தொட ர் கதையா
ஆச்சு
அண்ணாவும் வெங்கிடாசலம் அண்ணாவும்வருவதற்கு சற்றுத் தாமதமாகி விட்டது. நெடுந்தூரப்
பயணம் மற்றும் விடுமுறை கிடைப்பதில் சற்று தாமதம் என்ற காரணங்களால். அவர்கள்
எல்லாம் வந்து சம்பிரதாயச் சடங்குகள் எல்லாம் நடந்தன. அதுவே நான் என்
அப்பாவுக்குச் செய்த முதலும் கடைசியுமான சடங்காகும்.இந்த சடங்குகளை செய்வதை விட
அவரால் முடிக்கப் படாமல் விட்டுப்போன கடமைகளைச் செய்தால் அதுவே எல்லாச்
சடங்குக்கும் மேலானது என்று எண்ணினேன்.
என்னுடைய அந்தக்
கால மன நிலையை ஓரளவு பிரதிபலிக்கும் முறையில் “வாழ்வின் விளிம்பில் “என்ற என்னுடைய
சிறு கதையை எழுதியிருக்கிறேன்.உள்ளத்து உணர்வுகளுக்கு ஓரளவு உருவம் கொடுக்கும்
முயற்சி என்றே கருதுகிறேன்.
பாலக்காட்டில் குஞ்சுக்குட்டி அம்மாளுடன் தங்குவதற்கு சென்ற
அம்மாவும் தம்பிகளும் மேமையின் வீட்டில் தங்கினர். அப்பாவின் இறப்புக்குப்பின்
வந்த சிறு தொகையை(அது எப்படி வந்தது, யார்முயற்சியில் வந்தது, எவ்வளவு வந்தது
என்று எதுவுமே எனக்குத் தெரியாது. அந்தக் காலத்தில் அவற்றை தெரிந்து கொள்ள
வேண்டும் என்று நான் நினைத்தது கூட இல்லை.)மேமையின் அந்த வீட்டை சற்றே
பெரிதாக்குவதற்கு உபயோகப் படுத்தினார்கள். மேமை அங்கு ஒரு வீட்டில் வேலை செய்து
வரும்போது, நிறைய சாதம் குழம்புகள் கொண்டு வருவார். அது அவர்களின் பசியாறலுக்கு
ஓரளவு உதவியது. அங்கு அடுத்திருந்த ஒரு மன நோய் டாக்டரைக் காண வரும்
நோயாளிகள்.தங்க வாடகக்கு இடம் கொடுத்ததில்,கொஞ்சம் பணம் வரும். ஃபாமிலி பென்ஷனாக
ரூ.25-/ மாதம் வரும். நான் அம்பர்நாத்தில் பயிற்சியில் கிடைக்கும் ஸ்டைபெண்ட்
பணத்தில் ரூ.20-/ லிருந்து ரூ.25-/ அனுப்புவேன். தம்பிகளில் நடராஜனும் பாபுவும்
பள்ளிக்குச் சென்றார்கள இந்த ரீதியில் அவர்களுடைய ஜீவனமும் வயிற்றுப் பிழைப்பும்
நடந்து கொண்டு இருந்தது. பசியில்லாமல் வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம்.
அப்பா
இறக்கும்போது, நான் எதிர்பார்த்ததைவிட ஒரு நல்ல நிலைக்கு வருவேன் என்ற
நம்பிக்கையை, நான் அம்பர்நாத் பயிற்சிக்குத் தேர்வானது கொடுத்திருக்க வேண்டும்.
1957-ம் வருடம் மார்ச் 22-ம் தேதி அம்பர்நாத் ஆர்டிசான் ட்ரெயினிங் ஸ்கூலில்
எங்கள் பயிற்சி துவங்கியது. இரண்டு வருடங்களை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற
முனைப்புடன் வாழ்வின் இன்னொரு பகுதி துவங்கியது.
அம்பர்நாத்தில்,மெஷின்
டூல் ப்ரொடோடைப் ஃபாக்டரியை ஒட்டி அமைந்திருந்தது, ஏ.டி.எஸ். எனப்பட்ட ட்ரெயினிங்
ஸ்கூல். அந்த இடம் பாதுகாப்புத் துறையின் ஒரு பகுதியாக இருந்தது. அங்கு
பயிற்சிக்கு வந்தவர்கள் அகில இந்தியாவிலிருந்தும் தேர்வு செய்யப் பட்டு
வந்தவர்கள். அங்கு ஏடிஎஸ் பாட்ச், ஆர்டிஎஸ்.பாட்ச் மற்றும் எங்களுடைய எச்.ஏ.எல்.
பாட்ச் –ம்பயிற்சி பெற்றனர். அவர்களுடைய ஸ்கீமில் ட்ரெயினிங் காலம்
ஐந்து வருடங்கள். அதில் மூன்று வருடங்கள் பயிற்சியும் இரண்டு வருடங்கள்
ஜெர்னிமன்ஷிப் எனப்படும் வேலையில் பயிற்சியும் அடங்கும். அதில் தேர்வானவர்கள்
அனைவரும் பள்ளியிறுதிபடிப்பு படித்தவர்களே. இவர்களோடு, எச் ஏ எல்--லிருந்து
டிப்ளொமா தேர்வு எங்கள் குழுவும் அவர்களுடைய வசதிகளை அனுபவித்து பயிற்சி பெற்றோம்.
ஏறத்தாழ 500- மாணவர்கள் பயிற்சியில் இருந்தோம். ஹாஸ்டல் வசதிதான். இந்த
ட்ரெயினிங்கில் எங்களுக்கு கிடைக்கவிருந்த மாத ஸ்டைபெண்ட் ரூ.75-/ ல் ரூ.50-/
எங்கள் செலவுக்காக எச்.ஏ.எல் கொடுக்க வேண்டும். மீதி ரூ.25-/ எங்களுக்குக்
கிடைக்கும். ஹாஸ்டலில் ஒரு அறையில் 12-/ பேர் தங்க வேண்டும். ஆளுக்கொரு கயிற்றுக்
கட்டில், சேர், சைட் ராக் கொடுக்கப் பட்டது. மேல் தளம் ,கீழ்தளமாக ஒரு
கட்டிடத்தில் 8 அறைகள் இருந்தன. ஒரு கட்டிடத்தில் நூறு பெர் தங்க வசதி.
கட்டிடத்தின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு தளத்திலும் டாய்லட் மற்றும் குளிக்க
வசதி பொதுவாக இருந்தன. அகில இந்தியாவிலிருந்தும் தேர்வு செய்யப் பட்டு வந்தவர்கள்
ஆதலால் அந்த ஹாஸ்டலே ஒரு மினி இந்தியாவாக இருந்தது. எல்லா மொழியினரும், எல்லா
மாநிலத்தவரும், எல்லா மதத்தினருமாக UNITY IN DIVERSITY என்ற சொல்லுக்கு
அடையாளமாக இருந்தது.
அதிகாலை சாப்பாட்டு அறைக்குச் சென்றால், சூடான பாலுடன் ஒரு முட்டையும் கிடைக்கும். அவரவர்கள் காலைக்கடன்களை முடித்துவிட்டுப் பயிற்சிக்குச் செல்லுமுன், காலை உணவாக பூரி சப்ஜியும், இல்லையென்றால் ப்ரெட்டும் டீயுடன் தரப் படும். அளவேதும் கிடையாது. வேண்டிய அளவு உண்ணலாம். பயிற்சி காலை எட்டு மணிக்குத் துவங்கும். தீய்ரி, ப்ராக்டிகல் வகுப்புகள் உண்டு. ட்ராயிங்,கணக்கு, மற்றும் எஞ்சினீரிங்பற்றி வகுப்பறைப் பாடங்களும், லேத், மில்லிங் போன்ற மெஷின்களிலும் ஃபிட்டிங் வேலையிலும் ப்ராக்டிகல் ட்ரெயினிங் தரப் பட்டது. சுமார் பத்து மணிக்கு பிஸ்கட் , டீ தரப்படும். எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கும் .அளவு கிடையாது. மதியம் உணவு இடைவேளையில், சப்பாத்தி சப்ஜியுடன் ஒரு இனிப்பு மற்றும் நான்வெஜ் என்றும் வழங்கப்படும். மறுபடியும் மூன்று மணியளவில், டீ பிஸ்கட், பயிற்சி முடிந்து ஐந்து மணி அளவில் அறைக்குத் திரும்பும்போது உணவறைக்குச் சென்று, பகோடா, பஜ்ஜி போன்றவற்றுடன் டீயும் கிடைக்கும். இரவு எட்டு மணிக்கு இரவு உணவு. உணவு வகைகள் எல்லாவற்றையும் அங்கிருந்த ஆஸ்பத்திரியில் அவை சமச்சீர் உணவாக இருக்கிறது என்ற ஒப்புதல் பெறப்படும். பயிற்சி பெறுபவர்களில் தினம் ஒருவர் என்றபடி உணவுச் சாலைக்குப் பொறுப்பும் தரப் பட்டது. எல்லா வசதிகளும் சரியாக இருந்தும்,எச்.ஏ.எல்- லிருந்து வந்த பயிற்சியாளர்களுக்குத் திருப்தியாக இருக்கவில்லை. ஏறத்தாழ அனைவரும் தென் இந்தியர்கள். அரிசி சாதம் சாம்பார் ரசம் சாப்பிட்டுப் பழக்கப் பட்டவர்கள். அவர்களுக்கு அங்கு கொடுக்கப் பட்ட உணவு திருப்தி யளிக்கவில்லை. மேலும், எச்.ஏ.எல்- லிருந்து வந்தவர்கள்.பணம் கட்டித் தங்குகிறவர்கள். மற்றவர்கள் போல் இலவசமாகப் பெறுபவர்கள் அல்ல. என்ற ஒரு திமிரான எண்ணம் கூடி, அரிசி சாப்பாடு, சாம்பார், ரசம் வேண்டி போராட்டம் நடத்தினர்(நடத்தினோம்)அங்கு சமைப்பவர்களுக்கு சாம்பார் வைக்கத் தெரியாத நிலையில் அவர்களுக்கு சமையலும் கற்றுக் கொடுக்கத் தயாராய் இருந்தோம். உணவுச்சாலையை புறக்கணித்துப் போராட்டம் நடத்த, எச்.ஏ.எல்- லிருந்து பயிற்சி மேலாளர் S.A.S. DEAN, அவர்களும் வந்து ஏகப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகுசாம்பார்ரசம் கொடுக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டது.
பெரும்பாலானவர்கள்
ஏழைக்குடும்பங்களிலிருந்தும், நடுத்தர வர்க்கக் குடும்பங்களிலிருந்தும் தேர்வாகி
வந்தவர்கள். பயிற்சிக்கு வந்தவர்களில் நிறைய பேர் அடுத்த வேளை உணவுக்கும் கஷ்டப்
பட்டவர்கள். கொடுக்கப் பட்டதைக் கொண்டு திருப்தி அடையாமல் போராட்டங்களில் ஈடுபடக்
காரணமே,நம்மில் பலருக்கும் உள்ள மந்தை குணம்தான்.செய்வது தவறு என்று தெரிந்தும்,
தட்டிக் கேட்கத் தெம்பில்லாமல், சிலரை அடிவருடித் தொடரும் குணங்கள் பெரும்பாலும்
காரணமில்லாதவை. தனிப்பட்ட முறையில் செய்வது தவறு என்று தெரிந்தும்வயதின் கோளாறு
காரணமாக ரிபெல் செய்யும் குணமும் தொற்றிக் கொள்வதைத் தடுக்க இயலவில்லை.
எந்த அளவும் நிர்ணயிக்கப்படாமல் உணவு வகைகள் கொடுக்கப் பட்டு வந்தபோது, செலவு கட்டுக்கடங்காமல் போகவே, சில கட்டுப் பாடுகள் கொண்டு வரப்பட்டன. க்ரிம் பிஸ்கட்டுகள் போயின;கொடுக்கப்பட்ட பிஸ்கட்டுகள் ஆளுக்கு இரண்டாயிற்று. போராட்டம் நடத்த முற்பட்டபோது, பொறுப்புகள் கொடுக்கப்பட்டு, மாணவர்களே செலவுக்குப் பொறுப்பு என்றாயிற்று. மாணவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர்.
எல்லாவித வசதிகளும் இருந்து, படித்து முடித்து தேர்வு பெற்று வருவது மட்டுமே மாணவர்களின் பொறுப்பாக இருந்தது. அந்த இரண்டு வருட ஹாஸ்டல் வாழ்க்கை கற்றுக் கொடுத்த்து ஏராளம். உடல் ரீதியாக மன ரீதியாக, பதின்ம வயதுகளிலிருந்து, இளமைக்குள் காலடி எடுத்து வைத்த காலம்.(TEENAGE TO ADULTHOOD )எங்கிருந்து வந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்களே என்ற எண்ணத்துக்கு ஏற்றம் கொடுத்த காலமது.
எத்தனையோ
நிகழ்ச்சிகள் நடந்திருந்தாலுமந்த வாழ்க்கையின் சில துளிகளை இங்கே
குறிப்பிடுகிறேன். தந்தையை இழந்து பெரிய பொறுப்புகளை எதிர் நோக்கி இருந்த தருணம்.
பயிற்சிக்கு வந்த நேரம். என்னை நான் கட்டுப்படுத்திக் கொள்ள, என் மன நிலைகளையும்
என் பொறுப்புகளையும் மறக்காதிருக்க, டைரி எழுதும் பழக்கம் தொடங்கினேன்.அந்த
டைரியில் எழுது இருந்ததை இப்போது படிக்கும்பொது, எந்த மாதிரி மன உளைச்சலும் உடல்
உபாதைகளுடனும் நான் புலம்பித் தள்ளி இருக்கிறேன் என்று உணரும்போது இப்போது என்
இதழ்களில் ஒரு புன் முறுவ்லுடன் ஏதோ சாதித்த பெருமையும் தோன்றுகிறது. பயிற்சிக்காக
அம்பர்நாத் சென்ற சில நாட்களிலேயே எனக்கு என் முதுகுக்கு கீழ்ப் பகுதியில் ,
இடுப்பில் என்றும் சொல்லலாம் ,ஒரு வலி இருந்து வந்தது. நிற்கும்போதும்
நடக்கும்போதும் மிகவும் கஷ்டப் பட்டிருக்கிறேன். அவ்வப்போது மருத்துவ சிகிச்சையும்
பெற்று வந்திருக்கிறேன். அங்குள்ள மருத்துவர்களால் அந்த காலத்தில் இந்த வலி எதனால்
வருகிறது என்று கூற இயலவில்லை. மருந்துகளும் இஞ்செக்ஷன்களும் கொடுக்கப் பட்டன.
ஏதோ பால்வினை சம்பந்தப்பட்ட வியாதியோ என்று கூட அவர்களுக்கு சந்தேகம் வந்து
“மில்க் இஞ்செக்ஷன் “ என்று ஏதோபோட அதனால் ஏற்பட்ட வலியோ அதிகமாயிருந்தது. அதன்
பிறகு அவர்கள் என்னை பம்பாய் கொலாபாவிலுள்ள நேவல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள்
அங்கு எல்லா சோதனைகளும் முடிந்த பிறகு எந்த வியாதி என்று கண்டு பிடிக்க முடியாத
நிலையிலென்னை அங்கே அட்மிட் செய்யவும் இயலாமல் அனுப்பி விட்டார்கள். நான் கொலாபா
ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது ஆச்சு அண்ணாவை சந்தித்தேன். ( அவர் அப்போது அங்கு
நேவியில் வேலையிலிருந்தார் )அவர் என்னை இந்தியக் கடற்கப்பல் INS TIR- க்கு அழைத்துச் சென்று அவருடைய அதிகாரிகளுக்கும் என்னை
அறிமுகப் படுத்தினார். ஆக ஆஸ்பத்திரிதயவில் இந்திய போர்க் கப்பலுக்குச் சென்று
காணும் பாக்கியம்கிடைத்தது.
என்னுடைய வரவு
செலவுக் கணக்குகளை இப்போது யோசிக்கும்போது தமாஷாக இருக்கிறது. எட்டணா, ஒரு ரூபாய்
என்று கூட கடன் கொடுக்கல் வாங்கல்கள் இருந்திருக்கின்றன. ஊருக்குச் சென்றுவர பணத்
தேவைக்காக ஒரு சீட்டு கட்டி வந்தேன். மாதம் ரு.2 1/2 .சீட்டின் மதிப்பு ரூ.30-/
என் செலவுகளை சமாளிக்க இயலாமல் அங்கு இரண்டு குழந்தைகளுக்கு ப்ரைவேட் ட்யூஷன்
சொல்லிக் கொடுத்து மாதம் ரூ. 10-/ சம்பாதித்திருக்கிறேன். என் செலவுகளை என்னால்
சமாளிக்க முடியாமல் போனதற்கு எனக்கு இருந்த புகை பிடிக்கும் பழக்கமும் ஒரு
காரணமாய் இருந்திருக்க வேண்டும்.
ஒரு முறை நண்பர்கள் எல்லோரும் பம்பாயில் உள்ள எலிஃபண்டாகேவ்ஸ் பார்க்கத் திட்டமிட்டோம். பம்பாயிலிருந்து காலை ஏழு மணியளவில் படகுகள் செல்லும் என்றறிந்தோம். மதியம் சாப்பிடுவதற்கு ஹாஸ்டல் சமையலறையில் நண்பர்கள் புகுந்து ப்ரெட், முட்டை ஆம்லெட் என்று ஏதேதோ எடுத்துக்கொள்ள, நாங்கள் புறப்படவே நேரமாகிவிட்டது. பம்பாய் போய் சேர்ந்தபொது, படகுகள் எல்லாம் செ
எத்தனையோ
நிகழ்ச்சிகள் நடந்திருந்தாலுமந்த வாழ்க்கையின் சில துளிகளை இங்கே
குறிப்பிடுகிறேன். தந்தையை இழந்து பெரிய பொறுப்புகளை எதிர் நோக்கி இருந்த தருணம்.
பயிற்சிக்கு வந்த நேரம். என்னை நான் கட்டுப்படுத்திக் கொள்ள, என் மன நிலைகளையும்
என் பொறுப்புகளையும் மறக்காதிருக்க, டைரி எழுதும் பழக்கம் தொடங்கினேன்.அந்த
டைரியில் எழுது இருந்ததை இப்போது படிக்கும்பொது, எந்த மாதிரி மன உளைச்சலும் உடல்
உபாதைகளுடனும் நான் புலம்பித் தள்ளி இருக்கிறேன் என்று உணரும்போது இப்போது என்
இதழ்களில் ஒரு புன் முறுவ்லுடன் ஏதோ சாதித்த பெருமையும் தோன்றுகிறது. பயிற்சிக்காக
அம்பர்நாத் சென்ற சில நாட்களிலேயே எனக்கு என் முதுகுக்கு கீழ்ப் பகுதியில் ,
இடுப்பில் என்றும் சொல்லலாம் ,ஒரு வலி இருந்து வந்தது. நிற்கும்போதும்
நடக்கும்போதும் மிகவும் கஷ்டப் பட்டிருக்கிறேன். அவ்வப்போது மருத்துவ சிகிச்சையும்
பெற்று வந்திருக்கிறேன். அங்குள்ள மருத்துவர்களால் அந்த காலத்தில் இந்த வலி எதனால்
வருகிறது என்று கூற இயலவில்லை. மருந்துகளும் இஞ்செக்ஷன்களும் கொடுக்கப் பட்டன.
ஏதோ பால்வினை சம்பந்தப்பட்ட வியாதியோ என்று கூட அவர்களுக்கு சந்தேகம் வந்து
“மில்க் இஞ்செக்ஷன் “ என்று ஏதோபோட அதனால் ஏற்பட்ட வலியோ அதிகமாயிருந்தது. அதன்
பிறகு அவர்கள் என்னை பம்பாய் கொலாபாவிலுள்ள நேவல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள்
அங்கு எல்லா சோதனைகளும் முடிந்த பிறகு எந்த வியாதி என்று கண்டு பிடிக்க முடியாத
நிலையிலென்னை அங்கே அட்மிட் செய்யவும் இயலாமல் அனுப்பி விட்டார்கள். நான் கொலாபா
ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது ஆச்சு அண்ணாவை சந்தித்தேன். ( அவர் அப்போது அங்கு
நேவியில் வேலையிலிருந்தார் )அவர் என்னை இந்தியக் கடற்கப்பல் INS TIR- க்கு அழைத்துச் சென்று அவருடைய அதிகாரிகளுக்கும் என்னை
அறிமுகப் படுத்தினார். ஆக ஆஸ்பத்திரிதயவில் இந்திய போர்க் கப்பலுக்குச் சென்று
காணும் பாக்கியம்கிடைத்தது.
என்னுடைய வரவு
செலவுக் கணக்குகளை இப்போது யோசிக்கும்போது தமாஷாக இருக்கிறது. எட்டணா, ஒரு ரூபாய்
என்று கூட கடன் கொடுக்கல் வாங்கல்கள் இருந்திருக்கின்றன. ஊருக்குச் சென்றுவர பணத்
தேவைக்காக ஒரு சீட்டு கட்டி வந்தேன். மாதம் ரு.2 1/2 .சீட்டின் மதிப்பு ரூ.30-/
என் செலவுகளை சமாளிக்க இயலாமல் அங்கு இரண்டு குழந்தைகளுக்கு ப்ரைவேட் ட்யூஷன்
சொல்லிக் கொடுத்து மாதம் ரூ. 10-/ சம்பாதித்திருக்கிறேன். என் செலவுகளை என்னால்
சமாளிக்க முடியாமல் போனதற்கு எனக்கு இருந்த புகை பிடிக்கும் பழக்கமும் ஒரு
காரணமாய் இருந்திருக்க வேண்டும்.
ஒரு முறை நண்பர்கள் எல்லோரும் பம்பாயில் உள்ள எலிஃபண்டாகேவ்ஸ் பார்க்கத் திட்டமிட்டோம். பம்பாயிலிருந்து காலை ஏழு மணியளவில் படகுகள் செல்லும் என்றறிந்தோம். மதியம் சாப்பிடுவதற்கு ஹாஸ்டல் சமையலறையில் நண்பர்கள் புகுந்து ப்ரெட், முட்டை ஆம்லெட் என்று ஏதேதோ எடுத்துக்கொள்ள, நாங்கள் புறப்படவே நேரமாகிவிட்டது. பம்பாய் போய் சேர்ந்தபொது, படகுகள் எல்லாம் சேர்ந்தபொது, படகுகள் எல்லாம் சென்றுவிட, மிகவும் ஏமாற்றத்துக்குள்ளானோம். என்ன செய்வது. ?பம்பாய் வந்தாகிவிட்டது. அருகேயிருந்த போரிவில்லி நேஷனல் பார்க் சென்று பொழுது கழித்து வந்தோம். இதுவரை எலிஃபண்டா கேவ்ஸ் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.
ஒரு முறை பல் வலி வந்து அம்பர்நாத்தில் பல் டாக்டர்கள் இல்லாத நிலையில் பம்பாய் சென்று (ஜேஜே ஹாஸ்பிடல் என்று நினைவு.)அங்கிருந்த பல் மருத்துவரிடம் காண்பிக்க, அவர்கள் என் பல்லைப் பிடுங்க வேண்டும் ,அதுவும் அப்போதே என்று சொல்லத் திகைத்து, நின்ற நான், என் பல் பிடுங்க வந்த லேடி டாக்டரின் அழகில் மயங்கிபல் எடுக்கப் பட்டதே தெரியாமல் வழிந்து வந்தது நினைத்தாலும் இப்போது புன் முறுவல் தோன்றுகிறது.ஹாஸ்டலில் இருந்தபோது உடற்பயிற்சியில் கொஞ்சம் அதிகமாகவே அக்கறை காட்டினேன். அங்கிருந்த ஜிம்மில் பயிற்சியாளர் யாரும் கிடையாது. நானே டம்பெல்ஸ், வெயிட்போன்றவைகளில் கவனம் செலுத்தி, என் மார்பையும் ,பைஸெப்ஸையும் நானே கண்ணாடியில் கண்டு மகிழ்ந்ததுண்டு. அதிகாலையில் பயிற்சிக்காக ஓட ஆரம்பிக்க ,நாய்கள் துரத்த, பிறகு கையில் கழியோடுஓடியதும் நினைவிலாடுகிறது. எனக்கு இயல்பாகவே விளையாட்டுகளில் ஈடுபாடு உண்டு. நீளந்தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட் செய்தல் என்பதோடு டேபிள் டென்னிஸ் கற்கவும் தொடங்கினேன். அங்கு நடந்த போட்டிகளில் பங்கு கொண்டு, உயரம் தாண்டுதலில் முதல் பரிசும், டேபிள் டென்னிஸ் இரட்டையர் ஆட்டத்தில் இரண்டாம் பரிசும் வாங்கி இருக்கிறேன். என் உயரம் 5 அடி 3 ¾ அங்குலம் என்றால் நான் உயரம் தாண்டுதலில் ஐந்தடி உயரம் தாண்டியது பெருமை படக்கூடியதே. எந்த ஒரு செய்கையும் நம்மில் தொடங்க வேண்டும். ஊக்கமும் பாராட்டும் இருந்தால் சாதனைகள் செய்யலாம். இவையெதுவுமே இல்லாமல், வாழ்க்கையில் எப்படியெல்லாம் நானாகவே முயன்று, நானாகவே செய்தேனோ, அதேபோல்தான் ஆடுகளங்களிலும் என் சாதனை என்று நானாகவே செய்தேனோ, அதேபோல்தான் ஆடுகளங்களிலும் என் சாதனை என்று கூறுவதாயிருந்தால், அதுவும் வெறும் மூங்கில் கழி கொண்டு போல்வால்டில் 8 அடி உயரம் தாண்டியிருக்கிறேன்.என் பெருமையை நானே கூறிக் கொள்ள வேண்டியதுதான்.
அந்த கால கட்டத்தில் நானும் என் சகோதரர்களும் நிறையவே கடிதப் போக்கு வரத்துகள் வைத்திருந்தோம். என் அணுகு முறைகளும் குணங்களும் அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்ததும் எனக்கு அவர்களின் அலட்சியப் போக்கு ஏற்றுக் கொள்ளப் படாததாகவும் இருந்தது. எது எப்படியிருந்தாலும் அவரவர் வாழ்க்கை அவரவர்கள் வாழ வேண்டியது.நல்லது கெட்டது, விருப்பு வெறுப்பு போன்றவை எல்லாம் சில சமயங்களில் சூழ்நிலைகளால் நிர்ணயிக்கப் படுகிறது. இவையெல்லாவற்றையும் மீறி, இன்று எல்லோரும் எண்பதை தாண்டிய நிலையில் பேசிக்கொண்டும் பழகிக் கொண்டும், அன்புடன் என்று கூடக் கூறலாம், வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
9தொடரும்)
இப்போது எழுதிக் கொண்டிருப்பது எல்லாம், அன்று எழுதிய டைரியின் குறிப்புகள் உதவுகிறதா...?
பதிலளிநீக்குஇல்லை நான்பலமறு மொழிகளில் கூறி இருக்கிறேன் எழுது வதெல்லாம் நினைவலைகளே
நீக்குஅந்தச் சிறிய வயதில் நல்ல அனுபவங்கள். டைரியில் இவை எல்லாமே எழுதி வைத்திருக்கிறீர்களா! அதையும் பத்திரமாக வைத்திருக்கிறீர்களே.
பதிலளிநீக்குகீதா
டைரியில் இருந்தல்ல நினைவி ல் நிற்பவை
நீக்குமுந்தைய பதிவுகளும் வாசித்துவிட்டேன் சார். தொடர்ந்து வாசிக்கிறேன். அனைத்தையும் நினைவு வைத்திருந்து எழுதுவது ஆச்சரியம். பதிந்து வைப்பது நல்லதுதான்,
பதிலளிநீக்குதுளசிதரன்.
என் கமெண்ட் காணாமல் போய்க்கொண்டே இருக்கிறது!
பதிலளிநீக்குஎன்ன காரணம் என்பது நீங்கள் தெர்ய வாய்ப்பு அதிகம்
நீக்கு