Saturday, April 4, 2020

ஒரு கரு கதையாகி நாடகமாகிறது                              ஒரு கரு கதையாகி  நாடகமாகிறது
                              --------------------------------------------------------
-

 ஒரு கரு கதையாகிறது  அதுவே நாடகமாகிறது எழுதுவதற்கு விஷயங்கள் இல்லாதபோது பழைய நினைவுகள்மீட்டப்படும் அப்படி எண்ணிய போது என்நாடக அனுபவங்கள் என்னை எழுது எழுது  என்றன ஆண்மை இல்லாதவன் பற்றி எழுதினேன் அதற்கான கரு எனக்குள் இருக்கும் வித்தியாசமாய் சிந்திக்கும்  குணம்  பல இடங்களில் பலரும்   மனசாட்சி பற்றி கூறுவதைக் கேட்கிறோம் எனக்குள்ள அடிப்படை சிந்தனையே மனசாட்சிக்கு அளவுகோல் இல்லை  என்பதே இஷ்டத்துக்கு வளைக்க உதவும் ஒருசொல்லே மனசாட்சி
 இதை ஒருகதையில் கொண்டுவந்தேன் மனசாட்சிi  கதை  அப்போது நாடகங்களில் ஈடுபாடுஇருந்தசமயம் இரண்டு மூன்று நாடகங்களை  அரங்கேற்றிஓரளவு வெற்றி கண்டவன்  ஆனால் நான்மட்டும் வித்தியாசமாய் சிந்தித்தால் போதுமா பலருக்கும்  கதைஆண்மை குறைந்தவன் கதாநாயகன் என்றபோதுஅதில் பங்கேற்க தயக்கம் இருந்தது நாடகத்தை கத்தி மேல் நடப்பதுபோல் கையாள வேண்டும்நாடகத்தில் நடிக்கவே பலரும் தயங்கினர் கதைய்ன் அவுட்லைனைச் சொல்லி  தெளிவிப்பதைவிட முழுவதும் எழுதியபின் அதை காட்டியபின் தயக்கம்விட்டொழிந்தனர் கதை எழுதுவதுவேறு நாடகத்துக்கு மேடைக்கதை அமைப்பது வேறு கதையைச்சொல்ல வேறு சில பாத்திரங்களும்  நாடகக் கதைக்கு  தேவை  சில கூடுதல் பாத்திரங்களுடன்மேடைக்கதை அமைத்தேன்  நகைச்சுவை வராத எனக்கு அதையும் எழுதலாமென்று  தோன்றியதுஓரளவு வெற்றிஎன்றே நினைக்கிறேன்  நாடகம் மேடை யேறியபோது நல்ல வரவேற்பு இருந்தது ஓய்வு பெற்று வந்தபோது அவற்றை  பதிவாக்கினேன்   சில காட்சிகளை எப்படி மேடையில் கொண்டு வந்தேனென்றுபின்னூட்டக் கேள்விகள் இருந்தது மேடை எஃபெக்டை எழுத்தில் கொண்டு  வரமுயன்றேன் நாடகம் பார்க்க  ஒரே கருவை இருவிதமாக  கூறமுடியுமதையே நானொரு சிறியநாடகப் பதிவுபொல் எழுதினேன்   பார்க்க


(முக்கிய அறிவிப்பு சுட்டிகள்கொடுத்திருக்கிறேன் அதையும்வாசித்தால் தான் புரிதல் ஏற்படும்)   

நினைவுகளை மீட்டெடுக்க படங்கள் இல்லாமலா  ஒவ்வொரு படமாக  விளக்காமல்மொத்தமாக கூறுகிறேன்

ஆராமுது அசடா  காட்சிகள்
Add caption
Add caption
பல காட்சிகள் மனசாட்சிமனசாட்சி படங்களின்  தொடர்பாக இதையும்பார்க்க வேண்டும் டிஜிடலைஸ்  செய்த படங்களை வரிசையில் வைக்கும் போது  சிறு தவறு நேர்ந்து விட்டது         

26 comments:

  1. // நாடகத்துக்கு மேடைக்கதை அமைப்பது வேறு கதையைச்சொல்ல வேறு சில பாத்திரங்களும் நாடகக் கதைக்கு தேவை//

    உண்மை.  நீங்கள் அப்போதே இதுபோன்ற கலைகளில் ஜொலித்திருக்கிறீர்கள் என்பது விசேஷம்.  புகைப்படங்கள் அருமை.  சுட்டிகளுக்குச் செல்லவில்லை.  காரணம் கணினி அனுமதிக்கும்வரைதான் என்னால் இணையத்தில் இருக்க முடியும்.  அதற்குப் பைத்தியம் பிடிக்கும் முன்பு சில வேலைகளை முடிக்கவேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. கதையில் பாத்திரங்களதிகமிர்நீக்கவும்வேண்டும் சுட்டிக்குச்சென்று படித்தால் கதை எப்படி நாடக உரு பெற்றது என்பது தெரியும்

      Delete
  2. சுட்டிகளுக்குச் சென்றால்தான் பதிவு பற்றிய முழுப்பொருளும் விளங்கும்

    ReplyDelete
  3. நீங்கள் ஒரு கலைஞர் மட்டுமல்ல ஐயா, மிகச் சிறந்த ரசனையாளர், ஆவணக்காப்பாளர். மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தவறு என்றுபட்டதை தட்டியும் கேட்பேன்

      Delete
  4. அருமை ஐயா
    அக்காலப் படங்களை ஆவணமாய் பாதுகாக்கும் தாங்கள் பாராட்டிற்கு உரியவர்கள்

    ReplyDelete
    Replies
    1. படங்களை பாதுகாத்து வைப்பது எனக்குப் பிடிக்கும் அவை இன்று பதிவுஎழுதும்போது நினைவுக்கு வந்தது சேர்த்து விட்டேன்

      Delete
  5. படங்களை ஆவணமாக்கி வைத்தது சிறப்பு ஐயா. சுட்டிக்கு செல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பலபடங்கள் பற்றிய குறிப்பே எனக்கு மறந்து விட்டது

      Delete
  6. சுட்டிகளுக்கு சென்று பார்க்கிறேன் ஐயா...

    ReplyDelete
  7. கதி எப்படி நாடக்மாகமாறி விட்டது என்பதுபுரியும்

    ReplyDelete
  8. கதை என்று இருக்க வேண்டும்

    ReplyDelete
  9. அருமை. ஒவ்வொரு அனுபவங்களும் நம் வாழ்க்கையை செதுக்கும் அனுபவங்கள் தான். அனுபவப் பகிர்வுக்கு நன்றி.

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    அத்துடன், தங்களது இந்த பதிவும் வலைத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  10. ஆஹா ... புகைப்படங்களை பார்க்கும்போது நாடகம் பார்ப்பது போன்ற ஒரு பிரமை ஏற்படுகிறது .... ஆனாலும் உண்மையை சொல்லப்போனால் மனசு சரியில்லை .... எதையும் படிக்க பிடிக்கவில்லை. எல்லாம் இந்த "கொரானா" பீதியால் வந்த வினை ... எனவே இதற்கு தீர்வாக உங்களிடம் உள்ள பழைய அகத்தியர் ஓலை சுவடிகளை அலசி ஆராய்ந்து அடுத்த பதிவில் "கப வாத பித்த சுர குடிநீர்" எதாவது உள்ளதா என பார்த்து சொல்லுங்கள் ... எங்களை காப்பாற்றிய புண்ணியம் உங்களுக்கு கிடைக்கட்டும்... ப்ளீஸ் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete
    Replies
    1. நான் நம்பாததை எழுத இயலாது

      Delete
  11. எனது இலக்கிய நுழைவே
    குட்டி நாடகம் ஒன்றே
    தங்கள் பதிவு
    என் உள்ளத்தைத் தொட்டது.
    படங்கள்
    நாடகக் காட்சிகளை
    முன்நிலைப்படுத்துகிறது.
    பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. னது இலக்கிய நுழைவே
      குட்டி நாடகம் ஒன்றே
      அதைபதிவிடலாமே

      Delete
  12. மனசாட்சி கதையை வாசித்தேன் ; மிக நன்று. கொஞ்சம் சுருக்கியிருக்கலாம் எனத் தோன்றியது. நீங்கள் பல கலை வல்லவர்.

    ReplyDelete
  13. கதை 1970 ல் எழுதியது நீளம்பற்றி நினைக்கவில்லை கதை படித்தபின் நாடகம்பற்றியும் சொல்லமுடியும் நாடகமும் பதிவில் இருந்ததே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  14. சொன்னால் கேட்டுக்கொள்ளலாம். எழுதினால் வாசித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த மாதிரியான கடின கூட்டு முயற்சிகளுக்கு பலாரது ஒத்துழைப்பு அவசியமாகிறது. பலரின் செளகரியங்களை அனுசரித்துப் போக வேண்டயிருக்கிறது.
    ஒரு Team work-ன் வெற்றிகள் லேசில் கிடைத்து விடுவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. அப்போது இருந்த ஆர்வத்தில் சிரமங்கள் தெரியவில்லை இந்தப்பதிவே உங்களுக்கு சமர்ப்பிக்கலாம் ஒரு கதயை நாடகமாக்கபட்ட இன்னல்களே அதிகம் சுட்டிகளை படித்தீர்களா நாடகம் உருவானதுதெரியும்

      Delete
    2. வாசித்தேன். உங்கள் நாடக அனுபவங்களை எழுதலாம் என்று நான் நினைத்து உங்களுக்குத் தெரிவித்த பொழுது அவ்வளவு ஆர்வம் காட்டவில்லையோ அல்லது ஏற்கனவே எழுதியாச்சு என்று சொன்னீர்களோ, நினைவில்லை.

      இப்பொழுது பார்த்தால் நன்றாக வந்திருப்பதில் எனக்கும் திருப்தி.

      Delete
    3. நல்ல ஆலோசனைகள் நான் ஏற்றுக் கொள்வேன் அதுவும் உங்களிடமிருந்து என்றாஅ இது முதல் தடவை அல்லவே நன்றி

      Delete
  15. நாடக முயற்சி சுவாரஸ்யம். படங்கள் இணைத்தது பலம் சேர்த்தது பதிவிற்கு.

    ReplyDelete
  16. ஒரு திருத்தம் முயற்சி அல்ல ஒரு க்ரு நாடகமானதன் விளக்கம் சுட்டிக்கு சென்று படித்திருந்தால் நகு விளங்கிஇருக்கும்

    ReplyDelete