நான் போட்ட நாடகங்கள்.
-----------------------------------நான் அந்தக் காலத்திலேயே சுமாராக எழுதுபவன் என்று
எண்ணிக்கொண்டிருந்தவன். சிறுகதை, கவிதை, கட்டுரை
என்று எல்லாவற்றிலும் முயற்சி செய்திருக்கிறேன். நான்
எழுதியது எல்லாம் என் ஆத்ம திருப்திக்கு மட்டுமே.
எழுதியவற்றை சில நாட்கள் கழித்துப் படித்துப் பார்த்தால்
நம்மை நாமே விமரிசிக்க முடியும். நாடகம் எழுதி, நடித்து,
அரங்கேற்ற வேண்டும் என்ற ஆவல் எனக்கிருந்தது. 1962-ம்
வருடக் கடைசி என்று நினைக்கிறேன்.மைசூர் இண்டஸ்டிரிஸ்
ஸ்போர்ட்ஸ் அண்ட் ஃபைன் ஆர்ட்ஸ் அசோசியேஷன் ஒரு
நாடகப் போட்டி நடத்துவதாக அறிவித்திருந்தார்கள்.HAL AERO
ENGINES சார்பில் நான் ஒரு நாடகம் எழுதி போட்டியில் பங்கு
பெற அனுமதி பெற்றேன்.நாடகம் ஒன்றரை மணி நேரத்துக்குள்
இருக்க வேண்டும்.பல மொழிகளில் போட்டியில் பங்கு பெற
நாடகங்கள் வந்திருந்தன. என் நாடகம் தமிழில் “ வாழ்ந்தே
தீருவேன்” என்ற தலைப்பில் இருந்தது.
நாடகம் போட ஆர்வம் இருந்தால் மட்டும் போதுமா.?நடிக்க
ஏற்ற நண்பர்கள் கிடைக்க வேண்டும்;பெண் கதாபாத்திரத்தில்
நடிக்க, தொழில் முறை நடிகைகளை கொண்டு வர வேண்டும்.
கதை வசனம் ஆளுக்கொரு காப்பி கொடுக்க வேண்டும்.ரிகர்சல்
நடத்த வேண்டும். அதற்கு இடம் தேட வேண்டும். செலவுக்குப்
பணம் வேண்டும்.இவற்றை எல்லாம் சுமாராகப் ப்ளான் செய்து
நடிகர் தேர்வில் இறங்கினேன். ஒருவனுக்கு நடிக்க வருமா
என்று எப்படி கணிப்பது.? வசனங்களை ஏற்ற இறக்கத்துடன்
சரியான உச்சரிப்பில் பேசினாலேயே பாதி நடிப்பு வந்த மாதிரி.
இதை சோதிக்க நான் ஒரு உத்தி வைத்திருந்தேன். கலைஞ்ர்
கருணாநிதியின் “வீரத்தாய்” என்ற ஓரங்க நாடகம் எனக்குத்
தெரியும்.அதனை எழுதி, நடிக்க விருப்பம் உள்ளவர்களிடம்
படித்துக் காட்டச்சொல்லுவேன். நன்றாகப் படித்தவன் கதா
நாயகன் வேஷத்துக்கும், சுமாராகப் படித்தவர்கள் பிற பாத்திர
வேஷங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சரியாக படிக்க
முடியாதவர்கள் நிராகரிக்கப்பட்டனர்.
நானே முதன்முதலில் எழுதி நடித்து இயக்க இருந்தேன்.
நிறைய கதாபாத்திரங்கள் இருந்தால் சமாளிப்பது கஷ்டம்.
தொழிற்சாலைகளுக்குள்ளான போட்டி என்பதால் முதலாளி,
மேனேஜர், தொழிற்சங்கத் தலைவன் , முதலாளி மகன், மகள்
என்ற முக்கிய கதாபாத்திரங்களுடன் கதை எழுதி இருந்தேன்.
எதிர்பாராத திருப்பமுடன் மேடைக்கதை அமைத்திருந்தேன்.
எனக்கு நான் ஒரு பாலசந்தர் என்ற நினைப்பு. நடிக்க வந்தவர்
மனதில் சிவாஜி, ஜெமினி என்ற நினைப்பு.தொழில்முறை
நடிகை இரண்டு மூன்று ரிகர்சலுக்குத்தான் வருவார். அவர்
மனதில் சாவித்திரி ,பத்மினி என்ற எண்ணம்.அவர் இல்லாத
போது டம்மி கதாநாயகியாக யாராவது இருக்கவேண்டும்.
எல்லோரும் தொழிற்சாலையில் பணி புரிபவர்கள்.பணி
முடிந்து வீட்டிற்கு திரும்பி ரிகர்சலுக்கு குறித்த நேரத்தில் வர
பல தொந்தரவுகள் இருக்கும். எல்லாவற்றையும் மீறி நடிக்க
வந்தபிறகுதான் வசன தாள்களையே பார்ப்பார்கள். அவற்றை
மனப்பாடம் செய்து ஒப்பிப்பதற்கு முன், சுற்றி இருந்துகொண்டு
நடிக்காமல் வசனங்களை வெறுமே படிக்க வேண்டும். ஒருவர்
முடித்து அடுத்தவர் வசனம் எங்கு துவங்குகிறது என்று புரிந்து
கொள்ள இந்த முறையைப் பயன்படுத்தினேன். எழுதும்போது
நல்ல தமிழில் எழுதி இருந்தேன். பேசும்போது அப்படியே
பேசினால் சமூக நாடகத்துக்கு ஒத்துவரவில்லை. பேச்சுத்
தமிழ் என்று கூறினால் மிகவும் கொச்சையாக வந்தது.
எப்படியோ ஓரளவு தயாரான நிலையில் கதாநாயகியுடன்
சேர்ந்த ரிகர்சல். அப்போதுதான் பின்னணி இசை இல்லாமல்
என்ன நாடகம் என்று தோன்றியது. அருகில் இருந்த ஒரு
ஆர்கெஸ்ட்ரா குழுவுடன் விவாதித்தோம். அவர்கள் ஒரு
வேளை ரிகர்சலுக்கு டிபன் காப்பி செலவுடன் ரூபாய் 80/-
கேட்டார்கள்.நாடகத்தன்று ரூபாய் 100/- தர வேண்டும் என்றும்
கூறினார்கள்.வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டு
சிசுவேஷனை அவர்களுக்கு விளக்கினோம். என் வீட்டில்தான்
எல்லா ரிகர்சலும். இசையுடன் கூடிய ரிகர்சலிலேயே ஒரு
நாடகம் பார்க்க வரும் கூட்டமிருந்தது.
நடிப்பு சொல்லிக் கொடுக்கும்போது நான் பட்ட கஷ்டம்
அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். வசனம் முடிந்தவுடன்
எந்த ஒரு முகபாவமும் இல்லாமல் கட்டைபோல் நின்று
விடுவார்கள். கைகால்கள் இயல்பாக இயங்காது. எல்லோரும்
ஆர்வத்தில் நடிக்க வந்தவர்கள் நாட்பட நாட்பட கொஞசம்
கொஞ்சமாக மெருகேற்றி வந்தோம்.
செலவு கைக்கு மீறிப் போகவே, நாடகம் பார்க்க வரும்படி
அழைப்புக் கொடுக்கும்போதே, அறிந்தவர்கள் எல்லோரிடமும்
செலவு கைக்கு மீறிப் போகவே, நாடகம் பார்க்க வரும்படி
அழைப்புக் கொடுக்கும்போதே, அறிந்தவர்கள் எல்லோரிடமும்
நன்கொடையாக ரூ.1/-, ரூ.2/-, ரூ. 5/- என்று பெற்றுக்கொண்டோம்.
ஒரு வழியாக 1963-ம் வருடம் பெப்ரவரி மாதம் 13-ம் நாள்
என்று நினைக்கிறேன். பெங்களூர் டவுன் ஹாலில் அடி
யேனின் நாடகம் அரங்கேறியது. போட்டியில் பங்கெடுத்தும்
பரிசு ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் நல்ல விமரிசனங்கள்
வந்தன. நான் எழுதியிருந்த ஒரு வசனம் சிறப்பாகப் பேசப்
பட்டது.அதில் நான் “ ஒருகாலத்தில் நாட்டை அரசன் ஆண்டான்;
பின் அந்தணன் ஆண்டான், பிறகு பெருந்தனக்காரன் ஆண்டான்
இன்னும் ஆள்வதாகவும் மனப்பால் குடிக்கிறான். வேதம் கூறும்
நான்கு சாதியினரில் மூவரின் காலம் தழைத்திருந்தாகி விட்டது.
இதுவரை. இப்போது, இது, எங்கள் காலம், ஏழைத்தொழிலாளரின்
காலம்,நிறம் மாறும் பச்சோந்திப் பணமூட்டைகளுக்கு சாவு மணி
அடிக்கும் எங்கள் காலம். பாட்டாளிகளின் பொற்காலம். மாறி
வரும் காலத்தின் மதிப்பு மாற்றங்களை புரிந்து கொள்ளாமல்
கொடுப்பவன் நான் என்று மமதையில் கொக்கரிக்காதே. ONE HAS
TO GIVE FIRST TO TAKE.!" என்று எழுதியிருந்தேன்.
அதற்குப் பிறகு அலசூரில் முத்தமிழ் மன்ற சார்பாக பெங்களூர்
குப்பி தியேட்டரில் முரசொலி சொர்ணத்தின்,”விடை கொடு
தாயே” ,என்ற நாடகத்தை அரங்கேற்றினேன். அதன் பிறகு
கண்ணன் எழுதிய “முப்பது நாள் “ என்ற நாடகத்தையும்
அரங்கேற்றினேன். நீளமான வசனங்களை எங்களுக்கு ஏற்ற
படி மாற்றிக்கொண்டோம். விடை கொடு தாயே நாடகம்
அந்நாள் கர்னாடக கல்வி அமைச்சர் திருமதி.கிரேஸ் டக்கர்
தலைமையில் நடந்தது.
நாட்கள் பல சென்றபிறகு, நான் பி.எச்.இ..எல் --ல் பணி
யாற்றிக் கொண்டிருந்தபோது, “வாழ்ந்தே தீருவேன் “
நாடகத்தை மறுமுறை கம்யூனிடி செண்டரில் 1971-ல்
நாடகப் போட்டியில் நடத்தி இரண்டாம் பரிசாக ஒரு
ஷீல்ட் வாங்கினேன். குடியிருப்பில் இயங்கி வந்த கிருஷ்ண
கான சபாவுக்காக, “ஆராமுது அசடா” என்ற நாடகத்தை இயக்கி
நடித்துக் கொடுத்தேன். அவர்களுக்காக அதையே ஸ்ரீ ரங்கத்திலும்
நடத்திக் கொடுத்தேன். பிறகு “ மனசாட்சி” என்ற நாடகம் சில
புது உத்திகளுடன் கம்யூனிடி செண்டரில் அரங்கேற்றப் பட்டது.
அந்த நாடகத்தின் கரு கொண்ட ஒரு சிறுகதையை என்
வலைப்பூவில் பதிவாக வெளியிட்டிருக்கிறேன்.
ஒவ்வொரு நாடகம் போடும்போதும் நடந்த நிகழ்ச்சிகளை
நினைத்து அசை போடுவது மனசுக்கு இதமாக இருக்கிறது.
நல்ல் வேளை நான் சினிமாப் பக்கம் போகவில்லை. போய்
இருந்தால் போட்டி தாங்காமல் பலரும் ஓடிப்போயிருப்பார்கள
ஒப்பனை அறை எங்குள்ளது ?" )
நாட்கள் பல சென்றபிறகு, நான் பி.எச்.இ..எல் --ல் பணி
யாற்றிக் கொண்டிருந்தபோது, “வாழ்ந்தே தீருவேன் “
நாடகத்தை மறுமுறை கம்யூனிடி செண்டரில் 1971-ல்
நாடகப் போட்டியில் நடத்தி இரண்டாம் பரிசாக ஒரு
ஷீல்ட் வாங்கினேன். குடியிருப்பில் இயங்கி வந்த கிருஷ்ண
கான சபாவுக்காக, “ஆராமுது அசடா” என்ற நாடகத்தை இயக்கி
நடித்துக் கொடுத்தேன். அவர்களுக்காக அதையே ஸ்ரீ ரங்கத்திலும்
நடத்திக் கொடுத்தேன். பிறகு “ மனசாட்சி” என்ற நாடகம் சில
புது உத்திகளுடன் கம்யூனிடி செண்டரில் அரங்கேற்றப் பட்டது.
அந்த நாடகத்தின் கரு கொண்ட ஒரு சிறுகதையை என்
வலைப்பூவில் பதிவாக வெளியிட்டிருக்கிறேன்.
ஒவ்வொரு நாடகம் போடும்போதும் நடந்த நிகழ்ச்சிகளை
நினைத்து அசை போடுவது மனசுக்கு இதமாக இருக்கிறது.
நல்ல் வேளை நான் சினிமாப் பக்கம் போகவில்லை. போய்
இருந்தால் போட்டி தாங்காமல் பலரும் ஓடிப்போயிருப்பார்கள
===============================================
( "உலகமே நாடக மேடை என்றால் ஒப்பனை அறை எங்குள்ளது ?" )
.