செவ்வாய், 8 மார்ச், 2022

உலகமே நீ வாழ வந்தவன்(ஒருமீள் பதிவு)

 

காலையில் கண் விழிப்புக் கொடுத்ததுஇது காலையா.?இன்னும் வெளிச்சம் வரவில்லைதோட்டத்து மாமரத்துக் குயில் கூவவில்லை.புள்ளினங்களின் இரைச்சல் இல்லை..! இன்று உலகம் அழியும் தினமல்லவா. ? எங்கும் கும்மிருட்டுலைட்டைப் போட்டால் எரியவில்லைமின் தடையா இல்லை எதுவுமே இயங்கவில்லையாஅருகில் படுக்கும் மனைவியையும் காணோம்இருந்தாற்போல் இருந்து தலை சுற்றுவதுபோல் தோன்றுகிறதுநான் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன் நடக்காமல் ஓடாமல் ஏன் எந்த இயக்கமுமில்லாமல் எங்கேயோ இழுக்கப் படுகிறேன்.உலகம் எந்த அறிகுறியும் காட்டாமல் அழியுமா.? பூகம்பம் இலலைபுயல் இல்லைஇடி இல்லை மழை இல்லைஎந்த சப்தமும் இல்லாமல் எல்லாம் போய்விட்டதுஇருட்டின் அந்தரங்கத்துக்கே இழுக்கப் படுகிறேன்  என்னதான் நடக்கிறது பார்த்துவிடலாமேஅந்தகாரத்தில் ஒரு குதிரை அதன் மேல் ஒருவன்...! இவன் தான் கலி புருஷனோ.? எல்லாவற்றையும் அழித்துவிட்டு மனித குலம் 
தழைக்க என்னை மட்டும் விட்டு விட்டானோஎன் ஒருவனால் மனித குலம் எப்படித் தழைக்க முடியும்எனக்கு மனைவி வேண்டுமே. ... மெள்ள மெள்ள இருள் விலகுகிறது.ஒளி சிறிது சிறிதாய் அதிகரிக்கிறதுமெல்ல யாரோ நடந்துவ
 ...ரும் சப்தம் கேட்கிறதுஅருகில் வந்தவளைப் பார்த்தால்.... என் மனைவி. “ இந்த உலகம் தழைக்க நம் இருவரை மட்டும் வாழ விட்டிருக்கிறான் அந்தக் கலி புருஷன் “என்ற என்னைப் பார்த்து
” ஏதாவது கனா கண்டீர்களா.?” என்றாள் என் மனைவி











ரும் சப்தம் கேட்கிறதுஅருகில் வந்தவளைப் பார்த்தால்.... என் மனைவி. “ இந்த 

7 கருத்துகள்:

  1. நாம் பயங்கரம் என்று நினைக்கும் கனவு.  சிலர் அதுதான் விடுதலை, அதன் மகிழ்ச்சியே தனி என்கிறார்கள்.  அவர்கள் அதை அனுபவித்தவர்களாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் அதை அனுபவித்தவர்களாம்.நீங்கள் என்ன நினைக்கிறீரகள்

      நீக்கு
    2. அவர்கள் அதை அனுபவித்தவர்களாம் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

      நீக்கு
  2. கொஞ்சம் பயமான கனவுதான். கனவு அழகான கதையாக விரிந்திருக்கிறதோ சார்?! அனுபவக் கதை.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஆகா! குதிரையில் வந்த கலி புருஷன் உங்களையும் மனைவியையும் காப்பாத்தி விட்டானே அவனுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு