Tuesday, March 31, 2015

சிந்திக்கவும் நகைக்கவும்


                      சிந்திக்கவும் நகைக்கவும்
                      -------------------------------------


சிந்திக்க ஒரு சிறு கதை ( நான் சற்று வித்தியாசமாகச் சிந்திக்கிறேன் அல்லவா?)
-----------------------
..பாட்டி இவ்வளவு அருகில் பேப்பரை வைத்துக் கொண்டு படித்தால் கண்ணுக்குக் கேடுஎன்று கூறி பாட்டியின் கையிலிருந்த “ தினசரிப் “ பேப்பரை சற்றே இழுத்தேன்.. பேப்பரை தரையில் வீசி எறிந்தாள் பாட்டி

 என்ன பாட்டி, படித்தது பிடிக்கலையா, இழுத்தது பிடிக்கலையா “ என்று கேட்டேன்.

படித்ததுதான் “ என்ற பாட்டி, “ பாலா....!, குழந்தைகள் முட்டை சாப்பிடுவது அவர்கள் ஆரோக்கியத்துக்கும் , உடல் வலுவுக்கும் நல்லதுதானே

நடத்திய ஆராய்ச்சிகள் அப்படித்தான் சொல்கிறது.. பள்ளிக் கூடங்களில் குழந்தைகளுக்கு முட்டை கொடுத்தால் எல்லா தரப்புக் குழந்தைகளுக்கும் சமமான உணவு, என்பதும் நல்லதுதானே.என்றேன்.

சீருடையில் மாத்திரம் சமமென்பதைவிட, உணவிலும் சமம் என்றால் மாணவர்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லது அல்லவா. ஏழைக் குழந்தைகளுக்கு வீட்டில் முட்டை சாப்பிடுவது முடியாத காரியமாகும். “

“ பாட்டி, பள்ளியில் முட்டை போடாததன் காரணம் மத சம்பந்தப் பட்டது ஆனதால்தான் இருக்கும்..அதுதான் பள்ளிகளில் முட்டை கொடுக்காததன் காரணம் என்கிறார்கள். “

“ மதமாவது கிதமாவது.....! அதெல்லாம் வீட்டுக்குள் மட்டும்தான் இருக்க வேண்டும். நாளொரு முட்டை உடலுக்கு நல்லது என்று இந்த முட்டைத் தலையர்களுக்குத் தெரியாதா. மக்களுக்கு நல்லது செய்வதில் இந்த மாதிரி எண்ணங்கள் கூடாது. இதே ரீதியில் போனால் வெள்ளிக்கிழமைகளில் காலை 11- மணிக்கு புறப்படும் ரயில்களை “ராகு காலம் “ என்று சொல்லி தாமதப் படுத்துவார்கள் என்று போட்டாளே பாட்டி..இதையெல்லாம் தடுக்கும் ஜனங்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கும் புஷ்டியான முந்திரி, பாதாம் , பேரீச்சை போன்ற உலர்ந்த பழங்களை கோயில்களில் பிரசாதமாக ஏழைகளுக்குக் கொடுத்தால் குறைந்தா போவார்கள்.பாட்டி சரியான ஃபார்மில் இருந்தாள்.

பாட்டி உங்கள் சளி எப்படியிருக்கிறது..? இப்போது தேவலாமா.?

“ சளி பிடித்ததோ, சனி பிடித்ததோ என்று இரண்டு மூன்று வாரங்கள் ரொம்பக் கஷ்டப்பட்டேன். என்னவெல்லாமோ கஷாயங்கள் மருந்துகள்னு போதும் போதும் என்றாகி விட்டது. நீ கொடுத்த மருந்து சாப்பிட்டவுடன் அநேகமாக சரியாகி விட்டது.

 “எனக்கும் முதலில் கொஞ்சம் பயமாக இருந்தது பாட்டி. இருந்தாலும் பார்க்கலாம் என்றுதான் அந்த வெளி நாட்டுக் கஷாயம் கொடுத்தேன். “

“ இரண்டே நாளில் பலன் தந்தது உன் கஷாயம். சரி ....அது என்ன மருந்தப்பா...

“ வெளிநாட்டுக் கஷாயம் பாட்டி. இரண்டு ஸ்பூன் ப்ராண்டி....

அடப் பாவி மனுஷா.... ! எனக்கு ப்ராண்டியா கொடுத்தே. ?

“ பாட்டி என்னென்னவோ மருந்தெல்லாம் சாப்பிட்டும் குணமாகாத உன் சளியும் இருமலும் இரண்டு ஸ்பூன் ப்ராண்டியில் குணமாயிற்று. .சின்னச் சின்ன விஷயங்களில் பிரச்சனை பண்ணக்கூடாது பாட்டி. குழந்தைகளுக்கு நாளொரு முட்டை தராதவர்கள் முட்டைத் தலையர்கள் என்றாயே. நல்லதுஎன்று தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாத முட்டைத் தலை இல்லையே  உனக்கு...!

(  “நான் பால் குடிப்பதில்லை. அது நீர் மாமிசம். நான் ஒரு வெஜிடேரியன். ஆகவே ஒரு பெக் மது அருந்துவேன் “ என்று கன்னட எழுத்தாளர் டி.பி. கைலாசம் அவர்கள் கூறுவாராம். . அதை ஒட்டி எழுந்த கதை நீங்கள் மேலே படித்தது.)


இனி நகைக்கச் சில துணுக்குகள்
--------------------------------
ஆசிரியர்:-ராமு, இன்றைக்கு நீ ஏன்  லேட்.?
ராமு:-   நான் வருவதற்குள் மணி அடித்து விட்டார்கள், டீச்சர்.

ஆசிரியர்:- ராமு, பெருக்கல் கண்க்குகளை ஏன் தரையில் உட்கார்ந்து செய்கிறாய்.?
ராமு:-  பெருக்கல் கணக்குகள் செய்யும்போது டேபிள்ஸ் உபயோகிக்கக் கூடாது என்று சொன்னீர்களே டீச்சர்.

ஆசிரியர்:- ராமு, CROCODILE  எப்படி ஸ்பெல் செய்வாய்.?
ராமு:- KROKODILE
ஆசிரியர்:- தவறு.
ராமு:- இருக்கலாம். நான் எப்படி ஸ்பெல் செய்வேன் என்றுதானே கேட்டீர்கள்.

ஆசிரியர்:- ராமு, தண்ணீரின் ரசாயனக் குறியீடு கூறு.
ராமூ:- HIJKLMNO
ஆசிரியர்:- என்ன உளறுகிறாய்.
ராமு:- நேற்று நீங்கள் தானே கூறினீர்கள், H to O என்று.

ஆசிரியர் :- ராமு, இன்றுள்ளது பத்து வருடங்களுக்கு முன் இல்லாதது ஒன்று கூறு.
ராமு :- நான்.!

ஆசிரியர் :- ராமு, நாய் பற்றி நீ எழுதிய கட்டுரை சோமு எழுதியது போலவே இருக்கிறது. காப்பி அடித்தாயா.?
ராமு :- இல்லை டீச்சர். நாங்கள் இருவரும் ஒரே நாயைப் பற்றிதான் எழுதினோம்.

ஆசிரியர்.:- ஜார்ஜ் வாஷிங்டன் அவருடைய தந்தையின் செர்ரி மரத்தை தன் கோடாலியால் வெட்டினார். அதை அவரது தந்தையிடம் ஒப்புக்கொள்ளவும் செய்தார். இருந்தும் அவர் தந்தை அவருக்கு தண்டனை தரவில்லை. ஏன்.?
ராமு. :- ஜார்ஜ் வாஷிங்டன் கையில் கோடாரி இருந்தது.

ஆசிரியர்.:- ராமு, ஒருவர் எந்த ஆர்வமும் காட்டாது இருக்கும்போதும் பேசிக்கொண்டே  இருப்பவரை என்ன என்று சொல்வது.?
ராமு.:- ஆசிரியர். !
மேலே படித்தவை மீள் பதிவுகளே. இருந்தாலும் எனக்கு பதிவர்களின் ஞாபக சக்தியில் நம்பிக்கை உண்டு. .....! நம் எல்லோருக்கும் மறதி ஒரு
வரம்தானே.

32 comments:

  1. முழு பார்மில் இருக்கிறீர்கள் GMB சார்! ஓயாது சளிஇருமல் என்ற பாட்டியின் மனப்பிராந்திக்கு,இங்கிலீஸ் பிராந்தி கொடுத்து சமைத்து விட்டீர்கள்.

    உங்கள் நகைச்சுவை துணுக்குகள் மீண்டும் சிரிக்க வைத்தன. இந்த மூடிலேயே முழுநீள நகைச்சுவை நெடுங்கதை எழுதுங்களேன்....

    ReplyDelete
  2. 'ஜமாய்த்து' என்று அடித்தது 'சமைத்து' ஆனது, லேப்டாப் அடித்த ஜோக் சார்!

    ReplyDelete
  3. திரு டி.பி.கைலாசம் அவர்கள் பற்றிய இன்னொரு தகவல். அவர் நகைச்சுவையாக பேசக்கூடியவர். தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது T.P.KAILASAM என்பதை Typical ass I am என சொல்வாராம்.

    நகைச்சுவை துணுக்குகள் அனைத்துமே அருமை. இரசித்தேன்!

    ReplyDelete
  4. ஸூப்பர்! எல்லாமே சிரிக்க வைத்தது.

    ReplyDelete

  5. நகைச்சுவையும், சிறுகதையும் ஸூப்பர் ஐயா.

    ReplyDelete
  6. என்னத்தைச் சொல்கிறது!..

    நகைச்சுவைத் துணுக்குகள் அபாரம்!..

    அதிலும் - அவன் கையில் கோடாரி இருந்ததே!..

    ReplyDelete
  7. ஏற்கெனவே படிச்ச துணுக்குகள், கதையும், என்றாலும் மீண்டும் படித்து ரசித்தேன். :)

    ReplyDelete
  8. ஜோக்குகள் எல்லாம் அருமை. இவைகளை முன்பு படித்ததாக நினைவு இல்லை.

    ReplyDelete
  9. இதற்குப் பகவான்ஜியின் பதிலல்லவோ முக்கியம்!!!

    வாருங்கள் பகவான்ஜி!!!

    ReplyDelete
  10. மிகவும் சிந்திக்க வைத்த ஒரு கதை. அதுவும் பாட்டியின் கேள்விகள் (உங்கள் கேள்விகள் தான்) அபாரம்.

    நகைச்சுவைத் துணுக்க்கள் செம கலாட்டா.....ரொம்பவே சிரிச்சோம்...

    ReplyDelete
  11. மாடர்ன் பாட்டையை ரசித்தேன்.

    ஜோக்குகள் .. செம ...!

    ReplyDelete
  12. அருமை ஐயா அருமை
    ரசித்தேன்

    ReplyDelete
  13. அனைத்து நகைச்சுவையையும் ரசித்தேன். பெருக்கல் நகைச்சுவை மிக அருமை. அதென்ன முட்டைத் தலையர்கள்? வித்யாசமான சொற் பயன்பாடு.

    ReplyDelete
  14. துணக்குகள் அனைத்தும் செம...!

    நீங்கள் ஃபுல் ஃபார்மில் உள்ளீர்கள் ஐயா...! ஹிஹி...

    ReplyDelete

  15. @ மோஹன் ஜி
    பொதுவாகவே நான் சீரியஸ் டைப். நகைச் சுவைகளை ரசிக்கத்தெரியும். எப்போதாவது எழுத்தில் வரும் நகைச்சுவைத் துணுக்குகளெல்லாம் அங்கும் இங்கும் கேட்டவை. பாட்டியின் கதை என் சில எண்ணங்களைப் பிரதி பலிப்பது, வருகைக்கும் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி’

    ReplyDelete

  16. @ மோகன் ஜி
    செய்யும் தவறுக்கு லாப் டாபைக் குறை கூறி சமாளித்தது ரசிக்க வைக்கிறது.

    ReplyDelete

  17. @ வே.நடன சபாபதி

    டி.பி .கைலாசுக்கு பாலசுந்தரம் ஐயர் என்று ஒரு நண்பர் இருந்தாராம் அவர் டி.பி கைலாசத்தைhow are you typical ass என்று கூறி கலாய்ப்பாராம். கைலாசம் repartee க்குப் பெயர் போனவர்.இவர் அதற்கு
    I am good, balls under mayir என்று பதிலடி கொடுப்பாராம் கைலாசம் ஒரு தமிழர் என்பது கூடுதல் தகவல். வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  18. @ ஸ்ரீராம்
    நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  19. @ கில்லர்ஜி
    வருகைக்கும் ரசனைக்கும் நன்றி ஜி.

    ReplyDelete

  20. @ துரை செல்வராஜு
    எதுவுமே சொந்த சரக்கு இல்லை ஐயா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  21. @ கீதா சாம்பசிவம்
    பரவாயில்லையே . உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம்தான். மீள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி மேடம்.

    ReplyDelete

  22. @ டாக்டர் கந்தசாமி
    வந்து ரசித்ததற்கு நன்றி சார்.

    ReplyDelete

  23. @ ஊமைக் கனவுகள்
    பகவான் ஜி இன்னும் வரவில்லையே. நீங்கள் ரசித்தீர்களா. நன்றி ஐயா.

    ReplyDelete

  24. @ துளசிதரன் தில்லையகத்து
    பாட்டியின் கதையில் என் கருத்துக்களைக் கண்ட உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்

    ReplyDelete

  25. @ தருமி
    கதையில் மாடர்ன் பாட்டியைக் கண்டதற்கு நன்றி சார்.

    ReplyDelete

  26. @ கரந்தை ஜெயக்குமார்
    வருகை தந்து ரசித்ததற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  27. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    தலை மேல் மாடி காலியானவர்களை ஆங்கிலத்தில் egg heads என்பார்கள். அதையே தமிழ்ப்படுத்தினேன் வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  28. @ திண்டுக்கல் தனபாலன்
    வந்து ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி டிடி.

    ReplyDelete
  29. நான் வருவதற்குள் மணி அடித்து விட்டீர்கள் என்று ராமு சொன்னதை ரசித்தேன் ,ஏனென்றால் நானும் தாமதமாய்தானே வந்துள்ளேன்:) இப்படியே ஜாலியாய் தொடரலாமே !

    ReplyDelete

  30. @ பகவான் ஜி
    நகைச் சுவை உங்கள் ஏரியா. எப்பவாவது நான் இப்படி ட்ரெஸ்பாஸ் செய்கிறேன். அவ்வளவுதான் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  31. கதை, துணுக்குகள் அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
  32. @ வெங்கட் நாகராஜ்
    சிறிது இடைவெளிக்குப்பின் வருகை தந்து ரசித்ததற்கு நன்றி சார்.

    ReplyDelete