நான் என்னிடம் விரும்புவது.
மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
நீக்க முயலும் என் முனைப்புகளை உடை.
எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிடு.
வட்டமாய் சிறகடித்து மேலிருந்து கீழே நேராய்
இரையை நாடும் பறவையைப் போல் சொல்ல
நினைக்கும் புள்ளியை நானடையக் கற்றுக்கொடு.
நான் படும் வேதனைகளை, வலிகளை
அடுத்தவன் முன் கொட்டித் தீர்க்க நான் வாய்
திறந்தால் அதனை அக்கணமே மூடிவிடு.
அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வை கூடவே
நானும் தவறிழைக்கலாம் என என்னையும் எண்ண வை.
நான் பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.
அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்.
இவ்வையகம் விட்டு நான் அகலும்போது என்னை
நண்பனாய், நல்லவனாய் நினைக்க நால்வர் வேண்டும்.
போல் நினைவுகள் துணை போயின
நல்ல எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்.
பதிலளிநீக்குஅவரவர் வாழ்க்கையை அவரவரே வாழவேண்டும் என்று சொல்லியிருப்பது சிறப்பு
அப்படித்தானே இருக்கிறது
நீக்குஅத்தனை வரிகளும் சிறப்பு. நல்ல விஷயம் சார். ஆமாம் அவரவர் வாழ்க்கையை அவரவரேதான் வாழ வேண்டும். அனுபவங்கள் கற்றுத் தரும் படிப்பினைகள் ஏராளம் தான் ஆனால் அதை நாம் புரிந்து கொண்டு விட்டால் நல்லதுதான்.
பதிலளிநீக்குகடைசிவரிகள் சிறப்பு
கீதா
புரிந்து கொள்ள ஒரு முயற்சி
நீக்குநல்ல எண்ணங்கள். ஆனால் இப்படி இருந்தால் இயல்பிலிருந்து விலகி விடுகிறோமோ, அதைத்தான் விரும்புகிறோமோ என்றும் தோன்றுகிறது.
பதிலளிநீக்குஇயல்பில் இருக்கு சில குண்னங்களை இண்ட்ராஸ்பெக்ட் செய்ய்லாமே
நீக்குநல்ல எண்ணங்கள் சார். ஆனால் நடைமுறையில் எல்லா சமயங்களிலும் மனம் நினைத்தாலும் வேண்டினாலும் யதார்த்தத்தில் கடினமாகத்தான் இருக்கிறது.
பதிலளிநீக்குதுளசிதரன்
அதுதான் தொட்டில் பழக்கமோ
பதிலளிநீக்குநல்ல எண்ணங்கள்.
பதிலளிநீக்கு'இவ்வையகம் விட்டு நான் அகலும்போது என்னைநண்பனாய், நல்லவனாய் நினைக்க நால்வர் வேண்டும்.' இது இருக்குமாறு நடந்தாலே போதும்.