குட்டிக் குட்டிக் கதைகள்.
-------------------------------------------
வாழ்வின் பல கால கட்டங்களில் கதைகள் பல கேட்கிறோம். கதைகள் மூலம் படிப்பினைகள் கிடைக்கின்றன. என் பேரக் குழந்தைகளுக்கு நானும் நிறைய கதைகள் சொல்லியிருக்கிறேன். கதைகள் சொல்லும்போது படிப்பினைகள் தானாகவே உணரப் படும். இப்பதிவில் நான் கேட்ட கதைகள் சிலவற்றை
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பலரும் அறிந்த கதைகள் என்றாலும் அதை சுருக்கமாகக் கவிதை ( ? ) வடிவில் வடித்திருக்கிறேன்.
( இந்தக் கதை ஸ்ரீ ராமகிருஷ்ணர் தன் சீடர்களுக்குச் சொன்னதாகப் படித்தது. )
பத்தும் நிறம்பாத,பால் மணம் மாறாப்
பிள்ளை சந்நியாசி பிட்சை கேட்டு வந்தவன்.,
அன்னமிட வந்தவள் முட்டும் முலை கண்டு,
கட்டி ஏதோ வந்துளதோ என்றே வினாவினான்
ஏதுமறியாப் பாலகன் அவன்.
சுற்றி இருந்தோர் விளக்கம் கூறினர்.
“ பருவம் வந்திருக்கும் மங்கை இவள்,
மணம் புரிந்து
பிள்ளைகள் பெற்றால் ,
பாலூட்ட ஏதுவாய்
வந்த தனங்கள் இவை. “
“ உதிக்க இருக்கும் உயிருக்கும் உணவு படைக்க,
உற்ற ஏற்பாடு
செய்திருக்கும் இறைவன்,
எனக்கும் ஏதாவது
வழி வகுத்திருப்பான்.
உண்டி வேண்டி இனி
எங்கும் ,நான் செல்லேன்”
மனம் தெளிந்து சென்றானா அப்பாலகன்.?
( தலை எழுத்து ,விதி போன்றவற்றை நம்பாதவன் நான். இருந்தாலும் சில நிகழ்வுகளுக்கு தகுந்த காரணங்கள் கணிக்க முடிவதில்லை. கதையைப் படியுங்களேன் )
விதிப்படி....
----------
பக்தனொருவன் படும் பாடு கண்ட பார்வதி தேவி,
உற்ற உதவி அவனுக்குச் செய்ய சிவனை வேண்டினாள்.
“ அவன் விதி அது. பாடுபட்டே ஆகவேண்டும்.
பரமன் நான்.
என்னாலும் ஏதும் செய்ய இயலாது”
என்றவரை விடாது வேண்டினாள் அன்னை.
தனிவழியே சென்றவன் முன் சற்றே
தொலைவில் அவன் கண் படும்படி
பாதையில் ,ஒரு கிழிப் பொன் வைத்தார்.
நடந்து சென்றவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள்.
“ பாதை தெரிந்து நடக்கும் எனக்கே இந்தக்
கரடு முரடுப் பாதை தரும் எண்ணிலா இன்னல்கள்.
பார்வை அற்றவன் பாடு உணர்ந்தால்தான் தெரியும்”
கண்மூடி நடக்கத் துவங்கினான். பரமசிவன்
பார்த்திருக்க ,பார்வதி பதை பதைக்கப் அப்பாவியிவன்
பொற்கிழி காணாதே கடந்து சென்றான்.
எது பக்தி.?
---------
( அவரவர் பணிகளை கர்ம சிரத்தையுடன் செய்வதே சிறந்த பக்தியாகும் )
நாளும் பொழுதும் நாராயணன் நாமம்
நாவிலே வைத்திருக்கும் நாரதனுக்கு
தன்னிலும் சிறந்த பக்தன் இல்லை என்ற அகந்தை.
பரந்தாமனிடமே சவால் விட்டான்.
நல்லதோர் பாடம் புகட்ட ” சோதனை ஒன்று
வைப்பேன். தேர முடியுமா உன்னால் “ எதிர்
சவால் இட்ட ஸ்வாமியிடம் தயார் என்றான் நாரதன்.
“ கிண்ணத்தில் எண்ணை ஊற்றி, திரியிட்டு
விளக்கேற்றி , அது
அணையாமல் பூவுலகு
வலம்
வரவேண்டும்.முடியுமா உன்னால்.?”
“ இதோ இக்கணமே சிரமேற்கொண்டேன்,”
என்றவனும்
எண்ணங்கள் எல்லாம் ஒருங்கிணைத்து
ஒரு கையில்
விளக்கை வைத்து , மறுகையால்
அதனைக் காத்து ,
கணமேனும் கருத்தினைச்
சிதறவிடாதுவிளக்கை
அணைய விடாமல்
பூவுலகை சுற்றி
வந்தான் பரந்தாமன் பாராட்டு
கிடைக்கும் என்றே
மகிழ்ந்தவன் ,பள்ளி கொண்டான்
மதிவதனம் இறுகி
இருப்பது கண்டு அயர்ந்தான்.
“ நாரதா, உன் நினைவெல்லாம் என்றும் நானல்லவா.?”
“ சந்தேகம் ஏன் பிரபோ.?” எனவே வினவிய
நாரதன்
ஐயன் முகம் நோக்கி
அச்சம் அடைந்தான்.
” விளக்கெடுத்து
பூவுலகை வலம் வரும்போதும் என்
திருநாமம் விடாமல்
உச்சரித்து வந்தாயா நாரதா.?”
“ பொய் சொல்ல மாட்டான் இந்த நாரதன். விளக்கு
அணையாமல்
காப்பதில் கவனம் இருந்ததால் பிரபோ,
நாராயணன் நாமம்
நாவில் இருக்கவில்லை.அதனாலென்ன
ஐயனேஎன் பக்தியில் குறைபாடு ஏதுமில்லை,உணர்வீர்.”
” நாரதா,நாளும்
பொழுதும் வாழ்வின் அவலங்களில்
சிக்கி உழலும்
ஒருவன் உடலைக் கிடத்துமுன்
எனை எண்ணி ஒருதரம்
அழைப்பினும், வழ்வின்
பாடறியா நீ என்னை
அனவரதம் அழைப்பதிலும்
சிறந்தது என்று நீ அறிந்து கொள்.”
சிறந்த உறுப்பு எது.?
---------------------------
சிறந்த உறுப்பு எது.?
---------------------------
புலன்கள் பற்றி சில நாட்களுக்கு முன் எழுதி இருந்தேன். உடல்
உறுப்புகளில் முக்கியமானது எது,சிறந்தது எது என்னும் எண்ணம் மனதில் ஓடியது. காது என்றால் செவி கேளாதவர்களும் இருக்கிறார்கள் என்றும் ,கண் என்று கேட்டால் பார்வை
அற்றவர்களும் இருக்கிறார்கள் என்றும்,வாயா என்று எண்ணும்போது,ஊமைகளும்
இருக்கிறார்கள் எனும் எண்ணங்கள் அலை மோதியது. புலன்களின் முக்கியத்துவம்
குறைந்தது அல்ல. இருந்தாலும்,எல்லாவற்றிலும் சிறந்தது என்று எண்ணும்போது, ஒருவனது
தோளும் ,கைகளும்தான் என்று ஒரு பொறி தட்டியது. பிறரது துன்பங்களில் தோள்
கொடுக்கவும்,ஆதரவு இல்லாதவரை அணைத்துக் கை கொடுக்கவும் தோளும் கைகளும் சிறந்தவை
முக்கியமானவை என்று தோன்றுகிறது.
------------------------------------------------------------
.
நாரதர் கதை மட்டும் அறிந்திருக்கிறேன். மற்றவை இதுவரை கேட்டிராதவை. சிந்திக்கவைக்கும் அருமையான கதைப்பகிர்வுகளுக்கு நன்றி ஐயா.மனம் தெளிந்து சென்றானா அப்பாலகன்? எனக்குள்ளும் வினாதான்.
பதிலளிநீக்குஉடலில் சிறந்த உறுப்பை மிகச் சரியாக அடையாளங்காட்டியுள்ளீர்கள். நமக்கல்லாது மற்றவர்க்குப் பயன்படும் உறுப்புகள் அல்லவா அவை! நன்றி ஐயா.
நல்ல கதைகள் ... முக்கியமாக எது பக்தி...
பதிலளிநீக்கு/// சிறந்த உறுப்பு எது.?/// - எப்போதோ ஒரு பதிவு எழுதியதாக ஞாபகம்...
நன்றி ஐயா...
இருந்தாலும்,எல்லாவற்றிலும் சிறந்தது என்று எண்ணும்போது, ஒருவனது தோளும் ,கைகளும்தான் என்று ஒரு பொறி தட்டியது. பிறரது துன்பங்களில் தோள் கொடுக்கவும்,ஆதரவு இல்லாதவரை அணைத்துக் கை கொடுக்கவும் தோளும் கைகளும் சிறந்தவை முக்கியமானவை என்று தோன்றுகிறது.//
பதிலளிநீக்குநன்றாக சொன்னீர்கள்.
கதைகளில். ராமகிஷ்ணர் சீடனுக்கு சொன்ன கதை மட்டும் தெரியவில்லை மற்ற கதை தெரிந்த கதை.
நீங்கள் அதை சொல்லிய விதம் அருமை.
இருந்தாலும்,எல்லாவற்றிலும் சிறந்தது என்று எண்ணும்போது, ஒருவனது தோளும் ,கைகளும்தான் என்று ஒரு பொறி தட்டியது. பிறரது துன்பங்களில் தோள் கொடுக்கவும்,ஆதரவு இல்லாதவரை அணைத்துக் கை கொடுக்கவும் தோளும் கைகளும் சிறந்தவை முக்கியமானவை என்று தோன்றுகிறது.//
பதிலளிநீக்குநன்றாக சொன்னீர்கள்.
கதைகளில். ராமகிஷ்ணர் சீடனுக்கு சொன்ன கதை மட்டும் தெரியவில்லை மற்ற கதை தெரிந்த கதை.
நீங்கள் அதை சொல்லிய விதம் அருமை.
எல்லா கதைகளுமே கேள்வி பட்டிருக்கேன் மறு படி படிக்க சுவாரசியம்தான்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு# கீதமஞ்சரி,
@ டாக்டர் கந்தசாமி,
@ திண்டுக்கல் தனபாலன்,
@ கோமதி அரசு,
@ லக்ஷ்மி
வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றி. ஏற்கனவே நான் குறிப்பிட்ட படி இவையெல்லாம் நான் கேட்டதும் படித்ததும் பகிர்ந்து கொள்ளவே எழுதியது. நண்பர் திண்டுக்கல் தனபாலன் முன்பே எழுதியதாகத் தெரிகிறது. அவருடைய பின்னூட்டம் பார்த்தபிறகு, அவருடைய வலையில் அவர் எழுதி இருந்த பதிவைப் படித்தேன். ஆனால் நிச்சயமாக நான் அதைப் படித்துப் பகிர்ந்து கொள்ள வில்லை. எனக்கு ஆங்கிலத்தில் வந்த மின் அஞ்சல் செய்தியே நான் தமிழாக்கம் செய்தது. மீண்டும் நன்றி.
இந்த கதைகளை எல்லாம் முன்பே கேள்விபட்டிருக்கேன்....இதெல்லாம் எத்தனை முறை படித்தாலும் சுவரசியமகாவே இருக்கும்...பகிர்வுக்கு மிக்க நன்றி...
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
பழைய கதை, புதிய நடை. நன்றாகவே இருக்கிறது.
பதிலளிநீக்கு