Tuesday, March 17, 2015

அதிர்ச்சியின் விளைவுகள்


                                   அதிர்ச்சியின் விளைவுகள்
                                   ---------------------------------------


கடந்த பதிவில் இரண்டு மூன்று நாட்களுக்குப் பதிவுகள் எழுதாவிட்டால் பதிவர்கள் நம்மை மறந்து விடுவார்கள் என்று எழுதி இருந்தேன் அப்படியே மறந்தால் என்ன ஆகும் என்று ஒரு பதிவு எழுதுங்களேன் என்று நண்பர் டாக்டர் கந்தசாமி ஐயா கேட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு பக்கம் நான் என்னைப் பற்றி உயர்வாக சிந்திக்கிறேனோ
 நான் பதிவு எழுதாவிட்டால் என்னாகும் . ஒன்றும் ஆகாது
  
வாசகர்கள் நிலை தடுமாறுகிறார்கள். அதிர்ச்சி வீட்டு அட்டத்தில் ஏற பலரும் வீட்டு முற்றத்தில் வீழ்கிறார்கள் ஒரு காசளவு ஓட்டை வானத்தில் தெரிகிறது. கட்டி வைத்திருந்த பசுவின் கன்று கயிறு அறுத்து ஓடுகிறது  காசியில் கங்கை கலங்கி மலங்குகிறது.காரணம் தெரியாமல் ஊரே அதிர்ச்சியில் மூழ்குகிறது பதிவுலக முன்னோடி டாக்டர் கந்தசாமி. இதெல்லாம் ஜீஎம்பி பதிவு எழுதாததால் வரும் வினை. எல்லோரும் அவரை மீண்டும் எழுதத்தூண்டுவோம் என்ன மொக்கையானாலும் அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்று சொல்ல. அனைவரும் , ஜீஎம்பி சந்தித்த சந்திக்காத பதிவுலகமே அவர் வீட்டின் முன் நின்று பதிவெழுத வேண்டுகிறது

இப்போது தெரிகிறதா நான் ஏன் எப்படியும் பதிவு எழுதுகிறேன் என்று என  மனைவியிடம் சொல்ல என் மனைவி என்னை.என்னாயிற்று உங்களுக்கு. ஏதேதோ உளறிக் கொண்டுஎன்று சொல்லிக் கொண்டே தட்டி எழுப்புகிறாள். ஆஹா... இப்படி எல்லாமுமா நடக்கும். ? கனவானாலும் இனிமையாக என் முக்கியத்துவத்தை அறிவித்தது நன்றாகவே இருந்தது.  

39 comments:

  1. ஹாஹாஹா, நல்ல சுவையான கனவு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. யார் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டினாலும் தட்டாவிட்டாலும் நான் வந்து தட்டுவேன்.

    ReplyDelete

  3. கனா காணுங்கள் ஐயா, இப்பொழுது நிறைய பதிவர்கள் கனவு காண்கிறார்கள் தங்கள் கனவும் அருமை.
    ஆனால் இப்படியொரு கனவு பலிக்க வேண்டம் 80 எமது கருத்து.

    ReplyDelete
  4. ஹா...ஹா... ஹா... நல்ல கற்பனை, நல்ல கனவு!

    ReplyDelete
  5. ஹா...ஹா... ஹா... நல்ல கற்பனை, நல்ல கனவு!

    ReplyDelete
  6. கனவில் கூட பதிவு உலகம்தானா?
    வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  7. நினைவுலகத்திலும், கனவுலகத்திலும் தங்களுக்கு வலையுலகம்தான். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  8. கனவும் நல்லாத்தான் இருக்கு ஐயா

    ReplyDelete
  9. நீங்க மறுபடி எழுதுற வரை உண்ணாவிரதம்னு அன்னா ஹஸாரே அறிக்கை விடுறதா நான் கனவு கண்டேன்.

    ReplyDelete
  10. நனவில் மட்டுமில்லாமல் கனவிலும் கூட எழுதிக்கொண்டுதான் இருக்கின்றோம் என்பது இப்போ உறுதியாச்சு:-)))

    ReplyDelete
  11. ஆஹா... மிகைச்சிந்தனைதான் என்றாலும் ரசிக்கவைக்கிறதே...

    ReplyDelete
  12. கனவு நனவானது... தொடருங்கள் ஐயா...

    இன்று எனக்கு பூங்கொத்து கிடையாது என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  13. வணக்கம்
    ஐயா

    கனவை நினைவாக சொல்லிய விதம்பற்றி இரசித்தேன்... த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. நேற்றே வந்து தமிழ்த்தட்டச்சு வேலை செய்யாததால் பின்னூட்டமிட இயலாமல் திரும்பினேன்

    உங்களின் பதிவுகளால் நிஜத்தில் மட்டுமல்ல கனவிலும் உங்கள் முக்கியத்துவம் தெரிகிறது.
    கலக்குங்கள் சார்!

    ReplyDelete
  15. நீங்கள் சொல்லியிருக்கும் காட்சிகள் எல்லாம் ஏதோ ஒரு பழய கருப்பு வெள்ளை படத்தின் மிகவும் எமோஷலான காட்சியை சித்தரிக்க காட்டும் படத்துணுக்குகள் போல் படாரென்று மனதிற்குள் ஓடியது.

    ரசித்தேன்.

    ஆமாம் நீங்கள் ஏன் பதிவு எழுதுவதை நிறுத்தவேண்டும்...?

    ReplyDelete
  16. நானும் சில சமயங்களில் இதே போல ஆகிவிடுகின்றேன்..

    ReplyDelete

  17. @ கீதா சாம்பசிவம்
    நான் பதிவெழுதாவிட்டால் எப்ப்டி இருக்கும் என்பதே கற்பனைக் கனவு. வாசித்து ரசித்ததற்கு நன்றிமேடம்

    ReplyDelete

  18. @ டாக்டர் கந்தசாமி.
    கேள்வியும் உமதே அதன் தீர்வும் உமதே. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  19. @ கில்லர்ஜி
    என்னை மற்ற பதிவர்கள் எழுது என்று கேட்கும் கனவின் பகுதி பலிக்க வேண்டாமா. ? வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  20. @ ஸ்ரீராம்
    பதிவுகள் எழுதுவதே கற்பனை துணை கொண்டுதானே. வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  21. @ கரந்தை ஜெயக்குமார்
    கனவிலும் பதிவுலகம் என்னை விடாது என்பதுதானே ஐயா பதிவு.வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  22. @ தளிர் சுரேஷ்
    அது கற்பனைக் கனவு ஐயா.வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  23. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வேலை வெட்டி இல்லாதவனின் பொழுது போக்கு இது ஐயா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  24. @ தனிமரம்
    கற்பனைக் கனவு இது ஐயா. வருகைக்கு நன்றி

    ReplyDelete

  25. @ ஏ.துரை
    உங்கள் கனவிலாவது என் நினைவு வருகிறதே நன்றி சார்.

    ReplyDelete

  26. @ துளசி கோபால்
    என் முக்கியத்துவத்தைக் கற்பனைக் கனவு கொண்டுதான் பறை சாற்ற வேண்டியுள்ளது. ஆமாம் முக்கிய பதிவுகளைத் தவிர்த்து மொக்கை பதிவுகளுக்குத்தான் பின்னூட்டம் இடுவீர்களோ. எப்படியோ வருகைக்கு நன்றி மேம்.

    ReplyDelete

  27. @ கீத மஞ்சரி
    மிகைச் சிந்தனை என்பதைவிட கற்பனை என்பதே சரியாய் இருக்கும். வருகைக்கு நன்றிமேம்

    ReplyDelete

  28. @ திண்டுக்கல் தனபாலன்
    கனவு நனவாகி விட்டதா.? அப்போ எழுதியது கற்பனை அல்லவா.
    பூங்கொத்து பெறுவது உங்கள் கையில்/ வருகைக்கு நன்றி டிடி.

    ReplyDelete

  29. @ ரூபன்
    கனவே கற்பனை ஐயா. அதையும் சரியாகச் சொல்லாவிட்டால் எப்படி. பாராட்டுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  30. @ ஊமைக் கனவுகள்
    என் முக்கியத்துவத்தை நானே சொல்லிக் கொள்கிறேன் நீங்கள் எல்லாம் ஒப்புதல் தெரிவித்தால் தொடர் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  31. @ வெட்டிப் பேச்சு
    ஏதோ ஒரு எமோஷன் தான் பதிவுக்குக் காரணம். அது பழைய கருப்பு வெள்ளை படம் போல் இருப்பது என் துரதிர்ஷ்டம் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  32. @ துரை செல்வராஜு
    /நானும் சில சமயங்களில் இதே போல் ஆகி விடுகின்றேன். / நான் எழுத விஷயங்களும் கற்பனையும் தேவைப் படுகிறது. ஆனால் உங்களுக்கென்ன சார். ஆயிரம் கடவுள்களும் கதைகளும் இருக்கின்றன. மொழி ஆளுமை உங்களிடம் சொல்லும் பாங்கு உங்களிடம்
    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  33. உங்க கனவில் நானும் கூட வந்திருந்தேனே ,மறந்து விட்டீர்களே :)

    ReplyDelete

  34. ஐயா நான் சொன்னதின் அர்த்தம் தாங்கள் எழுதுவதை நிறுத்தக்கூடாது 80

    ReplyDelete
  35. நல்ல கனவு.
    கனவு பலிக்கட்டும்.
    அனைவரும் உங்களை எழுத அழைப்பார்கள். வாழ்க்கையின் அனுபவ பதிவுகள் அல்லவா உங்கள் பதிவுகள்.

    ReplyDelete

  36. @ பகவான் ஜி
    நிறையவே பதிவர்கள் வந்தார்களா உங்கள் வரவைக் கவனிக்கவில்லை. மன்னியுங்கள் ஜீ.

    ReplyDelete

  37. # கோமதி அரசு
    அனைவரும் என்னை அழைப்பார்களா? கனவு பலிக்க வாழ்த்தியதற்கு நன்றி மேம்.

    ReplyDelete
  38. ஹஹஹஹஹ்ஹ்ஹ் சார்! சிரிச்சு முடியலை.....நல்ல நகைச்சுவை கலந்த கனவு..!!!!! கற்பனையும்!! மிஞ்சிப் போனால் ஒரு வாரம் உங்கள் பதிவு இல்லை என்றால் ஓகே ஆனால் அதற்கு பிறகும் உங்களிடமிருந்து இல்லை என்றால் கண்டிப்பாக எங்கள் மெயில் உங்கள் மெயில் பாக்சை வந்து தட்டும் சார்!

    ReplyDelete