கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங்
நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற்றிய நாடகம் ஒன்றுகிடைத்தது அதில் கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங் இல்லை இல்லை பென்சில்லில் எழுதி இருந்ததுபடிக்க முடியவீல்லை அட்வெர்சிடியையும் அட்வான்டேஜாக
மாற்ற எண்ணினேன் இருக்கும் வரை பதிவிடுவது கடைசி பக்கங்களை முடிக்கபதிவுலகநண்பர்களைநாடுவது யார் நன்றாக முடிக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபரிசு உண்டுரூபாய் ஆயிரம் என்மறதிக்கு நான்கொடுக்கும் விலையாகட்டும்வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு நாடகம் பதிவாகும் கடைசியில் மீண்டும் போட்டி பற்றி நினைவூட்டுவேன் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள்காற்று உள்ள போதே துற்றிக்கொள்ளட்டும்
காட்சி 12
இடம்---குமரேசன் வீடு
இருப்போர் ---- குமரேசன்
சந்துரு மாணிக்கம் அருணா
குமரேசன் ----மாணிக்கம் மாணிக்கம் எனக்கு வேலை கெடச்சுடுத்து
இன்னையிலிருந்து வேலைக்கு வரச்சொல்லிட்டாங்க
மாணிக்கம் ---எல்லாம் அந்த புண்ணியவதி வந்தநேரம் அண்ணே சூட்டோடு
சூடா அண்ணியையும் இட்டாந்துடுங்க
குமரெசன்--- என்னை என்னன்னு நெனச்சீங்க அவ பெரிய இடத்துப்பெண் என்பதால அவள் செய்யுஅவமானங்களை
எல்லாம் நான் சகிச்சுக்கிடணுமா சந்துரு குளிக்க தண்ணீர் எடுத்துவை குளிச்சுட்டு காலங்கார்த்தாலே
வேலைக்கு போகணும்
சந்துரு----எல்லம் ரெடியா வெச்சிருக்கேன் அண்ணா( அருணா வருவதைக்
கவனிக்காமல் ) அண்ணா நானென் அண்ணியை பார்க்க்கவே
முடியாதா (குமரேசன் உள்ளே போகிறான்)
அருணா-----ஏங்க மிஸ்டர்குமரேசன்
வீடு இதுதானே
சந்துரு --- ஆமா எங்க அண்ணன் குமரேசன் தான் அது நான் அவர் தம்பி சந்துரு நீங்க….?
அருணா ---நாந்தான் உன் அண்ணி அருணா (சந்த்ரு உள்ளே போய் குமரேசனை அழைக்கிறான் )
குமரேசன் __அண்ணியா
எங்கே எங்கே சந்துரு அண்ணி
சந்துரு ---அப்போ இது அண்ணியில்லையா அண்ணா அப்போ
இது யார்
குமரேசன் ---யாரோ
மாணிக்கம் --வீடேறி
வந்து உன் பொஞ்சாதின்னு சொல்லுது
குமரேசன் -- ஒரு வேளை
பைத்தியமயிருக்கலாம்
அருணா ---இல்லை என்பைத்தியம் தெளிஞ்சுடுத்து என்னை மன்னிச்சிடுங்க
கும---- உன்னையா
அருணா ---மன்னிக்கவும்
தண்டிக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு
அதை சகிக்க வேண்டியது என்கடமை நான் உங்க மனைவி
குமரேசன் ---சட்டப்படி
நீயும் நானும்கணவன் மனைவி ஆனா அப்படி
நம்மனசு சொல்ல வேண்டாமா
அருணா---நடந்ததை எல்லாம்
மறந்திடுங்க என்னை மன்னிச்சுடுங்கோ
எனக்கு நீங்கதான் தெய்வம்
குமரேசன் —என்னை தெய்வம்னு நெனச்சு பக்தி செலுத்தணுன்னு அன்னக்கி உங்க வீடு தேடிவரல
ஒரு சாதாரண மனுஷனா மதிச்சு நாலு வார்த்தைபேசுவேன்னு நெனச்சுதான்வந்தேன் நீ இப்போ சொல்ற இந்த தெய்வ விக்கிரகத்தை எல்லாருமா தூக்கி எறிஞ்சு பேசி
அவமதிச்சப்போ எங்கே போயிருந்தது அருணா இந்த
ஞானம் நானொரு மனுஷன்கிறதால உங்கிட்ட இவ்வளவு
தூரம்பேசறேன் நீ பெசறதையும் அனுமதிக்கிறேன்
வந்தெ பார்த்தே என் எண்ணத்தையும் புரிஞ்சுகிட்டே வந்த வழியே திரும்பிப் போகிறதுதான்
மரியாதை
அருணா—இல்லை நான்போகமாட்டென் நீங்க என் கூட வராமல் நான் மட்டும்
திரும்பி போக மாட்டேன்
கும----ஏன் உங்க வீட்டுல
வேலைக்கு ஆள் பஞ்சமா
அருணா ---- இந்த வீட்டுல ஒரு அடிமையாய் இருக்கவாவது அனுமதி கொடுங்கள்
ராமனிருக்குமிடம்தானே சீதைக்கு அயோத்தி
குமரேசன் ---- சீதைக்கு ராமனிருக்குமிடம் சொர்க்கமாக கூட இருக்கலாம் ஆனால் எனக்கு
நீ இருக்குமிடம் நரகம் அருணா பத்தினிகள் கதையைச் சொல்லி கண்ணிர் சிந்தி என்னிடம் நீ இரக்கத்தை எதிர்பார்க்காதே
மாணிக்கம் ---அப்படிசொல்லாதே அண்ணே பெண்ணூனா பேயும் இரங்கும்
குமரேசன் –ஆனா இந்தப்பெண்மட்டும் யாருக்கும் இரக்கம் காட்டற்தில்லை மாணிக்கம்
மாணிக்கம் ----இந்தப் பெண் வாழாவெட்டியா இருந்தா யாருக்கு அந்த
அவமானம் பெண்டாட்டிய கப்பாத்த துப்பில்லாத குமரேசன்ன்னு ஊர்ல உன்னை ஏசுவாங்க
குமரேசன்—அதுக்காக இந்த பெண்ணை இங்க இருக்க விட்டா பொண்டாட்டி சொத்தில சோறு திங்கறான் குமரேசன்னு அப்பவும் ஊர்ல என்னைத்தான் ஏசுவாங்க
சந்துரு ---அண்ணி வீட்டுக்
காசே இல்லாம நாம வாழ முடியதா அண்ணா
குமரெசன்----பார் அருணா
உன்னைச் சுற்றி இருந்த பெ ரிய மனிசர்கள் என்னை விரட்டினத்சையும் என்னைச் சுற் றி இருக்கும்
சின்னமனிதர்கள் உனக்காக வாதாடறதையும் பரர்
உலக ங்கறது உங்களை மாதிரி பங்களா வாசிகளால ஆனதல்ல
அருணா ---என்வாழ்வுங்கற உங்க நிழல்லதான்னுதானே வந்திருக்கேன்
எனக்கு உங்க வீட்டுல இடம் கொடுத்துதான் ஆகணும்
குமரேசன் ---உனக்கு இந்த வீட்டுல உரிமை உண்டு ஆனா உன் சொத்தில
எனக்கு உரிமை வேண்டாம் இந்த வீட்டுக்காக ஒரு நயாபைசா கூட நீ செலவழிக்கக்கூடாது சந்துருவுக்கு அண்ணியாக
இந்த வீட்டு எஜமானியாகவேலையெல்லாம்
நீதான் செய்யணும் ஆடம்பர வாழ்க்கையை அடியோடு மறந்திடணும் ஒரு நாள் கூட உன் காரில்
நீ காரிலே சவாரி செய்யக் கூடாது
அருணா – உங்களுக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாரா இருக்கும் நான் எல்லா நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட தயங்க மாட்டேன்
குமரேசன் ---இதில நீ
எப்போது தவறினாலும் சரி அந்த நிமிஷமே நீ வந்த
வழியே திரும்பிடணும் அப்புறம் இந்த உலகமே உனக்காக
பரிந்து பேசினாலும் இந்த முடிவு மாறாது அருணா
போ வீட்டு வேலைகளை கவனி
சந்துரு –முதல்ல வலது
காலை எடுத்துவெச்சு வா அண்ணி
மாணிக்கம்--- ஆஆ அப்பாடா
நான்வரேன் அண்ணே
அருணா ---நீங்க போட்ட எல்லா நிபந்தனைகளுக்கும் நான் கட்டுப்பட்டேன்
குமரேசன் —அதுமாதிரி நீயும் ஏதாவது நிபந்த்னைபோடப் போறியா
அருணா --- நிபந்தனை இல்லை வேண்டுகோள் சந்துரு அண்ணனுக்கு கொஞ்சம்தண்ணி கொண்டுவா
சந்துரு ஓஓஒ ( ஓடுகிறான்)
அருணா --- என் சம்மதமில்லாமல் நீங்கள் என்னை
குமரேசன் ---- உன்னை------?
அருணா --- தொடக்கூடாது
குமரேசன் -- சாகப்போற என்னை கல்யாணம் செய்துக்கிட்டே உனக்கு என்மேல் எவ்வளவு
அன்பு இருக்கும்னு எனக்கு தெரியாதாஅருணா.. அதனால உன்னைத்தொடணும்னு என் ஆவி துடிக்கவுமில்லை
ஆசை அடிச்சுக்கவுமிலை போ----(போகிறான்)
அருணா --- இப்படியும்
ஆண்ளில் ஒருவரா என்ன அதிசயம் – ஹூம்
முப்பது நாள் எப்படியாவது பல்லைக்கடிச்சிட்டு கழிச்சிடணும்
திரை
தெய்வம் கிய்வம் என்றெல்லாம் பேசும் அருணா... அத்தனையும்முப்பது நாள் நடிப்புக்குதானா? - இப்போதைக்கு!
பதிலளிநீக்குஎனக்கும் தெரியலையே ஸ்ரீ
நீக்குஅருணாவுக்கு இனியாவது உண்மையான காதல் வரும்போல....
பதிலளிநீக்குஅருணவுக்கு காதல் வருமா எல்லாம் வாசகர்கள் கையில்
நீக்குமீசைக்கார நண்பரின் எண்ணம்தான் எனக்கும்
பதிலளிநீக்குநன்றி ஐயா
தொடருங்கள்
அவருக்குள்ள மறு மொழியே உங்களுக்கும்
நீக்குஅருணா உணர்வது எப்படியோ...
பதிலளிநீக்குஅது உங்கள் கையில்
நீக்குகற்பனையிலேயே உங்கள் வசனங்களை நான் நாடகமாகப் பார்க்கிறேன், ஸார்.
பதிலளிநீக்குபரட்டு உங்களிடம் இருந்து வருவது மகிழ்ச்சி தருகிறது
நீக்குஅருணா பேசும் போதே தெரிகிறது நடிப்பு என்று. கடைசியில் அது வெளிப்படவும் செய்கிறது. 30 நாட்களுக்குப் பிறகு குமரேசனின் குணத்தில் அருணாவின் மனம் மாறும் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்கு//அருணா உன்னைச் சுற்றி இருந்த பெரிய மனிசர்கள் என்னை விரட்டினத்சையும் என்னைச் சுற் றி இருக்கும் சின்னமனிதர்கள் உனக்காக வாதாடறதையும் பரர் உலக ங்கறது உங்களை மாதிரி பங்களா வாசிகளால ஆனதல்ல//
நல்லாருக்கு சார் இந்த வசனம்.
கீதா
அருணாவின் குணம் மாறுமா எனக்கே தெரியாது வாசகர்கள்கையில்
பதிலளிநீக்குஅருணாவை..பாலசந்தர் பட கதாநாயகி போல ஆக்கிவிட்டீர்கள் போலுள்ளது.
பதிலளிநீக்குஎன் ப்திவுகளில் வருபவர் யாரைப்போலவும் இருக்க வாய்ப்பில்லை
பதிலளிநீக்கு