மாத்தாடு மாத்தாடு மல்லிகே ( தமிழில் )
நான் இந்த கன்னட கிராமீயப் பாடலை முதன் முதலில் 1961-1962
வாக்கில் கேட்டேன். அதன் பிறகு தமிழில் ஒரு திரைப்படத்தில் இதன் முதல் வரி
எடுத்தாளப் பட்டிருந்தது. முழுப்பாடலும் நினைவில் வரவில்லை. ஒரு நண்பனின் உதவியோடு
இப்போது முழுப் பாடலும் கை வரப் பெற்றேன். அதை என்னால் முடிந்த அளவு தமிழில்
மொழியாக்கம் செய்திருக்கிறேன். படித்துப் பாருங்கள் பாடிப் பாருங்கள்.
( முதலில் தமிழ் எழுத்தில் கன்னடப் பாட்டு.)
மாத்தாடு மாத்தாடு மல்லிகே பாடியது:- ஜீ.வி. அத்ரி,மஞ்சுளா குருராஜ்.
ஆண்,:- மாத்தாடு மாத்தாடு மல்லிகே
செம்பக
செவந்திகெ....
கும்பினல்லி
மாத்தாடு மாத்தாடு மல்லிகே.
பெண்:- ஒப்பன்னெ கட்டித்தெ
ஒப்பன்னெ
பிட்டித்தெ
ஒப்பன்னெ
கரக் கோண்டொளொகோகிதே கெளையா
ஆண்:- யாரென்னக் கட்டித்தெ, யாரென்ன பிட்டித்தெ
யாரென்ன கரக்கோண்டொளகோகிதெ மல்லிகே
பெண்:-ஹசுவன்னக் கட்டித்தெ , கருவன்ன பிட்டித்தெ
ஹாலுன்னு
கரக்கோண்டொளகோகிதே சலுவா
ஆண்:-மாத்தாடு மாத்தாடு மல்லிகே
செம்பகெ
செவந்திகெ
மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
பெண்:- ஒப்பன்ன தள்ளித்தெ, ஒப்பன்ன நுக்கித்தெ
ஒப்பன்ன
ஜதையல்லி திருகி பந்தெ கெளையா
ஆண்.:-யாரன்னு தள்ளித்தெ, யாரன்னு நுக்கித்தெ
யாரன்னு
ஜதையல்லி திருகி பந்தெ மல்லிகே
பெண்;-கதவன்னு தள்ளித்தெ அதகள நுக்கித்தெ
தீபத ஜதையல்லி
திருகி பந்தெ கெளையா
ஆண்:-மாத்தாடு மாத்தாடு மல்லிகே
செம்பகெ
செவந்திகெ
மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
பெண்:-ஒப்பன்ன ஆசித்தெ ஒப்பன்ன ஹோதித்தெ
ஒப்பன்னு
இளக்கோண்டு மலகிதெ கெளையா
ஆண்:- ஏனென்ன ஆசித்தெ, ஏனென்ன ஹோத்திதெ
யாரன்ன
இளக்கோண்டு மலகிதெ மல்லிகே
பெண்:-ஹாசிகே ஆசித்தெ,கம்பளிய ஹோத்திதெ
தலதிம்பு
இளக்கோண்டு மலகிதெ கெளையா
ஆண்:-மாத்தாடு மாத்தாடு மல்லிகே
செம்பகெ
செவந்திகெ
மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
பெண்:-ஒப்பக்கெ கால் கொட்டெ, ஒப்பக்கெ கை கொட்டெ
ஒப்பக்கெ
சீரையன்ன எளக் கொட்டெ கெளையா
ஆண்:- யாரெக்கெ கால் கொட்டெ யாரெக்கெ கை கொட்டெ
யாரெக்கெ
சீரையென்ன எளக்கொட்டெ மல்லிகே
பெண்:-கந்துகாருகெ கால் கொட்டெ, பளேகருகெ கை கொட்டெ
மடிவாளகெ சீரையென்ன
எளக் கொட்டெ கெளையா
ஆண்:- மாத்தாடு
மாத்தாடு மல்லிகே...........
இனி
தமிழாக்கம்.
ஆண்:-
சொல்லு நீ சொல்லடி மல்லிகே
செண்பகமே சாமந்தியே
குழுவில் கூடி சொல்லு நீ சொல்லடி மல்லிகே
பெண்:_
ஒண்ணே நான் கட்டினேன்
ஒண்ணெ நான் விட்டுட்டேன்
ஒண்ணெ நான் எடுத்திட்டு போனேன், நீ
கேளைய்யா.!
ஆண்:- யாரை நீ கட்டினே யாரை நீ விட்டுட்டே
யாரைதான் எடுத்திட்டு போனே நீ மல்லிகே
பெண்:_பசுவை
நான் கட்டினேன்
கன்றை நான் விட்டிட்டேன்
பாலைத்தான் எடுத்திட்டு போனேன்,நீ
கேளைய்யா.!
ஆண்.;-சொல்லு
நீ சொல்லடி மல்லிகே
செண்பகமே சாமந்தியே
குழுவில்கூடி சொல்லு நீ சொல்லடி மல்லிகே.!
பெண்.:_ஒண்ணை
நான் தள்ளிட்டேன்
ஒண்ணை நான் போட்டுட்டேன்
ஒண்ணை நான் கையிலே,தாங்கி வந்தேன் நீ
கேளைய்யா.!
ஆண் .:-யாரை
நீ தள்ளினே
யாரை நீ போட்டுட்டெ
யாரை நீ கையிலே, தாங்கி வந்தே மல்லிகே
பெண்.;-
கதவ நான் தள்ளினென்
தாப்பாளப் போட்டுட்டென்
வெளக்கை நான், கையில் தாங்கி,வந்தேனெ
மச்சானே
ஆண்.;- சொல்லு நீ சொல்லடி மல்லிகே
செண்பகமே சாமந்தியே
குழுவில் கூடி சொல்லு நீ சொல்லடி மல்லிகே
பெண்.;-
ஒண்ணை நான் ஆசைப் பட்டேன்
ஒண்ணை நான் போத்திக்கிட்டேன்
ஒண்ணை நான் கட்டிக்கிட்டு படுத்திட்டேன்
நீ கேளைய்யா.!
ஆண்.:- யாரை நீ ஆசைப்பட்டே
யாரை நீ போத்திக்கிட்டே
யாரை நி கட்டிட்டுப் படுத்திட்டெ
மல்லிகெ
பெண்.:-
படுக்கைக்கு ஆசைப்பட்டேன்
கம்பளியப் போத்திக்கிட்டேன்
தலையணையக் கட்டிட்டுப் படுத்திட்டேன்
மச்சானே.!
ஆண்.:-
சொல்லு நீ சொல்லடி மல்லிகே
செண்பகமே சாமந்தியே
குழுவில் கூடி சொல்லு நீ சொல்லடி
மல்லிகெ.
பெண்.:-
ஒருத்தனுக்கு கால் கொடுத்தேன்
ஒருத்தனுக்குக் கை கொடுத்தேன்
ஒருத்தனுக்கு
சேலை தூக்கிக் கொடுத்தேன் நீ கேளைய்யா
ஆண்.:-யாருக்குக்
கால் கொடுத்தெ
யாருக்குக் கை கொடுத்தெ
யாருக்கு சேலை தூக்கிக் கொடுத்தெ நீ
மல்லிகெ
பெண்.-தட்டானுக்குக்
கால் கொடுத்தேன்
வளைக் காரனுக்குக் கை கொடுத்தேன்
வண்ணானுக்கு சேலை தூக்கிகொடுதேன் நான் மச்சானே
ஆண்.:-
சொல்லு நீ சொல்லடி மல்லிகெ..........
( சில கன்னட வார்த்தைகளுக்கு மாற்று
வார்த்தைகள் எழுதி உள்ளேன். உ-ம் கன்னடத்தில் கெளையா என்னும் சொல் இளைஞன் என்று
பொருள்படும். அதற்கு மாற்றாக நீ கேளைய்யா என்றும் கும்பினல்லி என்பதைக் குழுவில் கூடி என்றும் எழுதி
உள்ளேன்.).
நல்லா இருக்கு சார்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி...
சென்னாகிதே ஐயா! :-)
பதிலளிநீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குGMB அய்யா அவர்களே! கன்னட ஒலியும் தமிழின் ஒலியும் ஒரே துள்ளல்! இன்னும் இளமை உணர்வோடு தமிழாக்கம்! அருமை!
பதிலளிநீக்குமொழி பெயர்ப்பும், ஒலி பெயர்ப்பும் அருமை அய்யா
பதிலளிநீக்குரசிக்க முடிகிறது. நன்றி.
பதிலளிநீக்குரசிக்கவைத்த அருமையான பாடல்..
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்,
@ சேட்டைக்காரன்,
@ டாக்டர் கந்தசாமி,
@ தி, தமிழ் இளங்கோ.
@ கரந்தை ஜெயக்குமார்,
@ அப்பாதுரை,
@ இராஜராஜேஸ்வரி
என் பதிவுக்கு வந்து படித்து பாராட்டிக் கருத்திட்டதற்கு என் நன்றி.