திங்கள், 24 ஆகஸ்ட், 2020

கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங்



                       

                         கடைசியில் சில பக்கங்கள்  மிஸ்ஸிங்

நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற்றிய நாடகம் ஒன்றுகிடைத்தது அதில் கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங் இல்லை இல்லை பென்சில்லில் எழுதி இருந்ததுபடிக்க முடியவீல்லை அட்வெர்சிடியையும் அட்வான்டேஜாக
மாற்ற எண்ணினேன்  இருக்கும் வரை பதிவிடுவது  கடைசி பக்கங்களை முடிக்கபதிவுலகநண்பர்களைநாடுவது யார் நன்றாக  முடிக்கிறார்களோ  அவர்களுக்கு ஒருபரிசு உண்டுரூபாய் ஆயிரம்  என்மறதிக்கு நான்கொடுக்கும் விலையாகட்டும்வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு நாடகம் பதிவாகும்  கடைசியில் மீண்டும் போட்டி பற்றி நினைவூட்டுவேன் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள்காற்று உள்ள போதே துற்றிக்கொள்ளட்டும்

காட்சி14

இடம்குமரேசன்  வீடு

பாத்திரங்கள்  குமரேசன்   அருணா நிருபர் சந்துரு

(திரை உயரும்போது  அருணா விடு கூட்டிக்கொண்டு இருக்கிறாள் நிrருபர் வருகிறார்)

நிருபர் ---மிஸ்  அருணா நீங்கதானே

அருணா ---இப்ப மிசஸ் குமரேசன்  ஆமா நீங்கயாரு

நிருபர்  --நிமிஷக் கொலை பத்திரிக்கை நிருபர் நான்  உங்க வாழ்க்கையைக்கூட தொடர்ந்து  பத்திரிக்கையில் எழுதிட்டு வரேன்

அருணா--- ஒரு பெண்ணோட சொந்த வாழ்க்கைய நீங்க பத்திரிக்கையில் எழுதலாமா

நிருபர் --- உங்களைப்போலஒரு சீமாட்டி தூக்குக்குபோற ஒரு அன்னக்காவடியை
மணந்ததும் அதுக்கப்புறம்  அவனை மீட்டதும்எல்லாத்துக்கும் மேலாக ஏழையொடு ஏழையா இந்த நரகத்திலே வாழறதும் உலகத்துல ஒருபுதுமை இல்லையா உங்களுக்கு  ஆட்சேபணை இருந்ததுன்னா சொல்லுங்க  எழுதறதை நிறுத்திடறேன்

அருணா ----இல்லை இல்லை  எழுதுங்கள் அதுலயும்  எனக்கு ஒரு நன்மை  இருக்கு எந்த நல்ல காரியத்தையும் நிரூபிக்க இந்த  உலகத்தில் நாலு சாட்சி   அத்தாட்சி  ல்லாம் தேவையாத்தானே  இருக்கு

நிருபர் –நீங்க இப்படி வாழ்க்கை நடத்த  ஏதோ உள் நோக்கம் இருக்கணுமே (குமரெசன்வர  அருணா  உள்ளே  போகிறாள்

குமரேசன் --- ஆதிகாலத்துலே இருந்துஇந்தக்காலம் வரை  ஆணும் பெண்ணும் சேர்ந்து குடும்பம் நடத்த ஒரே ஒரு நோக்கம்தானே  எல்லோருக்கு தெ

நிருபர் --- கல்யாணம் ஆகலையாவது நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள் எனக்கு
(அப்போது அங்கு வரும் அ ருணா)
அருணா--- முதல்ல  சாப்பாட்ட முடிச்சிடுங்க  அப்புற்ம்பேசலாம்  சார் நீங்களும்   எங்க  வீட்டிலேயே சாப்பிடுங்க
நிருபர் –மன்னிக்கணும்  வீட்டிலே என்சம்சாரம் காத்து கிட்டிருக்கும் நான்  சாப்பிட்டபின்   சாப்பிடறதுல  அவளுக்கு  ஒரு திருப்தி தன்  கையால சோறு போடறதுல அவளுக்கு ஆனந்தம்   எனக்கும் தான்  நான் வரேன்(போகிறான்
சந்துரு--- (வந்துகொண்டே )அண்ணி  உங்க ரெண்டு பேருக்கும் நான் சாப்பாடு போடறேன்
அருணா--- ஊஹூம்  உங்கண்ணாவுக்கும்  உனக்கும் என் கையால நான் சாப்பாடுபோட்டாத்தான் எனக்கு  திருப்தி
கும----பெத்தவ போடணும் இல்லாட்டி பெண்டாட்டி  போடணும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க சந்துரு
சந்துரு ---- அது மட்டுமா சொல்லி இருக்காங்க  தனக்குனு  ஒருத்தி வந்தாஅண்ணன் தம்பியை மறந்திடுவான்னும் சொல்லி இருக்கணுமே
அருணா--- ஏதேது  ரொம்ப சாமர்த்தியமா  பேசறியே  அண்ணனுக்கேத்த தம்பிதான்
சந்துரு --- அண்ணனுக்கேத்த தம்பி நான்    அண்ணனுக்கேத்த நீங்க யாரு உங்களுக்கேத்த இவ யாரு
அருணா— ரொம்பக்குறும்புதான்
குமரேசன்------அடபோக்கிரி (அவனைப் பிடிக்க முயல அவன்  அருணாவிடம் ஓட அவ்ள்கையை நீட்ட குமரேசன் அருணா கைகளைப் பிடிக்கிறான்சிறிது நேரத்தில் கைகளை விட்டு ) நான் வேணும்னு உங்களைத்தொடலைஅருணா
அருணா –தொட்டால்தான் என்ன பொண்டாட்டி கையை புருஷன்  தொட உரிமை இல்லையா என்ன
குமரே---  ம்ம்ம் நீ போட்ட நிபந்தனையை  மறந்திட்டியா  அருணா
அருணா--- நான்  மறந்தால் என்ன நீங்கள் மறக்காமல் இருக்கீங்களே  அது போதாதா(என்று சமாளிக்கிறாள் )
                        திரை         

  




8 கருத்துகள்:

  1. நிருபர் நல்ல செய்தியை விதைத்து இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிருபர் மற்றவர் எண்ணத்துக்கு மதிப்பு கொடுக்கிறார்

      நீக்கு
  2. அருணாவுக்கு மனமாற்றம் ஏற்பட்டால் சரி.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. தொட்ர் வருகை போட்டியில் பங்கு பெ ற வைக்குமா

      நீக்கு