குட்டிக்கதைகளும் எண்ணிச் சிரிக்கவும்
-------------------------------------------------------
( புலன்கள் பற்றி எழுதி இருந்தேன். அவற்றில் குறைபாடுகள் பிரச்சனை கொடுப்பவை. கூடவே இன்னொன்றும் கூற விரும்புகிறேன். உடலின் உறுப்புக்கள் தான் இருப்பதை நினைவு படுத்தாமல் செயல் புரிய வேண்டும். கை இருக்கிறேன், கால் இருக்கிறேன் தலை இருக்கிறேன் என்று அவற்றின் இருப்பை நினைவூட்டிக் கொண்டிருந்தாலும் சங்கடமே. கடந்த ஒரு வாரமாக என் இடுப்பும் அப்படி கூறிக் கொண்டே இருப்பதால் எந்த ஒரு வேலையும் செய்ய முடிவதில்லை. ஏன் நடக்கவும் உட்காரவும் கூட முடிவதில்லை. எப்படியோ வலையில் இருக்கும் ஆர்வம் என்னை இங்கே கொண்டு வந்து எழுத வைக்கிறது )
முதியவர்கள் என்ன சும்மாவா
------------------------------------------
அந்தப் பெரியவர் தன்னுடைய ,ஊருக்கு ஒதுக்குப் புறமாக
இருந்த தோட்ட வீட்டில் தனியாக இருந்தார். அந்தப் பெரிய வீட்டின் ஒரு பகுதியில்
நான்கைந்து பேர்களுடைய நடமாட்டம் இருந்ததை உணர்ந்தார். ஒரு அறையில் கதவைச்
சாத்திக்கொண்டு அவசர போலீசுக்கு போன் செய்தார்.
“ என் வீட்டில் திருடர்கள் நடமாட்டம் தெரிகிறது. நீங்கள்
உடனே வந்து என்னையும் என் பொருள்களையும் காப்பாற்ற வேண்டும் “ என்று கூறினார்.
அவர்கள் அவரது இருப்பிடம் போன்றவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு
“ நீங்கள் இப்போது எங்கிருக்கிறீர்கள்.?” என்று கேட்டனர்.
“ தோட்ட பங்களா வின் ஒரு கடைசி அறையில் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே இருக்கிறேன்
“ என்றார். “ நீங்கள் எங்கேயும் வெளியே செல்ல வேண்டாம்,அங்கேயே இருங்கள்.
தற்சமயம் எங்களிடம் போதிய ஆட்கள் இல்லாததால் உடனே வர முடியவில்லை” என்று கூறி
தொடர்பைத் துண்டித்தனர்.
சரியாக ஒரு நிமிஷம் கழித்து மறுபடியும் போன் செய்தார். “
என் தோட்டத்தில் திருட வந்தவர்களை நான் சுட்டு விட்டேன். நீங்கள் அவசரமாக
வரவேண்டும் “என்றார்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஒரு போலீஸ் ஜீப் இன்ஸ்பெக்டர்
மற்றும் ஒரு போலீஸ் படையுடன் பங்களா முன் வந்து திருடிக் கொண்டிருந்தவர்களைக் கைது
செய்தது. வெளியே வந்த பெரியவரிடம்” நீங்கள் சுட்ட நபர் எங்கே .?” என்று கேட்டனர்.
பெரியவர் “ நான் யாரையும் சுடவில்லை “ என்றார். “ பின் ஏன் சுட்டதாகப் பொய்
சொன்னீர்கள் ?” என்று கேட்டதற்கு “ நீங்களும்தான் இங்கு வர ஆட்கள் இல்லை
என்று சொல்ல வில்லையா “ என்றார் அந்த அனுபவம் வாய்ந்த உலகம் தெரிந்த பெரியவர்.
அன்பெனும் மாயை
-----------------
ஒருவன் தன் மனைவி மக்கள் தன் மீது அத்யந்த அன்பு
கொண்டிருப்பதாகவும்,, அது காரணம் தன்னால் துறவு மேற்கொள்ள முடியவில்லை என்றும் ஒரு
பெரியவரிடம் கூறினான். அவர் “ நீ இன்னும் விஷயத்தை உள்ளவாறு புரிந்து கொள்ள
வில்லை. நான் தரும் இந்த குளிகையை சாப்பிடு.. உனக்கு எல்லாம் புரியும்” என்று கூறி ஒரு மாத்திரஒயை அவன் உட்கொள்ளக்
கொடுத்தார். அவன் தன் வீட்டுக்குப் போய் அதனை உட்கொண்ட சிறிது நேரத்தில் கை
கால்கள் எல்லாம் நீட்டி விரைத்து சவம் போல் ஆகிவிட்டான். திடீரென அவன் மடிந்து
விட்டது கண்டு அவன் மனைவி மக்கள் குய்யோ முறையோ என்று சிறிது நேரம் கதறினர்.
பிணத்தை சவ அடக்கத்துக்கு வெளியே கொண்டு வர முயற்சித்தனர். கை கால்கள்
விரைத்துக்கொண்டு நீட்டி இருந்ததால் வாயிலில் அதைக் கொண்டு வர இயலவில்லை. உடனே
ஒருவர் கோடரியைக் கொண்டு கதவைப் பிளக்க முயன்றார். அதைப் பார்த்த மனைவி “ ஐயோ
அப்படி செய்யாதீர்கள். என் தலைவிதி நான் கைம்பெண் ஆகிவிட்டேன். குழந்தைகளை
காப்பாற்றும் பொறுப்பு எனக்குண்டு. இந்த நிலையில் கதவை உடைத்து விட்டீர்களானால்
அதை புதுப்பிக்க என்னிடம் வசதி இல்லை. விதி வசத்தால் அவர் மாண்டு போனார்அவர் சவத்தை துண்டுகளாக வெட்டிக் கொண்டு போகலாம்” என்றாள். அந்த
நேரத்தில் குளிகையின் வீரியம் குறைந்து இறந்தவன் எழுந்து நின்றான். “ என்னைத்
துண்டு துண்டாய் வெட்ட வேண்டுமென்றா சொன்னாய்” என்று சொல்லிக்
கொண்டே துறவியாக வெளியேறி விட்டான்.
குழந்தைகள் கூர்மையானவர்கள்
------------------------------
ஆசிரியர்:-ராமு,இன்றைக்கு நீ ஏன் லேட்.?
ராமு:- நான்
வருவதற்குள் மணி அடித்து விட்டார்கள்,டீச்சர்.
ஆசிரியர்:- ராமு,பெருக்கல் கண்க்குகளை ஏன் தரையில்
உட்கார்ந்து செய்கிறாய்.?
ராமு:- பெருக்கல்
கணக்குகள் செய்யும்போது டேபிள்ஸ் உபயோகிக்கக் கூடாது என்று சொன்னீர்களே டீச்சர்.
ஆசிரியர்:- ராமு,CROCODILE எப்படி ஸ்பெல் செய்வாய்.?
ராமு:- KROKODILE
ஆசிரியர்:- தவறு.
ராமு:- இருக்கலாம். நான் எப்படி ஸ்பெல் செய்வேன் என்றுதானே
கேட்டீர்கள்.
ஆசிரியர்:- ராமு,தண்ணீரின் ரசாயனக் குறியீடு கூறு.
ராமூ:- HIJKLMNO
ஆசிரியர்:- என்ன உளறுகிறாய்.
ராமு:- நேற்று நீங்கள் தானே கூறினீர்கள்,H to O
என்று.
ஆசிரியர் :- ராமு,இன்றுள்ளது பத்து வருடங்களுக்கு முன்
இல்லாதது ஒன்று கூறு.
ராமு :- நான்.!
ஆசிரியர் :- ராமு,நாய் பற்றி நீ எழுதிய கட்டுரை சோமு
எழுதியது போலவே இருக்கிறது. காப்பி அடித்தாயா.?
ராமு :- இல்லை டீச்சர். நாங்கள் இருவரும் ஒரே நாயைப்
பற்றிதான் எழுதினோம்.
ஆசிரியர்.:- ஜார்ஜ் வாஷிங்டன் அவருடைய தந்தையின் செர்ரி
மரத்தை தன் கோடாலியால் வெட்டினார். அதை அவரது தந்தையிடம் ஒப்புக்கொள்ளவும்
செய்தார். இருந்தும் அவர் தந்தை அவருக்கு தண்டனை தரவில்லை. ஏன்.?
ராமு. :- ஜார்ஜ் வாஷிங்டன் கையில் கோடாரி இருந்தது.
ஆசிரியர்.:- ராமு,ஒருவர் எந்த ஆர்வமும் காட்டாது
இருக்கும்போதும் பேசிக்கொண்டே இருப்பவரை
என்ன என்று சொல்வது.?
ராமு.:- ஆசிரியர். !
,
.
ரசனையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குசுவையான பதிவுகள் அய்யா நன்றி
பதிலளிநீக்குரசித்தேன்... முக்கியமாக : குழந்தைகள் கூர்மையானவர்கள்
பதிலளிநீக்குநன்றி ஐயா...
கதை ரொம்ப ரொம்ப நல்லா இருந்தச்சு....உங்கள் பகிர்வுக்கு நன்றி.....
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
ரசனையான குட்டிக்கதைகள்.
பதிலளிநீக்குஅருமையான குட்டிக் கதைகள்
பதிலளிநீக்குநகைச்சுவைத் துணுக்குகளும் மிக மிக அருமை
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
(விரைவில் தாங்கள் பூரணநலம் பெற
எல்லாம் வல்லவனை
வேண்டிக் கொள்கிறேன் )
நல்ல கதைகள். ரசித்தேன்.
பதிலளிநீக்குசிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன ஜோக்குகள்.. :0)
பதிலளிநீக்கு