இதன் பின்சற்று இடைவெளி இருக்கும்
பொன்மலைப்பட்டியில்
இருந்தபோது பணப்பற்றாக்குறை அதிகமாய் இருந்தது. என் கையில் ஒரு அரைப் பவுன்
மோதிரம் இருந்தது, ஒவ்வொரு மாதமும் அதை ரூ12/-க்கு அடகு வைப்பதும் மாத முதலில்
மீட்பதும் ... அப்பப்பா அது ஒருகாலம் ஒரு ஏழெட்டு மாதகாலம் பொன்மலைப்பட்டியில்
இருந்திருப்போம் அந்த நேரத்தில் கலைமகள் பத்திரிக்கைநாராயணசாமி ஐயர் நினைவு நாவல்
போட்டி ஒன்று அறிவித்திருந்ததுஅப்போது என் கற்பனையில் உருவான நாவல்தான் “நினைவில்
நீ”அதை பத்திரிக்கைக்கு ரெஜிஸ்தர் தபாலில்
அக்நாலெட்ஜ்மெண்ட் ட்யூ வுடன் அனுப்பினேன் அனுப்பிய மறு நாளே அக்நாலெட்ஜ்மெண்ட்
யார் கை ஒப்பமில்லாமலும் திரும்பி வந்தது. தபால் ஆபீசில் விசாரித்தால். அந்த
ரெஜிஸ்தர் தபால் போய்ச் சேர்ந்திருக்கும் என்று அலட்சியமாகப் பதில் சொன்னார்கள்.அந்த
நாவல் பரிசீலனைக்கே போயிருக்காது என்றே எண்ணினேன் . அதை முழுவதும் வாசித்த என்
நண்பன் மயூரநாதன் அதை வெகுவாகப் பாராட்டினான் அந்தக் கால கட்டத்தில் பேராசிரியர்
ராதாகிருஷ்ணனின் (பிரபல எழுத்தாளர் ஜகன் நாதனின் மாணாக்கர் என்று நினைவு)
சொற்பொழிவு ஒன்றினைக்கேட்க நேர்ந்தது. அவர் கூறிய பல கருத்துக்களை என் நாவலில்
கையாண்டிருக்கிறேன் .அதே நாவலை நான் வலைப்பூ தொடங்கியபின் தொடராக
வெளியிட்டிருக்கிறேன். புத்தக வடிவில் கொண்டுவர ஆசை உண்டு மனதில் பார்ப்போம்
நான்
வேலைக்குப் பொய் விட்டால் சாந்தி குñìழந்தையுடன் தனியே இருக்க வேண்டும் குழந்தை
மனோவும் ஒரு இடத்தில் இருக்கமாட்டான் எல்லா இடங்களுக்கும் தவழ்ந்து போய்விடுவான்
குழந்தை அடுக்களைக்குள் வராமலிருக்க நிலைப்படியில் ஒரு தடுப்பு மரப்பலகையால்
எழுப்பிவிடுவாள் குழந்தையின் அரணாக்கயிறில் ஒரு கயிறைக்கட்டி கட்டிலின் கால்களில்
பிணத்து விடுவாள்.கயிறின் நீளத்துக்குள் குழந்தை வளைய வரலாம் குடியிருப்பு வீடு
கிடைக்கத் தாமதமாகிக் கொண்டிருந்தது. மீண்டும்பெங்களூரு சென்று விட்டாள் நான்
பொன்மலைப்பட்டி வீட்டைக் காலி செய்து விட்டேன் நண்பர்கள் என்.நடராஜன் அவன் அண்ணா
தண்டபாணி ஆகியோருக்குக் குடியிருப்பில்வீடு கிடைத்திருந்தது. நாங்கள் நண்பன்
சின்னிக் கிருஷ்ணாவுடன் நடராஜன் வீட்டில் தங்கினோம் செல்ஃப் சமையல் சின்னிக்
கிருஷ்ணாவுடன் ஆன நட்பு இறுகத் தொடங்கி இருந்தது அந்த மாதிரி ஒருவருக்கு அலாட்
செய்திருந்த வீட்டில் வேறு யாரும் தங்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. நானும்
சின்னியும் திருச்சி மலைக் கோட்டை அருகே அல்லிமால் தெருவில் ஒரு அறை எடுத்துத்
தங்கினோம் தினமும் சின்னியின் ஷெர்பா மோட்டார் சைக்கிளில் பணிக்குச் செல்வோம் சில நாட்களுக்குப்பிறகு தில்லை நகரில் ஒரு வீடு
பார்த்தேன். எவ்வளவு நாட்கள் திருமண்மாகியும் பிரம்மசாரியாய் இருப்பது தில்லை நகர்
வீட்டுக்குப்போகும்போது சின்னியையும் எங்கள் கூடவே பேயிங் கெஸ்டாக இருக்கக்
கேட்டுக் கொண்டேன் அவனுக்கு அது சௌகரியப்பட்டதோஇல்லையோ எனக்கு மிகவும் உதவியாக
இருந்தது. தில்லை நகர் வீட்டுக்கு வரும்போது சாந்தியின் தம்பி பாஸ்கரனையும்
எங்களுடன் தங்கிப் படிக்கக் கூட்டிக் கொண்டு வந்தோம் பாஸ்கரனை கிஅபெ பள்ளியில்
சேர்த்தோம் அவன் எங்களுடனே யே இருந்து பள்ளிப்படிப்பு டிப்லொமா முடியும் வரையிலும்
நாங்கள் விஜயவாடா போனபின்னும் கூடவே இருந்து பிஎச் இ எல் –லிலேயே
பணிக்கும் அமர்ந்தான் சில விசேஷ்ங்களை எழுதிக் கொண்டு போகும் போது இவையெல்லாம் பதிய
வேண்டியது தானா என்று தோன்றும் ஒரு சாதாரணனின் வாழ்க்கையில் எது முக்கியம் எது
இல்லை என்று கூறுவதே சிரமம் இருந்தாலும் எழுதும் போது வரும் எண்ண ஓட்டங்களை
என்னைச் செதுக்கிய அனுபவங்களை பதிவிடுவதெ சரியே என்று தோன்றுகிறது சில நேரங்களில்
நினைவுக்கு வராமல் பதிவது விட்டுப் போகும் வாய்ப்பும் உண்டு. அதுவே சில நிகழ்வுகள்
முன் பின்னாக பாதிவாகக் காரணமாக இருக்கலாம். அனுபவங்களும் நினைவுகளும் அலுவலகம்
சார்ந்ததும் தனிப்ப்ட்ட வாழ்க்கையைச்
சார்ந்ததுவுமாக இருக்கிறது மாறி மாறி வரலாம்
விஜயவாடா போய்ச் சேர்ந்தபோது பாஸ்கரனும் எங்கள் கூடவே வந்தான் நான் அங்கு பணிக்குச் சென்ற ஆரம்ப அதிகாரி எனக்கு சில அதிகாரங்கள் மறைமுகமாக வழங்கப் பட்டிருந்தது. பாஸ்கரன் டி எம் இ முடித்து வேலை தேடிக்கொண்டிருந்தான் விஜயவாடாவில் அப்போது என் மேலதிகாரி கெ.பி. ராஜ்குமார் என்பவர். என்னிடம் ஒரு சமயம் என் குடும்ப விஷயங்களைக் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். டி எம் இ படித்த மைத்துனன் வீட்டில் இருக்கிறான் என்று சொன்னபோது அவனை ஏன் நான் வேலைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டார். அதை நான் செய்தால் தவறாகக் கருதப்படும் என்றேன் அவருக்கு அப்போது பர்லி பவர் ஸ்டேஷனுக்கு மாற்றலாகி இருந்தது. எனக்கு பாஸ்கரனை விஜயவாடாவில் பணிக்கு அமர்த்துவதில் ஆட்சேபணை இருந்தால் அவனைத் தன்னுடன் பர்லிக்கு அழைத்துப் போகிறேன் என்று கூறி அவனை வரவழைத்து காஷுவல் வேலையாகப் பர்லிக்கு அழைத்துப் போனார். இப்போது அதே பாஸ்கரன் பி எச் இ எல் லில் சீனியர் மானேஜர் வரை பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறான் இன்றும் அவனை என் மகனாகவே கருதுகிறேன் நினைவுகள் எங்கோ ஓடிவிட்டது சரி மீண்டும் தில்லைநகர்வீட்டுக்குப்போனதிலிருந்து. .பெங்களூரில் பாஸ்கரன் யாருக்கும் அடங்காதவனாக, படிப்பில் நாட்டமில்லாதவனாகஎப்போதும் விளையாட்டாக இருக்கிறான் என்று அறிந்தேன். சாந்தி வேலைக்குச் சென்றிருந்தால் அவள் குடும்பத்துக்கு உதவியாய் இருந்திருக்கும். அது நடக்காமல் போனது என்னால்தான் என்பதால் அதை ஓரளவு ஈடு கட்ட பாஸ்கரனின் பொறுப்பை நான் எடுத்துக் கொண்டேன் என்னுடன் பாஸ்கரன் இருந்தவரைக்கும் மிகவும் நல்ல பையனாகவும் அடக்கமுள்ளவனாகவுமே இருந்தான் அது அவனுக்கு என் மேல் இருந்த மரியாதையால் வந்தது என்று கூறுவார்கள். எது எப்படியானாலும் அவனை எங்களுடன் கூட்டி வந்தது பலன் உடைத்தாய் இருந்தது.
சில
நாட்களில் குடியிருப்பில் வீடு கிடைத்தது சின்னிக் கிருஷ்ணாவும் எங்கள் கூடவே வந்தான்
வீட்டில் நாங்கள் அப்போது ஐந்து பேரானோம். இதற்கு நடுவில் சாந்தி மீண்டும்
கர்ப்பம் தரித்தாளது ஒரு பெண்குழந்தையாக இருக்க வேண்டுமே என்று எண்ணிக்
கொண்டிருந்தேன் சாந்திக்கு உதவியாக அவள் தங்கை ராதாவந்திருந்தாள் அவளுடைய இந்த
இரண்டாம் பிரசவம் மறக்க முடியாதது.விடியற்காலையிலேயே மூன்று நான்கு மணீக்கே சாந்தி
எழுந்து அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள். எப்போதும் போல நான் அதைக் கண்டு
கொள்ளவில்லை. காலை சுமார் ஐந்தரை மணிக்குள் அவள் குளித்து ரெடியாய் இருந்தாள்.
மருத்துவ மனைக்குச் செல்ல. நான் ஒரு புறமும் நாச்சா ( சின்னிக் கிருஷ்ணாவை
அப்படித்தான் அழைப்போம் ) ஒரு புறமும் இருக்க மருத்துவ மனைக்கு சுமார் ஒரு
கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றோம் . அறியாமையின் உச்ச கட்டம் அதுதான்
மருத்துவமனயில் சேர்த்த சுமார் ஒரு மணிநேரத்தில் சாந்தி மீண்டுமொரு ஆண்மகவைப்
பெற்றெடுத்தாள் லேபர் வார்டில் அவள் இருந்தபோது நான் ஒரு முறை அவளைப் பார்த்தேன்
அந்தக் கஷ்டத்தைப் பார்த்த அந்த நிமிடமே இனியொரு குழந்தை வேண்டாம் என்னும்
முடிவுக்கு வந்தேன் இன்றைக்கும் சாந்தி அவளை நாங்கள் அந்த நேரத்திலும் நடத்திச்
சென்றதைக் குத்திக்காட்டுவாள். அதுதான் சொல்லி விட்டேனே அது அறியாமையின் உச்ச
கட்டமென்று. இப்போது ஒவ்வொருவர் கர்ப்பமாயிருக்கையில் எடுத்துக் கொள்ளும் கவனிப்புகள் எதையுமே சாந்திக்குக் கொடுத்ததில்லை. வேண்டாம்
என்றல்ல அறியாமையால்தான்
இதன் நடுவில்
அம்மாவின் மூத்த இரு பிள்ளைகளில் நடராஜனும் பாபுவும் ஒரே நேரத்தில்பள்ளியிறுதிப்
படிப்பு முடித்திருந்தார்கள் நடராஜன் சுமாரான் மதிப்பெண்களும் பாபு அவனைவிட நல்ல
மதிப்பெண்களும் எடுத்திருந்தனர் என் சக்திக்கு இருவரையும் கல்லூரியில் படிக்க
வைக்க முடியாது என்றேன் நடராஜன் வேலைக்குப் போவதாகக் கூறினான் அப்போது எச் ஏ
எல் லில் பள்ளியிறுதி படித்தவர்களுக்கு
பயிற்சி அளிக்கும் திட்டமொன்று வந்தது அதன் படி மூன்றாண்டுகள் பயிற்சி பிறகு வேலை
கிடைக்கும் என்று உறுதி இருக்கவில்லை. அவன் பயிற்சியில் சேர்ந்தால் ஒரு தொழிலாவது
கற்றுக் கொண்டது போலாகும் என்று கருதி பயிற்சி மேலாளரை அணுகி அவனைத் தேர்வு செய்ய
வேண்டினேன் ரெகமெண்டேஷன் அவருக்குப் பிடிக்காது என்று சொன்னாலும் அவனைப்
பயிற்சிக்குத் தேர்வு செய்ர்தார். அவன் மூன்றாண்டு பயிற்சிக்குப்போனான் பாபுவாவது
கல்லூரிப்படிப்புக்குப் போக அவனும் விரும்பினான் நானும் விரும்பினேன் முதலில்
புனித் ஜோசப் காலேஜில் சேர்ந்தான் அதன் பிறகு பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு கவர்ன்மெண்ட்
பாலிடெக்னிக்கில் மூன்றாண்டு டிப்லொமாவில் சேர்ந்தான் இடைப்பட்ட காலத்தில் என்
சொந்த வாழ்வைக் கருதியும் குடும்பநலன் கருதியும் நான் சென்னை லூகாசில் சேர்ந்தேன்
பதிவிடும்போது நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாகக் கோர்வையாக எழுதமுடியவில்லை(.சற்று இடைவெளிக்கு பின் தொடர்வேன்) . . . . .
இத்தனையும் எழுதுவதே சிரமம் தான்... ஓய்வு எடுத்துவிட்டு தொடருங்கள் ஐயா...
பதிலளிநீக்குஅப்ப்டி செய்ய உத்தேச்ம்
நீக்குநிறைய எழுதியிருக்கிறீர்கள்... வாழ்க்கை எல்லோருக்கும் கடினம்தான்.
பதிலளிநீக்குஎல்லோருக்கும் தெரிந்தவிஷயம்
நீக்குஇவ்வளவு எழுதியிருக்கீங்களே....இதுவே பெரிய விஷயம்தான் சார்.
பதிலளிநீக்குஒவ்வொருவருக்கும் வாழ்க்கை ஒவ்வொரு விதத்தில் அனுபவங்களைக் கொடுக்கிறது. இதில் மனிதர்களைப் புரிந்து கொளல் என்பது தனி கலை
கீதா
இதில் மனிதர்களைப் புரிந்து கொளல் என்பது தனி கலை
நீக்குஇந்த ஆயுல் போதாது
பத்திரிகைக்கு அனுப்பிய நாவல் என்னதான் ஆனது? குழந்தையை கட்டிப்போடும் வழக்கம் எப்போதுமே உண்டு போலும். கர்ப்ப வலி சமயத்தில் நடத்தி அழைத்துச் சென்றது கொடுமைதான். சிலவற்றை எந்தக் காலத்திலும் மறக்க முடியாதுதான்!
பதிலளிநீக்குகாகா ஊஷ்
பதிலளிநீக்குகர்ப்ப வலி சமயத்தில் நடத்தி அழைத்துச் சென்றது கொடுமைதான். அறீயாமையே காரணம்
பதிலளிநீக்கு