புதன், 24 அக்டோபர், 2012

க்ண் அறுவைச் சிகிச்சை.


                                     கண் அறுவைச் சிகிச்சை
                                   ------------------------------------
 புலன்கள் என்னும் என் பதிவுக்குப்பின் கண்ணில் பிறை வளர்ந்ததால் அதை எடுக்க என்னை சிகிச்சைக்கு உட்படுத்திக் கொண்டேன். இடது கண் செப்டம்பர் 7-ம் நாளும் வலது கண் அக்டோபர் 220ம் நாளும் அறுவை சிகிச்சை நடந்தது. பெங்களூரில் நாராயணா நேத்ராலையாவில் சிகிச்சை நடந்து இப்போது நலம். இந்தப் பதிவு எழுதுவதன் நோக்கமே  என்னைப் போல் சிலர் இந்த பிறை நீக்கம் குறித்து தவறான கணிப்பில் இருக்கலாம். நான் முதலில் பிறை ( புரை?) நீக்குதல் என்றாலேதோ கண்ணில் வளர்ந்த மெல்லிய சவ்வு போன்றதை நீக்குவது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தற்போதைய மாடர்ன் சிகிச்சையில் கண்ணில் இருக்கும் லென்ஸ் மாற்றம் செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். அறுவை சிகிச்சையின் போது லோகல் அனஸ் தீஷியா மூலம் நம் கண்ணில் ஏதேதோ செய்கிறார்கள் என்று தெரிகிறது. கண்ணை திறக்க வைத்துக் கண்ணில் சில்லென்ற திரவம் பீய்சுகிறார்கள். பிரகாசமான ஒளி தெரிகிறது பத்து பனிரெண்டு நிமிடங்களுக்குள்  அனுப்பி விடுகிறார்கள். சிகிச்சை பெற்ற கண் இரண்டு மூன்று மணி நேரம் மங்களாகத் தெரிகிறது. புரை இருந்ததனால் இருந்த அசௌகரியம் போச்... போயே போச்.. கிட்டப் பார்வைக்கென கண்ணாடி அணிந்திருந்த நான் இப்போது கண்ணாடி இல்லாமலேயே நன்கு பார்க்க முடிகிறது. என்ன ஒரு பிரச்சனை என்றால் சிறிய எழுத்து , செய்தித்தாள்வாசிக்கக் கண்ணாடி வேண்டும். அதற்கு ஆறு வாரம் காத்திருக்க வேண்டுமாம்.

என்னதான் நான் விளக்க மாக எழுத முற்பட்டாலும் முழுமை அடைவதில்லை. அதனால் எனக்கு நடந்த அறுவை சிகிச்சை  எந்த மாதிரியானது என்று விளக்க ஒரு காணொளி இணைக்க விரும்பினேன். அதை இத்துடன் இணைக்கத் தெரியாததால் தனியாக ஒரு பதிவாகவே இடுகிறேன். என் உடல் நலம் வேண்டி பிரார்த்தித்த அனைவருக்கும் என் நன்றி.    . 

11 கருத்துகள்:

  1. அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி ஐயா...

    தயவு செய்து கண்களுக்கு சிரமம் கொடுக்க வேண்டாம்...

    நன்றி...

    என் dashboard-ல் உங்கள் கண்ணொளி இருந்தது... அதை பதிவில் இணைக்க :

    iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/Sng6uZEt_TQ?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe

    இதில் முதலில் உள்ள iframeக்கு முன் less than symbol-ம் முடிவில் உள்ள iframeக்கு பின் greater than symbol-ம் போட்டுக் கொள்ளவும்... (இடைவெளி இல்லாமல்)

    (இந்த symbols கருத்துரையில் இட முடியாது... அதனால் இப்படி எழுதினேன்)

    இதை முடிந்தால் செய்யவும்... பேரப் பிள்ளைகள் செய்தால் மிகவும் சந்தோசப்படுவேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. திரு GMB அவர்களுக்கு வணக்கம்! டாக்டர்கள் ஆலோசனைப்படி நடந்து கொள்ளவும். நானும் இன்னும் சில தினங்களில் எனது கண் பார்வை சம்பந்தமாக கண் மருத்துவமனை செல்ல வேண்டும். தங்கள் பதிவிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. மருத்துவர் என்ன குறிப்புகள் கொடுத்திருக்கிறாரோ, அவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்கவும். ஒரு வாரத்திற்கு இந்த கணினி (தொலைக்காட்சி, படித்தல், எழுதுதல் கூட) சமாச்சாரங்களை விட்டு விலகியே இருங்கள். நலன் பெற்ற பிறகு இரண்டு மடங்கு ஈடுபாடு கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  4. நல்லவிதமாக அறுவை சிகிச்சை முடிந்தது
    குறித்து மிக்க மகிழ்ச்சி.பூரண குணம் ஆனதும் பதிடவும்
    உடல் நலனுக்கு முதலிடம் தரவும்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  5. கண் புரை அறுவை சிகிசிசை நன் முறையில் நடைபெற்றமை மட்டில்லா மகிழ்வினைத் தருகின்றது. மருத்தவர்கள் வழங்கிய சொட்டு மருந்தினை தினமும் தவறாமல், கண்ணில் விட்டு வரவும். தற்சமயம் கண்களுக்கு அதிக வேலை வழங்காமல் இருப்பதே நல்லது என்று எண்ணுகின்றேன். ஓய்வில் இருங்கள். ஒரு மாதத்திற்குப் பிறகு கணினியில் அமர்ந்து அசராமல் எழுதலாம். வாழ்த்துக்கள் அய்யா.வணக்கம்.

    பதிலளிநீக்கு
  6. ஐயாவின் கண் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்ததை அறிந்து மகிழ்ச்சி! என் போன்றவர்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிரம்ப இருக்கின்றன ஐயா! குறிப்பாக உங்களது மன உறுதி! தலை வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. நலம் பெற்றதற்கு இறைவனுக்கு நன்றி ..

    கண்களை கண்போல் பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா....

    பதிலளிநீக்கு
  8. இறைவனுக்கு கோடி நன்றிகள் சார் தங்களுக்கு கண் அறுவை சிகிச்சை நலமுடன் நடந்தமைக்கு...

    ஹை ஜாலி இனிமே கண்ணாடியே வேண்டாம்....

    உடல்நலத்தில் அக்கறைக்கொள்ளுங்கள் சார்....

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் இத்தனை சிரமத்திலும் எல்லோரும் பயன்பெறும்படி பகிர்ந்தமைக்கு.

    பதிலளிநீக்கு

  9. @ திண்டுக்கல் தனபாலன்- உங்கள் குறிப்புப்படியும் முயன்றேன். வருவதில்லை. அக்கறைக்கும் ஆலோசனைக்கும் நன்றி.

    @ தி. தமிழ் இளங்கோ. வசதிகள் உள்ள நல்ல மருத்துவ மனையை நாடுங்கள். எல்லாம் இனிதே நடக்கும் நன்றி.
    @ ஜீவி, ரமணி, கரந்தை ஜெயக்குமார் உங்கள் பரிவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    @ சேட்டைக்காரன் என் மீது நீங்கள் கொண்டுள்ள மதிப்புக்கு நன்றி.
    @ இராஜராஜேஸ்வரி,
    @ ரஜினி ப்ரதாப் சிங்,
    @ மஞ்சு பாஷிணி. வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. ரொம்ப சீக்கிரமே பதிவுக்கு வந்துட்டீங்க? சிகிச்சை முடிஞ்சு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கக் கூடாதோ?

    பதிலளிநீக்கு
  11. கண் ஆப்பரேசன் நலமாக முடிந்தது மகிழ்ச்சி.

    சற்று ஓய்வின் பின்பு வாருங்கள்.

    பதிலளிநீக்கு