ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

தேங்காயும் மாங்காயும்



                                                      தேங்காயும்   மாங்காயு ம்         
                                                     ------------------------------------------


 என் வீட்டில் ஒரு தென்னையும் ஒரு மாமரமும் உண்டு தென்னையில் காய்த்து காய்கள் தானாகவே கீழே விழுவதுண்டு  சாலை நோக்கி சாய்ந்து  இருப்பதால் யார் தலையிலாவது விழாமல் இருக்க வேண்டுமே என்று  கவலை  காய்ந்த மட்டைகளும் விழும் இவற்றை  அப்புறப்படுத்துவதே பெரியவேலை  முன்பெல்லாம் ஒவ்வொரு மட்டையை  அப்புறப்படுத்த ஆட்களை தேட வேண்டி உள்ளது அதுவும் ரூபாய் இருபது கொடுக்கவேண்டும் துப்புரவாளர்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள் காய்த்த தேங்காய்களை பறிக்க ஆட்கள்கிடைப்பதே குதிரைக் கொம்பு  வந்த்வர் தொலை பேசி எண்ணை  வாங்கி வைத்துக் கொண்டு  கூப்பிட்டால்  வருவதே சிரமம்   வீடு நெரிசலான சாலையில் இருப்பதால்நடமாட்டம் இல்லாத அதாவது  குறைந்த நேரத்தில்பறிக்க வேண்டும்  ஒரு வழியாக தென்னந்தோப்பு இருப்பவரை  பரிச்சயப்படுத்திக்கொண்டோம் ஆனால்லேசில் தொடர்பில்வரமாட்டார் அப்படியே வந்தாலும்இன்று நாளை என்று சால்ஜாப்பு சொல்வார்
 இம்முறை  நாங்கள் எதிர்பாரா விதமாக வந்துகாய்களை  பறித்துபோட்டு எங்கள் சங்கடம் தீர்த்தார்
இங்கெல்லாம்  ஒரு தேங்காய் ரூ 30 லிருந்து  ரூ 40 வரை விற்கிறது வந்தவர் மரத்தில் இருந்த  காய்கள் அனைத்தையும்  பறித்தார்  இதில் இள நீர் காய்களும் அடங்கும்  ஒரு இள நீர் ரூ 40 க்கு குறைவாய் கிடைப்பதில்லை  பறித்தவற்றில்  இள நீர் காய்களுமிருந்ததால்  அவர் எங்களுக்கு ரூ  500 கொடுத்துச்சென்றார்  எங்களுக்கு காயும் கிடைத்தது ஒரு சங்க்சடமும் தீர்ந்தது இந்த முறை தேங்காய்  பறிக்கும் வேலை நன்றாகவே நடந்தது
அதேபோல்  மாங்காய் தொந்தரவும் தீரும் என்று நம்புகிறோம் இப்போது மரத்தில் காய்கள் குறைவாக இருக்கிறது  இருப்பதும்வெகு உயரத்தில் இருக்கிற்து முடிந்தால் மரத்தை  குத்தகைக்கு விட உத்தேசம் ஆனால்  அதற்கும் ஆட்கள்வேணுமே  தென்னை பிரச்சனை தீர்ந்தது போல் மாவின் பிரச்சனையும் தீரும் என்றுநம்புகிறோம்

27 கருத்துகள்:

  1. அடிக்கடி இந்தப் பிரச்னை பற்றிப் பேசி இருக்கிறீர்கள். சாலையில் விழுவது போல காய்கள் இருப்பது டென்ஷனாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வருடம் பிரச்னை சுமுகமாக முடிந்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  2. தென்னை மரம் வளர்ப்பதில் உள்ள சிக்கல் தொடக்கத்திலேயே.. மரம் சாலைக்குள் செல்லாமல் தடுத்து வளைக்க வேண்டும் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைவிட, ஏதேனும் டெக்னாலஜியைப் பயன்படுத்தி, உயரத்தைக் குறைத்துவிட்டால் (போன்ஸாய் மாதிரி), காய் பறிப்பது சுலபமாக இருக்கும். என்ன ஒண்ணு, காயும் போன்ஸாய் மாதிரி, இலந்தைப் பழம் சைஸுக்கு வந்துவிடக் கூடாது. தென்னை மரம் அதே அகலம், ஆனால் உயரம் 10 அடிக்கும் குறைவாக இருக்கணும். ஹா ஹா

      நீக்கு
    2. கில்லர்ஜி எப்படி என்று தெரியவில்லையே

      நீக்கு
    3. நெல்லை எதையும் நகைச்சுவையாக நினைக்கிறீர்கள்

      நீக்கு
    4. குள்ள தெங்கு உண்டு. dwarf என்று பெயர். நட்டு ஒரு வருஷத்தில் காய்க்கும். கைக்கு எட்டும் உயரம் தான். காய் சாதாரண சைசில் கிடைக்கும். எண்ணெய் குறைவு. ஆயுள் குறைவு. இது இல்லாமல் TXD என்ற hybrid என்ற இனமும் உண்டு. நம்முடைய வீட்டில் சாதாரணமாக உள்ளது west coast tall என்ற ரகம் தான். ஆயுள் 100 வருடம். 8-10 வருடத்தில் காய்க்க ஆரம்பிக்கும். 

      நீக்கு
    5. குட்டைத்தென்னை உண்டு. மதுரை டிவிஎஸ் நகரில் எல்லா வீட்டு வாசல்களிலும் இருபக்கங்களிலும் அதான் வைத்திருப்பார்கள். ஆனால் சீக்கிரம் காய்ப்பு நின்றுவிடும். ஆயிரம் காய்ச்சி என்பார்கள் அதை!

      நீக்கு
    6. ஜெயகுமார் வீட்டில் முத்லில் குடித்தனம் இருந்தவர் நட்டு வைத்தார் இப்போது பலன் எங்களுக்கு ஒரு தென்னையில் இடி விழுந்து வெட்ட வேண்டியதாய் போய் விட்டது இனி டென்னை நடு எண்ணம் இல்லை இடமுமில்லை

      நீக்கு
    7. நெல்லைத் தமிழன் சொன்னது உண்மை. வாய்ப்பு உள்ளது. 5 அடி உயரத்தில் உள்ள தென்னை மரம் உள்ளது. நின்றபடியே காய்கள் பறிக்கலாம். அதே போல வாழைமரமும் உள்ளது. குளித்தலையில் நான் பார்த்துள்ளேன்.

      நீக்கு
    8. எனக்குத் தெரியாதது சொன்னதற்கு நன்றி

      நீக்கு
  3. தென்னையை வைச்சா இளநீர், பிள்ளையை பெற்றால் கண்ணீர் என்று யாரை நம்பி நான் பொறந்தேன் என்ற பாடலில் வரும். நினைவுக்கு வந்தது. 
    கேரளத்தில் தேங்காய் மாங்காய் சக்கை மூன்றும் சேர்ந்து வரும். தேங்காய் கதை ஓவர்.அடுத்து மாங்காய் கதை வரும் என்று சொல்லிவிட்டீர்கள். சக்கை இல்லையா? இருந்தால் சக்கை கதையும் எழுதுங்கள்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் வீட்டு சிறிய தோட்டத்தில் சக்கை வளர்க்க வில்லை

      நீக்கு
    2. அம்பத்தூர் வீட்டில் இருந்தது. பலாமரத்தையும் வெட்டியாச்சு!

      நீக்கு
    3. பலா என்க்குப் பிடித்த பழம்

      நீக்கு
  4. பின்னூட்டத்தை அனுப்புவதற்குள் பவர் ட்ரிப் ஆகிவிட்டது.

    தென்னை மரம் வளர்ப்பது சிரமம்தான். என் சென்னை வீட்டில் இருந்த தென்னை, புயல் சமயத்தில் பக்கத்து வீட்டு முகப்பை சேதப்படுத்திவிட்டது. இன்னொன்று தென்னை மரத்தில் ஏறி காய் பறிக்கச் சொன்னாலும், ஏதேனும் ஆகிவிட்டால் நமக்குத்தான் சிரமம்.

    உங்க வீட்டு மாங்காய் என்ன வகைனு கேட்கணும்னு ரொம்ப நாளா நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

    இங்க தேங்காய் 20 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஊரடங்கிற்கு முன்னால் 4 சிறிய காய்கள் 50 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறேன். இப்போ அதிகபட்சமாக 27 ரூபாய் கொடுத்து ஹாப்காம்ஸில் இரு தேங்காய்கள் வாங்கினேன். நீங்கள் குறிப்பிடும் விலை ரொம்பவும் அதிகமாக இருக்கிறது.

    மாங்காய் மட்டும் இன்னும் கிலோ 80 ரூபாயிலேயே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்லி இருப்பது பெங்களூர் நிலவரம் என் வீட்டு மாங்காய் நாட்டி ரகம்தான்

      நீக்கு
    2. நானும் பெங்களூர்தான் ஜி.எம்.பி சார்... கிட்டத்தட்ட 2 1/2 மாதங்களாக....

      நீக்கு
    3. னக்கு வில்சை எல்லாம் அக்கம் பக்கத்ட்க்ஹில் கேட்டுத்தான் தெரியும்இந்தக் க்பொரோனா பீதி முடிந்ததும் உங்களை என் வீட்டில் எதிர்பார்க்கலாமா

      நீக்கு
  5. தென்னையை வளர்த்தால் இம்புட்டு பிரச்சனையா? தினந்தோறும் சட்டினி கூட்டு தேங்காய் சாதம்னு இருப்பீங்கன்னு யோசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு கட்டத்துக்கு மேல் காய்த்திருக்கும் தேங்காயை வெற்றிலை, பாக்கில் வைத்துக் கொடுத்தால் கூட வாங்க ஆள் இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கோம். எண்ணெய்க்குப் போடலாம் எனில் காவல் காக்கவேண்டும். தினம் சட்டினி, கூட்டு, தேங்காய் சாதம்னு சாப்பிட்டால் அலுத்துப் போகாதோ? இங்கே தேங்காய் 25,30 ரூபாய்க்கு சிறிது, பெரிது என ரகவாரியாகக் கிடைக்கும். தேங்காய் பறிக்க நாங்களும் கஷ்டப்பட்டிருக்கோம்.

      நீக்கு
  6. சுமார் நான்காண்டுகளுக்குப் பின் உங்கள்பின்னூட்டம் நன்றிதென்னை வளர்ப்பது பிரச்சனை அல்ல காய் பறிப்பதுதான்

    பதிலளிநீக்கு
  7. சார் இது போல முன்பும் தேங்காய் பறிக்கும் கஷ்டம் குறித்து சொன்ன நினைவு இருக்கு. மாங்காய் பற்றியும் எழுதியிருந்தீங்க.

    இங்கு தேங்காய் மீடியம் சைஸ் 3 50 ரூபாய்க்கு கிடைக்கிறது. அல்லது ஒரு தேங்காய் 20 ரூபாய்க்கு. நல்ல பெரிதாக இருந்தால் ரூ 30

    தேங்காய் பிரச்சனை சுமூகமாகத் தீர்ந்தது குறித்து மகிழ்ச்சி. மாங்காய் பறிப்பதும் நல்லபடியாக நடக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /
      இங்கு தேங்காய் மீடியம் சைஸ் 3 50 ரூபாய்க்கு கிடைக்கிறது. அல்லது ஒரு தேங்காய் 20 ரூபாய்க்கு. நல்ல பெரிதாக இருந்தால் ரூ 30/ I think you are confused about the prices

      நீக்கு
  8. எங்கள் இடத்திலெல்லாம் தேங்காய் பறிப்பதற்கு மரத்தில் ஏறுவதே இல்லை. களை கம்பு என்று சொல்லப்படும் மூங்கில் கம்பை ஒன்றோடு ஒன்றாக சேர்த்து கட்டி அதில் வெட்டருவாயும் கட்டி எவ்வளவு உயரமான மரமாக இருந்தாலும் கிழிருந்தே பறித்து விடுகிறார்கள் ... மாங்காய் பறிப்பதற்கும் இதே டெக்னாலஜிதான் >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு