இப்படியும் கதைக்கலாம்..
-----------------------------------
-----------------------------------
ஒரு கையில் நீண்ட கத்தியுடனும், மறுகையில் உடலிலிருந்து வெட்டி
எடுத்த தலையுடனும்,அந்த வீதிவழியே அவன் சென்று கொண்டிருந்ததை அந்தத் தெருவே
திடுக்கிட்டு, துணுக்குற்று, என்னவெல்லாமோ மன உணர்வுகளுடன் பார்த்துக்
கொண்டிருந்தது..தார்ப் பாய்ச்சி கட்டிய வேட்டி, மேலாடை இல்லாத உடம்பு, இடமிருந்து
வலமாக முப்புரி நூல். இவனுக்கு இது எப்படி சாத்தியம்.? அதே தெருவின் முடிவில்
கணவனும் மனைவியுமாக வாழ்ந்து வரும் வேதங்களுடன்பட்டமும் படித்துப் பெற்றவனல்லவா
இவன்.? கையில் ஏந்திச் செல்வது அவனது மனைவியின் தலை போல் தெரிகிறதே. பாவி...அவனைப்
பின் தொடர்ந்து பார்ப்போமா...மனைவியைக் கொன்றதுடன் தலையையும் தெருவில் காட்டிச்
செல்லும் அவன் நேராக ஊர்க் கோடியில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்று
சரணடைகிறான். கட்டிய மனைவியையே வெட்டிக்கொல்லத் துணிந்தவனின் கதை கேட்போமா.?
“ SIR, THIS HEAD BELONGS TO MY WIFE. I HAVE
KILLED HER. RIGHT IN FRONT OF MY EYES, I
SAW HER IN A VERY COMPROMISING AND
CONJUGATE POSITION WITH A MALE, I DO NOT KNOW WHO.”
“ HEY..! STOP IT. கதை எழுதுகிறேன்
பேர்வழி என்று காப்பி அடிக்கிறாயா? கிர்ர்ர்ர்ர்ர்ர்
இதேபோல் எழுத உனக்கு சுட்டுப் போட்டாலும் வராது.கடல் கடந்து
அக்கரையில் அமெரிக்கச் சீமையிலிருந்து இணையத்தில் எழுதி வருபவர் இதைப் படிக்க
நேர்ந்தால் காப்புரிமைச் சட்டதின் கீழ் நடவடிக்கை எடுப்பார்.”
”கனவொன்று கண்டு விழித்தவன் கனவினைக் கதையாக்க
நினைத்தால் என்னவெல்லாமோ சொல்லி பயமுறுத்துகிறீர்களே. கனவில் கதை துல்லியமாக
விரிந்தது,அப்போதே எழுந்து அதை எழுத்தில் வடித்திருக்க வேண்டும்.விழித்தெழுந்து
எழுத முனைந்தால் தலையும் வாலும் தெரியாதபடி குழப்பமாக இருக்கிறது. நினைவு படுத்தி
எழுதலாம் என்றால் எதையோ சார்ந்திருக்கிறது என்று குற்றச் சாட்டு.. WHAT NOW.?”
” கதை எழுத கற்பனையும் மொழியறிவும் மட்டும் போதாது.
சரளமாக எழுதத் தெரிய வேண்டும். ஏதோ தமிழ்த் தேர்வுக்கு எழுதுவது போல்
வார்த்தைகளைக் கையாண்டால் யாருக்குப் படிக்கத் தோன்றும்.?”
”அம்மா, வா..உன் பங்குக்கு நீ ஏதாவது சொல்லேன்.”
”I DO NOT KNOW WHETHER I
AM COMPETENT TO SAY ANYTHING. BUT STILL I WANT TO SHARE MY OPINION WITH YOU
SIR. INFEDILITY CAN NOT BE LEFT UNPUNISHED.”
” இன்னும் கதையேஎழுதத் துவங்க வில்லை. கருத்துக்களை
எதிர் நோக்கும் நிலையிலா நான் இருக்கிறேன் “
”ஜியெம்பி சார்,கதை எழுதத் துவங்கும் போதே அதில்
மனம் லயிக்க வேண்டும். அப்படி எழுதுவது என்பது தன்னிலைப் படுத்தி எழுதினால்
சுலபமாக இருக்கும். படிப்பவர்களை ஈர்க்கும். உரையாடல்கள் மூலம் எண்ணுவதைச்
சொன்னால் ரசிக்கும்படி இருக்கும். இதற்கெல்லாம் எழுத்துப் பட்டறையில் பயிற்சி
எடுத்தால் நன்றாக இருக்கும்.”
இதைத் தான் அன்றைக்கே அவரிடம் சொன்னேன். அனுபவப் பட்டவர்களின் ஆலோசனைகள்
கேட்டு எழுதுங்கள் என்று.”
” ஐயா, நீங்கள் எழுதுவதைக் கவனித்துக் கொண்டும்
படித்துக் கொண்டும் வருகிறேன். உங்கள் தளமே வேறு. உங்கள் பன்முகத்தன்மை வெளியாகும்
வரையில் எழுதிக் கொண்டே இருங்கள்.மின் வெட்டெல்லாம் நீங்கி,கணினியும் என் கைக்கு
வந்ததும் படித்துக் கருத்து சொல்கிறேன்,”
” ஏதோ பொழுது போக வில்லையா, எழுதினோமா என்றில்லாமல்
இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது. “
”என்னென்னவோ நினைத்து, என்னென்னவோ எழுத வேண்டும் என்றிருந்தவனை, எழுதுவதற்கு
முன்பே இது தேவையா என்று எண்ண வைத்து விட்டீர்கள்.”
”எண்ண வைத்ததை செயல் படுத்தும் திறமை உங்களிடம்
தாராளமாகவே இருக்கிறது, பாலு சார்.”
( திரு. அப்பாதுரையின் பதிவொன்றுக்கு பின்னூட்டம் எழுதும்போது,
பேய்களுடன் ஒரு பேட்டி எடுக்க வேண்டுமே என்று எழுதி இருந்தேன். அதை எப்படியாவது
கதை உருவில் கொண்டு வர வேண்டும் என்று எழுத உட்கார்ந்ததும் தோன்றிய சிந்தனைகளே
மேற்கூறியவை..ALL IN LIGHTER
VEIN )
------------------------------------------------------------
உங்கள் கற்பனைத்திறன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே போகிறது. விண்ணை முட்டி விடப்போகுது ஜாக்கிரதை!!!!
பதிலளிநீக்குரொம்ப நல்லாதான் கற்பனை செய்திருக்கீங்க. நல்லா இருக்கு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி, உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் கருத்துக்கும்மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@ லக்ஷ்மி,
பதிலளிநீக்குஉடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி. இர்ண்டு மூன்று நாள் வலைப் பக்கமே வரவில்லை. கிட்டத்தடட இருபத்திநான்கு ம்ணிநேர பஸ் பயணம்,முடித்து வந்ததும் இட்ட பதிவுக்கு ஆரம்ப பின்னூட்டமே மகிழ்ச்சி அளிக்கிறது.
எதுக்கும் ஒரு கழிப்பு செஞ்சிடுங்க சார் :)
பதிலளிநீக்குபாப்பாரப் பேய்ங்களுக்கு தயிர், மத்தப் பேய்ங்களுக்கு நீர் மோர் (ஏன்னு கேக்காதீங்க.. அப்படித்தான் செஞ்சாங்க..)
இருபத்திநான்கு ம்ணிநேர பஸ் பயணம்?
பதிலளிநீக்கு”ஜியெம்பி சார்,கதை எழுதத் துவங்கும் போதே அதில் மனம் லயிக்க வேண்டும். அப்படி எழுதுவது என்பது தன்னிலைப் படுத்தி எழுதினால் சுலபமாக இருக்கும். படிப்பவர்களை ஈர்க்கும். உரையாடல்கள் மூலம் எண்ணுவதைச் சொன்னால் ரசிக்கும்படி இருக்கும். இதற்கெல்லாம் எழுத்துப் பட்டறையில் பயிற்சி எடுத்தால் நன்றாக இருக்கும்.”
பதிலளிநீக்கு:)) !
@Appaathurai,yes,,I went to kerala on 14th travelling for over 12 hrs and returned back on 15th again travelling for nearly 12 hrs. to attend a betrothel.
பதிலளிநீக்கு@jeevi, Iam sure you will not take it amiss. All in lighter vein. You can see others also.
I WILL BE delinked from blogworks for sometime.
பயங்கரக் கற்பனை வளமா இருக்கு....!
பதிலளிநீக்குஅநியாயக் கற்பனை சார், அப்பாதுரை உங்களை இப்படி எல்லாமா எழுத வைச்சுட்டார்? ஹிஹிஹி, நானெல்லாம் அவர் கதையைப் படிச்சுட்டு உடனே மறந்துடுவேன். மறுபடி புதுசா எழுதினதைப் படிக்கையிலேதான் முந்தினது நினைவில் வரும். :))))))))
பதிலளிநீக்கு