மறக்க முடியுமா.?
---------------------------
கடந்த ஜூலை மாதம் பழையன கழிவதாலும் புதியன புகுவதாலும் ஏற்படும் சில நிலைகளைக் கூறி ஆதங்கப் பட்டு ஒரு பதிவு எழுதி இருந்தேன். பழைய புகைப்படங்களை பாது காப்பதிலும் டேப் ரெகார்டரில் பதிவு செய்து வைத்திருக்கும் குரல்களை மீண்டும் கேட்பதிலும் இருக்கும் சங்கடங்கள் குறித்த பதிவு அது. எனக்கு என் வீட்டுக்கு வரும் உறவினர் நண்பர்கள் இவர்களது குரல்களைப் பதிவு செய்யும் வழக்கம் இருந்தது. அப்படி 1970-களிலிருந்து பதிவு செய்து வைத்திருக்கும் குரல்கள் ஏராளம் எனக்கு மிகவும் பிடித்த சில பதிவுகளை மீட்டெடுக்க முயற்சி செய்கிறேன். அதன் படி சுமார் பதினேழு ஆண்டுகளுக்கு முன் பதிவான குரலை நீக்கள் கேட்கப்போகிறீர்கள்.முயற்சியைத் தொடருவது குறித்து உங்கள் கருத்துக்களை வேண்டி விழைகிறேன்
தொழில் நுட்ப தேர்ச்சி குறைவாய் இருக்கும். உங்கள் கருத்துக்களைப் பகிரலாமே.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
நல்ல முயற்சி யாருக்கும் வரதா புதிய சிந்தனைஉதயத்தை வரவேற்கிறேன்...பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆடியோ தெளிவாகக் கேட்கவில்லை. இங்கே மின்சாரம், இணையம் இரண்டுமே பிரச்னை. அதனாலோ என்னமோ! :(
பதிலளிநீக்குமுதல் வீடியோ இரைச்சலாக இருந்தாலும் குழந்தைகள் பேசுவது புரிகிறது.
பதிலளிநீக்குஇரண்டாவது உங்கள் அறிவுரைகள் தெளிவாகவே இருக்கின்றன.
அருமை ஐயா
பதிலளிநீக்குஇத்தனை ஆண்டுகள் கடந்தும் பாதுகாப்பாய் வைத்திருக்கிறீர்களே
பதிலளிநீக்கு@ ரூபன்
என்னுடைய அந்தப் பதிவில் என் குரல் கேட்க விருப்பம் என்று பின்னூட்டம் எழுதியதாக நினைவு. இரண்டாவது என் குரல். ஒரு தந்தையின் குரல். வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
அது என்னவோ உங்களுக்கு காணொளிகளும் ஆடியோவும் கேட்காதது என் துரதிர்ஷ்டமே. வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
முதல் ஆடியோவை மீண்டும் கேட்டுப் பாருங்கள். குழந்தைகள் பேசவில்லை. என் மகன் (அப்போது ஐந்து வயது) ஒரு கதை சொல்வது புரியும். என்ன கதை நீங்களே கேட்டுத்தெரிந்து கொள்ள முடியும். வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக் குமார்
ஏறத்தாழ 35 ஆண்டுகாலப் பதிவுகள் இருக்கின்றன. மீட்டெடுக்கும் முயற்சியில் இப்போது. வருகைக்கு நன்றி ஐயா.
குழல் இனிது யாழ் இனிது என்பர் தம்மக்கள்
பதிலளிநீக்குமழலைச்சொல் கேளாதவர்
பதிவுகளை
மிகவும் ரசித்தேன் ஐயா...
சார், முதல் வீடியோ உங்கள் மகன்? ஏனென்றால் நீங்கள் அதன் கீழ்வ் உங்கள் மகன்களைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் அப்படி ஒரு யூகம். கதை என்றும் தெரிகின்றது.
பதிலளிநீக்குஇரண்டாவது உங்களது குரல்! பரவாயில்லையே சார்! ரொம்பவே கணீர் என்று இருக்கின்றது! கம்பீரமான ஆணின் குரல்!
எப்படி இப்படிப் பாதுகாத்து வைத்திருந்திருக்கின்றீர்களே! பாராட்டவேண்டிய விஷயம் சார்!
வீரவசனம் பேசியதை கேட்க முடிகிறது. போர்கள காட்சி கண்முன்னே விரிகிறது.
பதிலளிநீக்குஉங்கள் அறிவுரைபடி குழந்தைகள் வளர்ந்து இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.
நாங்களும் நிறைய குழந்தைகளின் குரல்களை , உறவினர்கள் பேச்சை, மாமனாரின் பாடல்களை டேப் செய்து வைத்து இருக்கிறோம்.
பழைய நினைவுகளை மறக்க முடியாது.
பதிலளிநீக்குஅதை மீண்டும் கேட்கும் போது மகிழ்ச்சி சொல்லி முடியாது. முன்பு மகன் மகள், இப்போது பேரன் பேத்திகள், முதன் முதலில் ஆக்கு உங் உங்கு சொன்னது எல்லாம் டேப் செய்து வைத்து இருக்கிறேன்.
பதிலளிநீக்கு@ இராஜராஜேஸ்வரி
பதிவுகளை ரசித்ததற்கு நன்றிமேடம்
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து
யாருடைய குரல் என்று அறிவது எனக்கு முக்கியமானதாகப் படவில்லை. என்ன பேசினார்கள் என்பது புரிவதே என் பதிவின் நோக்கம். வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ கோமதி அரசு
நீங்களாவது பேசியது என்ன என்று புரிந்து கோடி காட்டி இருக்கிறீர்கள் நன்றி. முதல் குரல் என் பேரனுடையது. அப்போது ஐந்து வயது. நிச்சயமாக என் மக்கள் எனக்கு மகிழ்ச்சி தருகிறார்கள் நன்றி மேடம்
ஐயா, நீங்கள் தொடர்ந்து என்னை ஆச்சரியப்படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கோமதி அரசு.
நான் என் குழந்தைகள்மட்டுமல்ல. நண்பர்கள் உறவினர்கள் போன்றோரின் குரல் பதிவுகளும் என்னிடம் உண்டு. என்ன ஆதங்கம் என்றால் அப்போது டேப்பில் பதிவானவைஇப்போது ரெகார்டர் பழுதாகிவிட்டால் உபயோகமில்லாமல் போய் விடுகிறது. இதையே ஒரு பதிவில் பழையன கழிதலும் ... என்று எழுதி இருந்தேன். அந்தக்காலக் குரல்களைப் பேசியவர்கள் அதை மீண்டும் கேட்கும் போது மகிழ்ச்சி அடைவது நமக்கும் மகிழ்ச்சி தருகிறது. நன்றி மேடம்.
@ உமேஷ் ஸ்ரீநிவாசன்
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீ. இப்போது உடல் நலம் எப்படி இருக்கிறது. சிறிய உடற்பயிற்சிகள் உபாதையைக் குறைக்கும் நீண்ட இடைவெளிக்குப் பின் வருகை மகிழ்ச்சி.
புறநானூற்றுப் பாடலை அடிப்படையாய் வைத்து கலைஞர் எழுதிய வசனக்கவிதை அது. மழலைக்குரலில் அபாரம். ஒலியமைப்பால் சரிவர புரியாதவர்களுக்காக இணையத்திலிருந்து எடுத்த வரிகள் கீழே...
பதிலளிநீக்குகுடிசைதான்! ஒரு புறத்தில்
கூரிய வேல்வாள்
வரிசையாய் அமைத்திருக்கும் - வையத்தைப்
பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும்
வடித்துவைத்த படைக்கலம்போல் மின்னும்;
மிளிரும்
புலியின் குகையினிலே அழகில்லை -
புதுமையல்ல!
கிலியும் மெய் சிலிர்ப்பும்
கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டா
மானத்தின் உறைவிடம் -
மறவன் மாளிகை!
இல்லத்து வாயிலிலே
கிண்ணத்துச் சோற்றோடு
வெல்லத்தைச் சிறிது கலந்து
வயிற்றுக்குள் வழியனுப்பப்
பொக்கை வாய்தனைத் திறந்து
பிடியன்னம் எடுத்துப் போட்டாள்
பெருநரைக் கிழவி யொருத்தி.
ஓடி வந்தான் ஒரு வீரன்
“ஒரு சேதி பாட்டி!” என்றான்.
ஆடிவந்த சிறுமிபோல்
பெருமூச்சு வாங்குகின்றாய்
ஆண் மகனா நீ தம்பி!
மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும். பின்,
பேச்சுக்குத் தொடக்கம் செய் என்றாள், அந்தக்
கிண்டலுக்குப் பேர்போன
கிழட்டுத் தமிழச்சி!
வேடிக்கை நேரம் இதுவல்ல பாட்டி - உன்
வாடிக்கைக் கேலியை விட்டுவிடு.
'மடிந்தான் உன் மகன் களத்தில்’
என்றான் - மனம்
ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஒருமுறை!
“தாயம் ஆடுகையில் காய்களை
வெட்டுவதுண்டு-களமும் அதுதான்.
காயம் மார்பிலா? முதுகிலா?
கழறுவாய்” என்றாள் - முதுகிலென்றான்.
கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள்;
வாளை எடுத்தனள்.
முழவு ஒலித்த திக்கை நோக்கி
முடுக்கினாள் வேகம்!
“கோழைக்குப் பால் கொடுத்தேன்
குப்புற வீழ்ந்து கிடக்கும்
மோழைக்குப் பெயர்
போர் வீரனாம்! முன்பொருநாள்
பாய்ந்துவந்த ஈட்டிக்குப்
பதில் சொல்ல மார்பைக் காட்டிச்
சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர்.
அவருக்குப் பிறந்தானா?
அடடா மானமெங்கே - குட்டிச்
சுவருக்கும் கீழாக வீழ்ந்து பட்டான்.
இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும் - இங்கு
வீணை நரம்பினிலே இசை துடிக்கும்.
அதுவும் மானம் மானமென்றே ஒலிக்கும்!
மதுவும் சுறாவும் உண்டு வாழும்
மானமற்ற வம்சமா நீ - ஏடா
மறத் தமிழ்க் குடியிலே மாசு தூவி விட்டாய்
மார்பு கொடுத்தேன்
மகனாய் வளர்த்தேன் -
தின்று கொழுத்துத்
திமிர் பாய்ந்த தோள்களெங்கே?
தினவெடுக்கவில்லையா? அந்தோ!
வேலுக்கு வழி சொல்ல வகையற்ற
கோழையே - என் வீரப்
பாலுக்கு வழி சொல்வாய்!!
என்று கதறினாள்
எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி.
சென்றங்குச் செரு முனையில்
சிதறிக் கிடந்த
செந்தமிழ்க் காளைகளைப்
புரட்டிப் பார்த்தாள் - அங்கு
நந்தமிழ் நாட்டைக் காக்க
ஓடிற்று ரத்த வெள்ளம்!
பிணக்குவியலிலே பெருமூச்சு
வாங்க நடந்தாள்!
மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை - மகன்
பிறந்த போதும் மகிழ்ச்சிக்கு
எல்லையுண்டு - அவன்
இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி!
இதைக் கண்டாள் - இதயங் குளிர்ந்தாள்!
“எதைக் கண்டாலும் இனிக் கவலை இல்லை
என் மகன் வீரனாய் இறந்தான்” என்றாள்.
அறுத்தெறிய இருந்தேன்
அவன் குடித்த மார்பை - அடடா!
கருத்தெரியப் பொய் சொன்ன கயவனெங்கே?
வாளிங்கே! அவன் நாக்கெங்கே?”
என் பேரனின் மழலைக்குரல் புரியாதவர்களுக்காக் வீரத்தாய் முழுதும்வெள்யிட்டிருக்கிறேன் கீதா மதிவாணனுக்கு நன்றிகள்
நீக்குமகன்களின் எதிர்காலம் குறித்த தந்தையின் கவலையும் கனிவும் கரிசனமும் மிக இயல்பாய் வெளிப்படுகின்றன. உங்கள் குரலைக் கேட்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி ஐயா.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீதமஞ்சரி
இன்றுதான் ஊர் திரும்பினேன். தீபாவளிக்குச் சென்னைக்கும் அங்கிருந்து மதுரைக்கு வலைப் பதிவர் மாநாட்டுக்கும் சென்றிருந்தேன். என் பேரன் ஐந்து வயதாய் இருக்கும்போது அவனுக்குச் சொல்லிக் கொடுதத வசன கவிதை, மிகச் சரியாக அடையாளம் கண்டுகொண்டு அதைப் பின்னூட்டத்தில் எழுதியதற்கு மிக்க நன்றி.அதைப் பதிவிட்டிருந்தால் குரல் கேட்கும் ஆர்வம் குறைந்து விடுமோ என்று எண்ணியே தரவில்லை. மனம் நிறைந்த பாராட்டுக்கு நன்றி.
நெகிழ வைக்கும் உரை. இப்போது கேட்டால் உங்கள் குழந்தைகள் என்ன சொல்வார்கள் என்று தெரிந்து கொள்ள ஒரு curiosity..
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ அப்பாதுரை
வருகைக்கு நன்றி அப்பாதுரை சார். இந்த உரையை என் பிள்ளைகளுக்கும் அனுப்பி இருந்தேன். அதை அவர்களது குழந்தைகளுக்கும் போட்டுக் காட்டி இருக்கிறார்கள். என் மக்களுக்காக பதிவு செய்த உரை என்றாலும் அது எல்லாப் பெற்றோருடைய விருப்பமாகவும் இருக்கும் என்பதால்தான் பதிவிட்டேன். என் மக்களும் என்னை ஏமாற்றவில்லை. அவர்களும் அவர்கள் பிள்ளைகளிடம் இதையே சொல்ல விரும்புகிறாரகள் என்பது தெரிகிறது.
மீண்டும், உங்கள் பேரனின் வசனத்தையும், உங்கள் பேச்சையும் கேட்டேன்.
பதிலளிநீக்கு