சனி, 5 மார்ச், 2022

நினைவுகள்

 

 

நண்பர் ஸ்ரீராம் ஒரு முறை  எழுதி இருந்தார்  கடந்த ஆண்டின் நிகழ்வுகளைச் சிந்தித்துப் பார்ப்பது நல்லதுதான். சந்தோஷ நினைவுகளை நினைவில் நிறுத்தி, அல்லவைகளை அகற்றி நேற்று என்பது உடைந்த பானை, நாளை என்பது மதில் மேல் பூனை, இன்று என்பதே கையில் உள்ள வீணை என்று இன்றைய தினத்தில் வாழ்பவன் நான்!

கேட்க படிக்க நன்றாக  இருக்கிறது சாத்தியமா என்பதே கேள்விக்குறி நடந்தவைகளை மறந்து இன்றைய சிந்தனையில் மட்டுமிருப்பது  முடியாது என்றே தோன்றுகிறது அதுவும் என் போன்றோருக்கு நேற்றைய நிகழ்வுகள் நன்றுபோல் தோன்றும்   நாளை என்பது ஒரு வித அச்சத்தை தருவதாகும்  அச்சம் என்றால் பலரும் நினைப்பது போன்ற அச்சமல்ல  எனக்கு வாழ்வில் செய்து முடிக்க வேண்டிய கடமைகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன  இனி நான் இருந்தாலும் இல்லாது போனாலும் ஒன்றுதான்

 ஒரு முறை என் வீட்டில் பூத்த பூ பற்றி எழுதி இருந்தேன்

 சுவரேறிப் படர்ந்து பூத்துக் குலுங்கின

வெள்ளை ரோஜாவும் மல்லியும் முல்லையும்

பல்வேறு நிறங்களில் கண் சிமிட்டும்

செம்பருத்தி;காணக் கண் கோடி வேண்டும்.

 

ஆண்டுகள் பலவாகிப் போக மராமத்து

வேலைக்காக செடிகளையும் கொடிகளையும்

அகற்றச் சொன்னார் மேஸ்திரி.

 

மீண்டும் நடும் செடிகளும் புதுப் பொலிவுடன்

பூக்கத்தானே போகிறது எனும் நம்பிக்கையில்

பழைய செடிகள் வெட்டிக் களையப் பட்டன

 

யார் கண் பட்டதோ, நாட்கள் பல ஆகியும். பூ மட்டும் பூக்கவில்லை

பூச்செடிகளிலும் மலடு என்றுண்டோ.?

 

தளராது நீர் ஊற்றி,நாளும் காத்திருந்து காத்திருந்து

 


தளராது நீர் ஊற்றி,நாளும் காத்திருந்து காத்திருந்து

ரோஜாச் செடியொன்றில் செந்நிறத்தில் மொட்டவிழ்ந்து

பூ ஒன்று பூக்கக் கண்டதும் ஆஹா..கொள்ளை அழகு.

ஜென்ம சாபல்யம் அடைந்திருக்கும் பூச்செடியும்.

 பொதுவாக இது ஒரு மகிழ்வான நிகழ்வு என்றே  நினைத்தேன்

 ஆனால் அதற்கு ஒரு பின்னூட்டம் இப்படி இருந்தது!

 

பூத்தால் எனக்கென்ன

பூக்காவிட்டால்தான் என்ன

மனிடர் நினைப்பை எல்லாம்

 என்மேல் ஏற்றி சொல்லல் எதில் சேர்த்தி

பூக்காமல் இருந்தாலே நிம்மதி

 கொய்ய வருபவனைப் பார்த்து

 குலை நடுங்காமலாவது  இருக்கலாம்

 [

 

 

     .

 



25 கருத்துகள்:

  1. பூவுக்கான பின்னூட்டம் டாப்!  யார் எழுதியது அது?

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கவிதை அதற்கு வந்த பின்னூட்டம் இரண்டுமே சிறப்பு!

    பதிலளிநீக்கு
  3. கவிதை அருமை ஐயா
    பின்னூட்ட கவிதையும் வேறொரு நியாயம் சொல்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையும் வேறொரு நியாயம் சொல்கிறதேஓ அப்படியா..

      நீக்கு
  4. இன்று என்பதே கையில் உள்ள வீணை என்று இன்றைய தினத்தில் வாழ்பவன் நான்!.......மிகவும் அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  5. பூச்செடிகளும் புனர் ஜென்மம் எடுத்தன. புனர் ஜென்மத்தில் பூக்காமல் இருந்தாலாவது வெட்ட மாட்டார்கள் என்று செடிகள் நினைத்திருக்கலாம். ஆனாலும் விதி  விடவில்லை. பூக்கள் பூத்தன. செடிகள் பிழைத்தன. பூக்கள் மடிந்தன. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. சார் பூ பற்றிய உங்கள் கவிதை அருமை என்றால் அதற்கான பின்னூட்டம் செம.

    பின்னூட்டம் கட்சி நான். பூக்களைப் பறிப்பதைல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதிப்பாராட்டுதான் எனக்கு பூவை ஏன் பு வைப்ப்தில்லை

      நீக்கு
  7. இன்றைநேற்று என்பது உடைந்த பானை, நாளை என்பது மதில் மேல் பூனை, இன்று என்பதே கையில் உள்ள வீணை என்று இன்றைய தினத்தில் வாழ்பவன் நான்!வீணையை மீட்டியிருப்பதே//

    மிகவும் ரசித்த வரிகள்.

    பூ பற்றிய உங்கள் கவி வரிகளும் பின்னூட்டமாய் வந்த கவி வரிகளும் அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று என்பது உடைந்த பானை, நாளை என்பது மதில் மேல் பூனை, இன்று என்பதே கையில் உள்ள வீணை இதையே வேறு விதமாகவும் சொல்துண்டு

      நீக்கு
  8. பழைய நினைவுகள் நல்லதை நினைப்பது நல்லதுதானே.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  9. உங்கள் எழுத்தும் பதில் கவிதையும் அருமை

    பதிலளிநீக்கு