்போதும் பயணம். உலகம் சுற்றும் வாலிபி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லைசென்ஸ் என்று நினைக்காவிட்டால் லிவிங்டு கெதெர் அதிகமாகும் திருமதி துளசி மீது எனக்கு மரியாதை உண்டுஎப்போதோ பார்த்த இடஙக பற்றிஎப்போதோ எழுதுகிறார் என்று சில சமயம்தோன்றுவது உண்டு

      நீக்கு
  11. பதில்கள்
    1. மகள்ர் தினத்தில்வலையில் இருக்கும் பெண்மணிகள் ஒஅற்றி எழுதத்தோன்றியது

      நீக்கு
  12. இவர்களில் பலரும் இப்போது முகநூலிலும் இருக்கிறார்கள். சிறப்பாக எழுதுபவர்கள். அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. சிறப்பாக எழுதுவதால் தானோ என் கண்ணில் பட்டார்கள்

    பதிலளிநீக்கு
  14. மகளிர்நாளில் பெண்கள் பலரையும் நினைவுபடுத்தியது மகிழ்ச்சி .

    பதிலளிநீக்கு
  15. பார்த்தீர்களா உங்கள் பெயர் விடுபட்டது ஒரு வேளை எ பதிவுகளில் அதிகம்காணாததாலோ என்னவோ வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு