Monday, January 11, 2021

என் பதிவுகளீல் இருந்து சுட்டது

 


என் பதிவுகளில் இருந்தே சுட்டது

வாழ்க்கையில் என்றாவது ஒருவன் திருமணம் செய்து கொள்ளவேண்டும்.

ஏனெனில் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியை நாடுவது முடியாத காரியம்.

                                                --- யாரோ ---

பிரம்மச்சாரிகளிடம் அதிக வரி வசூல் செய்யவேண்டும் .சிலர் மட்டும் அதிக சந்தோஷத்துடன் இருப்பது நியாயமல்ல.   --- ஆஸ்கர் வைல்ட்.---

 

பணத்திற்காக திருமணம் செய்யாதே. அதைவிட எளிதில் கடன் கிடைக்கும்

                                      ---ஸ்காட்டிஷ் பழமொழி---

நான் தீவிரவாதிகள் பற்றிக் கவலைப் படமாட்டேன். எனக்குத் திருமணமாகி இரண்டு வருடமாகிறது.       -----சாம் கினிசன்

 

பெண்களைவிட ஆண்களுக்கு நல்ல காலம் அதிகம். அவர்கள் தாமதமாகத் திருமணம் செய்கிறார்கள். . பெண்களை விட சீக்கிரம் இறக்கிறார்கள்,

                                      ---எச். எல் .மென்கென் ---

புது மணத் தம்பதிகள் புன்னகைக்கும்போது ஏன் என்று புரியும்.பத்தாண்டுத் தம்பதியர் புன்னகைக்கும்போது ஏன் என்று தோன்றும்.---யாரோ--

காதலுக்குக் கண் இல்லை. கலியாணம் கண் திறக்க வைக்கும்.--யாரோ--

                                      

மனைவிக்குக் கார் கதவை ஒருவன் திறந்து விடும்போது. ஒன்று நிச்சயம் அது புதிய கார் அல்லது அவள் புதிய மனைவி.

நான் என் மனைவியை எங்கு அழைத்துச் சென்றாலும் தவறாமல் வீட்டுக்கு திரும்பி  வந்து விடுகிறாள்
.

நான் என் மனைவியை எங்கள் திருமணநாள் விழாவுக்கு எங்கு போக வேண்டும் என்று கேட்டேன். எங்கானாலும் இதுவரைப் போகாத இடத்துக்கு என்றாள். அப்படியானால்  சமையல் அறைக்கு ?” என்றேன்.

                                                  -----யாரோ

எப்பொழுதும் என் மனைவியின் கையை விட மாட்டேன். விட்டால் ஷாப்பிங்  போய்விடுவாள்.

குப்பைத் வண்டி பின்னால்  நான் தாமதமாகி விட்டேனா?’ என்று கேட்டுக் கொண்டு ஓடிய என் மனைவி பின்னே ஓடிச் சென்ற நான்,“ இல்லை . ஏறிக்கொள்  என்றேன்.

 

அவன் திருமணம் செய்து கொள்ள ஏன் பயப் படுகிறான் என்று சொன்னான். திருமண மோதிரம் சிறிய கை விலங்கு போல் தெரிகிறதாம்

 

உன் மனைவி முன் வாசலில் இருந்தும்  உன் செல்ல நாய் பின் வாசலிலிருந்தும் அனுமதி வேண்டி இரைந்தால் யாரை முன்னால் உள்ளே விடுவாய்?” . நிச்சயமாய் என் நாயை அது அனுமதிக்கப் பட்டவுடன் குரைப்பதை நிறுத்தும்.”                 ----- யாரோ---

-

ஒருவன் ஒரு வேண்டுதல் கிணறுக்குள் வேண்டிக் கொண்டு சில்லறையை வீசினான். அவன் மனைவியும் வேண்டுதலுக்காக கிணற்றுக்குள் எம்பிப் பார்த்தபோது தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டாள். அவன் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான்“ அட... இவ்வளவு சீக்கிரம் வேண்டுதல் நிறை வேறி விட்டதே 

 

 

 

 

  




14 comments:

  1. சிரிக்க வைக்கின்றன.   ஆமாம்...  அம்மா படித்தார்களா இதை?

    ReplyDelete
    Replies
    1. அவளைப்பற்றி நான் எழுதி இருப்பதைக்காட்டினால் ம்ட்டுமே படிப்பாள்

      Delete
    2. அவளைப்பற்றி நான் எழுதி இருப்பதைக்காட்டினால் ம்ட்டுமே படிப்பாள்

      Delete
  2. யாரோ - தாங்கள் தானே...? ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. இவற்றை பதிவிட்டது நான்தான் ஹாஹா

      Delete
  3. உங்கள் மனைவி நீங்கள் எழுதும் பதிவுகளை படிப்பதில்லை என்பது இந்த பதிவில் தெரிகிறது.

     Jayakumar

    ReplyDelete
    Replies
    1. இதைப் படிக்கவில்லை படித்தாலும்பாதகமிராது

      Delete
  4. எல்லாமே ரசனையாக இருந்தது.

    ReplyDelete
  5. ஆணாதிக்க சமுதாயமாய் இருப்பதால் பலவாறு பெண்களைக் கிண்டலடிப்பதும் மட்டந் தட்டுவதும் வழக்கம் . மனைவி இல்லையென்றால் ஆணுக்கு எவ்வளவோ கஷ்டம் .

    ReplyDelete
    Replies
    1. பெரும்,பாலும் நடப்பவைதானே

      Delete
    2. மனைவி இல்லையென்றால் ஆணுக்கு எவ்வளவோ கஷ்டம் என்னைபொறுத்தவரை மிகச்சரி

      Delete
  6. நம்ம சமூகத்திலேயே பெண்ணை மட்டம்தட்டுவது மிக அதிகம். நம்மைச் சொல்லாத்தால் ரசிக்கும்படி இருந்தது.

    ஆனால் மனைவி இல்லாவிட்டால் நம்மால் மேற்கொண்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வது கடினம்.

    ReplyDelete
  7. நம்மைச் சொல்லியும் எழுதி இருக்கிறேன்

    ReplyDelete