புதன், 30 மார்ச், 2022

லை ஃப் இன்ஷூரன்சும் நானும்

 

lலைஃப்  இன்ஸூரன்சும் நானும்

 1958 என்று  நினைக்கிறேன் என் தமக்கை வீட்டுக்குப் போயிருந்தேன் அங்கு ஒரு குறி சொலபவர் குறீ சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு ஆரவக்கோ ளாறால் நானும்  என்கையை நீட்டினேன் பொதுவாக சொல்லிக் கொண்டிருந்தவர் திடீரென ஒரு குண்டைப் போட்டார்[i]என் ஆயுள் இன்னும்ஆறுமாதம் தான் என்றார்  பொதுவாக  சரியாய்  சொல்லிக்கொண்டிருந்தவர்இப்படி சொன்னதும் நான்  ஆடிப்போய் விட்டேன் வீட்டில் என்னைநம்பி  ஐந்து ஜீவன்கள் இருந்தன படி ஆழாக்கு உழக்குகளாக நான் போய் விட்டால் இவர்கள்கதி என்னாவது  வருமுன்  காப்பது புத்திசாலித்தனம் அல்லவா அட் லிஸ்ட் இம்பாக்ட் கன் பீ ரெட்யூஸ்ட் ஒரு இன்சூரனஸ் பாலிசி  எடுக்கலாம்  என்றுநினைத்து ரூபாய் 10000 க்கு  ஒரு பாலிசி எடுத்தேன் பத்தாயிரம்அந்தக்காலத்தி ல் ஒரு பெரிய  தொகைமாதம்ரூ 25 செலுத்த வேண்டும்அதுவும்  என் சக்திக்கு மேலானது இரு ந்தாலும்   அது என்க்கு  அப்போது சரியாய்    பட்டது   பதினாலு மாதங்க்ள் செலுத்தி னேன் பிற்கு  முடிய வில்லை பாலிசி  லாப்ஸ்   ஆயிற்று  புத்திக் கொள்முதல் எனலாமா

எனது இருபது களில் என் சாவுக்கு   நாள் குறித்தனர் ஆயிற்று  எனக்கு இப்போது 

வயது  84











 ஆஆ 84 ஆ

12 கருத்துகள்:

  1. 90 களில் நான் பெரிய தொகையாக (நினைத்து) 50,000  பாலிசி எடுத்தேன்.  பணம் கைக்கு வந்தபோது...

    பதிலளிநீக்கு
  2. நம் வீட்டிலும் பாலிசி எடுத்ததுண்டு. (நான் அல்ல!!) பல சமயங்களில் க்ரைசிஸ் சமயங்களில் அது உதவியதும் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இன்சூரனஸ் பாலிசி சிலர்க்கு உதவலாம்...

    வாழ்க்கைக்கு மட்டுமல்ல, எதற்கும் இன்சூரனஸ் இல்லை என்பதே உண்மை...

    பதிலளிநீக்கு
  4. இன்ஷூரன்ஸ் பாலிசி - பலருக்கு மிக்க உதவியாக இருக்கும்.

    நானும் சில வருடங்கள் பெரிய தொகை கட்டியிருக்கிறேன். அறுபது வயதிலிருந்து மாதம் ஒரு தொகை வரும். சட் என்று போய்விட்டால், பண விஷயத்தில் குடும்பம் திகைத்திடாமல் இருக்க இது உதவும்.

    பதிலளிநீக்கு
  5. ஜோசியர் சொல்வதெல்லாம் பலிப்பதென்றால், எல்.ஐ.சி என்றோ போண்டியாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. இன்ஷுரன்ஸ் பாலிசிக்கள் குறிப்பாக எல் ஐ சி நான் எடுத்திருக்கிறேன். பயனுள்ளதாகத்தான் இருக்கிறது. அதுவும் ஒரு சேமிப்புதான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு