ஞாயிறு, 13 மார்ச், 2022

உலகமகளிர் தினம்

 உலகமகளிர் தினம் என்றால் முதலில்நினைவுக்கு வருவதுஎன் மனவி தான்

உ  லக மகளிர் தினத்தை ஒட்டி என்ன எழுதலாமென்று யோசித்தபோது எனக்குத் தெரிந்த என்னைத் தெரிந்த வலை உலக மகளிர்களின் பட்டியல் தயார் செய்து குறிப்பிட்ட சில கேள்விகளை குறிப்பிட்ட சிலரிடம் கேட்கலாம்  என்று தோன்றியது உடனே செயல் படுகிறேன் பட்டியல் தயார் செய்யும்போது பல வலைப் பதிவர்களை  என்பதிவின் பின்னூட்டங்களில் காணமுடிவதில்லை ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறேன்  பல வித பதிவர்களை பின்னூட்டங்களில் பார்த்தாகி விட்டது  சிலர் பற்றிய சில அபிப்பிராயங்களும்  உண்டு அவை சரியாக இருக்கலாம் தவறாக ஆக இருக்கலாம்  என் அபிப்[பிராயங்கள் முக்கியம் அல்ல

முதலில் பட்டியல் பார்ப்போம் மனதில் வரும்பெயர்களே முதலில்  வேறு முக்கியத்துவமில்லை எல்லோரு சமமே

1)   கீதா சாம்பசிவம்   இவரைஒரு முறை அவர் வீட்டில் சந்தித்திருக்கிறேன் ஒரு பதிவர் இவரை துறை போகியவர் என்று குறிப்பிட்டு  இருந்தார் இவரிடம்  நான்கேட்க விரும்பும்  கேள்வி நீங்கள் ஆன்மீகவாதியா  ஆஸ்திக வாதியா? எந்தக் கேள்விக்கும்  ஒரு பதில் இவரிடமிருக்கும் எனஎதிர்பார்க்கலாம் அரசியலில் கருத்து கூறும்போது நீங்கள் எதை          நம்புகிறீர்கள் கேட்டு அறிந்ததா பட்டறிந்ததா

2)   துளசி கோபால்  இவரை என்வீட்டிலும்  பதிவர் மாநாட்டிலும்சந்தித்து இருக்கிறேன்   என்னை சந்தித்ததை சிங்கத்தின் குகையில் என்று கூறி இருந்தார் அதுசரி மேடம்பலரும் உங்களை  டீச்சர் என்கிறார்கள் பள்ளி ஆசிரியரா எங்கே எப்போது?பதிவுகளில் எழுதும்போது நம்பிக்கையே முக்கியம் என்று எழுதுகிறீர்கள் அதுவும் பல நம்பமுடியாததாக இருந்தாலும்!

நீங்கள் ஒரு  விஷ்ணு பக்தையாகவே தெரிகிறீர்கள் சைவ சித்தாந்தங்கள் பற்றி ஏதும்சொல்வதில்லையேஇல்லாவிட்டால் பாடல் பெற்ற இடங்களுக்கே முக்கியதுவம்  கொடுத்து ஏன்செல்கிறீர்கள்  நியூ ஜிலாந்தில் எப்போது இருப்பீர்கள்

3)   கீதா ரெங்கன் இவரைப் பலமுறை சந்தித்ததுண்டு இவர் இப்போதுபெங்களூர் வாசி மேடம் நீங்கள் உங்கள் பின்னுட்டங்களில் பலரோடு ஒத்துப்போவதையே காண்கிறேன்உங்களுக்கென்று அபிப்பிராயமிருந்தாலும்சொல்லாமல் போவதே மேல் என்று நினைக்கிறீர்களா பெரும்பாலான இடங்களில் நீங்கள்சொல்ல வந்ததை ஏற்கனவெ வேறு சிலர் சொல்லி இருப்பதாக நீங்கள் எழுதுவதைப் பார்க்கிறேன் கர்நாடக சங்கீதம்முறைப்படி பயின்றவரா நீங்கள்

4)   பானுமதி வெங்கடேஸ்வரன்  இவர் எனக்கு உறவு முறையும் கூட இவரது மகள் திருமணத்துக்கு சென்றபோதுதான் இவரும்வலையில்  எழுதுகிறார்  என்று தெரிந்தது அப்போதெல்லாம்  இவரது பதிவு பலருக்கும் தெரியாமல் இருந்தது என்பதிவுக்கு வரும்பின்னூட்டங்க்களில்  இருந்து பலநண்பர்களை உருவாக்கினார் என்று இவர் சொன்னதாக நினைவு உங்கள் கருத்துக்கு மாறாகஎழுதினால் உணர்ச்சி வசப்படுவீர்களோ என்று தோன்றுகிறது

5)   கோமதி அரசு  மயிலாடு துறையில் இவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன்  அங்கு எங்களுக்கு மிகவும் உதவியாய் இருந்தார் திரு நாவுக்கரசரும்  இவரைப் போலவே எந்த வம்பு தும்புக்கும்  போகாதவர்  எதிர்மறை எண்ணங்கள் என்றாலும் தாண்டி போய்விடுபவர் எல்லோருக்கும்  நல்லவராக இருக்க முயற்சி செய்பவர் வேதாத்ரி சுவாமிகளின்  எழுத்துக்களைமிகவும் நம்புபவர்  மயிலாடு துறையில் அப்போதுநான் எழுதி இருந்த இது என் ஏரியா அல்ல என்னும்பதிவில் பட்டினத்தார் பற்றிக் கேள்விப்பட்டதைஎழுதி இருந்தேன் இது என்  ஏரியா இல்லைஎன்றுசொல்லியே பட்டினத்தார் பற்றி எழுதி இருக்கிறார்என்று அப்போது அவர் சொன்னது எனக்கு ஏதோ சர்காஸ்டிக்காகத்தோன்றியது நான் தவறாகவும் இருக்கலாம்

6)   ராமலஷ்மி இவர் ஒரு புகைப்படக் கலைஞர் இவரை பெங்களூரில் ஒரு பதிவர் சந்திப்பில்பார்த்திருக்கிறேன்  அற்புத புகைப்படக் கலைஞர் இவரது பதிவுகள் எனக்குப் பிடிக்கும் தானாக எழுதுவதை விட பிறரது கொடேஷன்களை வெளியிடுவார் திரு நெல்வேலிக் காரர் என்றும்  ஒரு முதுகலைப் பட்டதாரி என்றும்தெரிகிறது

7)   திரு நெல்வேலிக் காரர் என்றதும்  அமெரிக்காவில் இருந்து வெட்டிப்பேச்சு என்னும் தளத்தில் எழுதி வந்த சித்ராவும்  நினைவுக்கு வருகிறார் இப்போதெல்லாம் அவரைக் காண்பதில்லை

8)   கீதா மதிவாணன் இவர் ஆஸ்திரேலியாவில் இருப்பவர்  அங்கிருந்துஅவருக்கு முடிந்த அளவில் தமிழுக்கு தொண்டாற்றி வருகிறார் அவரது சிலபதிவு என்னைக் கவர்ந்தது  சிலபூக்களின்ந்படங்களைக் காட்டிஅது பற்றிக் கேட்டிருந்தேன்  இவர்தான் அது பற்றி எனக்கு எடுத்துச் சொன்னவர் திரு ஞானசம்பந்தம் என்னும் மூத்தபதிவர் இவருக்கு மாமனார் முறை எனக்கு ஓரோர்சமயம் அவரது சிந்தனைகள் எனதுபோல்  தோன்றும்

9)   அன்புடன் மலிக்கா  இவர் என்னிடம்பெண் எழுத்து என்னும்தொடர் பதிவில் கலந்துகொள்ளச் செய்தார் ஆணெழுத்து பெண் எழுத்து  என்னும் பேதம்அறியாமல் நானும் எழுதி இருக்கிறேன்

10) இவர்களைத்தவிர சாதிகா என்பவருமென் பதிவுகளில் பின்னூட்ட உற்சாகம்தந்தவர்

11) புதுக் கோட்டையில் சந்தித்த சசிகலாவும் ஒருவர்  நான் எழுதி இருந்த ஒருபதிவின் வரிகளை நினைவில் வைத்துகோண்டு புதுக்கோட்டையில் என்னை திணர அடித்தவர் இன்னும்பலர் உண்டு பதிவின் நீளம்கருதி

1)   எழுதவில்லை

எனக்கு ஒரு சந்தேகம் உண்டு  பெண்களெப்போதும் ஆண்களைச்சார்ந்திருப்பதுதான்  இந்தியக் கலாச்சாரம் என்று நினைக்கிறார்களா அவர்களுக்கென்று கருத்துஏதுமில்லையா இருந்தாலும் ஏன் சொல்ல வேண்டுமென்றுநினைத்துஒதுங்கிப் போகிறார்களா

மஞ்சுபாஷிணி வல்லி சிம்மன் மனோ சாமிநாதன்  திருமதி காமாட்சி போன்றோரும்  என்பதிவுக்கு வந்தவர்கள் திருமதி லக்‌ஷ்மி என்பவர் அம்பர் நாத் வாசி  பயண்ப் பதிவுகள் எழுதுவார் இப்போதெல்லாம் காண்பதில்லை திருமதி ராஜராஜேஸ்வரிமறக்க முடியாதவர் கோவை வாசி ஒருகால் கோவையிலும் ஒரு கால் ஆஸ்திரேலியாவிலுமாகைருந்து படிவிடுவார் இப்போது இல்லை மறைந்து விட்டார்  ஆன்மீகப் பதிவுகள் எழுதுபவர் அவருக்க்கு ஜீனியஸ் என்னும் பட்டம் கொடுத்து கௌரவப்படுத்தி இருக்கிறேன் இப்போது காரைக் குடியில் இருக்கும்  தேனம்மை லக்ஷ்மணன்நிறையவே எழுதுகிறார்  பல நூல்களை வெளியிட்டவர்  அவரது சாட்டர் டே போஸ்டுக்கு என்னிடம் எழுதி  வாங்கி இருந்தது நினைவுக்கு வருகிறது பதிவு  எழுதத்துவன்கியபோது இருந்த மனநிலைஎழுத எழுத மாறி விட்டது பெண்களுக்கு 33 சத வீதம் இட ஒதுக்கீடு என்பது ஒரே மாய்மாலம் என்று தோன்றுகிறதுசரிபாதி இட ஒதுக்கீடுஇருக்க வேண்டும் அல்லவாஇப்போதுபதிவுஎழுளெழுதிவரும் பலரும் நகைச்சுவை என்று நினைத்து ஏதேதோ எழுதுகிறார்களோ  என்னு சந்தேகம்வருகிறது  தனகுத்தானே பல பட்டப்பெயர்கள் கொடுத்துக் கொண்டு எழுதும் அதிரா ஏஞ்செல் என்பவரை நான் அஞ்சலை  என்றுஅழைக்கலாமா என்று கேட்டிருந்தேன் என்புகைப்படத்தில் என் மீசை பயமுறுத்துகிறது என்பதை கேட்டதும் மீசையின் இன்னொருமுக்கியத்துவமும் தெரிந்தது  

எது எப்படியோ இந்தவயதில் நானும் எழுதுவதற்கு தூண்டு கோலாயிருக்கும் மகளிர் சக்தி வாழ்க என்று கூறி முடிக்கிறேன்








 எழுதவில்லை

10 கருத்துகள்:

  1. ஹாஹா சார் என்னைப் பற்றி சொன்னது.....முழுவதும் சரி என்று சொல்லிட முடியாது. சில சமயம்தான் ஒத்துப் போவதுண்டு. என் மாற்றுக் கருத்தை நாசுக்காகச் சொன்னதுண்டு. நீங்கள் அதைக் கவனித்ததில்லை என்று நினைக்கிறேன்.

    எனக்கென்று கருத்து உண்டு. அதைச் சொல்லியும் இருக்கிறேன்.

    ஒவ்வொருவரின் அபிப்ராயம் ஒவ்வொரு விதம். எல்லோருடைய கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பது என் வழக்கம். நான் வாதத்திற்குச் செல்ல மாட்டேன். ஒரு வேளை நாம் சொல்லுவது எதிராளியின் மனம் புண்பட்டால்? என்று தோன்றும். பொதுவெளியில் நான் சொல்வது இல்லை.

    கர்நாடக சங்கீதம் 99% கேள்வி ஞானம். கொஞ்சம் கற்றேன் ஆனால் என்னால் முறைப்படியான சங்கீதம் கற்றுக் கொள்ள இயலவில்லை. ஸ்வரங்கள் வேகமாகப் பாட வரவில்லை. ஸ்வர ஞானம் மிக மிக மிகக் குறைவு. எனவே என்னால் முறையாகக் கற்றுக் கொள்ள முடியவில்லை.

    நன்றி சார் என்னைக் குறிப்பிட்டமைக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் எண்ணங்க்ளின் தொகுப்புதானே பதிவில் இருப்பது

      நீக்கு
  2. மகளிர் தினத்தில் பெண் பதிவர்களை நினைவுகொண்டு சில கேள்விகள் கேட்டுஉள்ளீர்கள் அவர்கள் பதில்களை நாங்களும் அறிய காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. வித்தியாசமான பதிவு...   ஒவ்வொருவரைப்பற்றியும் உங்கள் அபிப்ராயத்தைச் சொல்லி இருக்கிறீர்கள்.  அவர்கள் இதைப் படிப்பார்களா என்று தெரியாது.

    பதிலளிநீக்கு
  4. மகளிர் தினத்தில் வலைத்தளத்தில் எழுதும் பெண்களை நீங்கல் குறிப்பிட்டு சொன்னது மகிழ்ச்சி.

    என்னையும் என் கணவரையும் குறிப்பிட்டு இருப்பது மகிழ்ச்சி.

    உங்களை சந்தித்தது மகிழ்ச்சியான நினைவுகள். என்றும் அந்த நினைவுகள் இருக்கும்.

    உங்கள் நினைவுகளில் நாங்கள் இருப்பது பாக்கியமே!
    நன்றி,வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு