ஞாயிறு, 14 ஜூன், 2015

முட்டி மோதும் நினைவுகள்..ஓ..அந்தக்காலம்--2....

                                                 ஓ....அந்தக்காலம்....2
                                      முட்டி மோதும் நினைவுகள்........
                                      ----------------------------------------
அந்தக் கால நினைவுகளே வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம் என்பதன் குறியீடுகளாக இருக்கின்றன. நினைவுகள் முட்டி மோதும் போது நிகழ்வுகள் என்னைப் பதிவிடு, என்னைப் பதிவிடு என்று போட்டி போடுகின்றன, என்னைப்பொறுத்தவரை எல்லா நிகழ்வுகளுமே அனுபவங்களைப் பெற்றுத் தந்து என்னை ஓரளவு ஆளாக்கி இருக்கின்றன. சில நினைவுகள் மகிழ்ச்சியைத் தரும் . சில நிகழ்வுகள் வருத்தம் தரும் சில நினைவுகள் எந்தவிதமான அனுபவத்தையும் வளர்த்திருக்காது. நிகழ்வுகளையும் அது சார்ந்த நினைவுகளையும் பகிர்கிறேன் வாசிப்பவர் கருத்து எடுத்துக் கொள்ளட்டும்
1963 என்று நினைக்கிறேன் சரியான வருடத்தைக் கூற என் பழைய டைரி குறிப்புகளைப் பார்க்கவேண்டும் வருடம் முக்கியம் என்றால் ஸ்ரீதரின் “நெஞ்சில் ஓர் ஆலயம் “ திரைப்படம் வந்த வருடம் படம் பிரமாதமாக ஓடிக்கொண்டிருந்தது. குமுதம் பத்திரிக்கை அந்த படத்தை ஒட்டி ஒரு போட்டி வைத்திருந்தது அது பெண்களுக்கான போட்டி என்று அறிவித்திருந்தது படத்தில் தேவிகாவின் கணவர் முத்துராமன் உடல் நலமில்லாமல் மருத்துவ மனையில் அட்மிட் ஆகியிருந்தார். சில காலமே பிழைத்திருக்கும் வாய்ப்பு என்னும் நிலை. அந்த மருத்துவமனையின் டாக்டராக கல்யாண்குமார் தேவிகாவின் முன்னாள் காதலன் இவர்களின் மனப் போராட்டங்களை நேர்த்தியாக சொல்லிப்போன திரைக்கதை. படத்துக்குச் சுவை சேர்க்க நாகேஷ், குழந்தை நட்சத்திரம் குட்டி பத்மினி. ஆகியோரும் இருந்தனர். .சரி குமுதம் பத்திரிக்கை போட்டியில் சில கேள்விகள் கேட்டு பெண்களின் அபிப்பிராயத்தைக் கோரி இருந்தது. மூன்று கேள்விகள் என்று நினைக்கிறேன் மறந்து விட்டது. ஆனால் முக்கியமாக ஒரு கேள்வி. ஒரு வேளை முத்துராமன் இறந்து விட்டால் தேவிகா கல்யாண்குமாரை திருமணம் செய்து கொள்ளலாமா என்பதே
எனக்கு இந்தப் போட்டியில் கலந்து எழுத விருப்பம் இருந்தது. ஆனால் அது பெண்களுக்கான போட்டி. நான் எழுதக்கூடாது. அப்போது நான் காதல் வயப்பட்டிருந்த நேரம் ஒரு ஐடியா வந்தது. நான் அதை எழுதி என் மனைவியின்( அப்போதைய காதலி) பெயரில் அனுப்புவது. பரிசு கிடைத்தால் அதுவே அவள் வீட்டாருக்கு எங்கள் காதலை உணர்த்தும். பரிசை அவளுக்கே கொடுப்பது என்று முடிவெடுத்தேன் இந்த மாதிரி ஒரு போட்டியில் அவர்கள் வீட்டுப்பெண்ணின் பெயரை உபயோகப்படுத்துகிறேன் என்று சூசகமாகத் தெரிவித்திருந்தேன் அப்போது யாரும் இதைப்பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
நான் என் எண்ணங்களைப் பதிவு செய்து குமுதம் பத்திரிக்கைக்கு அனுப்பினேன் . அதில் என் கருத்து வெகு ஜனக் கருத்துக்கு சற்று மாறாக தேவிகா தாராளமாகக் கல்யாண்குமாரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று எழுதினேன் . ஏற்கனவே கல்யாண்குமாரை விரும்பி முத்துராமனை மணந்ததே இராண்டாம் கல்யாணத்துக்கு ஒப்பாகும். முத்துரான இறந்தால் கல்யாண்குமாரை மண் முடிப்பது தவறாக ஆகாது. அதுவே மூன்றாம் மணமாகக் கருதலாம் அதுவும் முன்னாள் காதலன் என்றால் தவறே இல்லை என்னும் ரீதியில் எழுதி இருந்தேன் பரிசுத்தொகை ரூ.50/- இருவருக்குப் பிரித்துக் கொடுத்ததில் என் பெயரும் .சாரி, என் காதலியின் பெயரும் இருந்தது. ஓரிரு நாளில் ரூ25/- பணமும் வந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவள் வீட்டுக்கும் தெரியப் படுத்தி அந்த ரூ25.-ஐ அவளிடம் சேர்ப்பித்தேன் அதன் மூலம் அவள் ஒரு சேலை வாங்கிக் கொண்டாள். திருமணத்துக்கு முன்பே நான் என் மனைவிக்குக் கொடுத்த பரிசு அது. இலைமறை காய்மறையாய் இருந்த எங்கள் காதல் உற்றார் உறவினருக்கும் தெரிந்தது. குமுதம் அனுப்பியிருந்த அந்தச் செய்தி அடங்கிய லெட்டரை எங்கோ வைத்துவிட்டேன் தேடியும் கிடைக்கவில்லை.நான் எழுதியது பத்திரிக்கையில் வந்தது. ஆனால் என்பெயரிலல்ல.
இன்னொரு நினைவினைப் பகிரும் வரை  இது குறித்த உங்கள் கருத்துக்களைப்பகிரலாமே.          
.
    



வியாழன், 11 ஜூன், 2015

ஓ..அந்தக் காலம்......!


                       ஓ...அந்தக் காலம் ........!
                       ----------------------------------



அது 1959-ம் வருடம். அம்பர்நாத்தில் இரண்டாண்டு பயிற்சி முடிந்து HAL ஏரோஎஞ்சின் டிவிஷனில் பணிக்கு அனுப்பப் பட்டோம் ஏரோ எஞ்சின் டிவிஷன்  புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. நாங்கள்தான் ப்ய்னீர் எனலாம். போர் விமானத்துக்கு எஞ்சின் தயார் செய்ய BRISTOL SYDLEY என்னும் ஆங்கில கம்பனியுடன் ஒப்பந்தம் ஆகியிருந்தது.அவர்களது ORPHEUS  எஞ்சினை இங்கேயே தயார் செய்ய ஒப்பந்தம் நாங்கள் போய்ச் சேர்ந்தபோது உற்பத்தி செய்ய எந்த தளவாடங்களும் நிறுவப்பட்டிருக்கவில்லை. அதுவே எங்கள் முதல் பணியாகி இருந்ததுஅந்தக் காலத்தில் அந்தப் பகுதி ஒரு காடு போல் இருந்தது. அதை செப்பனிட்டு தொழிற்சாலை கட்டி இருந்தார்கள். நிறைய ஆங்கிலேயர்கள் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வந்திருந்தனர் பயிற்சி முடித்து வந்திருந்த எங்களுக்கு முதல் பணியே மெஷின்களை நிறுவுவதுதான் எந்த மெஷின் எங்கிருக்க வேண்டும் என்ற லே அவுட் முதல் அவற்றை அந்தந்த இடத்தில் எரெக்ட்செய்து ஓட்டிப்பார்க்கும்வரை மெயிண்டினன்ஸ் துறையுடன் கை கோர்த்துப் பணியாற்றும் வேலை என்ன வேலை செய்தோம் என்பது பற்றி அல்ல இந்தப் பதிவு.
ஏரோ எஞ்சின் தொழிற்சாலை புதியதாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் HAL மெயின் தொழிற்சாலை பேரும் புகழோடு இயங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை விமரிசையாகக் கொண்டாடப் படும் தொழிற்சாலையிலிருந்தே கணிசமான நிதி ஒதுக்கி விடுவார்கள் அந்த ஒரு நாளில் தொழிலாளி தன் திறமையைக் காட்டும் விதத்தில் சில பொருட்களை  உற்பத்தி செய்வான் . இன்றும் என் கண் முன் வருவது லேத் எனப்படும் மெஷினில்( பொதுவாக உருளைகள் செய்ய உபயொகமாகும் மெஷின்) க்யூபுக்குள் க்யூப் செய்து தங்கள் திறனைக் காட்டி இருந்ததுதான் மிகவும் கோலாகலமாக ஆயுத பூஜை கொண்டாடப்படும் அந்த் 1959-ம் ஆண்டு எஞ்சின் டிவிஷனில் முதல் ஆயுத பூஜை. தொழிலாளிகளின் திறமையைக் காட்டும் வாய்ப்பே இல்லாதிருந்தது. அதற்காக ஆயுத பூஜை கொண்டாடாமல் இருக்க முடியுமா.? ஒரு கமிட்டி நிறுவப் பட்டு என்னிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டது. பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டாலும் மேலதிகாரிகளே இன்னின்ன மாதிரி செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர். அதன் படி ஒரு மேடை அமைக்கப் பட்டு சுவாமி படங்களுடன் தொழிற்கருவிகளுக்கும் பூஜை போடப்படும் என்று பொதுவாக ஒப்புக்கொள்ளப் பட்டது
திட்டமிட்டபடிஅலங்காரங்களுடன்  மேடை வேலைகள் நடந்து கொண்டிருந்தன. திடீரென்று மேலாளர் எத்தனை மாலைகளுக்கு ஆர்டர் செய்திருக்கிறேன் என்று கேட்டார். இரண்டு மூன்று பெரிய படங்களுக்கு மாலை போடத் தேவைக்கேற்ப ஆர்டர் செய்துள்ளதைக் கூறினேன் அவர் இன்னும் நான்கு பெரிய மாலைகள் தேவை என்றார். எதற்கு என்று கேட்டேன் அங்கிருந்த ஆங்கில அதிகாரிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் என்றார். எனக்கு அது உடன் பாடாக வில்லை. நண்பர்களுடன் கமிட்டியில் விவாதித்தேன் ஆயுத பூஜை கடவுளுக்கு நன்றி சொல்லும் வழிபாடு ஆசாமிகளுக்கெல்லாம் மாலை போட்டு மரியாதை தேவை இல்லை என்னும் கருத்து உருவாகிற்று. இதை எங்கள் மேலாளரிடம் சொன்னபோது அவர் முகம் சிவந்து விட்டது. ஒப்புக்குத்தான் கமிட்டி எல்லாம் என்றும் அவர் சொன்னதைச் செய்வதுதான் எங்கள் பணி என்றும் கூறினார் அப்படியானால் கமிட்டியைக் கலைத்து விடுமாறும் நாங்கள் எதிலும் பங்கேற்கப் போவதில்லை என்றும் கூறினேன்.
அந்த முதல் ஆயுத பூஜை ஏரோ எஞ்சின் டிவிஷனில் நாங்கள் யாரும் பங்கேற்காத கோலாகல பூஜையாக வெள்ளை அதிகாரிகளுக்கு மாலை மரியாதை எல்லாம் செய்யப்பட்டு நடந்தேறியது. பிரசாதம் வாங்கவும் நாங்கள் போகவில்லை.
அப்போது நடந்த நிகழ்ச்சிகளில் நான் கவனித்த ஒன்று. அதிகாரிகள் தமிழில் பேசும்போது பேச்சிலும் வார்த்தையிலும் மரியாதை இருந்தது/ அதே அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசும் போது வார்த்தைகள் தடித்தும் அகங்காரம் ஆணவம் உடையதாகவும் இருந்தது காரணத்தை ஆராயும் போது வீட்டுச் சூழலில் தமிழில் பேசும்போது மரியாதை கற்றுக் கொடுக்கப்பட்டு இருந்திருக்கிறது.
ஆங்கிலத்தில் பேசும்போது I KNOW, YOU DON”T KNOW என்னும் பாவம் வந்து விடுகிறது
(அந்தக் கால நினைவுகள் தொடரும்)

திங்கள், 8 ஜூன், 2015

ஏமாறாதே ஏமாற்றாதே.......


                        ஏமாறாதே ஏமாற்றாதே......( சிறுகதை)
                        -----------------------------------
பதிவர் வே.நடனசபாபதி அவர்கள் ஏமாற்றுவதும் ஒரு கலைதான் என்னும் தலைப்பில் பலவகை ஏமாற்று வேலைகளை பதிவிட்டு வருகிறார். அதன் பாதிப்போ என்னவோ ஒரு சிறு கதைக்கு வித்து கிடைத்தது, எழுதி இருக்கிறேன் படித்துப் பாருங்களேன்.


பொழுது விடிந்துவிட்டதா.?கிராமங்களில் சேவல் கூவுவது கேட்டுப் பொழுது விடிந்து விட்டது தெரிந்து கொள்வார்கள்.ஆனால் நகர்ப் புறங்களில் சேவலாவது கூவுவதாவது. உடலே ஒரு அலார்ம் கடிகாரம் போன்றதுத்தானே, விடிகாலையில் எழுந்து பழக்கப்பட்டுவிட்டால் கடிகாரமோ அலார்மோ தேவை இருக்காது உடலிலேயே ஒரு பையாலாஜிகல் க்லாக் இருக்கும் போல. எனக்குத் தூக்கம் முற்றும் போய் விட்டது. இனி அன்றைய ரொடீன் வேலைகளுக்குத் தயார் ஆகவேண்டும் உணர்வுகளின் ஏதோ ஒரு இன்ஸ்டிங்க்ட் அன்றைய பொழுது சரியாக இருக்கப் போவதில்லை என்று சொல்கிறது. பெரும்பாலான நேரங்களில் அந்த உணர்த்தல் சரியாகவே இருந்திருக்கிறது
நான் ஒரு பெரிய கம்பனியின் விற்பனைத் மேலாளன். என் கீழ் ஏரியாவுக்கு ஒருவர் என்று பலர் பணியில் இருக்கிறார்கள். வியாபாரம் செய்யும் பொருட்களை எங்கள் கம்பனி கடனுக்குக் கொடுப்பதில்லை. எல்லாமே cash ant carry business தான் தினம்  ஆயிரக்கணக்கில் பொருட்கள் விற்பனையாகும் பிரபல நிறுவனம் விற்பனையாளர்களிடமும் வியாபாரிகளிடமும் பணப் புழக்கம் சற்று அதிகரித்தே இருக்கும். லாபத்துக்குச் சொல்லவா வேண்டும்
அன்று காலையில் இருந்தே என் மனம் ஏதோ ஒரு கெட்ட செய்தியை எதிர்பார்த்திருந்தது. அன்று எனது அலுவலகத்தில் கணக்கு வழக்குக்ளை ஆடிட் செய்யப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியும் பலருக்கும் தெரியும் இதுவ்ரை எல்லாமே சரியாகத்தானே இருந்திருக்கிறது. அன்றும் எல்லாம் சரியாய் இருக்கும் என்று நான் அலுவலகம் போனேன் கணக்கு வழக்குகளை சரிபார்க்கும் அதிகாரிகள் முகத்தில் ஒரு இனம் தெரியாத கடுப்பு. தவறு என்று எதையாவது கண்டு பிடித்து, இல்லை என்று அது நிரூபிக்கப்பட்டால்................. ஆகவே ஒன்றுக்கு இரு முறைசரிபார்க்க வேண்டிய நிலை. எனது வருகைக்காகவே காத்திருந்த அதிகாரிகள் கணக்குப் படி ஏதோ பெரிய தவறு நேர்ந்திருக்கிறது என்று கூறினர். செலவுக் கணக்கும் வரவுக் கணக்கும் tally ஆகவில்லை. லட்சக்கணக்கில் வித்தியாசம் இருந்தது. எனக்கு ஏதும் புரியவில்லை. நானும் வாரத்துக்கு ஒரு முறையாவது பில்லிங் மற்றும் பேமெண்டும் சரியாகக் கணக்கிடப் பட்டிருக்கிறதாஎன்று செக் செய்வது வழக்கம். எல்லாமே இதுவரை சரியாய்த்தானே இருந்து வந்திருக்கிறது எழுப்பப்படும் invoice களின் எண்களின் கீழ் அக்கௌண்ட் பிரிவில் பணம் செலுத்தப் பட்டதாகவே இருந்திருக்கிறதுபிறகு ஏன் டாலி ஆகவில்லை. உண்மையிலேயே அது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாகவே இருந்தது.
சரி கணக்காயர்களிடம் எந்த ஏரியாவில் தவறு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது என்று நான் கேட்டேன் ஒரு குறிப்பிட்ட ஏரியாதான் இந்தக் குளறுபடிக்குக் காரணம் என்று தெரியவந்தது. எனக்கு ஏதும் புரியவில்லை. தவறு நேர்ந்திருந்தால் எங்காயிருந்தாலும் நானே பொறுப்பு என்னும் விதத்தில் அதிகாரிகள் பேசத்தொடங்கினர். தவறு நேர்ந்திருந்த ஏரியா அதிகாரியைக் கூப்பிட்டு விசாரிக்கலாம் என்றால் அவர் அன்று விடுப்பில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது
சரி, எத்தனை நாளாக கணக்குகள் tally ஆகவில்லை என்று கேட்டால், சுமார் மூன்றுமாதங்களாக வித்தியாசங்கள் காணப்படுவதாகக் கூறினார்கள். நஷ்டமாகத் தொகை ரூபாய் லட்சக் கணக்குகளில் ஓடியது என்றும் தெரியவந்தது. விவகாரம் பெரிதாகப் போய் என் பெயருக்கே கேடு விளைக்கும் என்றுநான் அஞ்சினேன். விடுப்பில் இருந்த ஏரியா அதிகாரியின் வீட்டுக்குப் போய் விசாரிக்கலாம் என்று தோன்றியது.காலையில் இருந்தே மனம் இது பற்றித்தானோ சஞ்சலப் பட்டுக் கொண்டிருந்தது என்று நான் எண்ணினேன்  
ஏரியா அதிகாரியின் வீட்டுக்குப் போனால் அங்கே ஊர்ப்பட்ட கூட்டம் அவர் வீட்டில் தூக்கில் தொங்கி இருக்கிறார். விவரிக்க முடியாத சஞ்சலத்துடன் நான் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தேன் ஏரியா அதிகாரி தூக்கில் தொங்கினதுக்கும் இந்தக் கணக்கு வழக்குகளுக்கும் தொடர்பு இருக்கிறதாஎன்று என் மனம் ஆராயத் தொடங்கியது செத்தவனிடம் விசாரிக்கவா முடியும்
ஒவ்வொரு இன்வாய்ஸையும் அதற்கான பணம் கட்டின விவரங்களையும் அக்கௌண்ட் பிரிவில் சரிபார்க்க முயன்றபோது சிக்கல்களின் காரணம் பிடிபடத் துவங்கியது.
Cash and carry system என்பதால் குறிப்பிட்ட இன்வாய்ஸுக்குப் பணம் வாங்கி, அந்த இன்வாய்ஸ் நம்பரின் கீழ் ஒருசிறுதொகை பணம் கட்டப்படும் டெஸ்பாட்ச் பிரிவுக்கு அந்த இன்வாய்சுக்குப் பணம் கட்டி விட்டதாகத் தகவல் போக அவர்களும் அந்த இன்வாய்சில்கண்ட பொருட்களை அனுப்பி விடுவார்கள் இன்வாய்சுக்குப் பண்ம்வந்த மாதிரி இருக்கும் பொருட்கள் பட்டுவாடா ஆகி இருக்கும் ஆனால் அக்கௌன்ட் பிரிவுக்கு முழுத் தொகையும் வந்திருக்காது. இந்த ஓட்டையைக் கண்டு பிடித்து அதை தனகுச் சாதகமாகப் பயன் படுத்தி ரூபாய் லட்சக் கணக்கில் மோசம் செய்து ஏரியா அதிகாரி உபயோகித்திருக்கிறார் .இறந்து போன ஒருவர் மீது அபாண்டமாகப் பழி சொல்லக் கூடாது அல்லவா ஆகவே
ஒரு வேளை விற்பனை டீலர்களிடம் தவறு இருக்கலாமோ என்று தோன்ற அவர்களிடம் விசாரித்தேன் அவர்கள் அனைத்து இன்வாய்ஸுகளுக்கும் மொத்த பணமும் கட்டியே பொருட்களைப் பெற்றதாக உறுதி கூறினர் இறந்து போனவனின் வாக்கு மூலம் இல்லாமல் எதையும் நிச்சயம் செய்ய முடியவில்லை.
காவல் துறைக்குப் புகார் கொடுக்கப் பட்டது. இறந்தவன் தற்கொலை செய்து கொண்டானா அல்லது கொல்லப் பட்டானா என்றெல்லாம் கேள்விகள் எழ வயிற்றில் புளி கரையத் தொடங்கிவிட்டது
இரண்டு மூன்று நாட்களுக்குப் பின் ஏரியா அதிகாரியின் வீட்டிலிருந்து வந்திருந்த ஒரு கடிதம் காவல் துறையால் கண்டெடுக்கப் பட்டது. அதில் அவர் வீட்டில் அவரது தங்கையின் திருமணம் சிறப்பாக நடந்த்து என்றும் அவன் அனுப்பி இருந்த பெரும் தொகையே சமயத்தில் உதவியது என்றும் எழுதப்பட்டிருந்தது. ஏரியா அதிகாரியின் உறவினர்களை விசாரித்ததில் அவர் இதுவரை பணம் ஏதும் அனுப்ப முடியாததற்கு வருத்தம் தெரிவித்திருந்த கடிதமும் வெளிவந்தது ஒரே நேரத்தில் இவ்வள்வு பெரிய தொகை உறவினர்களிடமும் சந்தேகத்தை எழுப்பி இருந்தது
எனக்கு எல்லாம் புரிய ஆரம்பித்தது. எனக்குப் புரிந்தால் போதுமா?என்ன நடக்குமோ பொறுத்திருந்து பார்க்கத்தான் வேண்டும்
இந்தப் பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொண்டால்  இல்லாத தெய்வங்களுக்கெல்லாம்  நன்றி கூறிக் கொண்டு கோவில் கோவிலாகப் போகவேண்டுமோ.?

சனி, 6 ஜூன், 2015

என்றாவது ஒரு நாள் ---என் கருத்துரை


                     என்றாவது ஒரு நாள்.......என் கருத்துரை

                  -------------------------------------------------------------



என்றாவது ஒரு நாள்  சிறுகதைத் தொகுப்பு. 
இதுவரை எந்த நூலுக்கும் கருத்துரையோ விமரிசனமோ எழுதி இராத எனக்கு
ஆஸ்திரேலியாவில் வாசம் செய்யும் “ விமர்சன வித்தகி” கீதா மதிவாணனின் மொழிபெயர்ப்புச் சிறு கதைத் தொகுப்புக்கு கருத்துரை வழங்குவது முள்ளின் மேல் நடப்பது போன்றது. சிறுகதைகளின் நீள அகல ஆழங்களில் கைதேர்ந்தவரின் நூலுக்கு சற்று கவனத்துடனேயே கருத்துரை எழுதுகிறேன் பிரபல ஆஸ்திரேலிய எழுத்தாளரின் கதைகளை திருமதி கீதா மதிவாணன் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். மொழிபெயர்ப்பு செய்யும் போது சாதகங்களும் இருக்கிறது பாதகங்களும் இருக்கிறது.கதைகளின் கருப்பொருளுக்கு  இவர் பொறுப்பல்ல.சொல்லப்படும்விதத்துக்குமிவர் பொறுப்பல்ல ஆனால் பலதரப்பட்டவிதத்தில் எழுதப்பட்ட உபயோகிக்கப்பட்ட  மொழியை ஆங்கிலம்தானென்றாலும்  உள்வாங்கி அதை மொழிமாற்றம் செய்வது கடினமான காரியமே, அதை திருமதி கீதா மதிவாணன் செவ்வனே செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் ஏனென்றால் கதைகளைப் படித்துச் செல்லும் போது கொடுக்கப்பட்ட விவரணைகளிலும் கதையின் கருத்தோடு ஒன்றும் போதும்  கவனங்கள் சிதறுகிறது. அந்த விவரிப்புகளை உள்வாங்கும்போது இடம் பொருள் ஏவல் பற்றிய சிந்தனைகளில்கற்பனை செய்யும் மனம் அலை பாய்கிறது.அதையும் மீறி ரசிக்க ஒன்றுக்கு இருமுறை வாசிக்க வேண்டி உள்ளது.அதறகு கீதா மதிவாணன் எப்படி பொறுப்பாவார் .?
 இங்கிலாந்திலிருந்து குடி பெயர்க்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை ஆதாரங்களையும் வாழ்வு முறைகளையும் மனித சுபாவங்களையும் சொல்லிப் போகின்றன கதைகள், ஆசாபாசங்கள் மனிதருக்கு எங்கிருந்தாலும் ஒருபோல்தான் என்று தெளிவாக்கிச் செல்கின்றன இக்கதைகள் மேற்கத்தியவரின் வாழ்க்கை முறையை கற்றுத் தெரிந்து கொண்ட நமக்கு பல கதை மாந்தர்கள் நம்மில் சிலரைப் போல் இருப்பது புதிதாய் இருக்கிறது
முதல் சிறுகதை மந்தையோட்டியின் மனைவி என்னும் சிறு கதையைப் படிக்கும் போது நான் என் பதிவில் என் அனுபவங்களை ஓ பாம்பு என்னும் பதிவாக எழுதி இருந்தது நினைவிலாடியது.அதில் என் வீட்டில் பாம்பென்று நினைத்து இரவெல்லாம் கண்விழித்து காலையில் வெளியே தலை காட்டிய ஜந்துவை நாங்கள் அடித்துக் கொன்று விட்டோம் . பிறகு பார்த்தால் அது ஒரு அரணை ..!  மரக் கம்பங்களாலும் பலகையாலும் கட்டப் பட்டிருந்த வீட்டுக்குள் பாம்பு ஒன்று நுழைய  அதை அடித்துக் கொல்வதுதான் கதை என்றாலும் கூடவே அவர்களது வாழ்க்கை முறைகளையும் சொல்லிச் சென்றது சிறப்பு
மந்தை ஓட்டிச் சென்ற கணவன் இல்லாத நேரத்தில்குழந்தைகளுடன் இருக்கும் ஒரு தாயின் பரிதவிப்பு நன்றாகவே சொல்லப் பட்டிருக்கிறது
அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்தான் இருளில் தனியே செல்லும் போது பின்புறமிருந்து எழும் ஒலி காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட ஒரு சீனத்தவனின் ஆவி என்று பயந்து நடுங்கியதும் காலையில் தன் தொப்பியிலிருந்து  கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த நாடாக்கள் காற்றில் அசையும் போது எழுப்பிய ஒலி என்று தெரிந்து கொள்வதும் அசல் திகில்தான் என்னவோ தெரியவில்லை. இந்தக் கதையும் நான் எழுதி இருந்த அரண்டவன் கண்ணுக்கு  என்னும் பதிவை நினைவு படுத்தியதைக் கூறாமல் இருக்க முடியவில்லை.
பணியிலிருந்து களைத்து வரும் கணவன் எப்போதும் தொண தொணக்கும்மனைவி, அனுசரணை உள்ள குழந்தைகள் ஒவ்வொருவர் மனநிலை. ஏனோ நம் கிராமத்துக் கதை ஒன்றுபோல் தோன்றுகிறதுஒற்றைச் சக்கர வண்டிநம்பிக்கையோடு அடுத்த ஆண்டின் துவக்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்
எந்தக் குழுவிலும் ஒரு அசட்டு மனிதன் இருக்கலாம் அவனைப் பலரும் கலாய்க்கலாம் அவனுக்கும் ஆசாபாசம் பந்தம் எல்லாம் உண்டு என்று சொல்லிப்போகும் கதை மலாக்கி.அவன் இறக்கும் நிலையில்தான் அவன் தாய் பற்றியும் கண்தெரியாத தம்பி பற்றியும் தெரிகிறது மனதை கனக்க வைத்தகதை.
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம் ஒருதலைக்காதல் வீண்வம்புக்கு அலையும் மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம் எல்லாக் கதைகள் பற்றிச் சொல்லி விட்டால் வாசிக்கும் போது புதுமையான உணர்வு கிடைக்காது சிறுகதைத் தொகுப்பின் பெயர் தாங்கி வரும் என்றாவது ஒரு நாள் சிறுகதைப் பற்றியும் சொல்ல வேண்டும். ஒரு அழகில்லாத ஆண்மகன் தாழ்வுமனப்பான்மையால் தான் காதலிக்கும் பெண்ணின் மனம் தெரியாமல் வெளியூர் போகும் சமயம் தன்னை வழி அனுப்ப வந்தவளுக்குத் தன் மேல் காதல் இருப்பது தெரிந்தும் வெளியூர் செல்வதைத் தடுக்க முடியாமல் என்றாவது ஒரு நாள் ஒன்று சேரலாம் என்னும் நம்பிக்கையே வாழ்வாகக் கதை போகிறது
நிறைகளை மட்டுமே சொன்னால் விமரிசனம் ஆகாது. இம்மாதிரிக் கதைகளை மொழி மாற்றம் செய்வதால் படிக்கும் நமக்கு ஏதோஅந்நியத்தனம் தெரிகிறது. அவை அந்நியக் கதைகள்தானே. இருந்தாலும் கதையின்கருத்தை உள்வாங்கி தமிழில் மொழி பெயர்க்காமல் மொழியாக்கம் செய்திருந்தால் ஒரு நேடிவிடியும் இருந்திருக்கும் என்பது என் கருத்து. புத்தகத்தின் பின் அட்டையின் நிறமும்  எழுத்துக்களும் படிக்க மிகவும் சிரமம் தருகிறது. என்ன செய்ய முடியும்.?அந்நிய மண்ணில் இருந்து கொண்டு பதிப்புகளை செக் செய்து குறை நிறைகளை கண்டறிவதும் சிரமம்தான்   .   



            
.
    


.  



வியாழன், 4 ஜூன், 2015

போய்ச்சேர் வீடு நோக்கி.........


                                   போய்ச்சேர் வீடு நோக்கி.....
                                   --------------------------------------
காலாற நடை பயிலப் பூங்கா சென்றிருந்தேன்.
ஆங்கே, பொன்காட்டும் நிறம் காட்டிப்
பூ காட்டும் விழி காட்டி, இரு தனங்கனக்க,
இடையொடிய மனங்கிளர்க்க மாதொருத்தி,
கண் காட்டி மொழி பேசி,ஆடவர் மனங்கனக்க
விழியாலேவலைவீசி வழி நோக்கிக் காத்திருந்தாள்


காலன் கயிறு கொண்டு கடத்திச் செல்லக்
காத்திருக்கும் காலம்தான் என்றாலும் உள்மனதில் 
காமம்தான் முற்றும் ஒழியாத மன நிலையில்
நெஞ்சே நீயும் எத்தனை நாள்நெருப்பில் மூழ்கிடுவாய்
தஞ்சமாகத் துணையுடனே தழைக்கும் 
பூஞ்சோலை இங்கிருக்க நீ அதனில்கொஞ்சவே 
எண்ணுகின்றாய்,இது த்குமோ, முறையோ முரணன்றோ?


எண்ணிப் பார்க்கிறேன் எனக்கென்ன வயசு
எண்ணில் அடங்குவதோ மனசின் வயசு
காதலுடன் கழிந்த காலம் உன்னும்போது
உணர்கின்றேன் எனக்கென்றும் இளமைதான் என்று. 


என்னதான் நடக்கும் நோக்கலாமே என்றே எழுச்சியுடன்
ஓரடி ஈரடி நாலடி நான் நடந்தவள் முன் செல்ல
எனைக் கண்டெழுந்தவளிடம் நானறியாதே கூறிவிட்டேன்
உள்ளம் சொன்னதை அநுபவம் கற்றதை..


பொய்க் கனவாய்ப் புகுந்துன் பெண்மை புணர்ந்து
மெய்க்கனவாய் ஆக்கிடுவர் உன் இளமையதை. 
கூத்தாள் எனக் கொள்வர், இரவி மறையுமுன் உன்
ஆத்தாள் உனைத் தேடுமுன் போய்ச் சேர் வீடு நோக்கி.
---------------------------------------------
( இது ஒரு மீள்பதிவு) 

செவ்வாய், 2 ஜூன், 2015

எனக்கு நானே......கடிதமா....?


                       எனக்கு நானே...... கடிதமா......?
                      --------------------------------------------


அன்புள்ள ......
என்னை நானே எப்படி அழைத்துக் கொள்வது. . இருந்தாலும் எனக்கு நானே கடிதம் எழுத வேண்டும் போல் இருந்தது. என்ன எழுதுவது. அன்புள்ள என்று துவங்கி விட்டேன் எனக்கு நானே அன்புள்ளவனா... ஏன் இருக்கக் கூடாது. உன்னை நீ நேசிப்பது போல் அடுத்தவனை நேசி என்று பைபிளில் கூறி இருப்பதாகப் படித்திருக்கிறேன் LOVE THY NEIGHBOR  AS THYSELF என்னை நான் என் எல்லாக் குறைகளையும் சேர்த்து நேசிக்கிறேன் என்பது உண்மைதானே. உன்னை நேசிப்பது போல் அனைவரையும் நேசி என்றால் குறைகள் இல்லாத மனிதரே இருக்க வாய்ப்பில்லை. அந்தக் குறைகளையும் பொருட்படுத்தாமல் நேசிக்க வேண்டும் சொல்வது சுலபம் ஆனால் கடைப்பிடிப்பது சிரமம் நீ எப்படி? வஞ்சனை இல்லாமல் நேசிக்கிறாயா? கேள்வி கேட்டு விட்டேன் பதிலை கடிதத்தில் எதிர்பார்க்கிறேன் சுய சிந்தனை செய்.
கடிதம் எழுத முதலில் நலம் விசாரிக்க வேண்டும் என்று சொல்லப்படாத நியதி. உண்டு. உன்னிடம் நலன் பற்றிக் கேட்டால் அது உனக்குப் பிடிக்காது. என்று தெரியும். உனக்கு நீ உடல் நலமில்லாவிட்டாலும் நலமே என்றுதான் சொல்வாய். உள்ளுக்குள் சிறிது கோபம் கூட வருமே. ஆனால் பலருக்கும் நலம் விசாரித்தால்தான் நமக்கு அவர்கள் மீது அக்கறை என்பது தெளிவாகும்
ஆஹா..... ஒருவர் மீதுள்ள அக்கறையைக் காட்டத்தான் நலம் விசாரிக்கச் சொல்கிறேன் என்றோ நலம் விசாரிக்கிறேன் என்றோ பொருள் கொள்ளக் கூடாது. நீ அப்படி இல்லை என்று எ(உ)னக்குத் தெரியும்
 எனக்கு நானே ஆகவோ உனக்கு நீயே ஆகவோ கடிதம் எழுதுவது சிரமமாய் இருக்கிறது. எதையாவது எழுதுவதற்குள் உடனே அதில் கூறுவது நீயா அல்லது நானா என்று பிடிபடுவதில்லை

இருந்தாலும் வித்தியாசமாக எழுதத் துவங்கி விட்டேன் நீ ஏதாவது பதில் சொல்ல விரும்பினால் திண்டுக்கல் தனபாலன் சொல்வது போல் மனசாட்சியின்(உள்ளத்தின் குரல்) பதிலாக எடுத்துக் கொள்கிறேன் ஓக்கேவா.?
இருந்தால்தான் என்ன.?எழுதுபவனும் நானே எழுதப்படுபவனும் நானே கடவுளைப்போல
உன்னைப் பற்றி வலைஉலகில் என்னநினைக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா? வித்தியாசமான குழப்பவாதி என்றே நினைக்கிறார்கள். உன் பின்னூட்டங்கள் நீ மற்றவர்களை அனுசரித்துப் போகாதவன் என்பதைக் காட்டுகிறது. என்றும் நீ ஒரு மரை கழண்ட லூஸென்றும் உன்னிடம் சொந்த சரக்கு என்று ஏதும் இல்லையென்றும் பெரிய சீர்திருத்தவாதி போல் நடிக்கிறவன் என்றும் இன்னும் என்னவெல்லாமோ நினைக்கிறார்கள்.
இந்த இடத்தில் நான் பதில் சொல்லியே ஆகவேண்டும் .இந்த மாதிரி மனிதர்களைத்தான் நான் முன் பல்லில் சிரித்துக் கடைவாய்ப் பல்லில் கடிக்கிறவர் என்பேன் 
அது உன்னைப் பற்றிய விமரிசனம் என்பது உனக்கு எப்படித் தெரியும்?ஓ...அதைத்தான் நீயே சொல்லி விட்டாயே..........
இந்த வயதில் என்னால் சில விஷயங்களை அனுமானிக்க முடியும் என்றே நினைக்கிறேன்
இன்னொருவர் தன் பதிவில் எனக்கான ஒரு மறு மொழியில் என்னைப் புரிந்து கொள்வதே சிரமமாய் இருக்கிறதென்று எழுதி இருந்தார். இதை நான் வரவேற்கிறேன். என் குறையோ நிறையோ என்னிடமே சொல்லும் பக்குவம் பிடித்திருந்தது. அதற்கு மாறாக இன்னொருவர் வலைத் தளத்தில் நான் அதைப் படிப்பேன் என்று நன்கு அறிந்து தான் தோன்றித்தனமாக எழுதுவது சுத்த கோழைத்தனம் எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
உன்னைப் போல் அடுத்தவரையும் நேசி என்று கூறிவிட்டு இப்படி ஊர்ஜிதப் படுத்தப் படாத குற்றச் சாட்டுகள் தவறு என்று உனக்குத் தெரிவதில்லையேபோற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது.? உன்னிடம் எனக்குப் பிடித்ததே இதுதான் உன் குறை எது நிறை எது என்று பட்டவர்த்தனமாக ஆராய்கிறாயே I LIKE IT. அதைத்தான் உன் பலமாகவும் பலவீனமாகவும் கருதுகிறேன்
சரி  நீ ஒரு bundle of contradictions  என்பது சரியாய்த்தான்  இருக்கிறது.
அது சரி இல்லை. ஒருவேளை பிறருக்கு அப்படித்தோன்றலாம் ஆனால் என்னைப் புரிந்து கொண்டவர்களுக்கு என்னுடைய கன்ஸிஸ்டென்சி புரியும். எதைப் பற்றியாவது கருத்துக் கூற வேண்டும் என்றால் ஓரளவுக்காவது அது பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன் எனக்கு அதற்குண்டான நூல்களைத் தேடிப்பிடித்து படிப்பது இயலாததாகி இருக்கிறது. கணினியின் உதவியுடன் பல விஷயங்களைக் கற்கிறேன்  
போதும் நிறுத்து. நான் உனக்குக் கடிதம் எழுதுவதில் இருப்பதை விட உன் பதிலில் நீ உன்னை நிரூபிக்கப் பார்க்கிறாய் அது சரி. கணினி உன் நேரத்தை மிகவும் ஆக்கிரமிக்கிறதுஎழுதுவது உன் சுதந்திரம். கருத்து சொல்வதும் சொல்லாததும் வாசிப்பவர் சுதந்திரம் நீ உன் எழுத்துக்களைப் பற்றி அதிகம் எடைபோடுகிறாய் என்றே தோன்றுகிறது
 இரு இரு இதற்கு நான் பதில் சொல்ல வேண்டும் நானும் பிறரது பதிவுகளைப் படிக்கிறேன் எல்லோர் கருத்துகளும் உடன்பாடு என்று சொல்வதற்கில்லை. இருந்தாலும் நாசுக்காக நான் அதை தெரிவித்துவிடுவேன் சிலர் ஒரே மாதிரி இடுகைகளைப் பதிக்கிறார்கள் அவற்றையும் படிக்கிறேன் ஆன்மீகப் பதிவுகளில் எதிர்மறைக் கருத்துக்கள் பதிப்பதில்லை. அவை மிகுந்த நம்பிக்கையோடு எழுதப் படுபவை. இருந்தாலும் நான் நினைப்பதைக் கூறி விடுவேன் அதே போல் என் பதிவுகளும் படிக்கப் படுகின்றன என்பதும் தெரியும் என் பதிவுகளில் நான் ஸ்ட்ராங்காக நினைப்பதை எழுதுகிறேன் அதுவும் ஒரு கலந்தாடலுக்குத்தான். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அது நடப்பதில்லை
எப்படி நடக்கும்? நீ விரும்பமாட்டாய் என்று சிலர் கருத்துக்களைப் பதிக்காமல் இருக்கலாம் .உனக்கு நினைவிருக்கிறதா? தஞ்சாவூர்க் கவிராயரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் எழுத்தாளனை ஊக்குவிப்பது அவன் படைப்பு பற்றிய சில நல்ல வாக்கியங்களே. பொன் தரவேண்டாம் பொருள் தரவேண்டாம் சில புகழ் வார்த்தைகளையாவது தாருங்கள் என்று படைப்பாளி ஏங்குவான் என்றது. அதற்காக இந்திரன் என வேண்டாம் சந்திரன் என வேண்டாம் ஊக்குவிக்க வேண்டும் என்றாரே
அவருக்குத் தெரியும் எப்படி மறைமுகக் கருத்துக்களை கூறவேண்டும் என்று. என் சிறுகதைத்தொகுப்புக்கு அவர் எழுதி இருந்த வாசகங்களே சான்று. அணிந்துரையில் அவர் ”ஜி.எம்.பாலசுப்பிரமணியத்தின் கதைகளைப் படித்துப் பார்த்தேன் இக்கதைகள் எந்தப் பத்திரிக்கையிலும் பிரசுரமானவை அல்ல.ஆகக் கூடியவையும் அல்ல” என்றும் “ எழுத்தாளர் ஆகவேண்டுமென்ற உத்தேசமோஅல்லது அவ்வாறு ஆகி இருப்பதை அடையாளப் படுத்தும் நோக்கமோ சிறிதுமின்றி, தன் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார். வாசகர்களின் சுவாரசியத்துக்காகவும் இவை எழுதப் படவில்லை” என்றும் எழுதி இருந்தார். இதைப் புகழாரமாகவோ அல்லாததாகவோ ஏற்றுக் கொள்ளலாம் எடுத்துக் கொள்பவரைப் பொறுத்தது அது
சிலர் உன் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்னும் ஆவல் உனக்கிருக்கிறதுஅது நடைபெறாமல் போகும் போது ஏமாற்றமும் இருக்கிறது தானே. 
ஆம் உண்மைதான் வலை உலகில் பலரது எழுத்துக்களைப் படிப்பவன் நான் சிறுகதை எழுதுவதில்பெயர் பெற்றவர்கள் என்று அறியப்பட்டவர்கள் என் கதைகளைப் படிக்க வேண்டும் என்னும் விருப்பம் உண்டு. அப்படி அறியப் பட்டவர் ஒருவருக்கு என் சிறுகதைத் தொகுப்பினை அனுப்பவா  விமரிசனம் செய்வீர்களா என்று கேட்டு எழுதி இருந்தேன். அவரும் ஒப்புதல் அளித்தபின் என் சிறுகதைத் தொகுப்பை அனுப்பினேன் மாதங்கள் ஓடி விட்டன. ஓரிரு முறை நினைவு படுத்தினேன் எனக்கு வந்த ஒரு பதில் எனக்கு இன்னும் புரியாததாய் இருக்கிறது. “ காரசாரமாய் சாடி ஒரு விமரிசனம் எழுதியதாகவும் அதன் காரம் குறைத்து ஒரு விமரிசனம் எழுத முயல்வதாகவும் கூறி இருந்தார். விமரிசனம் என்பது நடுநிலையோடு இருக்க வேண்டும். எழுதியவனை விமரிசிக்காமல் எழுத்தை விமரிசித்தல் அது எப்படி ஆயினும் தவறில்லையே. வலை உலகில் புரியாத விஷயம் இது.
சும்மா அல்ல பதிவர்கள் நினைப்பது உன்னைப் புரிந்து கொள்வதே கடினமப்பா. உனக்கு நினைவிருக்கிறதா?அவதாரக் கதைகள் நீ முதலில் எழுதத் துவங்கியபோது ஒரு சிறுமி தான் நாட்டியம் பயில்வதாகவும் தனக்கு இக்கதைகள் உபயோகமாய் இருப்பதால் தொடர்ந்து எழுத வேண்டி பின்னூட்டமிட்டபோது அதுவே உனக்கு ஒரு உந்து சக்தியாகி எல்லா அவதாரக் கதைகளையும் பதிவிட்டாயே..!
அவதாரக் கதைகள் என்று சொல்லும் போது ஒரு விஷயம் கூற விரும்புகிறேன் ஒன்பது அவதாரங்களிலும் அவதார புருஷர்களின் தோற்றம் இருக்கிறது தெரிகிறது கிருஷ்ணாவதாரத்தில்தான் கிருஷ்ணனின் மறைவு குறித்த தகவல் இருக்கிறது.மற்ற அவதாரங்களில் அவதாரங்களின் மறைவு பற்றி எங்கும் படித்த நினை வில்லை.
இதைப் படிப்பவர்கள் தங்களது கருத்துக்களைப் பதியும் போது யாராவது இதற்கும் பதில் சொல்லுவார்கள் என்னும் நம்பிக்கையோடு இரு. கடிதமாய்த் துவங்கி எப்படியோ போய் என்னவோ எழுதும் படி ஆகி விட்டது

அதனால்தான் என்னை நான் DIFFERENT என்று சொல்லிக் கொள்கிறேன்    
 

சனி, 30 மே, 2015

விஷ்ணு சஹஸ்ரநாமம் .


                                      விஸ்ணு சஹஸ்ரநாமம்
                                       ---------------------------------
 இந்த மாதம் பதினேழாம் தேதி  ஞாயிற்றுக் கிழமை என் மனைவியுடன் வயாலிக்காவல் வெங்கடேச பெருமாள் கோவில்கல்யாண மண்டபத்தில்  விஷ்ணு சஹஸ்ரநாம மண்டலிகள் ஒருங்கிணைத்து நடத்திய நக்ஷத்திர பாராயணத்துக்கு சென்றிருந்தேன். அதாவது நக்ஷத்திரத்துக்கு ஒரு முறை வீதம் 27 நக்ஷத்திரங்களுக்கும் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது பெங்களூருவில் 250-க்கும் மேற்பட்ட மண்டலிகள் இருப்பதாகத் தகவல் சொன்னார்கள். இம்மாதிரி அகில இந்தியாவிலும் ஆயிரக் கணக்கான மண்டலிகள் இருப்பதாகவும் இதையே ஒரு க்ளோபல் இயக்கமாக மாற்ற ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் கூறினார்கள். ஒரு முறை பாராயணம் செய்ய சுமார் இருபது நிமிடங்கள் என்று கணக்கிட்டாலேயே 27 முறை பாராயணம் செய்ய  ஒன்பது மணிநேரத்துக்கும் மேல் ஆகிறது. காலை எட்டுமணி சுமாருக்குத் துவங்கிய பாராயணம் மாலை ஐந்து மணிவரைத் தொடரலாம். அன்று நூற்றுக்கணக்கானவர்கள் வந்திருந்தனர்வருபவர்கள் வீட்டில் இருப்போரின் நக்ஷத்திரங்களுக்குப் பாராயணம் முடியும் வரை இருக்கின்றனர். வந்த அனைவருக்கும் காலை டிஃபன்  மதிய உணவு எல்லாம் இலவசமாகக் கொடுக்கப் பட்டது
எந்த நேரத்திலும் அகில உலகில் 24 மணிநேரமும் எங்காவது இந்தப் பாராயணம் நடக்குமாறு செய்ய வேண்டும் என்பதே குறி என்றனர்
இனி விஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றிய சில செய்திகள் தமிழ் விக்கிப் பீடியாவிலிருந்து
இது சத்வகுணம் நிறைந்த பீஷ்மரால் சத்வகுணம் நிறைந்த யுதிஷ்டிரருக்கு போதிக்கப்பட்ட சத்வ வழிபாட்டுக்குகந்த தோத்திரம். உலகத்தில் தர்மத்தைப் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் பன்னிருவர் என்று பட்டியலிட்டுக் கூறும் பாகவதம் அப்பட்டியலில் பீஷ்மரைச் சேர்த்திருப்பதிலிருந்து பீஷ்மரின் ஆன்மிகப் பெருமை விளங்கும். அதனாலேயே மகாபாரதப் போருக்குப் பின் தர்மத்தின் நெளிவு சுளுவுகளைப் பற்றி யுதிஷ்டிரர் கண்ணனிடம் கேட்டபொழுது, 'வா, இதை பீஷ்மரிடமே கேட்டுத் தெரிந்துகொள்வோம்' என்று கண்ணன் அவரைஅம்பு படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் அழைத்துச் செல்கிறார்.
யுதிஷ்திரர் பீஷ்மரிடம் ஆறு கேள்விகள் கேட்கிறார்
  1. இறைவனைப் பற்றி விளக்கும் எல்லா நூல்களிலும் கூறப்பட்டுள்ள சிறந்த ஒரே தெய்வம் எது?
  2. அதை அடைவதற்குரிய மேலான நிலை எது?
  3. எந்த தெய்வத்தை அவரது குணச்சிறப்புகளைப் புகழ்ந்து பாடி மானிடர்கள் நலம் எய்துவார்கள்?
  4. எந்த தெய்வத்தை புறத்தே அல்லது மனத்தினாலேயோ வழிபட்டு நலமடைய வேண்டும்?
  5. எல்லா வழிபாட்டு நெறிகளிலும் சிறந்த நெறியாகத் தங்கள் விருப்பிற்கும் கருத்திற்கும் ஏற்றது எது?
  6. எதனை ஜபித்து மனிதன் பிறப்புக் கட்டிலிருந்து விடுபடுகிறான்?
இவை அத்தனை கேள்விகளுக்கும் ஒரே முடிவான விடையாக பீஷ்மர் விஷ்ணுவின் பெயர்களை தியானித்தும், துதித்தும், வணங்கியும் ஒருவன் செய்வதால் எல்லாவித துக்கங்களையும் கடந்துவிடுவான் என்று சொல்லி, விஷ்ணு சஹஸ்ரநாமத்தைச் சொல்கிறார்.ஆக இவ்வழிபாட்டிற்கு மூன்று வித வெளிப்பாடுகள்: அவன் குணங்களையும் உருவங்களையும் மனதிலேயே நிறுத்துவது; அவைகளை பறைசாற்றும் நாமங்களை நாவினால் பாடுவது; சிரம் தாழ்த்தி அவனை வணங்குவது.
திருமதி M.S.சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடியுள்ள விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் புகழ் பெற்றது
பகவத் கீதையைத் தமிழில் படிக்க வாய்ப்பு இல்லாததால்கீதையைப் பற்றிக் கேட்டிருந்தும் அதை முழுவதும் வாசித்திராதவர்களுக்காக கீதையின் 18 அத்தியாயங்களையும் தமிழில் பதிவிட்டேன். அதே போல் விஷ்ணு சஹஸ்ரநாமம் பரவலாகப் பாராயணம் செய்யப் பட்டாலும் அது சம்ஸ்கிருதத்தில் இருப்பதால் பலருக்கும் பொருள் தெரிவதில்லை. தமிழில் இருக்கும் பல இறைவணக்கங்களுக்குமே பொருள் தெரிவதில்லை என்று சொல்லத் தயங்குகிறோம் பின் சம்ஸ்கிருதத்தில் இருக்கும் இந்த துதிக்கு பொருள் தெரியாமலேயே பாராயணம் செய்யப் படுகிறது என்று நான் சொன்னால் பலர் நம்பலாம். சிலர் மறுக்கலாம் அன்று நான் அங்கு சென்று கேட்டபோது எனக்கு சுத்தமாக விளங்கவில்லை. மேலும் தமிழ்மட்டுமே படித்தவர்களுக்கு அந்த சம்ஸ்கிருத உச்சரிப்பு வருவது மிகவும் சிரமம் எனக்கு நான் இதை ஏன் தமிழ் அர்த்தங்களை எழுதக் கூடாது என்று தோன்றியது. எனக்கு சம்ஸ்கிருதம் தெரியாது. ஆனால் அங்கும் இங்கும் தேடி பொருள் கண்டு எழுதலாம்தான் இருந்தாலும் தயக்கமாக இருக்கிறது. அது ஒரு பெரிய ப்ராஜெக்டாக இருக்கும். எனக்கு வேறு எதுவும் செய்ய முடியாது.தயக்கத்துக்கு இன்னோர் காரணம் கீதைக்கு கிடைத்த வரவேற்பும் இதற்குக் கிடைக்காது என்று உள்ளுணர்வு சொல்கிறது. சம்ஸ்கிருத மொழி கற்காததால் அந்த மொழியில் இருக்கும் பல விஷயங்கள் தமிழ் மூலமே கற்க வேண்டி உள்ளது முடிவெடுக்க முடியாமல் தயக்கத்தோடு இருக்கிறேன் . பார்ப்போம்.

முயற்சி செய்து பார்த்தேன் யுதிஷ்திரரின் கேள்விகளும் பீஷ்மப் பிதாமகரின் பதில்களுமாக எழுதிப் பார்த்தேன் எனக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றிய புரிதல் ஏதுமில்லாததாலும் அங்கு இங்கு என்று ப்ல இடங்களில் இருந்து தேடி எடுத்து பதிவாக்கினேன் . குறைகள் இருந்தால் அதன் முழுப் பொறுப்பும் எனதே. இருந்தாலும் இவ்வளவு சிரமப்பட்டு எழுத வேண்டுமா என்று தோன்றுகிறது முழு ஈடுபாடும் வருவதில்லை.பெரும்பாலானவர் பாராயணம் செய்தால் போதும் பொருள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று எண்ணுவோரே.இந்த ஸ்தோத்திரமே அவனது ஆயிரம் நாமங்கள் கொண்டது. நாமஜபம் செய்வதற்கு மொழி ஒரு தடைக்கல்லே அல்ல என்னும் அபிப்பிராயம் உடையவர்களே   

Q.-1 Kim ekam daivatam loke?
கிம் ஏகம் தைவதம் லோகே
உலகிலேயே  ஒரே சிறந்தகடவுள் எனப்படுபவர் யார்
Ans.-Pavitraanaam pavitram yo Mangalaanaam cha mangalam
Daivatam devataanam cha Bhootaanam yo avyayah pitaa.
சாந்நித்தியத்தையே சாந்நித்தியம் செய்பவர் மங்களமே உருவானவர்.என்றும் நிலைத்திருக்கும் அனைத்துக்கும் பிதா தந்தை ஒரேகடவுள் விஷ்ணு.
Q.2.- Kim vaapyekam paraayanam?
கிம் வாப்யேகம் பாராயணம்
அனைவருக்கும் போக்கிடம் கதி யார்
Paramam yo mahat-tejah Paramam yo mahat-tapah
Paramam yo mahat-brahma Paramam yah paraayanam
.
மிகுந்த தேஜஸ் உடையவன் அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பவன் உண்மையின் ஒளிவீசும் பிரஹ்மம், அடைய வேண்டிய ஒரே இலக்கு-விஷ்ணு.
Q.3- .  Stuvantam kam praapnuyuh (Maanavah subham)?
ஸ்துவந்தம் கம் ப்ராப்னியுஹ்( மானவ சுபம்
யார் புகழ் பாடினால் மானிடர் நலம் பெறுவார்கள்
Ans.
Jagat-prabhum deva-devam Anantam purushottamam
Stuvan naama-sahasrena Purushah satatotthitah.
எல்லோரது நலனுக்கும் எல்லாம் செய்யும் இந்த பிரபஞ்சத்தின் தலைவன் ஸ்ரீமஹா விஷ்ணு
Q.4 -Kam archantah) praapnuyuh  Maanavaah subham?
கமர் சந்த ப்ராப்னியூ மானவ சுபம்
எந்த தெய்வத்தை அகத்திலோ புறத்திலோ வைத்து வழிபட்டால் அமைதியும் நலனும் பயக்கும்
   Tameva cha archayan nityam Bhaktyaa purusham avyayam
Stuvan naama-sahasrena Purushah satatthitah.
தியானத்தாலும் அர்ச்சனையாலும் அதே புருஷ்னை வணங்குதலால் மனிதன் நலம் பெறுவான்
Q.5 , Ko dharmah sarva-dharmaanaam Bhavatah paramo matah?
கோதர்மசர்வ தர்மானாம் பவத பரமோ மதா
உங்கள் கருத்துப்படி சிறந்த தர்மம் அல்லது நெறி யாது
Q.6 Kim japan muchyate jantuh Janma-samsaara-bandhaaat?
கிம்ஜபன்முச்யதேஜந்துர் ஜன்ம சம்ஸாரபந்தனாத்
எதை தியானித்து உயிரிகள் சம்ஸாரத் தளையிலிருந்து விடுதலை அடையலாம்
Ans..5&6Anaadi-nidhanam vishnum Sarvaloka-maheshvaram
Lokaadhyaksham stuvan nityam Sarva-duhkha-atigo bhavet.
ஆதி அந்தம் இல்லாத விஷ்ணுவின் நாமத்தைப் பஜிப்பதாலும் நினைப்பதாலும் எல்லாத் தளைகளில் இருந்தும் விடுபடுவதே சிறந்த நெறியாகும்

விஷ்ணு  சஹஸ்ரநாம ஸ்தோத்திரம்
--------------------------------------
“விஸ்வம் விஷ்ணு வஷட்கார பூதபவ்ய பவத்ப்ரபு
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவன:

அண்டமெலாம் வியாபித்து இருப்பவர் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவர் அனைத்தையும் தான் நினைத்தப்டி நடத்தி தன் வசம் வைத்திருப்பவர்,முக்காலங்களிலும் இருப்போர்க்கெல்லாம் தலைவர்,தன் நினைவாலேயே அனைத்தையும் படைப்பவர், படைத்த அனைத்தையும் தாங்குபவர், பிரபஞ்சமே தன்னைச் சார்ந்திருப்பதாகக் கொண்டவரனைத்துக்கும் ஆதமாவாக இருப்பவர்,அனைத்துக்கும் அவரே உடல், அனைத்தையும் பேணி வளர்ப்பவர், தலைவர்.

( இது போல 108 இரண்டடி சுலோகங்கள்...... உனக்கு இது தேவையா என்னும் கேள்வி எழுகிறது)

.