Monday, August 10, 2020

பகிர்வு


                                        நான் செய்வது பகிர்கிறேன்
                                       --------------------------------------------
கொரோனாவுக்கு ஈடு கொடுக்க  நம் உடலில்நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிப்பதே வழிஉணவே மருந்து என்னும்படி நம் உணவில் கவனம்தேவைநாக்கு கட்டுக்குள் இருத்தல் அவசியம்  வரும்  செய்திகளில் ஒரு ரெடீமிங்  ஃபீச்சர் என்னவென்றால்  தொற்று வந்தவர் பலர் நலமாக திரும்புகின்றனர் இத்தனைக்கும்  இதற்காக வாக்சின் ஏதும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை  நான் அனுஷ்டிக்கும் சில வழிகள்  அளவோடு சாப்பாடு
நீராவி எடுப்பது சர்க்கரைக்குப் பதில் நாட்டுச்சர்க்கரையோ தேனோ  உபயோகிப்பது பொதுவாக இந்ததொற்று நுரையீரலை பாதிக்கும் என்பதால் மூச்சுப்பயிற்சி செய்வது  பிராணாயாமம் செய்யலாம் நான் செய்வதில்லைபதிலாக ரெஸ்பிரேடரி  பயிற்சி  செய்கிறேன்   படமும்  காணொலியும்   காண்க தினமும்  பாலில்  குருமிளகுபொடியும் மஞ்சப் பொடியும்   சேர்த்து   குடிக்கிறேன்பெரும்பாலும்  சுடு நீரே   அருந்துகிறேன் இவை எல்லா நான்  செய்வது   வாலறுத்த நரி கதை நினைவுக்கு வரக்கூடாது

     

24 comments:

 1. நல்ல முயற்சி ஐயா. வாழ்க நலம்.
  காணொளி இயங்கவில்லையே... படமாக தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. காணொளி கணினியில் கண்டேன் ஐயா.

   Delete
  2. சரி செய்து விட்டேன் ஜீ

   Delete
  3. கணினியில் கண்டதற்கு நன்றி ஜி

   Delete
 2. பிஸ்தா கிடைத்தால் வாங்கி தினமும் கொஞ்சம் சாப்பிடுங்கள் வைட்டமின் சி. zinc போன்ற மாத்திரைகளை சாப்பிடவும் நீங்கள் வெஜிடேரியன் என நினைக்கிறேன் அதனால் கீரையுடன் பாசிப்பயிறு நிறைய சேர்த்து சாப்பிடுங்கள் புரோட்டின் அதிகம் தேவை

  ReplyDelete
  Replies
  1. என் உணவு என் மனைவியின் கையில் அவள் பார்த்து பார்த்து செய் கிறாள்

   Delete
 3. பதிவர் தருமி பாதிப்பில் இருந்து இப்போதுதான் மீண்டு இருக்கிறார்

  ReplyDelete
  Replies
  1. நானும் அவர் பதிவைக்கண்டென்

   Delete
 4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி? நான் வெந்நீர் எடுத்துக்கறேன், சுதர்சன க்ரியா செய்யறேன். பெரும்பாலும் "கண்டகண்டதை" சாப்பிடுவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் உணவில் கவனமாக இருப்பது நல்லது

   Delete
 5. அனைவரும் கடைப்பிடிக்க வேண்டியவை. கூடவே வெந்நீரில் கல் உப்பு சேர்த்து தினம் ஒருமுறை தொண்டையில் படுமாறு வாய் கொப்பளிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. உப்பு நீரில் கொப்பளிப்பதும் செய்கிறோம்

   Delete
 6. கடைபிடிக்க வேண்டிய முறையைப் பகிர்ந்தது எங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. நன்றி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. இது நான்செய்வதை கூறியது

   Delete
 7. இதே முறையை எனது மாமனாரும் செய்வார்...

  ReplyDelete
  Replies
  1. இதே முறை என்றால் ரெஸ்பிரேடரி பயிற்சியா

   Delete
 8. காணொளியில் வரும் இந்தப் பயிற்சி நுரையீரலுக்கு  நல்லது.  நாங்களும் வெந்நீர்தான் குடிக்கிறோம்.  வேறு சில முன்னெச்சரிக்கைகளும் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. இதில் குறியது நாங்கள் செய்வது ரெஸ்பிரேடரி பயிற்சி சற்றே கஷ்டம் இன்ஹேலிங் அண்ட் நிறுத்துவதை சொல்கிறேன்

   Delete
 9. நாங்கள் சுடு நீர் தான் எப்போதும் குடிப்பது வழக்கம்.

  மூச்சுப்பயிற்சி செய்வதுண்டு.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. அது எப்போதும் நல்லவழக்கம்

   Delete
 10. நீங்கள் சொல்லியிருப்பது இங்கும் வீட்டில் உண்டு. எனக்கு மருத்துவர் சில வருடங்களுக்கு முன்னரே யோகாவில் கற்றுத் தரப்படும் மூச்சுப்பயிற்சியுடன் நடக்கும் போதும் கூட ஆழ்ந்த மூச்செடுத்து விடச் சொல்லுவார். அப்புறம் பலூன் ஊதச் சொல்லி அறிவுறுத்தினார். அல்லது ஊது குழல். நானும் செய்து வருகிறேன்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நன் எந்த யோகாவும் செய்வதில்லை

   Delete
 11. உங்கள் பகிர்வு தெரியதவர்களுக்கு உதவும்.
  அனுதினமும் கடைபிடித்து வந்தால் நல்லதுதான்.

  ReplyDelete
 12. இதை இன்னொரு வாட்ஸாப் செய்தியாக கருதக் கூடாது

  ReplyDelete