புகைப்பட எண்ணங்கள்
---------------------------------------
குழந்தைகளூம் மகிழ்ச்சியும்
குழந்தைகள் இருக்குமிடத்தில்
மகிழ்சிக்கு குறைவிருக்காது ஊரெல்லாம் கொரானோ பீதியில் இருக்கும்போது எதுவுமே
தெரியாத குழந்தைகள் வேண்டா நினைப்பை ஒழிக்க வைக்கும் சிலபுகைப்படங்கள் மூலம்விளக்குவது எளிதாய் இருக்கும் நாட்டில் எது நடந்தாலும்
நாம் பண்டிகைகளை மட்டும் மறப்பதில்லை
இந்த ஆண்டு என்வீட்டுக்கணி |
கணி காணும் இரட்டையர் என் மச்சினனின் பேரக்குழந்தைகள் |
எதையும் மோதி மிதித்து விடு
கைதட்டும் சப்தம் டெல்லியில் கேட்கவேண்டும்
சில புகைப்படங்கள் நினைவைக் கிளறுபவை இந்தப்படம் என்மூத்த மகனது சிறுவயதில் அநேகமாக ஒருகுச்சியுடந்தான் இருப்பான் 1970ல்
Add caption |
இந்தப்படம் நான் அம்பர்நாதில் பயிற்சியில் இருக்கும்போது எடுத்தது1957ல் என்செலவு போக ரூ 25 / கிடைக்கும் அப்பாஇறந்தபோது நான் என் வீட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றிருந்தேன் என் ஸ்டைபென்டை என் வீட்டுக்கு அனுப்பி விடுவேன் என்செலவுக்காக சிலசிறு பிள்ளைகளுக்கு ட்யூஷ்ன் எடுத்தேன் மாதம் 15 கிடைக்கும் ;
புகைப்பட நினைவுகள் சுவாரஸ்யம். கடைசி புபைகைப்பட விவரம் நெகிழ்ச்சி.
பதிலளிநீக்குசில புகைப்படங்கள் நினைவுகளைத் தூண்டும்,அவற்றில் சிலநெகிழ்ச்சியாகவும் இருக்கும்
நீக்குநினைவோட்டங்கள் அருமை ஐயா
பதிலளிநீக்குஇரண்டாவது காணொளி செயல்படவில்லை.
எல்லக் காணொளிகளும் திறக்கின்றனவே அஎந்தக் காணொளியில் குழந்தை கை தட்டுவாதாக இருக்கு
நீக்குபுகைப்படங்கள் வழி நினைவுகள் அருமை
பதிலளிநீக்குநினைத்துப்பார்க்க பல வழிகள்
நீக்குகொடுப்பதற்கும் சிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா...?
பதிலளிநீக்குஎன்றும் குழந்தைபோல வாழ்ந்துவிட்டால் துன்பம் தோன்றுமா...?
- கண்ணதாசன்...
அது மிகவும் சிரமமான ஒன்று
நீக்குபுகைப்படங்கள் சிறப்பு... சில படங்களைப் பார்த்த உடனே, அதனைப் பற்றி நீங்கள் எழுதிய இடுகை நினைவுக்கு வந்தது. (தங்க முலாம் காசுகள், இரட்டைக் குழந்தைகள்..)
பதிலளிநீக்குபத்தாண்டுகளாக வலையில் இருக்கிறேன் ஏதாவது நிகழ்ச்சிபற்றி கூறும் போது சில விஷயங்கள் ரிபீட் ஆகலாம்
நீக்குநினைவுகளைக் கிளறும் புகைப்படங்கள். எத்தனை பேர் இப்படி
பதிலளிநீக்குசேர்த்து பொக்கிஷமாய் காத்து வருவார்கள் என்று தெரியவில்லை.
இவை எல்லாமே எல்லா விதங்களிலும் அன்பின் வெளிப்பாடு தான். அந்த அன்பு உள்ளத்திற்கு என் வணக்கங்கள்.
எல்லோருடனும் அன்பு பாராட்டுவது என் மோட்டொ என்னைப்பற்றிய விவரத்தில் எழுதி இருப்பதுபொல் கண்டுகொண்டதற்கு ந்ன்றி சார்
நீக்குஉங்க வீட்டுக் கனிகளைக் காணமுடியலை. எல்லாப் படங்களும் திறக்கலை. திறந்தவரை எல்லாம் பொக்கிஷங்கள்.
பதிலளிநீக்குஇந்த ஊரடங்கு நேரத்த்ல் சம்பிரதாயதுக்கு என்று வைத்த கணி படங்கள் எல்லாம் திறக்கிறதே
நீக்குஅனைத்தும் அருமை ... "எதையும் மோதி மிதித்து விடு" காணொளியிலுள்ள குட்டீஸ்ன் விடாமுயற்சி பாராட்டுதலுக்குரியது ... இதே முயற்சி கடைசி வரை நமக்கும் இருந்தால் வாழ்வில் தோல்வி இல்லை ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
பதிலளிநீக்குஆனால் நம்மால்தான் குழந்தைகள் போல் இருக்க முடியவில்லை
நீக்குமலரும் நினைவுகள்..
பதிலளிநீக்குபுகைப்படங்கள் அருமை..
இம்மாதிரி நினைவுகளில் அடிக்கை மூழ்கி விடுவதுண்டு
நீக்குஅன்புள்ள ஐயா
பதிலளிநீக்குவணக்கம். புகைப்படங்கள் தனி மனிதனின் வரலாறு. அவன் வாழ்வின் பன்முகப் பரிமாணங்களைக்காட்சிப்படுத்துபவை. அவற்றில் எல்லாச் சுவையும் இருக்கும். காலங்கடந்து பார்க்கும்போது அவை காலங்கடக்கமுடியாத நினைவுகளை உண்டாக்கிவிடும். அவை என்றும் நினைத்து நினைத்து நாம் வாழ்ந்த வாழ்வையும் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வையும் இனி மிச்சமிருக்கும் வாழ்வையும் நமக்குள் செழிக்க வைத்துவிடும். கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் கள்ளங்கபடமில்லா ஒரு காலச்சூழலையும் நமக்கு நினைவுபடுத்துபவை. அருமை. சுவை. கசிவு. நினைவு. நிறைவு. நம்பிக்கை. பயணத்தின் நீட்சி.
ஐயா நீண்ட நாட்களுக்குபின் உங்கள் பின்னூட்டம் பெரு மகிழ்ச்சி அதென்னவோ தெரியவில்லை புகைப்படங்கள் கொண்டே வாழ்வை பின் நோக்க முடியும்அதைதான் நான் செய்து கொண்டிருக்கிறேன்
நீக்குமற்ற சமூக வலைதளங்களில் நம் பழைய புகைப்படங்களை சேகரித்து வைப்பதை விட வலைபதிவில் இது போல பதிவுகளுடன் வெளியிட்டு வைப்பது பல வகையில் சிறப்பு. அருமை அருமை.
பதிலளிநீக்குசமூக வலைத் தளங்களில் எனக்கு அத்தனை ஈடுபாடில்லை பாராட்டுக்கு நன்றி
பதிலளிநீக்குபுகைப்படங்கள் வழியாக அந்தந்த சூழலை, நிலையை மறுபடியும் மனதில் கொண்டுவந்து அடைகின்ற இன்பத்திற்கு எல்லையே இல்லை ஐயா. (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)
பதிலளிநீக்குbetter late than never வருகைக்கு நன்றி
நீக்குபுகைப்படங்கள் மூலமான பின்னோக்கல்.. நல்லதுதான். மனதுக்கும் இதம்தான்.
பதிலளிநீக்குஇதுவும் ஒரு வழி வருகைக்கு நன்றி
பதிலளிநீக்குபழைய புகைப்படங்களைப் பார்ப்பது, கஜானாவைத் திறந்து பார்க்கறது போல ! எல்லாம் பொக்கிஷங்கள் !
பதிலளிநீக்குபுகைப்படங்கள் தந்த நினைவுகள் சிறப்பு. நாம் எடுத்த படங்களைப் பார்ப்பது ஒரு வித மகிழ்ச்சி தரும் விஷயம் தான்.
பதிலளிநீக்கு