புதன், 31 அக்டோபர், 2012

முன்னேற விடுவார்களா..?


                                  முன்னேற விடுவார்களா
                                   -----------------------------------


சில நாட்களுக்கு முன் சதிகார உலகம் என்னும் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதில் சில சக்திகள் தங்களது பலத்தை நிலை நாட்ட கண்ணுக்குத் தெரியாமல் இருந்து செயல் படுவதாகவும், பொதுவாக அவர்கள் இல்லுமினாட்டீஸ் என்று அழைக்கப் படுவதாகவும் கூகிளில் மேய்ந்த தகவல்கள் அடிப்படையில் எழுதி இருந்தேன். .இப்போது இதைப் படியுங்கள்.
ஆதிமனிதன் சக்கரம் கண்டு பிடித்தபிறகு  போக்கு வரத்து எண்ண முடியாத வேகத்திலும் விதத்திலும் வளர்ச்சி அடைந்திருக்கிறது. பெங்களூரில் சிவாஜி நகர் பஸ் ஸ்டேஷன் அருகே ஒரு பெரிய திறந்தவெளி இருந்தது. அங்கே எந்த தடங்கலும் இல்லாமல் சைக்கிள் ஒட்டக் கற்றுக் கொண்டேன் நான். அந்த திறந்த வெளியில் சுவாமி சின்மயாநந்தா பகவத் கீதையின்  18 அத்தியாயங்களையும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்த திறந்த வெளியில் வித்தை காட்டுபவர்கள் ஒரு மனிதனைப் படுக்க வைத்து எந்த சப்போர்ட்டும் இல்லாமல் 8 அடி உயரத்தில் மிதக்க வைப்பதை கண்டிருக்கிறேன்.இதெல்லாம் 1955-56 களில் சாத்தியமாயிருந்தது. ஆனால் இப்போது அங்கு ஒருவர் மீது ஒருவர் இடிக்காமல் நடப்பதே அரிது.பேரூந்து நிலையம் வந்து நூற்றுக்கணக்கான பஸ்களும் கார்களும் ஸ்கூட்டர் , மோட்டார் சைக்கிள்களும்  சேர்ந்து அந்த இடமே புகையும் தூசியும் நிறைந்து ...அப்பப்பா.. நடப்பதே வெகு சிரமம். இன்னுமொரு செய்தி. இப்போது பெங்களூரில் நூற்றுக்கு முப்பது நாற்பது பேர் ஆஸ்த்மாவினாலும்  அலர்ஜியாலும் அவதிப் படுகிறார்கள். போக்குவரத்து சாதனங்கள் அதிகமாகி விட்டதால் இந்த வாகனங்கள் வெளியேற்றும் கரியமில வாயு சுற்றுப் புறத்தை வெகுவாக மாசுபடுத்தி வருகிறது. அன்றிருந்த இரண்டு அணா பஸ் கட்டணம் இப்போது பதினைந்து ரூபாய்க்கும் மேலாகி விட்டது. பெட்ரோல் டீசல் விலை கட்டுக்கடங்காமல் ஏறுகிறது. இதனால்
 எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகள் பலம் பெறுகின்றன. எண்ணை வளமில்லாத நாடுகள் அந்த வளமிருக்கும் நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகின்றன.
இதற்கு தீர்வுதான் என்ன. ? எண்ணை குடிக்கும் வாகன உற்பத்தி குறைந்து , அது சார்ந்த உபயோகங்கள் குறைய வேண்டும். சக்கரம் கண்டு பிடித்து இவ்வளவு தூரம் முன்னேறிய மனிதன் இதற்கு ஒரு தீர்வு இல்லாமல் இருப்பானா என்ன. ?இனியும்  படியுங்கள்.
1996-ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஜெனரல் மோட்டாஸ் கம்பனி மின்சார ஊர்திகளை உற்பத்தி செய்து புழக்கத்துக்கொண்டு வந்தது. ஒன்பது செகண்டுகளில் சப்தமில்லாமல் 0 விலிருந்து 100 கிலோ மீட்டர் வேகம் எடுக்கக் கூடியவை. சுற்றுப் புறத்தை மாசு ஏற்படுத்தாத இவற்றில் டெயில் பைப்பே இருக்கவில்லை.! இந்த கார்களை விலைக்கு வாங்க முடியாது. அவை லீசுக்கு மட்டுமே விடப் பட்டது. 10- வருடங்களில் லீசுக்கு விட்டிருந்த எல்லா கார்களும் திரும்பப் பெற்று நாசமாக்கப் பட்டன. 1997-ல் டோக்கியோவில் நிஸ்ஸான் கம்பனி சிறிய மின்சாரக் கார்களை உற்பத்தி செய்து லீசுக்கு விட்டது. அந்த வகை கார்களுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருந்தும் நிஸ்ஸான் கம்பனி அவற்றை திரும்பப் பெற்று 2006-ல் நாசமாக்கிற்று
1997-ல் டோயோட்டொ கம்பனி வெளியிட்ட மின்சாரக் கார்களை லீஸ் முடிந்ததும் திரும்பப் பெற்று 2005-.ல் நாசப் படுத்தியது.
சில அமெரிக்கக் குடிமக்கள் DON’T CRUSH  என்னும் இயக்கத்தை ஆரம்பித்து லீசுக்கு எடுத்த வாகனங்களுக்கு உரிமை பெற்றனர், இதனிடையில்  CHEVRON- TEXACO உரிமையாளர்கள்வாகனங்களில் உபயோகப் படுத்திய BATTERY பேட்டெண்ட்-ஐ வாங்கி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு மூடு விழா நடத்தினர்.
எண்ணைக் கம்பனிகளால் ஆதாயம் பெறுபவர்கள் மின்சாரக் கார் உற்பத்தியை சிதைக்கின்றனர். எண்ணை வளத்திற்காக போர்கள் நடக்கின்றன. சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் எண்ணைக்காக ஆயிரக் கணக்கில் மக்கள் கொல்லப் படுகின்றனர்.
மின்சாரக் கார்கள் மட்டுமல்ல. ஹைட்ரஜன் மற்றும் நீராவியால் இயங்கும் வாகனக்களும் வெள்ளோட்ட மிடப் படுகின்றன. முந்தைய கலிபோர்னியா கவர்னர் ARNOLD SHWARZENEGGER
ஹைட்ரஜனால் இயங்கும்  ஹம்மர் எனும் காரை உபயோகப் படுத்துவதாகக் கூறப் படுகிறது. சென்ற ஆண்டு GENEPAX எனும் கார் நீராவியால் இயக்கப் படுவதாக அறிமுகப் படுத்தப் பட்டது.
எண்ணையின் தேவை DEMAND  குறையாமல் இருப்பதிலும் மற்ற மாற்று வாகனங்கள் வராமலிருப்பதிலும் அக்கறை கொண்டிருப்பதாகச் சொல்லப் படுபவர்கள் புஷ் ராக்பெல்லர் ரோத்ஸ்சைல்ட். மற்றும் பிரிட்டீஷ் அரச குடும்பத்தினரும் என்று கூறப் படுகிறது.
இல்லுமினாட்டிகள் என்று அடையாளப்படுத்தப் படுபவர்கள் யார் யாரோ. ?(எனக்கு வந்த மின் அஞ்சலின் அடிப்படையில் எழுதப் பட்டது.)

-----------------------------------------------------------------------------.

  

6 கருத்துகள்:

  1. அறியாத அறிய வேண்டிய தகவல்
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  2. வருந்துகின்றேன் அய்யா நன்றி

    பதிலளிநீக்கு
  3. முன்னேற விடுவார்களா..?"

    ஆண்டவனுக்கே வெளிச்சம் !

    பதிலளிநீக்கு
  4. அறியாத தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு