கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங்
===================================
நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற்றிய நாடகம் ஒன்றுகிடைத்தது அதில் கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங் இல்லை இல்லை பென்சில்லில் எழுதி இருந்ததுபடிக்க முடியவீல்லை அட்வெர்சிடியையும் அட்வான்டேஜாக
மாற்ற எண்ணினேன் இருக்கும் வரை பதிவிடுவது கடைசி பக்கங்களை முடிக்கபதிவுலகநண்பர்களைநாடுவது யார் நன்றாக முடிக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபரிசு உண்டுரூபாய் ஆயிரம் என்மறதிக்கு நான்கொடுக்கும் விலையாகட்டும்வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு நாடகம் பதிவாகும் கடைசியில் மீண்டும் போட்டி பற்றி நினைவூட்டுவேன் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள்காற்று உள்ள போதே துற்றிக்கொள்ளட்டும்
காட்சி 15
பாத்திரங்கள்—அருணா குமரேசன் சபாபதி
மாணிக்கம்
(அடுப்புப் புகையில் கண்களைக்
க்சக்கிக் கொண்டு இருக்கிறாள் அருணா அங்கு
வரும் சபாபதி)
சபா---- என்ன புகை என்ன புகை -----
அருணா (திடுக்கிட்டு ) நீயா
--- ஊரிலே தாத்தாசௌக்கியமா
சபா—ஊரில எல்லொரும் சௌக்கியம்தான்
ஆனா இங்க உன்னை சௌக்கியம் இலாம பர்க்க என்னால முடியலை சந்தணமும் சாம்பிராணியும் புகையறதைத் தவிர வேற ஏதாவது புகையை உன் வீட்டில்
நி பார்த்ததுண்டா
அருணா – ஏன் என்னைச்சுற்றியிருந்த
உங்க மனசு எல்லாம் புகையறதை நான் பார்த்திருக்கேனே இப்போ புகையில்லாம நீ தூபம் போடறதையும் பார்த்திட்டுதானே இருக்கேன்
சபா--- அருணா நானிங்க எதுக்காகவும்
தூபம் போட வரலை நீ படாத படுபடறேன்னு கேள்விப்பட்டு
ஆறுதலா நாலு வார்த்தை பேசிட்டுப்போகலாமேன்னுதான்
வந்தேன் நி நல்லப டியா வாழணம்னு நெனக்கிற ஒரே
நண்ப நாண்டான் அருணா
அருணா—அது நிஜமாயொருந்தா முதல்ல
நீ வெளியே போயிடு
சபா--- உன் வீட்டுக்கு நான்வந்தது தப்பா அருணா
அருணா – அவர் இல்லாத நேரத்தில
நீ வந்ததுதான் தப்பு இன்னும்கொஞ்ச நேரத்தில
அவர் வந்திடுவார் ……அப்புறம் நீயும் தாராளமா
வரலாம்
சபா--- காவல்காரன் இருக்கறப்போ முட்டாள்கூட
திருட வரமட்டான் அருணா
ச் சபா --- எவன் கிட்டயோ எதுக்காகவோ
நீசெய்துகிட்டஒப்பந்தத்துக்காகநமக்கிருக்கிற ஒப்பந்தம் அறுந்து போகணுமா அருணா காலக் கொடுமையாலோ சந்தர்ப்ப சூழ் நிலையாலோ நீ வேறொருத்தனுக்கு வாழ்க்கை
பட்டதால நம்ம காதலை நாம்மறந்துடத்தான் வேணுமாஅருணா
அருணா---- காதலா உனக்கும் எனக்குமா அடப்பாவி
உன் நல்லகாலம் அவர் வீட்டிலே இல்லை
சபா---இருந்திருந்தால்----
அருணா --- முன்னே செய்யாதகுற்றத்துக்காகதூக்குக்கு
போகதயாரா இருந்தவர் இப்ப உன்னைக் கொலை செய்துட்டு தூக்குக்கு போக தயாராய் இருப்பார்
சபா---போனால்தான் என்ன சாவித்திரியல்லவா
நீ மீட்டுட்டு வந்துடமாட்டியா அருணா நீ
இனிமேமீள முடியாது நீ நென்சக்கிறதுபோல உன்னையும்
என்னையும் இந்தநிலையில்பார்த்தா என்ன நடக்கு
ம்தெரியுமா உனக்கு விபச்சாரி பட்டம் கட்டி
உன்னை உன் வீட்டுக்கு அனுப்பி விடுவான் அப்புறம் நீயே
கதின்னுஎன் கால்ல நீ வந்து விழணும் எனக்கு வேண்டியதும் அதுதானே அருணா மன் இருக்க வேண்டியது காட்டில மீ
இருக்க வேண்டியது குளத்தில நீ இருக்கவேண்டியதுஎன்
வீட்டிலே (அவள் கையைப்பற்றி இழுக்கிறான்)
அருணா –பாவி விடுடா கையை(என்று
கத்தும்போது மாணிக்கத்துடன்குமரேசன் )
சபா--- விடு கையை இது நியாயமில்லை நீ இன்னொருத்தன் மனைவி
கும--- ( ஆத்திரத்துடன்)துரோகி
( அருணா திகைக்கிறாள்)
சபா--- நீங்க வந்தீங்க நல்லதாயிற்று இல்லையென்றால் நடக்க்க் கூடாதது நடந்திருக்கும்
உம--- நய வஞ்சகம்
அருணா—ஆங்---
சபா—நான் அப்போதே சொன்னேன் கேட்கலை
கும--- முட்டாள்
சபா --- நநான் கொஞ்சம் யோக்கியனா இருண்டடால் உங்க மானம் தப்பிச்சுது
குமரே----பாவம்
சபா ---பெண்களை நம்பாதேன்னு சும்மாவா சொன்னாங்க
கும---நம்பிக்கை துரோகி
அருணா ----நான்சொல்றதைக் கொஞ்சம்
கேளுங்க
சபா –நியாயத்தை அவர் கேட்டபிறகு யார் சொல்றதை கேட்கணும் மன்னிப்புக்கு வழியப் பாரு
கும --- மன்னிப்பா ஒருத்தனுக்கு மனைவி என்பதை
மறந்த பின்
சபா--- மானமுள்ள எந்த ஆண்தான் இதைமன்னிப்பான் வீட்டை விட்டு
துறத்தவா இந்த உலகத்திலேயே இருக்கக்கூடாது
அருணா – ஐயையொ நான் நிரபராதி
சபா --- அப்போ நானா குற்ற வாளி
கும--- அது எனக்கு தெரியாதா கண்ணாலே
பர்ட்தஹுக்குபின் சாட்சியா வேணும் மிஸ்டர்
சபாபதி உங்களுக்கு கடைசியா ஏதாவதுசொல்லணம்னு
இருந்தழ் சொல்லிடுங்க
சபா--- இதுக்கு மேலே என்னசார்
சொல்றது எல்லாத்தையும்நீங்கதான் பார்த்திட்டு வந்தீங்களே
கும --- ஆனால் நீ மட்டும்பார்க்ககூடததை
பார்க்க வந்தியாடா முட்டாள்
சபா --- என்ன என்னயா முட்டாள்னு----
கும—பின்னே வேறொருத்தன்பெண்டாட்டி
மேல ஆசை வைக்கிறவனுக்கு என்ன பேர் துரோகி ஏழைகளோடவாழ்க்கையில் விளையாடினதுபோதாம மானத்தோடும்விளையாட வந்திருக்கே ( என்று சொல்லி அறைகிறான் )
சபா—ஐயையோ நான் நிரபராதி(என்று சொல்லிஒடப்பார்க்கிறான் மணிக்க
அவன்சைப் பிடித்து குமரேசனிடமே தள்ளுகிறான்
) என்னை ஆளுக்கொரு பக்கமா உருட்டறீண்ங்களே நான் என்ன பந்தா
மாணி--- –இல்லை இந்தௌலகத்திலே
நடமாடக்கூடாத விஷ ஜந்து
கும--- பம்பையும் தேளையும் கண்ட இடத்ட்க்ஹிலேகொல்லணும் மாணிக்கம் (சபாபதி தப்பி ஓடி விடுகிறான் ) அவன்
நல்ல காலம் தப்பித்துவிட்டான்
அருணா—அதி என் நல்லகாலம் அவ்ன்
மட்டும் தப்பித்து ஓடி இருக்காவிட்டால் என்ன செதிருப்பிர்களோ நானல்லவா உங்களை இழக்கவேண்டி இருக்கும்
மாணி--- நல்ல ஆளுண்ணே முத்ல்ல நிங்கபேசினதப் பார்த்தப்போ அண்ணி
மேலயே சந்தேக்ப்பட றீங்களோன்னு பயந்திட்டேன்
அருணா – வேற யாராவது வந்திருந்தா
என் கதி என்ன வாகி இருக்கும்
கும --- யரும் ஊரிலே உள்ள ஆண்கள் யோக்கியமானவர்கள்ன்னு நெனச்சு கூம்பம் நடத்தறதில்லை
அருணா இந்தச் விஷயத்திலே மனுஷனுக்கு மனைவி மேல நம்பிக்கை வேணும்
அருணா—நீங்க மனிடரில் தெய்வம்
கும – இதுக்கு போய் மனுஷன் தெய்வமாக வேண்டாம் மனுஷனா இருந்தாப்போதும்
திரை
இந்த நேரத்தில் அந்த நிருபர் ஞாபகம் வந்தது...!
பதிலளிநீக்குஅவர் அங்கு வரவே இல்லையே
பதிலளிநீக்கு//மனுஷன் தெய்வமாக வேண்டாம் மனுஷனா இருந்தாப்போதும்//
பதிலளிநீக்குஸூப்பர் வசனம் ஐயா தொடர்கிறேன்...
பாராட்டுமட்டும்போதாது போட்டியிலும்பங்கு வேண்டும்
நீக்குதொய்வின்றி, மிகவும் விறுவிறுப்பாகச் செல்கிறது. தொடர்ந்து வருகிறேன்.
பதிலளிநீக்குஇருந்து என்ன வருவோர் எண்ணிக்கை கூடவில்லையே
பதிலளிநீக்குஅடடா.....
பதிலளிநீக்குஎண்ணிக்கைக்கு வந்துவிட்டோம் :))
எண்ணிக்கையோடு கருத்தும்வேண்டுமே
பதிலளிநீக்கு