Thursday, June 4, 2020

குருவாயூரப்பன்


                                     குருபாயூரப்பன்
                                    ----------------------------
  எனக்கு ஒரு  வாட்ஸாப் பதிவு வந்தது  பொருள் விளங்காவிட்டாலும் ரசித்தேன்   எனக்கு விளங்கியபடி தமிழாக்கம் செய்திருக்கிறேன் மலையாளம்   தெரிந்தவர் கள் திருத்தலாம்

என் சந்நிதானம்வராமல் இருப்பதுi 
(இது என்  யூக்ம்  )
எனக்கு ஒன்றும்குறையாய் இல்லை
அமைதி இங்கே கோலோச்சுகிறது
உந்தல் இல்லை தள்ளல் இல்லை இவ்விடம்
சப்தம் இல்லை எங்கும்  சாந்தம் சிவம் சுந்தரம்
 ஓடி விளையாடலாம் சிரிக்கலாம்   சில நேரம்
மஞ்சாடிக் குரு உள்ள உருளியை கவிழ்த்துப் போடலாம்
ஊட்டுப்புரையில் உத்தரத்தில் ஒரு ஊஞ்சல் கட்டி இருக்கிறார் கணபதி
நாலம்பலத்தில் ஜெபம் செய்யும் பட்டத்திரியின்மேல் முண்டு
எடுத்து  தெற்கு நடையிலும்கொடி மரத்தின் கீழும்
எட்டு பக்கத்திலும் கண்கட்டி விளையாட்டு
தேவர்களும்  கோபிகையரும்தரும் வெண்ணையும்   பாலும்
தயிரும்உண்டு களிக்கலாம்   பின்  பிரம்மா மஹேஸ்வரன் 
உடனிருந்து  சம்பாஷிக்கலாம்மாலை சந்தியா நேரம் முங்கி குளித்து

செம்பையின்   பாட்டில் லயிச்சு பின் 
அத்தாழம் உண்டு மூத்திரம்கழித்து குரூரம்மாவின் 
 தாலாட்டில் என்னை மறந்து  நான் ஸ்ரீ கோவிலில்
 இருந்து அலுத்துவிட்டதுஎன்று நான்சொன்னாலும்உங்கள் துக்கம்
மறக்கவில்லை கவலை வேண்டாம் உமக்கு உணர்த்துவதெல்லாம்
எதற்கும்ஒருகாரணமுண்டு  அன்று நான் பார்த்தனுக்கு நான்  சொன்னது
எல்லாம்   நினைத்துக்   கொள்வீரே                      


                                                                                






24 comments:

  1. கேட்டதிலும் ஓர் சுகம் உண்டு ஐயா.

    ReplyDelete
    Replies
    1. பாட்டைக் கேட்டு எழுதியது மொழியாக்கம் அல்ல

      Delete
  2. தமிழாக்கம் நன்றாக இருக்கிறது ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு மலையாளம் தெரியுமா

      Delete
    2. எனக்கு உன்னத தமிழ் மட்டுமே தெரியும் ஐயா...

      Delete
  3. இயல்பான நடையில் படிக்க மிக மிக இதமாய்...வாழ்த்துகளுடன்..

    ReplyDelete
    Replies
    1. நீங்களே இதம் என்றது மகிழ்ச்சி

      Delete
  4. மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது, ஒரு சில வார்த்தைகள் அப்படியே கையாளப்பட்டுள்ளது.உ-ம். சம்பாஷித்து (நர்மம் விட்டுவிட்டது), சந்தியா-அந்தி சாயும் நேரம், லயிச்சு- ரசித்து, ஊட்டுப்புரையில்-உண்ணும் கூடம், நாலம்பலம்-பிரகாரம், கண்கட்டிவிளையாட்டு -கண்ணாமூச்சி .குர்ரம்மாவின் தாலாட்டில் உறங்கும் நான். இத்தனை நாளும் இந்த சின்ன கோவிலில் இருந்து அலுத்து போய்விட்டது. Jayakumar

    ReplyDelete
    Replies
    1. மொழிபெயர்ப்பு அல்ல சார் புரிநதை புரிந்தவாறு எழுதியதுஒரிஜினலை சிதைக்க வில்லையே பின்னூட்டத்தைல் புரியாததது நர்மம் விட்டு விட்டது பொருட்குற்றம் இருக்க வில்லையே

      Delete
    2. நர்மம் என்பது satire அல்லது jokes என்று பொருள்  கொள்ளலாம். Jayakumar

      Delete
  5. நல்ல தமிழ் ஆக்கம்.

    கிருஷ்ணா சுகமா என்று கேட்போம் :)

    ReplyDelete
    Replies
    1. எழுதும்போது எனக்குமபடி கேட்கத் தோன்றியது

      Delete
  6. உங்கள் இயல்பான கவிதைத்திறன் இதில்- இந்த மொழிபெயர்ப்பில் - தெரிகிறது.  சுவாரஸ்யமான கற்பனை.

    ReplyDelete
  7. கவிதைத் திறன் தமாஷ்தான்

    ReplyDelete
  8. நன்றாக இருக்கிறது சார். சரியாகத்தான் செய்திருக்கிறீர்கள்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மலையாளம் தெரிந்தவர்கள் இதை இன்னு சிறப்பாக் உதவுவார்களென்றுநினைத்தே வருகைக்கு நன்றி

      Delete
  9. இயல்பாக உள்ளது ஐயா. அருமை.

    ReplyDelete
  10. குருவாயூரப்பன் துணை
    சிறப்பான படைப்பு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வேறெப்படி இருக்க முடியும்

      Delete
  11. ஹஹா ..ஹஹா ... அய்யோ ராமா .... அந்த பாட்டையும் அதற்கான உங்க மொழிபெயர்ப்பையும் பார்த்து அரை மணிநேரம் விழுந்து விழுந்து சிரிச்சேன் ... முடியல சாமியோவ்.... ஆனாலும் உங்களுக்கு ரொம்பவும்தான் குசும்பு....

    ReplyDelete
    Replies
    1. அதிகம் சிரிக்காதீர்கள் வட்டு என்று நினைக்கலாம்

      Delete