Friday, August 21, 2020

எங்களூர்                                                            எங்களூர்
                                                           -----------------

Huttidare Kannada Naadal Huttabeku..
Mettidare Kannada Manna Mettabeku..
Badukidu Jataka Bandi.. Idu Vidhiyodisuva Bandi..
Badukidu Jataka Bandi.. Vidhi Aledaadisuva Bandi..
Huttidare Kannada Naadal Huttabeku..
Mettidare Kannada Manna Mettabeku.

பிறந்தால்  கன்னட மண்ணில் பிறக்க வேண்டும் மிதித்தால்  கன்னட மண்ணை  மிதிக்கவேண்டும் என்னும்பொருளில் வரும்  பாட்டு  ஏறத்தாழ  கர்நாடகத்தின்    தேசிய கீதமாக பார்க்கப்படுகிறது 
ஆனால் தாய்மொழி  கன்னடமாக இல்லாததாலும் கன்னடியர்களுக்கு மொழிப்பற்றுஅதிகரித்து விட்டதாலும் எனக்கு சொந்த ஊர் என்று சொல்லிக் கொள்ள  எந்த ஊரும் இல்லாதது போல்  உண்ர்கிறேன் 

எனக்கு ஒரு சந்தேகம் (அதுதாஅடிக்கடி வருமே)எனக்கான சொந்த ஊர் எது  என்பெயரில் இருக்கும்  இனிஷியல் g  பாலக்காட்டில் இருக்கும் கோவிநதராஜபுரம் என்னும்  கிராமத்தைக் குறிக்கும் என் தந்தை வழிப் பூர்வீகம்  அதனால் அது என் சொந்த ஊராகுமா என் சின்ன  வயதில்சுமார் ஓராண்டுகாலம்  என்  தந்தை வழிபாட்டியுடன் இருந்திருக்கிறேன் இப்போது பூர்வீக வீடும் இல்லை பாட்டியுமில்லை  என்முகவரி தெரிந்து  கிராமக்  கோவில்  விசேஷங்களுக்கு  இன்றும்  அழைப்பு வரும்   நான் என்  சொந்த ஊர் என்று நினைத்தோ என்னவோ என் மனைவி மக்களை அங்கு  அழைத்துப்போய் இருக்கிறேன்  நான் பிறந்தது   பெங்களூர் அலசூரில்  1938 ல் நவம்பர் மாதம்  11ம் நாள்  படித்தது  அரக்கோணம் கோவை    மற்றும்  கூனூரில்    நான்  பள்ளிவிடுமுறையின் போது  பெங்களூர் வருவதுண்டு அப்போதைய பெங்களூரும் இப்போதைய பெங்களூரும்  நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்களில்  தெரிகிறது 1955-ல் பெங்களூர் விதான சௌதா கட்டிக் கொண்டிருந்தகாலம்  நான் முதன் முதலில் அங்கு கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது  வேலை செய்ததையும்(பார்க்க)  பூர்வஜென்மகடன் என்னும்பதிவில் எழுதி இருக்கிறேன் அதன் பின்  எச் ஏ எல் லில்  பயிற்சியாளனாக பணி கிடைத்தது  அதுபற்றி எல்லாம் விரிவாக பதிவுகளில் பகிர்ந்திருக்கிரேன்       
அப்போது இன்றிருக்கும் சிவாஜி நகர் பேரூந்து நிலையம் கிடையாது. ஒரு திறந்த வெட்ட வெளி திடல் மட்டுமே இருந்தது. அங்கு கழைக்கூத்தாடிகள்  வித்தை காட்டுவதைக் கண்டிருக்கிறேன்  சுவாமி சின்மயாநந்தாவின்  கீதை உபன்யாசம் 18 நாட்கள் கேட்டிருக்கிறேன் நான் சைக்கிள் ஓட்டப்பழகியதும் அங்குதான்
பெங்களூரின்  டோப்போக்ராஃபி பற்றியும் கூற வேண்டும் இப்போதிருக்கும்  மெஜஸ்டிக் பேரூந்து நிலையம் கிடையாது சுபாஷ் நகர் திடல்தான்
அரசியல் கூட்டங்கள் நடக்கும்  அங்கே மாஸ்டர் ஹிரணையா “ லஞ்சாவதார” என்னும் நாடகத்தை  மேடையேற்றி இருக்கிறார். ஒரு முறை அவர் அவர்களின் வாழ்வாதாரம் டிக்கெட் வாங்கி நாடகம் பார்க்கும்  மக்களிடம்தான் இருக்கிறது என்றும் முன் இருக்கைகளில் அழைப்பின் பேரில் வந்திருக்கும் பெரியவர்களிடமில்லை என்றும் கூற  பிரதம அழைப்பாளியாக வந்திருந்த  மல்லராத்யா  என்பவர் கவுண்டருக்குப் போய் டிக்கட் வாங்கிவந்து பின் நாடகம் பார்த்ததாகவும்  சொல்லக் கேள்வி
 எனக்கு நன்றாக நினைவில் இருப்பது அந்தக்காலத்தில் இருந்த ஜட்கா  வண்டிகளும் டாக்சிகளும் தான்  பேரூந்துகள்கூட அதிகம் இல்லை.  எச் ஏ எல்   ஐ டி ஐ,  எச் எம் டி   பி இ எல் போன்ற நிறுவனங்கள் தங்களது தொழிலாளிகளுக்காக  இயக்கிக் கொண்டிருந்த பேரூந்துகளே அதிகம்
 நான் முதன்  முதலில் எச் ஏ எல் லில் பணிக்குச் சேர வந்தபோது  கண்டோன்மெண்ட்  ரயில் நிலையத்தில் இருந்து ஒரு ஜட்கா வண்டியில் ஏறி என்னை ஒரு தங்குமிடமுள்ள ஓட்டலுக்கு அழைத்துப்போகக் கேட்டேன் எனக்கு இந்த இடம்  விடுமுறைக்கு வந்து போய் இருந்ததால் ஓரளவு பரிச்சயம் கையில் பதினைந்து ரூபாயுடன் பெங்களூர் வந்த எனக்கு அவர் கூட்டிச் சென்ற  இடம் ஒத்து வரவில்லை. மாதவாடகைக்கு அறை இல்லை என்றும்  ஒரு நாளைக்கு வாடகை அறைக்கு ரூ 40/ -என்று கூறியது தலை சுற்றாத குறை. பிறகு அவர் எனக்குத் தோதான இடத்துக்கு  அழைத்துப்போய் நான் என் பெங்களூர் வாழ்க்கையைத் துவங்கியதும் சரித்திரம்  ஆங்காங்கே பகிர்ந்திருக்கிறேன்
ஆட்டோ ரிக்‌ஷாக்கள் என்றால் என்ன என்று கேள்வி கேட்கும்காலம் அது
 பென்ஷனர்களின்  சொர்க்கம் என்று அழைக்கப்பட்ட பெங்களூரில் தான்  என் வாழ்க்கையின் துவக்கம் இருந்தது வெயில்35டிகிரியைத் தொட்டால் மழை பெய்யும் 
 பெங்களூர் பற்றிஎழுத வந்த நான் ஆங்காங்கே என்னைப் பற்றியும்  கூறுவதைத் தவிர்க்க இயலவில்லை
அந்தக் காலத்தில் பெங்களூர்  இரு பகுதிகளாக அறியப்பட்டது சிடி ஏரியா என்றும் கண்டோன்மெண்ட்  என்றும் இரு பிரிவுகள். அப்போதெல்லாம்  இந்திராநகர் கோரமங்கலா  போன்ற இடங்கள் இல்லை மஹாத்மாகாந்தி ரோட் சௌத் பரேட்  என்று அழைக்கப் பட்டது  சிடியில் இருப்பவர்களுக்கு கண்டோன்மெண்ட்  ஏரியா என்பது ஏதோ வேறு  உலகம் போலத் தெரிந்தது.  அப்போதெல்லாம்  பசவங்குடி  மல்லேஸ்வரம் போன்றா இடங்களே முக்கிய வசிப்பிடங்களாக இருந்தது ஜெயநகர் போன்ற இடங்கள் அப்போது இருந்ததாக நினைவில்லை  சிடி ஏரியாவில் கன்னடம்  பேசுபவர்கள் அதிகமும்  கண்டோன்மெண்ட் பகுதிகளில்  தமிழ்  தெலுங்கு, உருதுபேசுபவர்கள் அதிகமாயும் இருந்தனர் இந்திராநகரில் வீடுகள் கட்டி  கன்னடியர்கள் குடி புகுந்ததில் மொழிவாரியாக சமன் பெற்றனர்  
சிடி ஏரியா என்பது பல பேட்டைகளாக இருந்ததுசிக்பெட் பலேபெட், தரகுபெட்,அக்கிபெட்  காட்டன் பெட் போன்ற இடங்கள் கொண்டது.பெரும்பாலும் பிசினஸ் செய்பவர்களே அதிகம்  இருந்தனர்
 BANGALORE  TRANSPORT SERVICE சுருக்கமாக BTS  என்றழைக்கப்பட்ட பஸ் செர்வீஸ் இருந்தது.  அன்று இருந்த வழித்தடங்களில்  பேரூந்து ஏறிப் பயணம் செய்வதே ஒரு அனுபவம் BTS  ஐ பிட்ர திருக சிக்கோதில்லா ( விட்டால் மறுபடியும் கிடைக்காது) என்று செல்லமாகக் கூறுவார்கள்
அரசு அலுவலகங்கள் அட்டாரா கச்சேரி என்று அழைக்கப்படும்  இப்போதிருக்கும் விதானசௌதாவுக்கு எதிர்ப்புறம் இருந்தது
எச் ஏ எல் லில்  பயிற்சிக்காகச் சேர்ந்தபோது முதல் ஆறுமாதம்  ஜெயச் சாமராஜேந்திரா பாலிடெக்னிக்கில்  மதியம்  பனிரெண்டு மணியில் இருந்து இரவு எட்டுமணிவரை இருக்கும் நான் தங்கி இருந்த இடத்திலிருந்து மதிய உணவு முடித்துஓல்ட் புவர் ஹௌஸ் வழியே கப்பன்  ரோடுக்கு வந்து அங்கிருந்து ஜெனரல் போஸ்ட்  ஆஃபீஸ் வழியே வந்து  இப்போது இருக்கும்  விதான சவுதா அருகே இருக்கும் பாலிடெக்னிக்குக்கு  நடந்தே வருவோம் சுமார்  மூன்று கிலோ மீட்டருக்கும் மேல் இருக்கும்  நான் மதியம் அறையில் இருக்க வாய்ப்பில்லாததால்நான் எதிர்பார்த்து  எனக்கு வர வேண்டிய  ரெஜிஸ்தர் கடிதங்களையோ  தபால்களையோ பெற முடியாது ஆகவே அங்கிருந்த ஜெனரல் தபால் நிலையத்தில்  போஸ்ட் மாஸ்டரிடம்  சென்று எனக்கு வரும் தபால்களை  கேர் ஆஃப் போஸ்ட் மாஸ்டர்  என்னும்  முகவரிக்கு வந்தால் அதை நான் வந்து பெற்றுக் கொள்ள முடியும்  என்று கூறினேன்  மனிதாபிமானம் மிக்கவர்  அவர் ஒப்புதல் தந்தார் அப்போது குரியர் செர்வீஸ் இல்லை காலம் மாறி விட்டது 
   என் மாமா ஒரு மருத்துவராக இருந்தார் ஞாயிறு மதியம் நிச்சயமாக ஒரு ஆங்கிலப் படம் சௌத் பரேடில் பார்ப்பார் இன்னின்ன தியேட்டரில் இன்னின்ன மொழிப் படங்களே வரும் இந்தியாவிலேயே ஒரே வரிசையில்  அல்லது இடத்தில் இவ்வளவு தியேட்டர்கள் இருந்திருக்காது மெஜெஸ்டிக் ஏரியாவில் ப்ரபாத், சாகர், ஸ்டேட்ஸ் ,கெம்பகௌடா மெஜெஸ்டிக் , ஜெய்ஹிந்த், அலங்கார் , கீதா கல்பனா எனக்கு நினைவில் இருப்பவை இவை.  இது தவிர கண்டோன்மெண்ட் ஏரியாவில் . ஸ்ரீ, லக்ஷ்மி. ரூப்மஹால் , எல்ஜின் . ரெக்ஸ்  ஆப்பெரா  போன்ற தியேட்டர்கள் உண்டு. கன்னடப் படங்கள் சொற்பமாகவே தயாராகும்  ஹிந்தி படங்களும் தமிழ் படங்களும்  சக்கை போடு போடும் அப்போதெல்லாம் சௌத் பரேடில் கோட் சூட் அணிந்த பலரும் பாக்கெட்டில் கடலைக்காய் வைத்து உரித்து தின்று  கொண்டே  வருவது சகஜமான காட்சியாகும் ஞாயிற்றுக்கிழமைகளில்
கப்பன் பார்க்கில்  இசை நிகழ்ச்சிகள் இருக்கும்    அது அந்தக் காலம் 
எப்படி இருந்தாலும் சில கட்டிடங்கள் மாறாமல் அப்படியே இருக்கிறது உதாரணத்துக்கு சௌத் பரேடில் இருக்கும் எல் ஐ சி கட்டிடம்  மேயோ ஹால். ப்ரிகேட் ரோடில் இருக்கும்  ஆப்பெரா ஹவுஸ்( அப்போது திரைபடங்கள் திரையிடப்படும். இப்போது இல்லை)டௌன் ஹால்
கலாக்ஷேத்திர கட்டிடம்  அப்போது இல்லை இந்த டௌன் ஹாலில் 1961ம் ஆண்டு  நான்  வாழ்ந்தே தீருவேன் என்னும் நாடகத்தை எழுதி இயக்கி நடித்தும்  இருக்கிறேன் காந்திநகரில் இருந்த குப்பி தியேட்டரிலும்  நாடகம் மேடை யேற்றிருக்கிறேன்

அலசூரில் சோமேஸ்வரன்  கோவில் எதிரே இருந்த சாலையில்  சில வீடுகளுக்கடியில் கோவிலின் குளமிருப்பதாக அறியப்பட்டு அங்கிருந்த வீடுகளை அகற்றி  குளத்தை  மீட்டிருக்கிறார்கள்
அப்போதெல்லாம்பெங்களூரில்  சகல இடங்களுக்கும் நடந்தே செல்வேன்    இப்போதுஎங்கும் நடந்து போக முடிவதில்லை
பெங்களூர் நினைவுகள் நிறுத்த  இயலாதது 

ஒரு புகைப்பட தொகுப்பு  நன்றி  (இணையம் )
.40 comments:

 1. பெங்களூர் நினைவுகள் அருமை. என்னால் ரிலேட் செய்ய முடிகிறது.

  நான் மெஜெஸ்டிக், சிக்பேட் அருகில்தான் இருக்கிறேன்.

  97ல் பார்த்த ஜெபி நகருக்கும் இப்போது உள்ள நிலைமைக்குமே பயங்கர வித்தியாசம்.

  ReplyDelete
  Replies
  1. பெங்களூர் எங்களூர்தானே என்வாழ்வின் பல சுவையான விஷயங்கள் பெங்களூரில் தான் நிகழ்ந்திருக்கிறது

   Delete
 2. பயிற்சி, நாடகம் என நினைவுகள் அருமை ஐயா...

  ReplyDelete
  Replies
  1. மறக்க முடியாத நிகழ்வுகள்

   Delete
  2. நினைவலைகள் நெஞ்சில் போதும்.

   Delete
  3. நினைவலைகள் நெஞ்சில் போதும்./புர்யவில்லை பகிர் வேண்டாம் என்கிறீர்களா

   Delete
  4. மோதும் என்பது பிழையாக போதும் ஆகி விட்டது.

   நானும் தட்டுத்தடுமாறி கண்களைச் சுருக்கிக் கொண்டு தான் அந்த பிழையைப் பார்த்தேன்.

   Delete
  5. நான் படித்த போது எனக்குத்அப்படித் தோன்றவில்லை இதையே ஜோதிஜி சொல்லி இருந்தால் மகிழ்ச்சியாய் இஉந்திருக்கும்

   Delete
 3. நினைவோட்டங்களை பகிர்ந்து கொண்டது சுவாரஸ்யம்.

  //கன்னடியர்களுக்கு மொழிப்பற்று அதிகரித்து விட்டது//

  என்னைப் பொருத்தவரை பற்று என்று சொல்ல முடியாது வெறி என்பதே சரியாகும் ஐயா.

  எனது அனுபவத்தில் இந்தியர்களில் மொழி வெறி பிடித்தவர்களில் முதலிடம் கன்னடர்களே...

  ReplyDelete
  Replies
  1. என் பெங்களூர் வாழ்க்லையை முக்கியமாக இரு கால கட்டமாகப் பிரிக்கலாம் 1965 வரையும் பின் 1999 முதல் இப்போது வரையும் 1965 க்கு முன் வரையில் இருந்தகன்னடியரி எண்ணங்களும் 1990 க்கு பின்னன க்ன்னடியர்களும் மிகவும் மாறு பட்டவர்கள்மொழிப்பற்று வெறியாக மாறியதுகாவிரிபிரசனைக்கு பின்தான் இதில்தமிழர்கள் முன்னோடிகள் ஹிந்தி எதிர்ப்பில்தமிழ்ப்பற்று வளர்ந்தது கன்னடியர்களுக்கு காவிரி பிரச்சனை காரணமாயிற்று

   Delete
 4. கொஞ்சம் கொஞ்சம் முன்னாலேயே நீங்கள் சொல்லி சிலவற்றை அறிந்திருக்கிறேன்.  பதிவைப் படிக்க ஆரம்பிக்கும்போது "எந்த ஊர் என்றவனே.."  பாடல் நினைவுக்கு வருகிறது.  இனிய நினைவுகள்.

  ReplyDelete
  Replies
  1. என்பதிவுகளில் என்னைப்பற்றி நிறையவேஎழுதி இருக்கிறேன் அதனால் சிலவற்றை தவிர்க்க முடியவில்லை

   Delete
 5. சில நீங்கள் முன்னரே எழுதியிருக்கிறீர்கள் என்பதும் வாசிக்கும் போது தெரிந்தது.

  இனிய நினைவுகள் சார். நாம் பிறந்த ஊரைத்தான் சொந்த ஊர் என்று சொல்கிறார்கள் பொதுவாக. அப்படிப் பார்த்தால் எனக்கு நாகர்கோவில். ஆனால் இருந்த ஊர்களோ பல. எனவே யாதும் ஊரே யாவரும் கேளிர்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //நாம் பிறந்த ஊரைத்தான் சொந்த ஊர் என்று சொல்கிறார்கள்// - அப்படி இருக்க வாய்ப்பில்லை கீதா ரங்கன். நம்ம மனசுல இதுதான் நம்ம ஊர் என்று எந்த ஊர் தோன்றுகிறதோ அதுவே சொந்த ஊர். நான் அனேகமா எல்லா மாவட்டங்களிலும் இருந்திருக்கிறேன். என் சொந்த ஊர் என்பது திருநெல்வேலிதான். பிறந்ததனால் மட்டும் அல்ல. அங்கே வாழ்ந்தது சில வருடங்கள்தான். ஆனாலும் அதுதான் என் சொந்த ஊர். வீடு இருந்தாலும் சென்னையோ பெங்களூரோ என் சொந்த ஊர் அல்ல.

   Delete
  2. னக்கு இருக்கும் சந்தேகம் அது யாது ஊரே யாவரும் கேளீர் என்பதில்சந்தேகம் உள்ளது

   Delete
  3. சொந்த ஊர் என்று சொல்லிக் கொள்ள எதாவது mooring தேவை உறவுஅள் சொந்த வீடு என்பதுபோல் அப்படி பார்க்கும்போது என்சொந்த ஊர் பெங்களூர்தான் அதைடா எங்களூர் என்றேன்

   Delete
 6. சார் அந்த பெட் எல்லாம் இப்போதும் இருக்கிறதே. இங்கு வந்த பிறகு பலமுறை போய் வந்திருக்கிறேன். ஆனா இப்பத்தான் இந்த தொற்று வந்து முடக்கி வைத்துவிட்டது. ஹாஹாஹா.

  நீங்கள் சொல்லியிருக்கும் ஏரியா எல்லாம் தெரிகிறது. பசவனகுடிக்கும் நாங்கள் இங்கு வந்த பிறகு நிறைய போனோம். அங்குதான் என் மாமியார் மாமனார் இருந்தார்கள். என் கணவருக்கு அடுத்து அவர் தம்பி பிறக்கும் வரை இங்குதான். அவரும் கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் சென்னைக்கு வந்தார்கள்.

  நாங்கள் 2002 ல் பிடிஎம் லே அவுட்டில் இருந்ததால் ஜெயநகர், கோரமங்கலா தெரியும். ஆனால் இப்போது ரொம்பவே மாறிவிட்டது. அப்போதே ஹெப்பால் வரை வந்திருக்கிறோம். இங்கு உறவினர்கள் இப்போதும் நிறையப்பேர் இருக்கிறார்கள்.

  பெங்களூரில் நிறைய மாற்றங்கள் இப்போது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. 1960 களில் இந்திரா நகரே கிடையாது நான் அல்சூரில் இருந்து ஏரோ எஞ்சினில்வெலைக்குப் போகும்போது அல்சூர் விட்டால் எஞ்சின் ஃபாக்டரிதான் நடுவே இந்திஆ நகர் எல்லாம் பிறகு வந்தவை

   Delete
 7. ஒரு முறை அவர் அவர்களின் வாழ்வாதாரம் டிக்கெட் வாங்கி நாடகம் பார்க்கும் மக்களிடம்தான் இருக்கிறது என்றும் முன் இருக்கைகளில் அழைப்பின் பேரில் வந்திருக்கும் பெரியவர்களிடமில்லை என்றும் கூற பிரதம அழைப்பாளியாக வந்திருந்த மல்லராத்யா என்பவர் கவுண்டருக்குப் போய் டிக்கட் வாங்கிவந்து பின் நாடகம் பார்த்ததாகவும் சொல்லக் கேள்வி//

  அட! பரவாயில்லையே!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இதே வார்த்தைகளைத்தான் (கிட்டத்தட்ட) எம்.ஆர்.ராதாவும் தன் நாடகம் நடத்தும்போது பேசி, முன் வரிசையில் இருந்தவர்களை நெளியவைத்திருக்கிறார்.

   Delete
  2. நான் ஹிரணையா பற்றி முன்பே எழுதி இருக்கிறேன்பகிர்ந்தசெய்தி கேள்விப்பட்டதே

   Delete
  3. எம் ஆர் ராதா பற்றியசெய்தி இதுவரை அறியாதது

   Delete
 8. பெங்களூரில் நீங்கள் இருக்கும் இடம் அருகே தான் வித்யாரண்யபுராவில் என் அண்ணன் இருந்தார். இப்போது அவர் இல்லை. அவர் குடும்பம் அங்கு இருக்கிறது. அவர் இருந்த போது அப்போது அவ்வப்போது வந்ததுண்டு. அந்த இடமே கூட இப்போது நிறைய மாறியிருக்கிறது. உங்கள் வீட்டிற்கு வந்த அந்த இனிய தருணங்களை நினைப்பதுண்டு.

  உங்கள் நினைவுகள் எல்லாம் இனிய நினைவுகள். சில வாசித்த நினைவு இருக்கிறது.

  துளசிதரன்

  ReplyDelete
 9. நான் கூட வித்தியாரன்யபுரம்வீட்டுக்கு வந்து இருக்கிறேன் என்று நினைவு

  ReplyDelete
 10. மிக சுவாரஸ்யமான தகவல்கள். 90_ன் தொடக்கத்தில் பெங்களூர் வந்தோம். அப்போதைய பசுமை நிறைந்த அழகிய பெங்களூர் இப்போது இல்லை. அதற்கும் முந்தைய காலத்தைப் பற்றி அறிய உதவியது உங்கள் பதிவு.

  ReplyDelete
  Replies
  1. இப்போது பெங்களூர் நிறையவே மாறி விட்டது

   Delete
 11. நினைவுகள் என்றுமே இனியவை

  ReplyDelete
  Replies
  1. அவற்றில்தான் வாழ்க்கையில்பயண்மே இப்பொது

   Delete
 12. உங்கள் பாணியில், அனுபவங்களை ரசித்தபோது எங்கள் ஊர் நினைவிற்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. என் எழுத்துகளுக்கு ஒரு பாணியா ரசித்தேன்

   Delete
 13. பாலக்காடு சார்ந்த கோவிந்தராஜ புரத்தைத் தான் நேடிவ் பிளேசாக நீங்கள் கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்.

  தங்கள் பிள்ளைகளுக்குக் கூட அந்த ஊர் தான் நேடிவ் பிளேசாக இருக்க முடியும்.

  அவர்களின் குழந்தைகளுக்கு வேண்டுமானால் மாறலாம். அவர்களின் தந்தையார் பிறந்த ஊரை நேடிவ்வாகக் கொள்ளலாம்.

  ReplyDelete
 14. நான் அப்படி நினைத்ததால்தான் இன்னும் அந்த g என் இனிஷியலில் இருக்கிறது என் மகன்களின் பெயரில் அது இல்லை

  ReplyDelete
 15. கோவிந்தராஜபுரத்தைப் பற்றிதான் எழுதப் போகிறீர்கள் என்று நினைத்தேன்.பெங்களூரைப் பற்றிய நினைவுகள் குளுமை!

  ReplyDelete
 16. கோவி ராஜபுரம் பற்றி முன்பெ எழுதி இருக்கிறேன் ஊர்த்தேரை என்மக்களுக்கு காட்ட அழைத்துப்போயிருக்கிறேன்

  ReplyDelete
 17. பெங்களூர் நினைவுகள் அருமை. பெங்களூரில் சிறிது வருடங்களானாலும் பலராலும் மறக்க முடியாத ஊர். வந்தவர்களை அரவணைக்கும் ஊர்.

  ReplyDelete
 18. என்வாழ்வில் பின்னிப் பிணைந்த ஊர் மறக்கமுடியாத நினைவுகள்

  ReplyDelete
 19. உங்கள் அனுபவம் அருமை. அந்நாள் பெங்களூரையும் இந்நாள் பெங்களூரையும் காணொளி சிறப்பாக படம்பிடித்து காட்டுகிறது. அந்நாள பெங்களூரில் இயற்கை அழகு கொஞ்சுகிறது. ஆனால் அந்த அழகை இந்நாள் பெங்களூரின் வாகனங்களின் அணிவகுப்பு தின்றுவிட்டன.

  ReplyDelete
 20. அந்நாளில் இல்லாத வசதிகள் இந்நாளில் இருக்கிறதே

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் !!!

   Delete
  2. இருந்தும் ரசிப்பது என்னவோ அந்த நாளைத்தான்

   Delete