வெள்ளி, 14 டிசம்பர், 2018

மஹாபாரதக் கதைகள்



                                   மஹாபாரதக் கதைகள்
                                    ------------------------------------
மஹாபாரதத்தில் இருந்து சில  கதைகளை முன்பும்  பதிவிட்டிருக்கிறேன்
  மஹாபாரதம்   ஒரு கதைக்களஞ்சியம்  எத்தனை எத்தனை கதைகள் அவ்வப்போது கேட்டிருந்தாலும்  பாழும் நினைவில் நிற்பதில்லை பாண்டவர்கள் அக்ஞாத வாசத்துக்கு முன் காட்டில் இருந்தகாலம் அவர்களுக்கு தாகம்  மிகுதியாகவே அருகில் எங்காவது  நீர் நிலைகள் இருந்தால் அங்கு சென்று நீர் எடுத்து வருமாறு நகுலனைப் பணிக்கிறான்  தருமன்  நகுலனும் ஒருமரத்தின் மேலேறி நீர் இருக்கும் இடம் தெரிகிறதா  என்று பார்த்தான்  ஓரிடத்தில் இருந்த நாரைகள் சில பறந்து வருவதுகண்டு  நகுலன் அவ்விடம்தேடிப்போக  ஒரு குளக்கரைபக்கம் வருகிறன்
முதலில் தான் நீர் அருந்த குளக்கரைப் ப்க்கம் போகிறான்   அப்போது ஒரு அசரீரி தன் கேள்விக்கு பதில்தந்தால்தான்  குளத்தில் நீர் அருந்த முடியும் என்றதுநகுலன் அசரீரி குரலைப் புறக்கணித்து குளத்துக்குள் இறங்க முற்பட கரையிலேயே மாண்டு விழுகிறான் பின் நகுலனைத் தேடி சகாதேவன்  அர்ஜுனன்  பீமன் என எல்லோரும் வந்து அசரீரியின் சொல்லை மதிக்காமல் மாண்டு விழுகின்றனர் இவர்களைத்தேடி யுதிஷ்டிரன்  வருகிறான் குளக்கரையில்  தன்சகோதரர்கள்  மாண்டு கிடப்பதைப் பார்க்கிறான் அவனுக்கும்  அசரீரி குரல் கேட்கிறது  தன் கேள்விகளுக்குப் பதில் தந்தால்தான்  நீர் அருந்தலாம் என்றும் இல்லயென்றால்  அவன் சகோதரர்களுக்கு  நேர்ந்த கதியே இவனுக்கு  நேரும் என்று அசரீரி எச்சரித்தது அசரீரி யார் என தருமன்கேட்க  தானொரு யக்ஷன்  என்றுபதில் கூறியது அசரீரி     

அப்போதுதான் தன் சகோதரர்கள் தவறான பதில் கூறி, மாண்டது புரிந்தது தர்மருக்கு!
“”
நான் விடையளிக் கிறேன்என்றார் தர்மர்.

யக்ஷன் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான்.
“”
எது தினமும் சூரியனை உதிக்கச் செய்வது?”
“”
பிரம்மம்.”
“”
மனிதன் எதில் நிலைத்து நிற்கிறான்?”
“”
சத்தியத்தில்.”
“”
மனிதன் எதனால் சிறப்படைகிறான்?”
“”
மன உறுதியால்.”
“”
மனிதன் எதனால் எப்போதும் துணை யுள்ளவனாகிறான்?”
“”
தைரியமே மனிதனுக்குத் துணை.”
“”
எந்த சாஸ்திரம் படித்து மனிதன் புத்திமானாகிறான்?”
“”
இது சாஸ்திரத்தால் அல்ல; பெரியோர்களைப் பொறுத்தே.”
“”
பூமியைவிட பொறுமைமிக்கவர் யார்?”
“”
தாய்.”
“”
ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தவர் யார்?”
“”
தந்தை.”
“”
காற்றைவிட வேகமாகச் செல்வது எது?”
“”
மனம்.”
“”
புல்லைவிட அற்பமானது எது?”
“”
கவலை.”
“”
மனிதனுக்கு தெய்வத்திடமிருந்து கிடைத்த நன்மை எது?”
“”
மனைவி.”
“”
தேசாந்திரம் போகிறவனுக்கு யார் துணை?”
“”
வித்தை.”
“”
சாகப் போகிறவனுக்கு யார் துணை?”
“”
தர்மம். அதுதான் அவன்கூட பயணம் செல்லும்…”
“”
பாத்திரங்களில் எது பெரிது?”
“”
அனைத்தையும் தன்னுள்ளே அடக்கிக்கொள்ளும் பூமி.”
“”
எது சுகம்?”
“”
சுகம் நல்லொழுக்கத்தில் நிலைபெறுகிறது.”
“”
மனிதன் எதைவிட்டால் துயரமில்லை?”
“”
கோபத்தை.”
“”
எதை இழந்தால் மனிதன் தனவானாகிறான்?”
“”
ஆசையை…”
“”
மகிழ்ச்சியுடன் வாழ்பவர் யார்?”
“”
கடன் வாங்காதவர்.”
“”
வேகம் மிக்கது எது?”
“”
நதி.”
“”
வெற்றிக்கு அடிப்படை எது?”
“”
விடாமுயற்சி.”
“”
உலகில் மிகச்சிறந்த தர்மம் எது?”
“”
கொல்லாமை.”
“”
உலகெங்கும் நிறைந்து நிற்பது எது?”
“”
அஞ்ஞானம்.”
“”
முக்திக்குரிய வழி எது?”
“”
பற்றினை முற்றும் விலக்குதல்.”
“”
முக்திக்குத் தடையாக இருப்பது எது?”
“””
நான்என்னும் ஆணவம்.”
“”
எது ஞானம்?”
“”
மெய்ப்பொருளை அறிதல்.”
“”
எப்போதும் நிறைவேறாதது எது?”
“”
பேராசை.”
“”
எது வியப்பானது?”
“”
நாள்தோறும் பலர் இறப்பதைக் கண்டும், தான் என்றென்றும் வாழ்ந்திருப்போம் என்று மனிதன் நினைக்கிறானே, அதுதான்.”
“”
பிராமணன், உயர்வானவன் என்பது குலத்தினாலா? ஒழுக்கத்தினாலா? கற்ற பல சாஸ்திரங்களினாலா?”
“”
ஒழுக்கத்தினால் மட்டுமே உயர்ந்தவனாகிறான். நான்கு வேதங்கள் கற்றவனாயிருந்தாலும், கெட்டநடத்தை உள்ளவன் பிராமணன் அல்ல; இழிந்தவனே…”
“”
அற்புதம் தர்மபுத்திரரேஉமது பதில்கள் அபாரம். ஆனால் இறந்த உன் சகோதரர்களில் ஒருவனை மட்டும் நான் உயிர்ப்பிக்கிறேன். உமக்கு யார் வேண்டும்?”
“”
நகுலன்…” சற்றும் யோசியாமல் பதிலளித்தார் தர்மர்.

சத்தியமாக இந்த கேள்வி  பதில்கள் என்நினைவுக்கு வரவில்லை இணையத்தில் தேடி எடுத்தேன் கதைகள் மூலம்   சில செய்திகளை அறிய வைக்கும் உத்தி எனக்குப் பிடித்தது ஆனால் வலை உலகில் கேள்வி கேட்பதையே தவறு என நினைப்பவர்கள்  இருக்கிறார்கள் பல கேள்விகளும்   பதில்களும் என்னை இன்னும் கேள்வி கேட்கச் செய்கிறது  ஆனால் இந்த யக்ஷன்  பதில்களில் திருப்தி அடைந்து  விட்டான்
 மாண்ட நால்வரில் ஒருவர் உயிரைத் திருப்பமுடியும் என்றும் அப்படியானால் யாரை மீண்டும் உயிர்ப்பிக்க தருமன் விரும்புவான் என்னும் யக்ஷன் கேள்விக்கு நகுலன் உயிரை திருப்ப வேண்டுகிறான்     அதற்கு தருமன்சொன்ன காரணம் குந்தியின் பிள்ளைகளில் தான்பிழைத்து இருக்க மாதுரியின்  மூத்த மகன் நகுலன் பிழைப்பதே சரி எனும் தருமனின் பதிலில் மிகவும் திருப்தி அடைந்த யக்ஷன்மீதமிருந்தோரின் உயிர்களையும்  திருப்பிக் கொடுத்தான்   என முடிகிறது கதை  

செவ்வாய், 11 டிசம்பர், 2018

சுய சரிதையில் சிலபகுதிகள்



                              சுய சரிதையில் சில பகுதிகள்
                              ----------------------------------------------
 சில நேரங்களில்  சில முடிவுகள் எடுக்கப்படுகின்றன சரியா தவறாஎன்பது தெரியாமலேஎடுக்கப்பட்ட முடிவு  வாழ்க்கையின்  சுவாரசியத்துக்கு அதுவே காரணமாயிற்றோ   இல்லையென்றால் அன்று நான் கண்டதுபற்றி  இத்தனை ஃபீலிங் இருக்கவேண்டாமே பீடிகைகள் கடுப்பேற்றலாம்பார்க்க வேலை தேடும்படலம் 
முதலில் நான் எச் ஏ எல்  லில் பயிற்சியாளனாகச் சேர்ந்தபோது  தெரிந்தது மூன்றாண்டு  பயிற்சி  வெற்றிகரமாக முடித்தால்  நாளொன்றுக்கு  ஒரு ரூபாய் பத்தணா சம்பளமாகவும்  அலவன்சாக  மாதம் ரூ 39 ம்கூட வரும்  அன்றுநானிருந்த நிலையில்  ஏதாவதுவேலைஒன்றுகிடைத்தால்  போதும் என்னும்நிலையே. பயிற்சியில் இருக்கும்போது அன்றைய மானெஜ் மென்ட்  எங்களுக்கு ஒரு தேர்வு வைத்து அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை  பயிற்சிக்கு பின்பு  சூபர்வைசர்களாக நியமிக்கலாமென்று கருதி தேர்வு வைத்தார்கள் சுமார் 60 பேரில் 12 பேரைத்தேர்வுச் செய்தார்கள்அதில் நானும் ஒருவன்  மேற்பயிற்சிக்காக  அம்பர்நாதுக்கு  அனுப்பினார்கள் அதுபற்றி வெவ்வேறு பதிவுகளில் எழுதி இருக்கிறேன்  பயிற்சி முடிந்தபின்  சூபர்வைசர்களாக  நியமனம்  பயிற்சியின் போது  ஐந்தாண்டுகள்  வேலையில் இருப்போம் என்று ஒருபாண்ட் எழுதிக் கொடுத்தோம் அப்போது எச் ஏ எல் லில் நிறையவே அனுபவங்கள் மேல் படிப்பு பெறாத குறையை  அவ்வப்போது உணர்ந்தோம் அங்கிருந்த ஒரு அதிகாரி அடிக்கடி கூறுவார் ஐ அம் எ டபிள் கிராஜுவேட் ஃப்ரம் கிண்டி எஞ்சினீரிங்  காலேஜ்  ஐ நோ யு டோண்ட் நோ  அவர் படித்த படிப்பை விட இந்த பெருமைஅதிகம்  வருத்தியது அவருக்குத் தெரியும்என்பதோடு நில்லாமல் உனக்குத்தெரியாதுஎன்று கூறுவதே  அதிகம் உரைக்கும்
நிறையச் விஷயங்கள் எழுதிக் கொண்டே போகலாம்  நீளம்  அதிகமாகும் ஆனால் என்ன தொடர்ந்து எழுதலாமே பாண்ட் பீரியட் ஐந்தாண்டுகாலம் எப்படியோ கழிந்தது வேறுவேலை தேடியதில் சென்னை லூகாஸ் டி வி எஸ்ஸில் ஷிஃப்ட் இன்சார்ஜாக  நியமனம்  ஆயிற்று இந்த ஐந்தாண்டு காலத்தில் ஒரு பதவி உயர்வும் கிடைத்ததுஅப்போது தமிழ்நாட்டில்  ஹிந்தி எதிர்ப்பு உச்சத்தில் இருந்தது நேர் காணலின் போது நான் ஆங்கிலத்தில் உரையாடியது  கண்டு எனக்கு தமிழ்  தெரிய வேண்டியது அவசியம் என்று கூறினர் 
  சுமார் ஓராண்டுகாலம் அங்கே பணியில் இருந்தேன் வெள்ளையர்களுடன்  பணி புரிந்தகாலம்  எனக்கு திருமணம் ஆன புதிது பணிநேரம்   இரண்டு ஷிஃப்டுகள்முதல் ஷிஃப்ட் காலை ஏழே முக்காலிலிருந்து  மாலை ஐந்தரை வரை  இரண்டாம் ஷிஃப்ட் இரவு ஒன்பதிலிருந்து  காலை  ஏழே கால்வரை மின் வெட்டு காரணமாக நன்றாகவே உழைத்து நல்ல பேர் வாங்கினேன் வாராவாரம்  ஷிஃப்ட் மாறும்  வாரம் ஐந்து நாட்கள் ஒரு வாரகாலம் உடல் ஒரு ஷிஃப்டுக்கு  பழக்கப்படும்நேரத்துக்குள் அடுத்த ஷிஃப்டுக்கு  பணி மாறும் நான் ஷ்ஃப்ட் இன் சார்ஜ்ஆக இருந்தாலும் நேரடி  வேலையில் அதிகாரம் கிடையாது  செய்முறைகள் ஆங்கிலேயர்களால்  வகுக்கப்பட்டு இருந்தது எனக்கோ அதில் மாற்றம் செய்தால் ப்ரொடக்டிவிடி  அதிகமாகும்  என்று  தோன்றியது  ஆனால் பகலில் வெள்ளையர்கள் இருப்பார்கள் நமக்கு மாற்றும் அதிகாரம் கிடையாது  நான் இரவு ஷிஃப்ட் வரும்போது  என் விருப்பப்படி  செய் முறையை  மாற்றி  அதிக ப்ரொடக்‌ஷண்  காண்பித்தேன்  பகலில்குறைவாகவும்  இரவில்கூடுதலாகவும் உற்பத்தி   மாறுவதுநிர்வாகத்துக்கு புரியாமல் இருந்தது  என்னிடம் கேட்டார்கள் பகலில்  என் கை கட்டப்பட்டு இருப்பதையும்  இரவில் நானே கட்டுகளை அவிழ்த்து பணிசெய்வதையும்கூறினேன்  வெள்ளையர் மேல் அதிகாரி என்னிடம்  பகலிலும்   என் மாற்றலைச் செயல்படுத்துமாறு கூறினார்கள் நான்மாற்றம் செய்யும்போது கண்களில்  எண்ணை விட்டுக்கவனிப்பதுபோல் கூர்ந்து கவனித்தார்கள் ஒன்றை கூற வேண்டும்  தவறை ஒப்புக்கொள்ளும் குணம்  அவர்களுக்குஇருந்ததுஎன்முறையை வழக்கத்தில் கொண்டுவந்ததுடன்என்  மேல் அதிகாரிக்கு பாராட்டுக் கடிதமும்  கொடுத்தார்கள்  எனக்கு அப்போது ஒருகுறை இருந்ததுபாராட்டுக் கடிதத்தை எனக்குத் தராமல் என் உயர் அதிகாரிக்குக் கொடுத்ததுதான் பல முக்கிய செய்திகளையும்  நிகழ்வுகளையும்  முன்பே சில இடங்களில் பகிர்ந்திருக்கிறேன் என் மூத்த மகன்பெங்களூரில் பிறந்திருந்தநேரம்  அவனைக்காண  ஒரு வார இறுதியில் சென்ற்ருந்தேன் என் ஷிஃப்ட் மாற்றத்துக்கு என்னால் நேரத்தில் வர முடியவில்லைசரியாக வேலைக்கு வராவிட்டால் வேறு ஆளைப் பார்த்துக்  கொள்கிறோம் என்றார்கள்  என்னை நம்பி ஒரு பெரிய குடும்பம் இருக்கும்போதுதலைக்குமேல் வேலை போகும் அபாயம்  என்னும் கத்தி தொங்கிக் கொண்டிருந்ததது வேறு வேலை பார்த்துப்போகலாம் என்று முடிவு எடுத்தேன்  பிஎச் ஈ எல் லில் உதவி  எஞ்சினீர் வேலைக்கு விளம்பரம்வந்தது அப்ளை செய்தேன்  நேர் காண்லுக்கு அழைத்தார்கள்சென்றென்  நேர் காணல் முடிவில் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்கள்  
நான் லூகாஸ் டி வி எஸ்ஸை  விட்டு பி எச் ஈ எல் க்கு ஏன் சென்றேன்  அடுத்த பதிவில் காணலாம்

வெள்ளி, 7 டிசம்பர், 2018

ஒரு காதல் மொட்டிலேயே கருகுகிறதா


                           ஒரு காதல் மொட்டிலேயே கருகுகிறதா
                           ----------------------------------------------------------------


யாருடி அவன்
 
தலைப்பை என்னவோ  தேர்ந்தெடுத்தாயிற்று இந்தக்  கேள்வியை யார்யாரிடம் கேட்பதாகக் கதை பண்ண வேண்டும்கணவன் மனைவியிடம் கேட்கலாம்   தந்தையோ தாயோ  மகளிடம்கேட்பதாக இருக்கலாம் அண்ணன்  தங்கையிடம்  கேட்பதாக  இருக்கலாம்  ஒரு தோழி தன் தோழியிடம் கேட்கலாம் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும்   கதை பண்ணக் களம்வேண்டும் எதைத் தேர்ந்தெடுப்பது சொல்லும் கதையில் ஒரு உண்மைத்தனம்இருக்க வேண்டுமென்பதில் நான் உறுதியாயிருக்கிறேன்

”யாருடி அவன்”

”எனக்குத் தெரியாது”

”தெரியாதவனிடமா பேசிக் கொண்டிருந்தாய்
”நான் பேச வில்லை  அவர்தான் வந்துபேசினார்”

”அவர் என்னடி அவர்….  மரியாதை வேண்டிக் கிடக்கிறது  
என்னதான்  பேசினான் அவன்”

”எனக்கு வெட்கமாய் இருக்கு சொல்ல”

”போட்டேன்னா ஒரு போடு வெட்கமாம்  வெட்கம்
அப்படி அவன்தான் என்னடி பேசினான்”

”என்னைக் கல்யாணம் செய்ய விருப்பமான்னு  கேட்டார்”

”உனக்கு என்ன வயசாசுன்னு  தெரியுமா”

”பதினைந்து
”இந்த வயசில் கல்யாணமா?”

”அவர்தான்  கேட்டார்

மறுபடியும் மறுபடியும்  அவர்தான்னு சொல்லறே”--- சொல்லிக் கொண்டே பளார் என்று ஒருஅறை விழுந்தது

”என்னடா அந்தப் பெண்ணைப் போட்டு அடிக்கற”  என்று கேட்டுக் கொண்டே வந்தாள் அவர்களதுதாயார் ”
 நீ இப்படிச் செல்லம்கொடுத்துதான்   இவள் கெட்டுப்போகிறாள்இந்த வயசில் இவளுக்கு கல்யாணம் கேட்கிறதாம்”

”எனக்கு எதுவும் தெரியாது அவர்தான் கேட்டார்”
”அம்மா அப்பாகிட்ட வந்துகேளுங்கோ  என்றுதான் சொன்னேன்
 
” ஓஒ இப்போ இதுவேறயா”

”நீ ஏண்டா இவளைப் போட்டு அடிக்கற யார் அந்தபையனென்று விசாரி”

”ஆமா இவ காதலுக்கு நான் தூது போகணுமா
 ”நீ ஏண்டா காதல் கத்தரிக்காய் என்கிறாய்
”நான் காதல்னு சொன்னேனா
”நீ பேசாம இருடி போட்டேன்னா தெரியும்”
 
”யாருடி அவன்
  
”எனக்குத் தெரியாதம்மா ஸ்கூலுக்குப் போகும்போ வரும்போ பார்ப்பேன்  மத்தபடி யார்னு தெரியாது”

”அவனுக்கு உன்னிடம் கல்யாணம்பற்றிப்பேச என்ன தைரியம்  வந்ததுநீ இளிக்காம்
அவன் எப்படிக் கேட்டிருப்பான்”

 ”நான் ஒன்னும்  சிரிக்கலை அவர்தான்……”
.
”டேய் இதைஇப்படியே விடக்கூடாது நீ அந்தப்பையனைப்பார்த்துக் கேளு  இதெல்லாம் தப்பு என்றுசொல்லு”

 அன்று மாலை  அந்தப்பையனைப்பார்த்துக்கேட்டான்

”சார் எனக்கு ஒன்னும் தெரியாது உங்க சிஸ்டர்tதான்  என்னைப் பார்த்துசிரித்தது நானும்  சிரித்தேன்
 ”இதோட நிறுத்திக் கொள்தொடர்ந்து தொல்லைதந்தால்  தொலச்சு விடுவேன்” என்று அந்தப் பையனைப் பார்த்து மிரட்டி விட்டுவந்தான்

வீட்டில் வந்து சொன்னதும்   முள்ளில் சேலை சிக்கினாலும்  சேலையில் முள் சிக்கினாலும் பாதகம் சேலைக்குத்தான்   நம் வீட்டுப் பெண்தான் பாதிக்கப்படுவாள்என்றுசொன்ன அம்மா அன்றிரவே மந்திராலோசனை கூட்டினாள்

”இவளைச் சீக்கிரமே கல்யாணம் செய்து கொடுப்பதுதான்  நல்லதுவரன் தேட ஆரம்பியுங்கள்” என்றாள் இது வரை எதுவும் பேசாமல் இருந்த பெண்  மெதுவாக  ”ஏன் அம்மா  அந்தைப்பையனையே பார்க்கக் கூடாதா”  என்று கேட்டாள் இது வரை அடக்கி வைத்திருந்த கோபத்தை எல்லாம் காட்டி  அவள்  அண்ணன்   அவளைவாங்கு வாங்கென்று வாங்கி விட்டான்

இப்படியாகத்தானே ஒரு உலகம் அறியாச் சிறுமிக்கு வரன் பார்த்துக்கல்யாணம்  செய்து வைக்கப்பட்டது
 (கதை எழுதுவதில்பல உத்திசள்  இருக்கின்றன கதைக்கருவில் என்னவெல்லாமோ மாற்றம் செய்யத் தோன்றும்   வாசகர்கள் அவர்களுக்குப்பிடித்தமாதிரி கதை எழுதலாமே    

புதன், 5 டிசம்பர், 2018

பெர்செப்ஷனே எழுத்தாக


                                 பெர்செப்ஷனே  எழுத்தாக
                                   -----------------------------------------
    யாருடி அவன்

2011ம்  ஆண்டு  ஐந்தும் இரண்டும்  என்னும் பதிவு எழுதி இருந்தேன் அதில் பின்னூட்டமாகதிருஜீவி சார் /நன்றாகவே இருக்கிறது, ஜிஎம்பி சார்!
அதை இன்னும் நன்றாகச் செய்வதற்காக சொல்ல வந்தேன்.

'ஹாலில் நான் சேரில் அமர்ந்திருந்தேன், பேருக்காக பேப்பர் பக்கங்களைப் புரட்டியபடி

வாசல் பக்கம் யாரோ நிற்கிற மாதிரி இருந்தது. சடாரென்று எழுந்து போய்ப்பார்த்தால்..' என்று கதையை ஆரம்பித்துப் பாருங்கள்.. அழுத்தமாக ஒரு சிறுகதை உரு கிடைக்கும் /  என்று பின்னூட்டமெழுதி இருந்தார்  அப்போது நானொருகற்றுக்குட்டி வலைப் பதிவர்
ஜீவியோ பழம்தின்று   கொட்டைப் போட்டவர்அவர் சொல்படிமுடிகிறதா  என்று பார்ப்போமே  என்று ஒருசிறுகதை எழுதினேன்  அதுவே ஏறி வந்தஏணி 
 அதற்கு பின்னூட்டமாக ஜீவி  /  ஹாலில்நான் சேரில் அமர்ந்திருந்தேன்.. என்று அந்த 'ஐந்தும் இரண்டும்' கதையை ஆரம்பித்து எழுதலாம் என்றால், ஒரு புதுக்கதையையே பிரமாதமாக எழுதிவிட்டீர்களே\ என்று எழுதி இருந்தார்
அண்மையில்  திருஜீவி/ 
இன்றைய உலக அரசியலில் மோடியின் பங்கு வியக்கத் தக்கதாயும் துணிச்சலாயும் நம் தேசத்திற்கு உலக அரங்கில் பெருமை தெடித் தருவதாகவும் இருக்கிறது.

பதிவு எழுத அருமையான காலத்திற்கு தேவையான டாபிக்.
முடிந்தால் முயற்சித்துப் பாருங்கள்./ என்று ஒரு பின்னூட்டமிட்டிருந்தார் ஆனால்கதை எழுதுவது கற்பனையில் விளைவது அரசியல் பிரமுகர் பற்றி எழுதுவது அது போலல்ல
 அரசியல்  எண்ணங்கள்  பெரும்பாலும்  ஏதோ பெர்செப்ஷனின்  அடிப்படையில் உருவாவது என் பெர்செப்ஷன் மோடியைப்பற்றி முற்றிலும்   வேறானது என் எழுத்தில் என் கருத்துகள் இடம்பெறும் 
மனதுக்கு ஒவ்வாததைஎன்னால் எழுத முடியாது இருந்தாலும்  மோடியைப் பற்றின என் எண்ணங்களைப் பகிரலாம் என்றிருக்கிறேன்
உலக அரசியலில் மோடியின் பங்கு வியக்கத்தக்கதாயும்   துணிச்சலாயும்  நம்  தேசத்திற்குபெருமை தேடித்தருவதாயும் இருக்கிறது  எனக்குத் தெரிந்தவரை  இதே மோடிக்கு உலக அரசுகள் வீசா மறுத்திருக்கின்றன இப்போதைய வரவேற்பு  அவர் இந்தியா என்னும்  பரமசிவன்கழுத்தில் இருக்கும்  பாம்பாக இருக்கிறார் என்பதாலேயே
சென்ற பிரதமரைப்பற்றி மோடி  மௌன்மோஹன்  சிங் என்பார்  ஆனால்மோடி நிறைய பேசுகிறார்  எல்லாமே ஒன் வே தான்  மன்கி பாத்  என்னும் நிகழ்ச்சி மூலம்   அவரிடம்யாரும்கேள்வி கேட்கக் கூடாது இதனாலேயே  பத்திரிகையாளர்களை  அவர் சந்திப்பதுஇல்லை அவர் பிரதமரான பிறகு ஒரு முறை கூட பத்திரிக்கையாளர்களை சந்தித்தது  கிடையாது 
2007ல்  என்று நினைவு மோடி குஜராதின்முதலமைச்சராக  இருந்த  நேரம்  கரன் தாப்பர் என்னும்  பத்திரிக்கையாளரின் பேட்டி மோடிக்கு கோபம் வந்து  பாதியிலேயே  எழுந்து விட்டாராம்

கோத்ரா கலவரத்தின்போது  அதைஅடக்க எந்தமுயற்சியும்   மோடி எடுக்க வில்லையாம்  மாறாக  ரயிலில் எரிக்கப்பட்ட கர் சேவக்குகளின்  சடலங்களை ஊர்வலமாகஎடுத்துச்செல்ல அனுமதித்தாராம்இந்தச் செய்தியை ஊர்ஜிதப்படுத்தும்விதம் எந்த  செய்தியும் கிடைக்கவில்லை சென்ற அரசு ஊழலில் சிக்கித் தவித்ததையே  சொல்லிக் காட்டப்படுகிறதுஅரசு மாறினால் இவர்கள்செய்த ஊழல்கள் அம்பலத்துக்கு வரும்  

தகவல் அறியும்   சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்தில் 80%அதிகமான தகவல்கள்  மறுக்கப்படுகின்றதாம்  ஆண்டு தோறும் ஏழைகளுக்கு  நூறு நாள் வருமானம்  வரும்படி தரும் MGNREG  இப்போது  செயல் படுகிறமாதிரி இல்லை  திட்டக் கமிஷன் என்னும் பெயரை  மாற்றி NITI AYOG  என்னும்  புதுப்பெயரில் அழைக்கப்படுகிறது மாற்றம் புதுபொலிவுடன் இயங்க என்னும் எண்ணத்தில் செயல் படுகிறதாம்   இதன் சொந்தக்காரர் மோடியேவாம் இம்மாதிரி பலபெயர்களை மாற்றி டிங்கெரிங்  செய்வதில் வல்லமை படைத்து விட்டார்கள் உ-ம் ஆதார்  எண் முதலில்மறுத்தவர்கள் இப்போது  நடை முறைப் படுத்துவதில் தீவிரம்காட்டுகிறார்கள் இப்போது எது செய்தாலும் அதன்  க்ரெடிட்  மோடிக்கே  ஆனால் அஸ்திவாரம் எழுப்பப்பட்டு இருந்ததை இருட்டடிப்பு செய்கிறார்கள் GSTயும்  அம்மதிரிதான்    பெரும்பான்மை பலத்தில்  இருப்பதால் எதையும் செய்யலாமென்று நினைக்கிறார்கள்
பெரும்பான்மையின்ர்  ஒரு கழுதையை குதிரை என்று சொன்னால் ஏற்கமுடியுமா இதைஎல்லாம்  எனக்கே இருக்கும் பெர்செப்ஷனில்தான் எழுதுகிறேன்
நிற்க  மேலே துவக்கத்தில்எழுதி இருக்கும்   யாருடி அவன் என்னும் தலைப்பில் ஒருசிறுகதை எழுதுவேன்  என்றுவாசகர்களை எச்சரிக்கிறேன் வாசகர்களும் முயற்சிக்கலாமே    
    



திங்கள், 3 டிசம்பர், 2018

நேருவின் நினைவுகள் சில



                        நேருவின்  நினைவுகளில்
                          -------------------------------------
அண்மையில் நெஞ்சு பொறுக்குதில்லையே என்றுஒரு பதிவு எழுதி இருந்தேன்   பின்னூட்டத்தில் திரு ஜீவி அவர்கள் நேருவின் மீதுஎன்ன திடீர் கரிசனமென்று கேட்டிருந்தார்  புகழ் பெற்றவர்களின் பிறந்த நாட்களில்அவர்களை நினைவு கொள்ளல்  நம் பழக்கம்  நேருவின்  பிறந்த நாளில்  அவரைப் பற்றியசேதிகள் ஏதும் இல்லாமல் நம் தொலைக்காட்சி  ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தது வருத்தம்தந்தது பதிவு எழுதும்நானாவது அவர் நினைவுகள் சிலவற்றைப் பகிரலாம் என நினைத்தேன்  சுவாரசியத்துக்கு சில செய்திகள் நேரு பற்றி. 
1959-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி தாமோதர் பள்ளத்தாக்குக் கார்பொரேஷனின்(“DVC”) நான்காவது அணை தான்பாத் ( DHANBAD )மாவட்டத்தில் பான்செட்டில் (PANCHET)  திறக்கப் பட்டது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் அதை அங்கு பணி புரிந்த புத்னி மேஜான் (BUDHNI MEJHAN) என்ற பதினைந்து வயது சாந்தால் இன ஆதிவாசிப் பெண்ணினால் திறக்க வைத்தார்.சிரித்து மகிழ்ந்திருந்த பிரதமரின் பக்கத்தில் அந்தப் பெண்ணுக்குக் கிடைத்த மதிப்பும் மரியாதையும் அவளைக் குதூகலத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும்.
அந்தப் பெண் அவளுடைய கிராமம் கர்போனாவுக்குத் (KARBONA) திரும்பிச் சென்றார். பிரதமர் நேருவுக்கு திறப்பு விழாவின்போது அவள் மாலையிட்டதால்,அவர்கள் வழக்கப்படி பிரதமருக்கு அவள் மனைவியாகி விட்டாள். பிரதமர் நேரு சாந்தால் இனத்தைச் சேராதவர் என்பதால், அவளுக்கு அந்த இனத்திலும் ஊரிலும் இடமில்லை என்று கூறி, அவளைக் கிராமப் பெரியோர்கள் ஜாதிப் பிரஷ்டம் செய்து துரத்தி விட்டார்கள்.
பான்செட்டில் சுதிர் தத்தா என்பவர் அவளுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவர் மூலம் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானார். 1962-ம் வருடம் DVC வேலையிலிருந்து விலக்கப்பட்டார். கிடைத்த வேலைகளைச் செய்து காலங்கடத்திய அவள் 1980-களில், தான் மாலையிட்ட நேருவின் பேரனான அப்போதையப் பிரதமர் ராஜிவ் காந்தியை அணுகி, தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பொரேஷனிலேயே வேலை கிடைக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். 2001-ம் ஆண்டு கிடைத்த செய்திப்படி DVC-ல் வேலையிலிருந்த புத்னி, தன் சொந்தக் கிராமம் கர்போனாவுக்குப் போக அனுமதிப்பார்களா என்று கேட்டுக் கொண்டிருந்தாளாம். கடைசியாகக் கிடைத்த செய்திப்படி புத்னி (“ நெருவின் ஆதிவாசி மனைவி”).தனது 67-வது வயதில் , இறந்தார் என்பதே
நாம் சிந்திக்காமலே ஏற்றுக் கொண்ட விஷயங்களில் இந்தியா பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதும் ஒன்று. மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு நாத்திகர். அவர் கோயில்கள் என்று குறிப்பிட்டது, வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் தொழிற்சாலைகளையும் விவசாய நீர்ப் பாசனத்துக்கு உறுதுணை செய்யும் அணைகட்டுகளையுமே. அவர் மிகப் பெரிதாகக் கனவு கண்டார். கண்ட கனவுகளை மெய்ப்பிக்க ஏராளமான தொழிற்சாலைகளையும் அணைக்கட்டுகளையும் நிறுவினார். ஊரையும் பேரையும் இணைக்கும் இவற்றின் பட்டியலில் சில இவை
 சிந்திரி ( உரத்தொழிற்சாலை.)
பிம்ப்ரி (பெனிசிலின்).
சித்தரஞ்சன் ( லோகோமோடிவ் )
பெரம்பூர் ( கோச் ஃபாக்டரி )
பிலாய்  ( ஸ்டீல் )
அங்க்லேஷ்வர் ( பெட்ரோலியம் )
நரோரா  ( ஹெவி வாட்டர் )
தாராப்போர் ( அணு நிலையம் )

பல்வேறு உபயோகத்துக்கான அணைக்கட்டுகள்

பக்ரா நங்கல், ஹீராகுத் , DVC அணைகள்,கோசி, துங்கபத்ரா, கேயல்கரோ, சர்தார் சரோவர்

தவிர நிலத்தடி கனிமங்களுக்காக

ஜரியா ( கரி ),ஹஜாரிபாக் (மைக்கா ),சிங்பும், பைலாடிலா, கட்சிரொலி ( இரும்பு கனிமம் ) நெய்வேலி ( பழுப்பு நிலக்கரி ), கியோஞ்சார் ( மாங்கனீஸ் ) கோரபுட் ,கந்தமர்தன் ( பாக்சைட் )

அவர் தொடங்கி பிறகு எழுப்பப்பட்ட நூதனக் கோயில்களின் எண்ணிக்கை பட்டியலில் அடக்குவது சிரமம். இந்தியா பொருளாதார முன்னேற்றத்தில் குறிப்பிடப்படும் ஒரு நாடாகத் திகழ, இந்தக் கோயில்களின் இயக்கம் மிக முக்கியம். இருந்தாலும் இந்த முன்னேற்றம் போதாது இன்னும் வேண்டும் என்பதும் நியாயமானதே. NECESSITY
IS THE MOTHER OF INVENTION என்பார்கள். தேவைகளே கண்டு பிடிப்புகளின் மூலம் (தாய்) எனலாமா.? போதுமென்ற மனமே பொன் செயும் மருந்து என்று திருப்திப் பட முடியுமா.? CONTENTMENT SMOTHERS INVENTION என்று எனக்குத் தோன்றுகிறது. திருப்தி என்பது ஆற்றல்களை அழுத்திவிடும். 
எந்தவித முன்னேற்றத்துக்கும் ஒரு விலை உண்டு. ஒன்றின் அழிவில்தான் இன்னொன்று உருவாகிறது என்பதும் நியதி போல் தோன்றுகிறது. நியாய அநியாயங்கள் , சரி தவறு போன்றவை காலத்தினால் முடிவு செய்யப் பட வேண்டியவை.

இந்திய தேசப் பிரிவினைக்குக் கொடுக்கப்பட்ட விலை, ஆயிரக் கணக்கானவர்களின் உயிரும், பல்லாயிரக் கணக்கானவர்களின் வேரறுந்ததுமே.. இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வடுக்களும் தழும்புகளும் மாற வில்லை. சம்பந்தப் பட்டவர்களும் இடம் பெயர்ந்தும், புலம் பெயர்ந்தும் புது வாழ்க்கைக்கு, ( இப்போது பழைய வாழ்க்கையாகி விட்டது.)பழகிக் கொண்டு விட்டார்கள். இந்தத் தலை முறையினருக்கு அது தெரிய நியாயமில்லை.

இந்தப் புலம் பெயர்தலும் ,புது வாழ்க்கையும் விடாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது..என்ன ஒரு வித்தியாசம் என்றால், இவர்களின் வேதனைகளும் வலிகளும் உணரப் படுகின்றன. இவர்கள் செய்வது நாட்டுக்கான தியாகம். இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் உயிரிழப்புகள் இருந்தே தீரும் என்று ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம் போல. பொருளாதார முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் போது சிலரது இழப்புகள் தவிர்க்க முடியாது.

அந்தக் காலத்தில் இந்தப் பொருளாதார முன்னேற்றத்துக்காக, அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ செய்த தியாகம் கண்டு கொள்ளப் படாமலேயே போயிருக்கிறது. ஒரு கணக்குப்படி, சுதந்திரம் கிடைத்த இத்தனை  வருடங்களில், ஐந்து கோடி பேர்களுக்கும்மேல் இடம் பெயர்க்கப் பட்டிருக்கிறார்கள். முன்னேற்றத்தின்போது உரிமைகளைப் பற்றி பேசுவது விரும்பத்தக்கது அல்ல என்று அன்றைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், கூறியதாகவும் செய்தி இருக்கிறது.

முன்னேற்றத்துக்காக ஒரு விலை கொடுத்தே ஆகவேண்டும்.ஆனால் இந்த முன்னேற்றத்துக்கு விலை கொடுப்பவரகளுக்கும் உரிமை இருக்க வேண்டும். ஆதிவாசிகளின் அடி வயிற்றில் கை வைத்து அவர்களின் வேதனையில் முன்னேறுபவர்கள், தனிப்பட்ட மனிதர்களாக இருப்பது வெட்கப் பட வேண்டிய விஷயம்.
ஒருமுறை நான் கடவுளோடு கனவில் உரையாடியபோது அவர் சொன்னார்.
( PAIN IS INEVITABLE. BUT SUFFERING IS OPTIONAL ) வலி தவிர்க்க முடியாதது. ஆனால் வேதனையாக எண்ணுவது நாமே தேடுவது .முன்னேற்றத்தில் வலி இருக்கும், அவர்களின் வேதனையைக் குறைக்க அரசாங்கம் ஆவன செய்யலாமே.

உரிமைக்காகப் போராடுபவர்களும் ஒரு லட்சுமணன் கோட்டைப் போட்டுக் கொள்வது நலமோ என்று தோன்றுகிறது. .அதை அவ்வப்போது மீறி ராமாயணம் தொடரவும் வழி செய்யலாமோ.?.

நேருபற்றி இப்போது கூறுபவர்கள் அவருடைய சொந்த வாழ்க்கையின்  சில பகுதிகளை
அடிக்கோடிட்டு தூற்றுகிறார்கள் அவர்களை மன்னிப்போம் மறப்போம்
1960 என்று நினைவு நான் பயிற்சி முடித்து எச் ஏ எல்  ஏரோ எஞ்சின்   டிவிஷனில் பணியில் இருந்தேன்  பெரிய பெரிய மெஷின்களை  எரெக்ட் செய்து கொண்டிருந்தோம்   நேரு தொழிற்சாலைக்கு வந்திருந்தார் ஹைட்ரோடெல் என்னும் மெஷினில் நான் இருந்தேன்  அவர் அந்த மெஷின்களின் டிடெயில்ஸ்களை ஆர்வத்துடன்கேட்டுக் கொண்டிருந்தார்  அந்த மெஷினிலிருந்து அவருடைய bust  ஒன்றை அந்தமெஷினில் உருவாக்கினோம்  அதை அவருக்கு நினைவுச் சின்னமாகக் கொடுத்தோம் மிக்க மகிழ்ச்சியுடன்பெற்றுக் கொண்டு  அதை செய்த விதத்தை கேட்டுத்தெரிந்து கொண்டார் ஓரிடத்திலிருப்பவர் நாம் நினைக்கும் முன்னே இன்னோர் இடத்திலிருப்பார்  குழந்தை போன்ற உற்சாகம் நடையிலும்  பேச்சிலும்   அவரது உருவப்படம் ஒன்றை ஒரு நண்பன் வரைந்து  அவருக்கு கொடுக்க முன்வந்த போது அவரது மெய்க்காவலர்கள் தடுத்துவிட்டனார்  இதெல்லாம் சொந்த அனுபவங்கள்  மனிதருள்  மாணிக்கம் என்று  சும்மாவா சொல்கிறார்கள்