வியாழன், 2 ஏப்ரல், 2020

கனவுகளூம் நானும்



                                             கனவுகளும் நானும்
                                              -------------------------------
   


        கனவுகளை நான் விரும்புகிறேன்  என் இயலாமைக்சள் காணாமல் போகும் கற்பனையையும் மீறிய  சில கதைகள் கிடைக்கும் என் சென்றபதிவில்கண்ணன்   அவதாரமெடுக்க மாட்டானா  என்னும்  எண்ணம் வெளியாகி இருக்கும் கனவில்அது மெய்ப்படுவது போல் இருந்தது
அது பற்றிக் கூறும் முன்  கண்ணனின்  முதல் அவதாரம் பற்றி  சொல்ல வேண்டியது  அவசியம்   அவதாரக்கதைகளில் மிகவும் அரிதாகவே மேற்கோள் காட்டப்படுவது  முதல் அவதாரம் மீனாக  பார்க்க

 திருமாலின் அவதாரம் எத்தனை என்று கேட்டால்
      பத்தென்று கூறிவிடுவான் பத்து வயது பாலகனும
    
அவதாரக் கதைகளில் பரிணாமம் பற்றி
    
எண்ணியவர் எண்ணிக்கை எவ்வளவோ
    
யூகித்துக் கொள்ளும் எண்ணம் இல்லை எனக்கு.


நீர்வாழ் உயிரினமாக மீன் வடிவம் ,பின்
நீர்நில உயிரினம் என்றாகும் ஆமையுருவம்
அதன் பின்னே மண்ணில் வாழ் மிருகம் பன்றி,
உருவமேடுத்தவர் சீறும்  சிங்க முகம் கொண்ட
நரனாக நான்காம் அவதாரம் ,அதன் பின்னெடுத்த
அவதாரங்களும்  பரிணாமத்தின் நிலை மாற்றங்களோ
என்ற என் எண்ணம் சரியோ தவறோ தெளிந்தவனில்லை.

கனவில் பரிணாம  வளர்ச்சி  ஒரு உயிரியாக்  மாறியது கண்ணுக்குத்தெரியாத கிருமியாகத் தோற்றமளித்தது இப்போதைய கோரோனாஸ் கிருமியோ?  கண்ணனின்  பத்து அவதாரங்களில்  ஒன்பதுக்கு கதைகள் உள்ளன பத்தாவது அவதாரமாககல்கி என்கிறார்கள்குதிரைமேல் பவனி வருவாராம் என்கனவில்வந்தவர் ஊழிக்கால தாண்டவ நிலைக்கு செல்ல தயாராயிருக்கும் நம் மக்கள் நிலைகோரொனாஸ் கிருமியை அழிக்கும் பல வழிகளில்  ஒன்றாக மருந்தாகவரும் கண்ணன் பழைய மீன் அவதாரத்தில்  மறைகளை மீட்க மீன் அவதாரமென்றால்இன்று சத்தமில்லாமல் கொல்லும்  கிருமியை அழிக்க எந்தரூபமோ அந்த மீன் அவதாரத்தில்
   நான்முகனும் படைக்கும் தொழில் 
         தொடர, திருமால் முனிவருக்கும் 
        அரசனுக்கும் மூலப் பொருளை 
        உபதேசித்து அருளினார்
இனி எடுக்கப் போகும்  அவதாரம்  அடிப்படை சுத்தம்பயின்று  மிகுதியாக எல்லோரிடமும் குலாவல் ஒழிக்கும்ஏதோ வித படிப்பினையாக இருக்கலாம்

(நான் எதையோ எழுதப்போக  அவரவர் ஏதோ அர்த்தம்  கற்பிக்காமல் இருக்கவே இதனை இத்துடன் முடிக்கிறேன் )     


                              
                                          ----------------------------------

[   

18 கருத்துகள்:

  1. கொரோனா என்ன என்னவோ சிந்தனைகளை உங்கள் எண்ணத்தில் தோற்றுவிக்கிறது என்பது புரிகிறது.

    பதிலளிநீக்கு
  2. பத்தோடு பதினொன்றும் உள்ளது...!

    கதைகளும்...

    பதிலளிநீக்கு
  3. கனவுகளைப் பற்றி நிறைய நான் ஆராய்ந்திருக்கிறேன். எதை அடிக்கடி நினைக்கிறோமோ அல்லது எதை இழந்து நிற்கிறோமோ அவை சம்பந்தப்பட்ட விஷயங்கள் தான் ஆழ்ந்த கனவுகளில் வருமாம். அதுவும் எப்போதாவது தான்.

    அடிக்கடி வரும் சில கனவு ஐட்டங்கள் உபயோகமில்லாத விஷயங்களையே சுற்றி வரும். காலையில் எழுந்தவுடன் கூட நினைவுக்கு வராமல் போகும் அளவுக்கு அவை ஒரு பொருட்டே இல்லாது போய் விடுமாம்.

    பதிலளிநீக்கு
  4. நானும் உங்கள் பதிவுகள் சிலவற்றில் கனவு பற்றி எழுதி இருந்தது பார்த்திருக்கிறேன் ஆராய்ச்சி எல்லாம் செய்ததில்லை எனக்கு சில நேரங்களில் வரும்கனவுகள் பதிவாகும்

    பதிலளிநீக்கு
  5. ஜி எம் பி ஐயா நலம்தானே...

    //(நான் எதையோ எழுதப்போக அவரவர் ஏதோ அர்த்தம் கற்பிக்காமல் இருக்கவே இதனை இத்துடன் முடிக்கிறேன் ) //

    ஹா ஹா ஹா படிக்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு அர்த்தம் தோணும்தான், அதை ஒண்ணும் பண்ண முடியாது.

    பதிலளிநீக்கு
  6. ''கொரோனோ'' பலருடைய தூக்கத்தையும்,வாழ்க்கையையும் கெடுத்துவிட்டது என்பது உண்மை ... மாவீரனோ என்று எண்ணவைத்தவர்களையெல்லாம் கூட கொரோனோ கொன்று போடுவதை பார்க்கும்போது அகந்தை சிந்தையை விட்டு மெல்ல மெல்ல அகலுகிறது ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
  7. முதல் ? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  8. கொரோனா என்பது ஒரு கனவாகவே இருந்து விடக்கூடாதா?

    பதிலளிநீக்கு
  9. சார் உங்கள் கனவில் வந்தது போல் இந்தக் கொரோனா விரைவில் அழிந்திட்டால் நல்லது. கனவு மெய்ப்படட்டும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. முதல் அவதாஅம்பற்றி தெரிந்ததாகனவு மெய்ப்படும்

    பதிலளிநீக்கு
  11. அவதாரக் கதைகள் பரிணாமத்தைக் குறிப்பதாய்க் கூறப்படுவது உண்டு; அது சரியல்ல. ராமன் என்ற மனிதன் ; அப்புறம் ஏன் கிருஷ்ணன் பலராமன் பரசுராமன் குதிரை சவாரி செய்பவன் என மேன்மேலும் மனிதர்கள்?

    பதிலளிநீக்கு
  12. பரிணாமத்தின் உச்சம் மனிதனென்று நிறுத்தி விட்டார்களோ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு