Monday, February 23, 2015

உபாதைகள் பலவிதம்--ஒவ்வொன்றும் ஒருவிதம்---2


                 உபாதைகள் பலவிதம் --ஒவ்வொன்றும் ஒருவிதம்...2
                -----------------------------------------------------------------------------------


திருச்சியில் பணியில் இருக்கும்போது எனக்கு அவ்வப்போது நெஞ்சு பாரமாக இருப்பது போல் தோன்றும் எதுவுமே வாய்க்கு ருசிக்காது. மிகவும் சோர்வடைந்து விடுவேன். மருத்துவமனைக்கு நான் அடிக்கடி செல்ல வேண்டி வந்தது. டாக்டர்கள் இது ஏதாவது டென்ஷனால் இருக்கலாம். மற்றபடி ஏதுமில்லை என்று அனுப்பிவிடுவார்கள். சில மருத்துவர்கள் நான் அவரிடம் போகுமுன்பே “உங்கள் நலத்துக்கு ஒன்றுமில்லை. எல்லாமே உங்கள் மனம் சம்பந்தப்பட்டதுஎன்று அனுப்பி விடுவார்கள். ஏதோ டாக்டரிடம் போக வேண்டியே நான் குறை சொல்வதாக நினைப்பார்கள் இப்படியும் டாக்டர்கள்...! பலமுறை போய் வந்த என்னை பிரதம மருத்துவரிடம் அனுப்பினார்கள். அவர் எனக்கு அமீபாசிஸ் இருக்கலாம் என்று கூறி அதற்கான சிகிச்சையாக எமெடின் எனும் இஞ்செக்‌ஷன் போட்டார் இரண்டு மூன்று நாட்களுக்குக் காலை அசைக்க முடியாமல் போனதுதான் மிச்சம்.ஒரு முறை விடுப்பில் பெங்களூரு வந்தேன். என் மாமாவைப் ( அவர் அந்தக் கால மருத்துவர் LMP) எனக்குக் குடலில் க்ஷயம் வந்திருக்கலாம் என்றும் அதற்கான மருந்துகளை நான் எடுப்பதில் தவறு ஏதும் இல்லை என்றும் கூறினார். மீண்டும் திருச்சியில் நான் எங்கள் மருத்துவமனை பிரதம டாக்டரை அணுகி என் மாமா சொன்ன கருத்தைத் தெரிவித்தேன். அவர்கள் எனக்கு சோதனை dose ஆக montaux எனும் இஞ்ஜ்செக்‌ஷன் போட்டார்கள். அதில் பாசிடிவ் ரிசல்ட் வந்தது. அதாவது எனக்கு அந்த நோய் வருவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சொல்லும் அறிகுறியாம் அது. அதன் பேரில் எனக்கு steptomisin இஞ்செக்‌ஷன் இரண்டு நாளுக்கு ஒரு முறையும் NITROZID  எனும் மாத்திரையும் கொடுத்தார்கள். என் மாமாவுக்குத் தகவல் சொன்னேன். அவர் அந்த இஞ்செக்‌ஷனின் வீரியம் 24 மணி நேரம் மட்டுமே என்றும், அதனைத் தினமும் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். திருச்சி பிரதம மருத்துவர் அதெல்லாம் old school of thought  என்றுகூறிவிட்டார். எனக்கு எந்த முன்னேற்றமும் தெரியவில்லைஇந்த உபாதைகளினால் எனக்குத் தொழில் முறையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே இடுப்பு வலியுடனும் சோர்வுடன் கலந்த நெஞ்சு பாரத்துடனும் காலம் கழிந்தது. ஒரு நாள் காலையில்.பல் துலக்கும் போது குமட்டிக் கொண்டு வந்து வாந்தி எடுத்தேன். அதில் இரத்தமிருந்தது. நான் அதைப் பெரிது படுத்தாமல் வேலைக்குப் போனேன். அங்கு டிஸ்பென்சரியில் விவரம் சொன்னேன். அவர்கள் காலம் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் செல்லச் சொன்னார்கள். அங்கே எனக்கு barium meal என்று ஒரு கரைசலைக் குடிக்கக்  கொடுத்து உடலின் பாகங்களை அவ்வப்போது x-ray எடுத்தார்கள். அதிலிருந்து எனக்குக் குடலில் புண் இருப்பதாகக் கூறி அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். பொதுவாகவே எந்த இரு மருத்துவரும் ஒத்துப் போவதில்லை என்று கணிப்பு எனக்கு. பெங்களூரு வந்து மீண்டும் என் மாமாவிடம் விவரம் சொன்னேன். அவர் என்னிடம் ஒரு endoscopy எடுத்துப் பார்க்கச் சொன்னார்.திருச்சி குடியிருப்பு மருத்தவ மனையில் அப்போது அந்த வசதி இருக்கவில்லை என்று நினைக்கிறேன் பெங்களூரு வந்து  அப்படி எடுத்துப் பார்த்ததில் குடலில் புண்ணிருப்பது உறுதியாயிற்று..ஆனால் அறுவைச் சிகிச்சை வேண்டாம் என்றும் மருந்து மாத்திரையில் சரி செய்யலாம் என்றும் சொன்னார்கள்.நாட்பட்ட வைத்தியம். உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கச்சொன்னார்கள். நான் பொதுவாகவே மிதமாகவே உண்பவன் . முழு வயிறும் நிரம்பும் வரை உண்ண மாட்டேன். இன்னும் சிறிது உண்ணலாம் என்று இருக்கும்போதே உணவை முடித்து விடுவேன். 70 சதம் உணவும் 20 சதம் நீரும் மீதி 10 சதம் காலியாகவே இருக்குமாறு உண்ணப் பழகிக் கொண்டு விட்டேன்.நான்கு மாதங்களுக்கு ஒரு முறை endoscopy எடுத்துப் பார்ப்பேன். நாளாவட்டத்தில் புண் ஆறி வருவதாகக் கூறினார்கள். என் மாமாவின் மகன் ( மாமா இப்போது இல்லை) அவனும் ஒரு டாக்டர்தான் சொல்லுவான். “ அத்தான், இந்தப் புண்ணானது ஆறுவதுபோல் இருக்கும். அது சாலை ரிபேரில் தற்காலமாகக் குண்டு குழிகளை மூடுவது போல்தான். எப்போது வேண்டுமானாலும் மீண்டும் காயம் வெளியே வரலாம்என்பான் அவன் டாக்டரல்லவா.நன்றாகவே புரிய வைத்தான். போன ஆண்டு நான் மலம் கழிக்கும் போது மலமானது அட்டைக் கருப்பாய் இருந்தது. மீண்டும் புண்ணின் அறிகுறி . சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று மருத்துவ மனைக்குச் சென்றேன். அங்கே மீண்டும் endoscopy எடுத்து  இரத்தம் இன்னும் ஒழுகுவதாகக் கூறி அந்தப் புண்ணில் adrenalin என்னும் இஞ்செக்‌ஷனும் போட்டார்கள். மூன்று நாள் மருத்துவமனை icu வில் இருந்தேன். பல இரத்தப் பரிசோதனைகளுக்குப் பின் நான் உட்கொள்ளும் மருந்துகளை பற்றி கேட்டார்கள். எனக்கு இதயத்தில் stent  பொறுத்தியபின் உட்கொள்ளும் மாத்திரைகளைக் குறிப்பிட்டு சில மாத்திரைகளை நிறுத்தச் சொன்னார்கள். ( இதயத்தில் stent பொறுத்தி கதைக்கு பிறகு வருகிறேன் ) அதை என் cardiologist இடம்  சொன்ன போது அது அவருக்கு உடன் பாடாய் இருக்கவில்லை. . என் உடம்பு அல்லவா. நானே அவரிடம் கூறி சில நாட்கள் சில மாத்திரைகளை நிறுத்தலாமே என்றேன். அவர் அரை மனதோடு சில மாத்திரைகளின் டோசேஜைக் குறைத்தார். இப்போது அந்தத் தொந்தரவு இல்லை.மருத்த்வர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒருவிதம் என்று சொல்லலாமா.? ( முடியவில்லை. தொடரும் )     .  
 

27 comments:

 1. நாம் சொல்வதையும் மருத்துவர் ஏற்க மாட்டார். இன்னொரு மருத்துவர் சொன்னாலும் ஈகோ பிரச்னையாகி விடும். பாதிக்கப் படுவதென்னவோ நோயாளிகள்தான்!

  ReplyDelete
 2. நாம் சொல்வதையும் மருத்துவர் ஏற்க மாட்டார். இன்னொரு மருத்துவர் சொன்னாலும் ஈகோ பிரச்னையாகி விடும். பாதிக்கப் படுவதென்னவோ நோயாளிகள்தான்!

  ReplyDelete
 3. மருத்துவர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒருவிதம்//

  மருத்துவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் படித்து வந்து இருக்கிறார்கள்.

  ஒரு மருத்துவர் சொல்லும் மருந்தை இன்னொரு மருத்துவர் ஒத்துக் கொள்ள மாட்டார். அவர் ஹெவி டோஸ் கொடுத்து விட்டார். வீரிய மிகுந்த மருந்து தேவைபடாது என்பார்.

  சில மருத்துவர்கள் பேசியே நம்மை பயபடுத்துவார்கள். சிலர் நம்மை பயப்பட வேண்டாம் குணமாகிவிடும் நம்பிக்கை அளித்து மருந்து தருவார்கள்.

  ReplyDelete
 4. நீங்கள் கூறிய மாதிரி ஒவ்வொரு மருத்துவரின் அபிப்பிராயமும் ஒவ்வொரு மாதிரியாகத்தானிருக்கிற‌து. அதனால் நோயாளிகள் தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
  மிதமான உணவுப்பழக்கமுடைய உங்களுக்கு எப்படி குடலில் புண் வரமுடியும் என்று தெரியவில்லை. பொதுவாய் மிகப்பெரிய அறுவை சிகிச்சையைக்கூட தாங்கிக்கொள்ள‌ முடியும். ஆனால் இந்த எண்டோஸ்கோப்பி அவஸ்தையைத்தாங்குவதற்கு மன தைரியம் வேண்டும். அதைப் பலமுறை செய்து கொன்டிருக்கும் உங்களின் மன தைரியத்தை எண்ணி ஆச்சரியபப்டுகிறேன்!

  ReplyDelete
 5. "ஆனா டெமிக் செவி வழி தொடு சிகிச்சை" என்ற தலைப்பில் ஹீலர் பாஸ்கர் ebook nett-ல்

  free download கிடைக்கிறது..எல்லா ' வியாதி ' களுக்கும், மருந்தில்லா,மறுத்த்துவரில்லா treatment

  -தமிழ்,ஆங்கிலம்,மற்றும் பல மொழிகளிலும் ...BP/ diabetes etc etc எதுவுமே 'வியாதி' இல்லை-

  most of our diseases are only medicine-generated..இன்னும் இதுபோல் revolutionary கருத்த்துக்கள்...முடிந்தால்

  படித்த்து பாருங்கள்...

  மாலி

  ReplyDelete
 6. இடும்பை கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது என்று அவ்வையார் பாடிவைத்துவிட்டுப் போனார். அவர் இன்றிருந்தால் இடும்பைகூர் என் உடம்பே உன்னோடு வாழ்தல் அரிது என்று பாடியிருப்பார்.

  ReplyDelete
 7. நேர்மையான - நல்ல உணவுப் பழக்க வழக்கம் உடையோரும் - இப்படியாக மருத்துவர்களிடம் சிக்கிக் கொண்டு படாதபாடு படுவது மிகவும் கவலையளிக்கின்றது.

  ReplyDelete

 8. திரு. ஸ்ரீராம் அவர்கள் சொன்னதே எமது கருத்தும் ஐயா.

  ReplyDelete
 9. ஸ்ரீராம் சொல்வதற்கு ஒரு ரிப்பீட்டு.

  இங்கே நியூஸியில் ஒரு டீம் ஆஃப் டாக்டர்ஸ் கூடி விவாதிச்சுட்டு என்ன செய்யலாமுன்னு முடிவு எடுக்கறாங்க.

  தனியார் மருத்துவமனைகள் இல்லை. எல்லாமே அரசு மருத்துமனைகள்தான்.

  ReplyDelete
 10. // நான் பொதுவாகவே மிதமாகவே உண்பவன்... // இது ஒன்றே போதும் ஐயா...

  மருத்துவர்களுக்கு பாடங்கள் சொல்லித் தருவது நோயாளிகள் தானே...?

  ReplyDelete

 11. @ ஸ்ரீ ராம்
  நான் அனுபவப் பட்டு இருக்கிறேன். பொதுவாகவே சில மருத்துவர்கள் நோயாளிகளை ஏதோ ஒன்றும் தெரியாதவர்கள் என்றே உதாசீனப் படுத்துகிறார்கள். எனக்கு ப்ரோஸ்டேட் பிரச்சனைக்கு மருத்துவம் பார்த்தவர் விதிவிலக்கு. என்னிடம் விவாதிப்பார். நானும் என் சந்தேகங்களைக் கூறுவேன். ஆனால் அது மாதிரியானவர்கள் ஆயிரத்தில் ஒருவர். வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஸ்ரீ.

  ReplyDelete

 12. @ கோமதி அரசு
  எனக்குத் தெரிந்தே நம் பதிவர்களில் சிலர் டாக்டர்களின் உதாசீனத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் . நாமும் டாகடர்களிடம் எல்லாம் தெரிந்தது போல் இருக்கக் கூடாது. அதே சமயம் ஏதும் அறியாதவர் போலும் இருக்கக் கூடாது. அந்தக் காலத்தில் என் மாமா( பதிவில் குறிப்பிடப் பட்டு இருப்பவர்)விடம் நோயோடு வருபவர்கள் சிரித்துக் கொண்டே போவதை பார்த்திருக்கிறேன், இத்தனைக்கும் மருந்தாக அவர்தருவது இன் சொல்லும் ஏதோ நிறத்தில் ஒரு திரவமும் தான் வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 13. @ மனோசாமிநாதன்
  எனக்கு சுகர் கிடையாது. இரத்த அழுத்தம் கிடையாது. கோலோஸ்டிரல் கிடையாது. இருந்தும் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததே. எல்லா நோய்களும் சிம்ப்டம்களை வெளிக்காட்டுவதில்லை. என்னைப் பொறுத்தவரை அவை dormant symptom தான்வருகைக்கு நன்றி மேடம்.

  ReplyDelete

 14. @ V.Mawley
  படிக்க வேண்டும். நீங்கள் சொல்லும் செவிவழிதொடு சிகிச்சை ரெய்க்கி சம்பந்தப் பட்டதா. என் மனைவி சில நாட்கள் அந்த சிகிச்சை பற்றி படித்துப் பழகி இருக்கிறாள்.வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 15. @ டாக்டர் கந்தசாமி
  தவிர்க்கப் பட முடியாதவைகள் அனுபவிக்கப் பட்டுதானே ஆகவேண்டும். வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 16. @ துரை செல்வராஜு
  அற்ப அசௌகரியங்களுக்கெல்லாம் மருத்துவரை நாடுவதும் நம்மில் பலரும் செய்யும் தவறு. வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 17. @ கில்லர்ஜி
  ஸ்ரீராமுக்கு அளித்த மறுமொழியே உங்களுக்கும் ஜீ. வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 18. @ துளசி கோபால்
  டாக்டர்கள் நோயாளிகளை ஏதோ ஜடப் பொருளென்று அணுகாமல் இருந்தாலே பாதி தீர்வு கிடைத்துவிடும். வருகைக்கு நன்றி மேடம்

  ReplyDelete

 19. @ திண்டுக்கல் தனபாலன்.
  எல்லாவற்றிலும் மிதம் இருந்தால் நோய் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. நோயாளிகளும் மருத்துவர்களும் பரஸ்பரம் புரிந்து கொள்ள வேண்டும். வருகைக்கு நன்றி டிடி.

  ReplyDelete
 20. மருத்துவர்கள் பல விதம் என்பதைவிட அவர்களுடைய மனப்பாங்கு என்பதானது பற்பல விதம். பாதிப்புக்குள்ளாவது நாம்தான்.

  ReplyDelete
 21. இந்தியாவில் மருத்துவர்கள் நோயாளிகளிடம் அவர்கள் உடலின் உண்மை நிலையைச் சொல்வதில்லை. ஆனால் வெளிநாடுகளிலோ யார் நோயாளியோ அவரிடம் தான் சொல்வார்கள். விவாதிக்கவும் செய்வார்கள். இங்கே நாம் கொஞ்சம் விஷயம் தெரிஞ்சதாக் கூடக் காட்டிக்க முடியாது. ஆனால் பொதுவாக நாங்கள் ஒரு குறிப்பிட்ட மருத்துவரிடம் மட்டுமே செல்வோம் அவர் சொல்லி மற்ற சிறப்பு மருத்துவரிடம் செல்ல வேண்டி இருந்தால் செல்வோம். நாங்களாகப் போவது இல்லை. :)))) நண்பர்கள் மருத்துவர்களாக இருந்தாலும் அவர்களிடம் கூட நான் அதிகமாய் எதுவும் கேட்டுக்கொள்ளவோ, காட்டிக்கொள்ளவோ மாட்டேன். எங்கள் மருத்துவரிடம் மட்டுமே எதுவானாலும் சொல்வோம்.

  ReplyDelete

 22. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  அவர்களுடைய மனப்பாங்கே அவர்களை வித்தியாசப் படுத்திக் காட்டுகிறது. வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 23. @ கீதா சாம்பசிவம்
  இந்தியாவில் மருத்துவர்கள் நோயாளிகளிடம் எதையும் கூறுவதுமில்லை விவாதிப்பதும் இல்லை. ஏனென்றால் அவர்கள் பார்வையில் நோயாளிகள் ஏதும் தெரியாதவர்கள். ஆனால் மருத்துவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். இந்த நோயாளிகள்தான் அவர்களுக்கு வருவாய் தருபவர்கள். நம்மிலும் சிறிது தெரிந்தவுடன் நாமே பாராசிடொமால் கொடுங்கள் இஞ்செக்‌ஷன் போடுங்களென்று கேட்கிறோம்.எந்த மருத்துவரும் அதை விரும்புவதில்லை. தேவையான சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து கொள்வதிலும் ஒரு முறையும் நியதியும் வேண்டும். டாக்டரை கடவுளாகப் பாவிக்கும் மக்கள் இருக்கும்வரை அவர்களும் கடவுள்போல்தான் நடந்து கொள்வார்கள். வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேடம்.

  ReplyDelete
 24. Reiki, Pranic Healing, இவை இரண்டும் அறிவியல் அடிப்படை யானவை தான் என்றாலும், கொஞ்சம்ஆன்மீகம் கலந்தவை....ஆனால் செவி வழி தொடு சிகிச்சை முழுக்க முழுக்க Rationalistic..scientific...

  ' ந்ம் உடம்பிற்கு நைப்ப்பு தன்மை ( கொழுப்பு) வேண்டும் என்பதால் எண்னை சேர்த்து கொள்கிறோம்

  பிறகு கொழுப்பு நீக்கிய எண்னை என்பதில் என்ன பொருள் ? " என்று கேட்கிறார் ! படித்துதான்

  பாருங்களேன்...

  மாலி

  ReplyDelete
 25. ஒரு டாக்டரிடம் போய்விட்டு, இன்னொரு டாக்டரிடம் போய் இன்னாரிடம் இதற்கு முன்னர் பார்த்தேன் என்று சொல்வதற்கே யோசனையாக இருக்கிறது.

  ReplyDelete
 26. சார் மருத்துவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துப்போவது இல்லை. திரிசங்குகள் நாம் தான். இப்படிப்பட்ட பல மருத்துவர்கள் நம் முன் இருக்க நாம் நமது உபாதைகளைக் கூற அவர்கள் எல்லோரும் கலந்து பேசி சரியான ட்ரீட்மென்ட் கொடுத்தால் நன்றாக இருக்கமல்லவா. ஆனால் இவர்கள் எல்லோருமே ஒரே ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டுமே....ஒவ்வொருவரின் கருத்தும் வேறுபடுகின்றது. டயக்னாஸிஸ்லிருந்து, ட்ரீட்மென்ட் வரை.

  கீதா: என் மகன் சொல்லுவான் ஒரு ஜெனரல் ஃபிசிஷியன் நமது உபாதைகளின் குணங்கள் கொண்டு சரியாக டயாக்னோசிஸ் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். அவர் டயக்னொசிஸ் செய்த பிறகு அவர் ட்ரீட்மென்ட் கொடுக்க முடிந்தால் கொடுக்கலாம் இல்லை என்றால் அவர் டயக்னொசிஸ் படி அதற்கான சரியான ஸ்பெஷலிஸ்டிடம் பரிந்துரை செய்ய வேண்டும். நோயாளிகளை கினி பிக் ஆக்கக் கூடாது. இந்த மருந்தைச் சாப்பிடு சரியாகவில்ல என்றால் மீண்டும் வா...என்றெல்லாம் சிறு சிறு உபாதைகளுக்கு வேண்டுமென்றால் ஓகெ. ஆனால் அதையும் புறம் தள்ளாமல் சரியாகக் கண்டுபிடித்து சரியான மருந்து கொடுக்க வேண்டும் என்பான். மருத்துவ கலந்தாலோசனை அவசியம் என்பான். ஏனென்றால் பல நோய்கள் சிம்ப்டம் காமிக்காது. எனவே தரவ் செக் அப் அவசியம் என்றும் ஒரு சில முடிவுகளை வைத்துக் கணிக்கக் கூடாது என்றும் சொல்வான். சங்தேகம் இருந்தால் அதற்கான டெஸ்டும் எடுத்துவிட வேண்டும். ஏனென்றால் பல சிம்டம்ம்கள் நம்மை ஏமாற்றும் பல உபாதைகளுக்கு ஒரே போல சிம்டம்கள் இருப்பதனாலும்.....

  மிகவும் கஷ்டம்தான் சார் நமக்கு நல்ல டாக்டர் அமையவில்லை என்றால்....

  ReplyDelete
 27. ஒரு மருத்துவர் சொன்னதை இன்னொரு மருத்துவர் ஒத்துக்கொள்ளமாட்டார். என்ன செய்ய. அவர்கள் சொல்வதை கேட்டுத்தானே ஆகவேண்டும். இப்போது தொந்தரவு இல்லை என அறிந்து மகிழ்ச்சி.

  ReplyDelete